Showing posts with label 'புலி' - இசை விழா அப்டேட்ஸ். Show all posts
Showing posts with label 'புலி' - இசை விழா அப்டேட்ஸ். Show all posts

Monday, August 03, 2015

'புலி' - இசை விழா அப்டேட்ஸ்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. சல்மான்கான், சீரஞ்சிவி, மகேஷ்பாபு, கமல் என பல்வேறு நடிகர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என இணையதளங்களில் செய்திகள் வட்டமிட்டன. ஆனால், எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் இல்லாமல், 'புலி' படக்குழு மற்றும் விஜய் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான இயக்குநர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.
இந்த இசை வெளியீட்டு விழாவின் சில துளிகள்:
* விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் படக்குழுனர் அனைவரையும் குதிரைகள், போர் வீரர்கள் கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்கள்.
* 6:30 மணிக்குதான் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. ஆனால், மாலை 4 மணி முதல் அரங்கின் வாசலில் விஜய் நின்றுகொண்டு வரும் ரசிகர்கள், விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். விஜய்யின் இந்த வரவேற்பை அனைவருமே மேடையில் பாராட்டி பேசினார்கள்.
* தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி ஆகியவற்றைத் தொடர்ந்து விழா தொடங்கியது.
* "தினசரிகள் கால் பக்க விளம்பரம் கொடுத்தோம், ஆனால் ரசிகர்கள் வழிநெடுகிலும் பேனர்கள் வைத்து எங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் விஜய் சார். அவரால் மட்டுமே 'புலி' சாத்தியமானது" என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான தமீன்ஸ்
* "'தலைவா' படப்பிடிப்பின்போது, "அடுத்த படத்துக்கு தயாராக இருங்க அண்ணா" என்றார். நான் உடனே பி.ஆர்.ஓவாக மற்றொரு படம் என்று தான் நினைத்தேன். ஆனால் நானும் ஷிபும் தயாரிக்கும் படத்தில் விஜய் சார் நடிக்க இருக்கிறார் என்று செய்தியை கேள்விப்பட்ட போது மிகவும் சந்தோஷப்பட்டேன். விஜய் சார் ஒருவர் மட்டுமே அவருடைய பி.ஆர்.ஒவை தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார்" என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார்.
* "தமிழ் சினிமாவில் அறிமுகமான உடன், விஜய் சாருடன் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை 'புலி' படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது" என்று பேசினார் ஸ்ருதிஹாசன்
* முதன் முதலாக இவ்விழாவில் முழுப்பேச்சும் தமிழிலேயே பேசினார் ஹன்சிகா. "ஒரு வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து, அக்கதையில் மீண்டும் என்னுடன் இரண்டாவது முறை நடித்ததுக்கு நன்றி" என்றார் ஹன்சிகா.
* "இன்று தான் விஜய், சிம்பு நடித்த 'வாலு' படத்துக்கு உதவி செய்ததை அறிந்தேன். 'வாலு'க்கு மட்டுமல்ல, 'தல'க்கு நல்லதே நினைப்பார் விஜய்" என்றார் இயக்குநர் பேரரசு
* "புலி என்கிற தலைப்பு விஜய் சாருக்கு மட்டுமே பொருந்தும். ரஜினிகாந்த்துக்கு பிறகு விஜய் மட்டுமே மிகவும் எளிமையான மனிதர்" என்றார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.
* விழாவின் தொகுப்பாளர்கள், எஸ்.ஜே.சூர்யாவிடம் " 'குஷி' 2 படத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு "May be at gods will" என்று தெரிவித்தார் எஸ்.ஜே.சூர்யா.
* "விஜய் ரசிகர்கள் அவருடைய படங்களை மட்டும் பாலோ பண்ணக் கூடாது, அவருடைய நிஜ வாழ்க்கையையும் பாலோ பண்ண வேண்டும்" என்று விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
நெகிழ்ந்த டி.ஆர்...
* "சிம்பு மற்றொரு நடிகருக்கு ரசிகர். ஆனால், அவருடைய நண்பர் விஜய். விஜய் உதவி செய்தார் என்றால் இருவருமே அண்ணன் - தம்பிகள், தமிழர்கள். பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில்லை. ஆனால் விஜய் நல்ல மனதுக்காக இவ்விழாவில் பங்கேற்று இருக்கிறேன்" என்று பேசினார் டி.ஆர்.
* இவ்விழாவில் அனைவரும் ரசித்தது டி.ஆரின் பேச்சை தான். சுமார் 20 நிமிடங்கள் எதுகை, மோனையில் பேசினார். விஜய் மேடைக்கு சென்று பொன்னாடை போர்த்திய உடனே, தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டி.ஆர், விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
*"விஜய்யின் எளிமையை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து வியந்துவிட்டேன். மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது" என்று தெரிவித்தார் ஸ்ரீதேவி.
விஜய் பேச்சு
* "கமர்ஷியலான சரித்திர கதை ஒன்றில் நடிக்க விரும்பினேன். அதுவே 'புலி'. கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவருமே இப்படத்தின் இரண்டு நாயகர்கள். அனைவரது வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுவார்கள், ஆனால் என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் தான் இருக்கிறது.
உங்களுக்குத் தான் தெரியுமே. நான் எப்போதுமே எனக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. அவ்வாறு கேட்டிருந்தால், இன்றைக்கு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருந்திருக்க மாட்டேன். எனக்கு உண்மையாக ஒருவரை வெறுக்க தெரியும், ஆனால் பொய்யாக யாரையும் நேசிக்க தெரியாது.
ஒரு இயக்குநர் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்போது வெளியிடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருப்பார். ஆனால், பைரசி என்பது சுகப்பிரசவம் ஆகுற குழந்தையை ஆபிரேஷன் பண்ணி கொல்வதற்கு சமமானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி இருக்கிறது. படம் வெளியீட்டுக்கு 15 நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்ட்மிட்டு இருக்கிறோம்.
வாழ்க்கையில் அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத இந்த வாழ்க்கை இருக்கிற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப்படுத்தணும். எனக்கு என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வச்சுத்தான் பழக்கம்" என்று விஜய் பேசினார்.


நன்றி -த இந்து