'இன்டர்வியூ' என்ற பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுக்கும் முன்பு நடிகை
கேரா நைட்லி, அந்தப் படம் எடுத்த பிறகு, அதற்கு ஃபோட்டோஷாப் போன்ற
மென்பொருள் மூலம் செயற்கை அழகு கூட்டக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்களில், அவர்களின் அழகை மிகைப்படுத்திக்
காட்டும் நோக்கத்தோடு செய்யப்படும் போட்டாஷாப் வேலைகள் உலகளவில் சகஜமாக
அரங்கேறி வருகின்றன. பெண்ணியவாதிகள் ஒரு சிலர் இச்செயலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட நடிகைகள் இதுவரை எதிர்த்ததில்லை. தற்போது
கேரா நைட்லி இந்த செயற்கை அழகூட்டும் செயலுக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
'பைரட்ஸ் ஆஃப் தி கரிபீயன்', 'பெண்ட் இட் லைக் பெக்காம்' போன்ற படங்கள்
மூலம் புகழ்பெற்றவர் ஹாலிவுட் நடிகை கேரா நைட்லி. 'தி டைம்ஸ்'
பத்திரிகைக்கு அவர் சமீபத்தில் வழங்கியுள்ள பேட்டியில், "நான் நடித்த
படங்களின் போஸ்டர்களில் வியாபார ரீதியிலான நோக்கத்தோடு எனது உடல்பாகங்கள்
அழகூட்டல் செய்யப்படுகின்றன. நான் மட்டுமல்ல, திரையில் நடிக்கும்
பலருக்கும் இது தான் முறை என்ற கணக்கில் இந்த செயல் நடக்கிறது.
ஒருமுறை எனது படத்தை மேலாடையின்றி வெளியிட வேண்டும் என்று
கேட்டுக்கொண்டவர்களிடம், நான் மேலாடை இன்றி நடிக்கத் தயார். ஆனால் நீங்கள்
எனது படத்துக்கு அழகூட்டும் நோக்கத்தோடு அதில் செயற்கையான ஃபோட்டோஷாப்
வேலைகளை செய்யக்கூடாது. எனது உடல் எப்படி இருக்கிறதோ, அதனை தான் நான்
வெளிப்படுத்த விரும்புவேன் என நிபந்தனை விதித்தேன்" என்று கேரா நைட்லி
கூறியுள்ளார்.
thanx - the hindu