Wednesday, July 23, 2025

FLASK (2025) - பிளாஸ்க் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

                 

       மலையாள  சினிமாக்களை அனைவரும் விரும்பி ரசிக்கக்காரணம்  அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் , கதை சொல்லும் உத்தி  இரண்டுமே  மாறுபட்ட்தாக இருக்கும், உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் .18/7/2025  முதல் திரை  அரங்குகளில்  வெளியான இந்த  லோ பட்ஜெட் படம்  மீடியாக்களின்  பாசிட்டிவ் விமர்சனங்களையும் , ஆடியன்ஸின்  பாராட்டுக்களையும் பெற்று வருகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் .ஒரு கட் டத்தில்  அவருக்கு  ஒரு ஜட்ஜின் பி எஸ்  ஓ  (பர்சனல்  செக்யூரிட்டி ஆபீசர் )ஆகப்  பணி  கிடைக்கிறது . நாயகன்  போலீஸ் கான்ஸ்டபிள்  ஆக  இருந்தபோது  அவ்வப்போது  கச்சேரிகளில்  பாடுவார் .பாடலில்  அவருக்கு விருப்பம் உண்டு . வேறு வழி இல்லாமல்தான்  ஜட்ஜுக்கு பர்சனல்  செக்யூரிட்டி ஆபீசர் ஆகப்  பணி  புரிகிறார் . நாயகன்   ஒரு சராசரி ஆள் .ஜட்ஜ்  ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ஆள். இவர்கள்  இருவருக்கும் இடையே  நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே


முதல் பாதி   முழுக்க   நாம் இதுவரை பார்த்திராத ஒரு சூழல்   தான் .காமெடியாக   நகர்கிறது . தீவிரவாதிகள்  நாயகனையும்  , ஜட்ஜையும்  கடத்தி  பணயக்கைதிகளாகப்பிடித்து வைத்திருப்பது மட்டும்  நாம்  ஆல்ரெடி  நக்கீரன் , ஜுனியர்  விகடன் , குமுதம் ரிப்போர்ட் டர்    ஆகிய   புலனாய்வு இதழ்களில் படித்த  வீரப்பன் - ராஜ்குமார்  கடத்தல்  சம்பவம் தான் . வீரப்பன் வெப் சீரிஸ் கூட வந்து விட்ட்து . எனவே   முதல் பாதி  அருமை ,பின் பாதி சுமார் 


நாயகன்   ஆக சைஜு  க்ருப்    நன்றாக நடித்து இருக்கிறார் . ஓப்பனிங்   சீனில்;  மேடையில்  பாடும்போது , ஜட்ஜிடம்  டோஸ்   வாங்கும்போது , தீவிரவாதிகளிடம்  உரையாடுவது  என பல   இடங்களில்  ஸ்கோர் செய்கிறார் 


அவரது   மனைவியாக   அஸ்வதி  நடித்திருக்கிறார்  , அதிக   வேலை இல்லை . வந்த வரை   பரவாயில்லை 


தீவிரவாதி ஆக சித்தார்த்  பரதன் கச்சிதம் , ஜட்ஜ்  ஆக நடித்தவர்  நம்ம ஊர்   ரவிச்சந்திரன் சாயலில் இருக்கிறார் .,நல்ல நடிப்பு ,மற்ற   அனைவருமே  கொடுத்த  கேரக்ட்டருக்கு சிறப்பு  சேர்த்திருக்கிறார்கள் .


 அ ருமையான  மெலோடி  சாங்க்   ஓப்பனிங்கில்   உண்டு .இசை பின்னணி இசை   அருமை 

ஒளி ப்பதிவு   நன்றாக  இருக்கிறது 


ராகுல்  ரிஜி நாயர் தான்   திரைக்கதை , இயக்கம் , நல்ல முயற்சி 


சபாஷ்  டைரக்டர்


 1  ஒரு ஜட்ஜுக்கு   செக்யூரிட்டி  ஆபீசரின்  டியூட்டி  எப்படி இருக்கும்?என்பது நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாத களம் என்பதால் ரசிக்கும்படி இருக்கிறது , காட்சிகள்  புதிதாக இருக்கிறது  ( முதல் பாதி ) 


2 நாயகன் ,ஜட்ஜ்  இருவர் நடிப்பு கசசிதம் 


3   முதல் பாதியில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 

1  என்ன விஷயமா போலீஸ்  ஸ்டேசன்  வந்தீங்க ?


கொஞ்சம்  கஞ்சா   விக்கணும் ,அது விஷயமாத்தான் ....


2 கலைஞர்களுக்கு  எப்போதும்   மனதில் அதிக துக்கம் இருக்கும் 


3 தப்பை சுட்டிக்காட்டினா யாருக்கும் அது பிடிக்காது 


4 ஜட்ஜ்   வீட்டில்  லைட் எரியும் வரை  நீ  விழித்திருக்கணும் 


 அவங்க லைட் ஆப் பண்ண மறந்துட் டா? 


5 சொந்தக்காசில்   செலவு  செய்து  சரக்கு வாங்க மாட்டியா?


டைம் இல்லை 



6  அவன் என்ன   டூரா  போய் இருக்கான் ?தீவிரவாதி கடத்திட்டுப்போய் இருக்காங்க 


7  சாரி , துப்பாக்கில  சுட்டு டச் விட்டுப்போச்சு 


 இதுக்கு முன்னால துப்பாக்கில சுட்டு இருக்கியா?


 இல்லை 


 அப்புறம் என்ன டச் > 



8  உன்னைப்போலிஸ்   வேலைக்கு எடுத்தது  யாரு ?அவனை  முதலில்  சாகடிக்கணும் 


9  உங்க மேல   இருக்கும் கோபத்துல அவங்க என்னை சுட்டுட் டா என்ன பண்றது ?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 க்ளைமாக்ஸ்  சொதப்பல் ரகம் 


2  ஜட்ஜ்  முன் பம்மும்  நாயகன்  பின் பாதியில்  ஜட்ஜிடம் எகிறுவது    செயற்கை 


3  நாயகன்  தப்பிக்க வாய்ப்பு இருந்தும்  வேண்டும்  என்றே  மாட்டிக்கொள்வது  அனுதாபம் வர வைக்க 


4 தீவிரவாதிகளை  மீட்புப்படையினர்  தாக்கும்போது  ஜட்ஜை  அம்போ என விட்டுவிடுவது  எப்படி ?அவரைப்பணயமாக வைத்துத்தான் அவர்கள் தப்பிக்க வேண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஓ டி டி  யில் வரும்போது  முதல்  பாதி மட்டும் ரசிக்கலாம் .ரேட்டிங்  2.25 /. 5 

Tuesday, July 22, 2025

சட்டமும் நீதியும் (2025) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா ) @ ஜீ 5

     

                   

18/7/2025 முதல் ஜீ 5 ல்  வெளியான வெப் சீரிஸ் மீடியாக்களின்  பாசிட்டிவ் விமர்சனங்களையும் , பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று வருகிறது .அறிமுக  இயக்குனர் பாலாஜி  செல்வராஜ் ஸ்டார்  வேல்யூவை நம்பாமல்  திரைக்கதையை நம்பி இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் இது .மிக யதார்த்தமான திரைக்கதை நம்மைக்கட்டிப்போடுகிறது . மொத்தம்  7 எபிசோடுகள்  கொண்ட  இந்த  வெப் சீரிஸ் தலா  20 நிமிடங்கள்  என்ற  டைம் ட்யுரேஷனில் 140  நிமிடங்களில்  ஒரு சினிமாப் படம்  அளவு  மட்டும்   நீளம்  கொண்டதாக இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு வக்கீல் , ஆனால்  கோர்ட்டில் அவர் இதுவரை வாதாடியதே இல்லை .கோர்ட் வாசலில்  நோட்டரி  பப்ளிக் ஆக டாகுமெண்ட் டைப் பண்ணித்தரும் ஆளாக இருக்கிறார் .இவருக்கு வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை, கோர்ட் வளாகத்திலும் இல்லை . டீன்  ஏஜ்  மகனும் ,மகளும் உண்டு பலரின்  கேலி,கிண்டலுக்கு ஆளான இவருக்கு  ஒரு பொது நலக்கேஸில் கோர்ட்டில் வாதிடும் வாய்ப்பு உருவாகிறது . அதில் அவர் வெற்றி அடைந்தாரா? என்பது தான் கதை 


குப்புசாமி என்ற  நபர்   தன மகளை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டனர்  என போலீசில்  புகார் தருகிறார் . ஆனால்   போலீஸ்  அதைக்கண்டு கொள்ளவே இல்லை .இதனால்   மனம்   வெறுத்த அவர்  கோர்ட் வாசலில்  தீக்குளித்து  இறக்கிறார் . அவரது மரணத்துக்கு  நியாயம் கேட்டு  நாயகன் போராடுவதுதான் திரைக்கதை 



நாயகன்  ஆக  பருத்தி வீரன்  புகழ்  சித்தப்பு சரவணன்  அருமையான குணச்சித்திர  நடிப்பை வழங்கி இருக்கிறார் மகனிடம்  அவமானப்படும்போதும் , கோர்ட்டில்  வாதிடும்போதும்  ஜொலிக்கிறார் 


நாயகி ஆக  நாயகிக்கு உதவி  வக்கீல் ஆக  அவரது  மகள்  போல்  வரும்  நம்ரிதா  நடிப்பு   பிரமாதம் .குரலும் , முக வசீகரமும் செம . ஆனால் சில   இடங்களில்   மட்டும் ஜோதிகா மாதிரி   ஓவர் ஆக்டிங்க் 


குப்புசாமியாக  வரும் சண்முகம்  நடிப்பு கலங்க வைக்கிறது . உருக்கமான நடிப்பு .குப்புசாமியின்  மகள் வெண்ணிலாவாக  வரு இனியா   ராம்  சோகக்காட் சிகளில்  சுடர் விடுகிறார் 


குப்புசாமியின்  மனைவி   வள்ளி  ஆக   வரும் விஜய ஸ்ரீ பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய ரோல் . அனுபவமின்மை காரணமாக சுமாராகத்தான் நடித்திருக்கிறார் பெரும்பாலும்  புதுமுகங்கள்  தான் நடித்திருக்கிறார்கள் 

அரசுத்தரப்பு  வக்கீல்  ஆக வரும் ஆரோனின் வில்லத்தனம் அருமை 


விபின்   பாஸ்கரின் பின்னணி  இசை அருமை . தீம் இசை கலக்கல் ரகம் .திரைக்கதை  சூரியப்பிரதாப் 


சபாஷ்  டைரக்டர்


1  குப்புசாமி மனநலம் பாதிக்கப்பட்டு  22 வருடங்களாக  சிகிச்சை  பெற்று வந்தவர்   என்பது  அறிந்து  இந்தக்கேஸ் கோர்ட்டில் நிற்காது என கலங்கும் இடம் அருமை 


2 குப்புசாமியின்   மகள்  காணாமல்  போனது  27 வருடங்களுக்கு முன்  என்பதும்  அவர்  காணாமல்  போய் 5 வருடங்களில்  அம்மாவிடம்  ஒப்படைக்கப்பட் டார்   என்பதும்   தெரிய   வந்ததும்  இனி எப்படிக்கேஸை  மூவ்   செய்வது என்று தடுமாறும் இடம் அருமை 


3 குப்புசாமியின்  மனைவி  இன்னொரு திருமணம்  செய்து கொள்வதும்  , மகள் வெண்ணிலாவை  அநாதை ஆசிரமத்தில்   சேர்த்து விடுவதும்  திருப்பங்கள் 


4 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலா வுக்கு   என்ன ஆனது   என்ற   டிவிஸ்ட்   குட் 


5  கோர்டடில்  நடக்கும் வாதங்கள்   யதார்த்தம் 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னை  மாதிரி  பெய்லியர்  கேஸ்க்கு  கோபமும் ஆதங்கமும் எதுக்கு ? 


2 எல்லாருக்கும்  எல்லாம் வராது , ஒருத்தருக்கு இருக்கும் திறமை இன்னொருத்தருக்கு இருக்காது  


3  மக்கள்   மனசு வைத்தால் இந்த  அரசாங்கம் மட்டும்  அல்ல , ஆண்டவனால்  கூட இந்த நிலத்தை எதுவும் செய்ய முடியாது 


   

4 எல்லா  இடங்களிலும் சண்டை  போட்டுக்கொண்டு இருந்தால்  நம் குரலுக்கு மரியாதை இருக்காது 


5  நாம்  பதட்டமா  இருந்தா   எதிரிக்கு டதைரியம்  உருவாகும் , நாம அமைதியா, பொறுமையா , நிதானமா இருந்தா எதிரிக்கு  பயம்   வரும் 


6  எமோஷன்ஸ்க்கு மதிப்பு இல்லை , எவிடென்ஸ் தான்  முக்கியம் 


7 நீங்க   வாங்கும்   லஞ்சப்பணம்  தப்பு பண்ண  மட்டும் இல்லை , மாட்டிக்காம இருக்கவும் தன 


8  சட்டம்   ஊருக்கு ஊர்   மாறும் , ஆனா நீதி எல்லா இடங்களிலும் ஒன்று தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலாவின்  வளர்ப்புத்தந்தையை  சந்திக்கும்   நாயகன் வெண்ணிலாவின் போட்டோ  கொடுங்கள் எனக் கேட்கவே இல்லையே? கோர்ட்டில் ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டாமா? 


2 கோர்ட்   வாசலில்  போலீஸ்   யூ னிபார்முடன்  அப்படியா   பப்ளிக்காக லஞ்சம்  வாங்குவார்கள்?


3  கவுன்சிலரின்  மகன்  ஒரு வில்லனாக உருப்படியாக எதுவும் செய்யவில்லை . ஈசியாக  தப்பி இருக்கலாம் 


4 சிவப்பு விளக்குப்பகுதியில்  ஒரு விலை மாதிடம்  விசாரிக்க வரும் நாயகன்  விபரங்கள்  கிடைக்கும் முன்பே  பணத்தைத்தருவது எதனால் ? 


5   போலியாக ஒரு வெண்ணிலா வை ஆஜர்படுத்த்தும்  வில்லனின் ஐ டியா  சொதப்பல்  ரகம் . டி என் ஏ  டெஸ்ட் காட்டிக்கொடுக்கும்  என்பது தெரியாதா? ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு நிஜ சம்பவத்தின்  உருவாக்கம் என சொல்லப்படுகிறது , நேர்த்தியான  திரைக்கதை , மேக்கிங்க்காக பார்க்கலாம் .ரேட்டிங்க்  3 / 5 



Monday, July 21, 2025

பன் பட்டர் ஜாம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

           

      இயக்குனர்  ராகவ் மிர்தத்தின்  முதல் படம் காலங்களில் அவள் வசந்தம் (2022)  சுமார்  ரகம் என்றாலும் அவர்  )திரைக்கதை  ., வசனம்  எழுதிய   பாரம் (2020 )  தேசிய  விருது பெற்ற  படம் , வசனம் மட்டுமே  எழுதிய  சைஸ் ஜீரோ (2015) அவரது  விஸிட்டிங்க் கார்டு .18/7/2025 முதல்  திரை  அரங்குகளில்  வெளியாகி  இருக்கும் இந்தப்படம்  இளைஞர்களின்  மனதைக்கவரும்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் அப்பாவும் , நாயகியின் அம்மாவும்  முன்னாள்  பள்ளித்தோழர்கள் .நீண்ட  வருடங்களுக்குப்பிறகு இருவரும்  குடும்பத்துடன் ( அவரவர் இணையுடன் ) சந்திக்கிறார்கள் .பிறகு   நாயகனின்  அம்மாவும்,நாயகியின் அம்மாவும்  நெருங்கிய  தோழிகள் ஆகி விடுகிறார்கள் . இருவரும்  பரஸ்பரம்  அவரவர்  வாரிசு பற்றிப்பெருமையாகப்பேச  நாம் என் சம்பந்தி ஆகக்கூடாது என யோசிக்கிறார்கள் .ஆனால்  நம் வாரிசுகளுக்கு  நம்  திட் டம்  தெரியக்கூடாது .அவர்கள்  பார்வையில்  அது லவ் மேரேஜாகவும் .,  உண்மையில்  அரேஞ்சுடு மேரேஜாகவும் இருக்க வேண்டும் என திட் டம் போடுகிறார்கள் .


 ஆனால்  நாயகன்  , நாயகி  இருவருக்கும்   வேறு  வேறு  காதல் ஆல்ரெடி  இருக்கிறது . இதற்குப்பின் நடக்கும் காமெடி  கலா ட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக ராஜு  ஜெயமோகன்  என்ற  புதுமு கம் .இவர்  பிக் பாஸ்  அறிமுகமாம் . பிக் பாஸ் ஒரு சீ ட்டிங்க்  புரோகிராம் , ஆல்ரெடி  திரைக்கதை  எழுதப்பட்டது  என்ற   கருணாஸின்  பேட்டியைப்படித்த   பின் நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை .இவருக்கு  நடிப்பு சுமாராக வருகிறது .உடல் மொழியில் கவனம் தேவை 


நாயகி ஆக பாவ்யா  த்ரிகா நல்ல அழகு , நடிப்பும் ஓகே   ரகம் . இன்னொரு நாயகி ஆக ஆதியா  பிரசாத்  மாடர்ன்  கேர்ள் ஆக   வருகிறார் . நாயகியை விட இவருக்குத்தான்  வாய்ப்பு   அதிகம் 


நாயகனின்  அம்மா, அப்பாவாக  சரண்யா  பொன்வண்ணன் , சார்லி  இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு , அதிலும் சரண்யா  பொன்வண்ணன்  காமெடியில்  கலக்குகிறார் . நாயகியின்  அம்மாவாக   வரும்  தேவதர்ஷினியின்  காமெடி   நடிப்பும் அருமை 


கெஸ்ட்  ரோலில் விக்ராந்த்  வருகிறார் . அவர்  வரும்  சீன்களில்  ஓவர்   பில்டப் , நாயகனின் நண்பர்   ஆக மைக்கேல் தங்கதுரை  கச்சிதம் 


நிவாஸ்  கே பிரசன்னா வின் இசையில்  3 பாடல்களுமே அருமை . பின்னணி  இசை ஓகே  ரகம் .பாபு குமாரின் ஒளிப்பதிவு  பரவாயில்லை .ஜான் ஆபிரஹாமின்  எடிட்டிங்கில்   படம்  160   நிமிடங்கள்   ஓடுகிறது திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்      இயக்குனர்  ராகவ் மிர்தத்


சபாஷ்  டைரக்டர்

1  சரண்யா  பொன்வண்ணன் +தேவதர்ஷினி காம்பினேஷன் சீன்ஸ் +காமெடி   நடிப்பு அருமை 


2   நாயகன் , நாயகி   இருவருக்குமான  ஆரம்ப மோதல்கள் , நட்பு  யதார்த்தம் 


3  நாயகனின்   காதல் டிராக்   ரசனை 


4  டச்  செய்யும் வசன ங்கள்  



  ரசித்த  வசனங்கள் 

1  லேடிஸ்  என எழுதி வெச்சாலே  அப்படிப்பார்ப்பேன் , கோ எட் வேற கேட்கணுமா? 


2  பெண்களைக்கவர நகைச்சுவை உணர்வு ரொம்ப முக்கியம் , இண்ட் டலிஜென்ஸ் + இங்க்லிஷ்  போதும் 


3  சப்பைக்காமெடிக்கு எல்லாம் சத்தம் போட்டு சிரிக்கறாங்க 


4  பொண்ணுங்களைப்பொறுத்தவரை அவங்களை  ரெண்டு  டைம்   சிரிக்க வெச்சுட்டாப்போதும் , அவங்க   

மனசில்  ஒட்டிக்கலாம் 


5  உன்னை அவ  லூசுன்னு  நி னைச்சுக்கூட  சிரிச்சு இருக்கலாம்


6  லவ் ஈஸ்  மை  ஒன்லி பாலிட்டிக்ஸ்  


7  என்ன  வேணாலும் கேளு 


என்னை வேணாலும் கேளு 


8  எவ்ளோ  கஷ்டம் வந்தாலும் எனக்கு பாணி பூரி சாப்பிட் டா சரி ஆகிடும் 


9 உண்மையா  அவனை நீ   லவ் பண்றியா?  


 யாராவது  பொய்யா  லவ்  பண்ணுவாங்களா? 


10 துரத்துனா   காதல் வராது , நின்னா தேடி வரும் 


11  எது   நம்மைத்தேடி வருதோ அது நம்ம நல்லதுக்குத்தான் என நி னைச்சுக்கணும் 


12  தம்   விஷயம்   அம்மாவுக்குத்தெரியாம பார்த்துக்கோ , கேன்சர் வர்ற வரை விட மாட் டா , வெய்ட்  பண்ண மாட் டா , அவளே   உன்னைக்கொன்னுடுவா 


13  வேஷ்ட்டி       தெரியும் , அதென்ன  பெஸ்ட்டி ?


14  எந்த   ஒரு உறவிலும் அன்பும் , மரியாதையும் சம அளவில் இருக்கணும் 


15 லவ்வர் ,  பெஸ்ட்டி ,  பெஸ்ட் பிரண்ட்  , மனைவி   எல்லாமே   எனக்கு உங்க அம்மா தான் 


16   எங்க வீட்டில்  சில்லறை வேலைகள்   எல்லாம் நான் தான் செய்வேன் 


நீ  பண்ற  வேலைகள்   எல்லாமே சில்லறை வேலைகள்   தானே ?


17    டியர் , நீ  புரோட்டா   மாதிரி   இருக்கே  , உன்னை கொத்து புரோட்டா     ஆக்கிடறேன் 


18    நான்   சீப்  அண்ட்   பெஸ்ட்  ஆண்ட்டி .  கூப்பிட்டாப்போதும், வந்துடுவேன் 



19  நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா?   


 படிப்பைத்தவிர  எல்லா வேலையும் பண்ணி இருக்கேன் 


20 சில  பேர்  லவ்வரால  முன்னேறுவாங்க , சிலர்   லவ்வர்  போன பின்  முன்னேறுவாங்க


21   லவ்   பண்றதுக்கு  அவங்க பெஸ்ட்  பிரண்ட்ஸா  இருக்கணும்கறதைத்தவிர வேற நல்ல ஆப்சன் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1கெஸ்ட்  ரோலில் விக்ராந்த்  வரும்  அந்த  சீன்கள்  மொத்தமாகத்தூக்கி விட் டாலும் பாதகம் இல்லை . கதைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை 


2  நாயகனின்   காதலில் அழுத்தம் இல்லை 


3  . சரண்யா  பொன்வண்ணன் +தேவதர்ஷினி இருவரும்  பரஸ்பரம்  அவரவர்  வாரிசுகளைப்பார்க்காமலேயே  ( நேரிலோ  அலல்து  போட்டோ விலோ)சம்பந்தி ஆக நினைப்பது ?எப்படி ?


4   அப்பா - மகன் இருவரும் இணைந்து தம் அடிக்கும் சீன்  கொடுமை 


5   ரீல்ஸ்  போடும்   நாயகியின்   காதல்  அபத்தம் ,


6 நாயகன் , நாயகனின் நேருங்கிய   நண்பன்   இருவரும்   பிரிவது செயற்கை 


7  யார்  யார் கூட சேர்த்தா நமக்கு என்ன என்பது போல  ஆடியன்ஸுக்கு ஒரு கனெக்ட் ஆகவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்பன் பட்டர் ஜாம் (2025) - தமிழ் - பட் டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் ஆப் பிரியாத வரம் வேண்டும் (2001) . கமர்ஷியல் சக்ஸஸ் ஆகிடும் . ஜாலியாப்போகுது . விகடன் மார்க் யூகம் -43 ரேட்டிங்க் 3 / 5 பிரியாத வரம் வேண்டும் (2001) . விகடன் மார்க் 50



Bun Butter Jam
Theatrical release poster
Directed byRaghav Mirdath
Written byRaghav Mirdath
Produced bySuresh Subramanian
Starring
CinematographyBabu Kumar IE
Edited byJohn Abraham
Music byNivas K. Prasanna
Production
company
Rain of Arrows Entertainment
Release date
  • 18 July 2025
CountryIndia
LanguageTamil

Sunday, July 20, 2025

DETECTIVE UJJWALAN (2025) -டிடெக்டிவ் உஜ்வாலன் ( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )@ நெட் பிளிக்ஸ்

           

              

23/5/2025 அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இந்த லோ பட்ஜெட் படம்  முதலீட்டைப்போல  10 மடங்கு லாபம்  எடுத்தது . 6 கோடி ரூபாய் வசூல் . பெரிய  ஹீரோ  இல்லை .பிரம்மாண்டம் எதுவும் இல்லை . சைக்கோ  சீரியல்  கில்லர்  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  மூவி தான் என்றாலும்   முதல் பாதி காமெடி  மெலோ டிராமாவாக நகரும் .11/7/2025 முதல் நெட் பிளிக்ஸ்   ஓ  டி டி யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு பயந்தாங்கொள்ளி . சின்ன வயதில் இருந்தே  அவனுக்கு இருட்டை க்கண்டால் பயம் . ஆனால் துப்பறியும் சாம்பு மாதிரி  திறமை  உள்ளவன் .அந்த ஊரில்  எந்த சில்லறைத்திருட்டு நடந்தாலும்  நாயகனிடம் தான் கேஸ் வரும் . ஈசியாக டீல் செய்து  காணாமல் போன பொருட்களைக்கண்டுபிடிப்பான் 



நாயகனுக்கு  அவனது  அம்மா, அப்பா  அதே  ஊரில்  சொந்தத்தில்  ஒரு பெண் பார்க்கிறார்கள் .பெண்ணுக்கு சம்மதம் ,ஆனால்   பெண்ணின் அப்பா பெண் தர யோசிக்கிறார் . மறுபடி பார்ப்போம் எனத் தட்டிக்கழிக்கிறார் 



 அந்த   ஊரில்  போலீஸ்  ஸ்டேஷன் என  பெயரளவுக்கு தான் இருக்கிறது . போலீசுக்கு எந்த வேலையும் இல்லை .மாநிலத்திலேயே  மிகக்குறைவான கிரைம் ரேட் உள்ள  ஊர் என்ற பெருமையைப்பெற்ற கிராமம் அது 



மேலே   சொன்ன   விஷயங்கள்   எல்லாம் படம்  போட் ட   முதல் 7 நிமிடங்களில்   சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள் 


இப்போது  ஊரில்  ஒரு கொலை நடக்கிறது . அனைவரும்  திடுக்கிடுகிறார்கள் . நாயகனுக்குப்பெண்  தர  யோசித்தாரே ? அவர் தான்   கொலையான ஆள் .  அதே  போல அடுத்தடுத்து  இரூ கொலைகள்   நடக்கின்றன .


 நாயகன்   துப்பறிந்து  அந்திக்குருடன்  என்ற  கிரிமினலை சந்தேகித்து  கைது  செய்ய வைக்கிறார் . ஆனால் அவன் உள்ளே   ஜெயிலில் /லாக்கப்பில்  இருந்தபோது  இன்னொரு கொலை   ஊரில்  நடக்கிறது 


 இப்போது  இந்த கொலைகளைத்துப்பு துலக்க  ஒரு ஸ்பெஷல்  போலீஸ் ஆபீசர்   வருகிறார் .வந்தவர்  நாயகனையும், நாயகனின் அப்பாவையும் சந்தேகிக்கிறார் 


 நாயகனோ  அந்த  போலீஸ்  ஆபிசரையே  சந்தேகிக்கிறான் . இருவரும்  தனித்தனியே  துப்பு துலக்குகின்றனர் 

இதற்குப்பின் நிகழும்    சம்பவங்கள்  தான் மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக த்யான்  சீனிவாசன்  நன்றாக  நடித்திருக்கிறார் .காமெடி  நன்கு அவருக்கு வருகிறது .உடல் மொழி  , டயலாக் டெ லிவரி  கச்சிதம் .போலீஸ் ஆபீசர் ஆக  ரோனி டேவிட் ராஜ்   கம்பீரமாக  நடித்திருக்கிறார். ஜிம் பாடி பிட்டிங்க் ,க்ளோஸ்  கட்டிங்க்  எல்லாம் அருமை . லோக்கல்  எஸ் ஐ  ஆக  சிஜூ வில்சன் நடித்திருக்கிறார்.  


ஆர்ஜீ ,சிபி மேத்யூ  அலெக்ஸ்  ஆகிற இருவரும்   இணைந்து  பாடல்களுக்கான  இசையை அமைத்திருக்கிறார்கள் . .5 பாடல்களில் இரண்டு ; பாஸ் மார்க் .பின்னணி இசையை சிபி மேத்யூ  அலெக்ஸ்  தனியாக அமைத்திருக்கிறார் . குட்.. சாமன்   சாக்கோ  வின் எடிட்டிங்கில்  படம் 124  நிமிடங்கள்  ஓடுகிறது 


பிரேம    கிருஷ்ண  அகாட் , ஷரயந்தி ஹரிச்சந்திரன்  ஆகிய இருவரும் இணைந்து  ஒலிப்பதிவைக்கவனித்து இருக்கிறார்கள்  . சீரியல் கில்லர் வரும்  சீன்கள் எல்லாம் திகில்  தான்  


   இந்திர நீல்   கோபாலகிருஷ்ணன் , ஜி ராகுல்   இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின் கேரக்ட்டர்  டிசைன் ,கிராம மக்களி ன்  அப்பாவித்தனம்   அருமை 


2  கதை நடக்கும் கால கட்டமாக  1980  என சொன்னது  கச்சிதம் 


3  கொலைகாரன்   யார் ?என்ற  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்    அருமை 


 ரசித்த  வசனங்கள் 

1   ,சாப்பிடணும் , வாழனும் ,தூங்கணும்  இதுதான் என் லட் சியம் 


2 சார் , நாங்க  இந்த கேஸை  பார்த்துக்குவோம், எங்க டீம் மேல் நம்பிக்கை இல்லையா? 



இல்லை



3  சார் , லீலா  ,மேடத்தோட  பையன் தானே நீங்க ? 


 இல்லை .. எங்கம்மா பெரு லீலா 


4   இந்த ஊரில்    எங்கே திருட்டு  நடந்தாலும்   போலீஸ் என்னைத்தான் முதலில்  கூப்பிடுவாங்க \



  எதனால்?  நீதான் பிரைம் சஸ்பெக்ட்டா ? 


 ஹலோ ,நான் தான் திருடனையே கண்டு பிடிப்பேன்



5   நோ  க்ரைம்  சீன்    மஸ்ட் பி பர்பெக்ட் 


6   இந்த க்ரைம்  ஓ  சி டி    மாதிரி   தெரியுது 



 அப்டின்னா?


 கொலைகாரன் ஒரு பர்பெக்ட் மேன் . கரெக்ட்  டைம்க்கு     சாப்பிடறவனா  இருப்பான் எல்லாத்துல யும்  டைமிங்க் மெயிண்டயின் செய்வான் , பங்க்சுவாலிட்டியைக்கடைப்பிடிப்பான் 


7  என் பிறப்பே  ஒரு மரணத்தில் இருந்துதான் ஆரம்பித்தது . அம்மா  இறந்துதான் நான் பிறந்தேன் 



7லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சீரியல்  கில்லரின்  பிளாஸ்பேக் கதை ஓகே , ஆனால்  கொலைக்கான காரணம்  வலுவாக  இல்லை 


2   நாயகன்  பயந்தாங்கொள்ளி . இருட்டு என்றால்   பயம் , ஆனால் 90%  சீன்களில்  அவர் இருட்டில் தான் துப்பறிகிறார் எப்படி ? 


3  சீரியல் கில்லர்  முகத்தை நாயகன்   பார்த்து விடுகிறார் . உடனே  கொலைகாரன்  எதனால் வாய்ப்பிருந்தும்  நாயகனைக்கொல்லவில்லை ? 


4  போலீஸ்  ஆபீசர்  என்ன   தான் கண்டு பிடித்தார்? .எல்லாமே   நாயகன் தான்  கண்டுபிடிக்கிறார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமான  படம் எல்லாம் இல்லை ,அதே  சமயம்  மோசமும்  இல்லை .பார்க்கலாம் ரேஞ்ச் . ரேட்டிங்க் 2.5 / 5 


Detective Ujjwalan
Theatrical Release Poster
Directed byIndraneel Gopalakrishnan
Rahul G
Written byIndraneel Gopalakrishnan
Rahul G
Produced bySophia Paul
StarringDhyan Sreenivasan
Siju Wilson
Rony David Raj
CinematographyPremkrishna Akkattu
Sraiyanti Harichandran
Edited byChaman Chakko
Music bySongs:
Rzee
Sibi Mathew Alex
Score:
Sibi Mathew Alex
Production
company
Distributed byPhars Film
AP International
Release date
  • 23 May 2025[1]
Running time
124 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹5.56 crore[2]

Friday, July 18, 2025

AAP JAISA KOI (2025)-ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

                     

    

திரை  அரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக   நெட் பிளிக்ஸ்   ஓ டி டி   யில் 11/7/2025 முதல் வெளியான இந்தப்படம்  விமர்சகர்களிடையே பாசிட்டிவ்  ஆன வரவேற்பைப்பெற்று வருகிறது . ஆணாதிக்க மனப்பான்மையைக்கண்டிக்கும் கதை அம்சம் உள்ளது  என்பதால் அந்தக்கால  ஆட்கள்  அதாவது சிவாஜி , எம்   ஜி ஆர்  காலத்து ஆண்கள்  ரசிக்க முடியாது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  42 வயது  ஆன ஒரு முதிர் கண்ணன் . இன்னமும் திருமணம் ஆகவில்லை .எதுவும் ஆகவில்லை . சுத்தமான வெர்ஜின் . ஒரு பள்ளியில்  ஆசிரியர் ஆகப்பணி புரிகிறார் .எந்த ஜாதகமும் அமையாததால்  இவர்  ஒரு கிளுகிளுப்பான  ரகசிய ஆப் பில்  மெம்பர்  ஆகச்சேர்ந்து  ஒரு பெண்ணுடன் கடலை  போடுகிறார் . அதில் பரஸ்பரம்  ஆளைப்பார்க்க முடியாது .குரல் மட்டும் தான் . ரொம்ப நாட்களாகப்பெண் சகவாசமோ வாசமோ இல்லாமல் இருந்தவர் இப்பொது  அடிக்கடி  அந்த ஆப்   மூலம்  அந்தப்பெண்ணுடன் கடலை  போடுகிறார் 



 இப்போது   நாயகனின் அம்மா  நாயகனுக்கு ஒரு வரன் செட்  ஆகி இருப்பதாகக்கூறுகிறார் ., நாயகி  ஒரு  ஸ்கூல்  டீச்சர் . பெண்  பார்த்த   மாப்பிள்ளை க்கு பெண்    பிடித்து   விட்டது . பெண்ணுக்கும் மாப்பிள்ளையைப்பிடித்து விட்ட்து . இப்போதுதான்  ஒரு டிவிஸ்ட் . நாயகன்  அந்த ஆப் பில்  கடலை  போட் ட  பெண்  நாயகி தான்  என்பது தெரிய வருகிறது 


 ஆண்  கடலை   போடலாம், பெண்  கடலை  போ டலாமா? கலாச்சாரம் என்ன ஆவது  என முடடாள் தனமாகக்கொதித்த நாயகன் திருமணத்தை நிறுத்தி விடுகிறான் . இதற்குப்பின் நடக்கும்  சம்பவங்கள் தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக அலைபாயுதே  மாதவன்  நடித்திருக்கிறார் . நல்ல நடிப்பு .  சில  இடங்களில்  கமல் பாணியில் எதற்கு மெனக்கெட்டு நடித்தார் எனத்தெரியவில்லை 


 நாயகி ஆக   பாத்திமா சனா சைக்  பேசிக்கலாகவே ஓப்பன் யுனிவரிசிட் டியில்  டிகிரி   முடித்தவர் போல .காற்றோட் டமான  உடைகளில்  கிளாமராக வருகிறார் .  ஒரு சீனில் கூட   நதியா , ரேவதி  போல புல்கவர்  பண்ணி  உடை   அணியவே  இல்லை . பிழைக்கத்தெரிந்தவர் . நடிப்பு , டயலாக் டெலிவரி , உடல் மொழி எல்லாமே பக்கா 


 மற்ற  அனைவருமே  நல்ல   நடிப்பை வழங்கி  உள்ளனர் 


டெபோஜித்ராய்   தான் ஒளிப்பதிவு . கலர்புல்  கலக்கல் ஸ் . மூவர் சேர்ந்து இசை   அமைத்திருக்கிறார்கள் .5 பாடல்களில்  3  நன்றாக இருக்கிறது .  பின்னணி  இசை அருமை . பிரசாந்த் ,  ராமச்சந்திரன்  எடிட்டிங்கில்  பட,ம்  115 நிமிடங்கள்   ஓடுகிறது 


ராதிகா ஆனந் , ஜெகன் ஹாண்டா  ஆகிய இருவரும் இணைந்து கதை  , திரைக்கதை  எழுதி இருக்கிறார்கள் ..  விவேக்  சோனி  இயக்கி  இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்


1 திரைக்கதை  ஆசிரியர்  ஒரு  பெண்   என்பதால்  ஆணாதிக்க மனப்பான்மையைக்கடுமையாகண்டி க்கும் வண்ணம் வசனம்  எழுதிய  பாங்கு , கேரக்ட்டர்  டிசைன்  செய்த விதம் அருமை .பெண்களை மிகவும் கவரும் 


2  நாயகியை    கிளாமர்  ஆகக்காட்டிய விதம் , ஆண்களை மிகவும் கவரும் 


3  கலர்புல்  கலக்கல்  ஆன  ஒளிப்பதிவு 



  ரசித்த  வசனங்கள் 


1  தனிமை தான் உலகின் மிக மோசமான நோய் 


2  நட் பு காதல்  ஆக பல வருஷங்கள் ஆகும் 


3   நினைச்ச  மாதிரி  வாழ்க்கை அமையலைன்னா அப்படி ஒரு வாழ்க்கையை அமைக்கக்கத்துக்கொள்

 

4  இன்ட் டர்நெட்  எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்கு ,கண்டதையும் காட்டி  



5  காதல்  ஒரு சூதாட் டம் மாதிரி 


6  16 அல்லது 17 வயதில் இப்போ எல்லாம் யார் வெர்ஜின்  ஆக இருக்காங்க ? மியூஸியம் ல கூட கிடைக்க மாட் டாங்க 


7  ஒரு ஆண்  நீங்க   வெட்கப்படுவது   ரொம்ப செக்சியா இருக்கு 


8 யாருக்காகவாவது காத்திருக்கும் வாய்ப்பு இதுவரை எனக்குக்கிடைக்கலை 


9  வெற்றிலை சாப்பிட் டால்  பிறகு கொஞ்ச  நேரத்துக்கு ஏலக்காய் ருசி , வாசம்   தெரியாது 


10  சோல் மேட்   எல்லா உறவுகளிலும்  கிடைக்கும் , எனக்குப்பாட்டி வடிவில் கிடைச்சிருக்கு 



11   பாடறது  பூ  பூக்கறது மாதிரி 


12  சந்தோஷமோ , துக்கமோ தனிமைல இருக்கும்போது ஒரே மாதிரி தான் டீல் பண்றே ன் 


13    எமோஷனலான நேரத்துல    எமோஷனலா தான் நடந்துக்கணும் 


14  ஆம்பளைங்களுக்கு மட்டும் தான் ஆசைகள் இருக்கணுமா? 


15   ஹை புரோபைல்  இருக்கும் பொண்ணுங்க பிறந்த வீடு , புகுந்த வீடு இரண்டு தரப்புக்கலாச்சாரத்தையும் கெடுத்துக்குட்டிச்சுவர் ஆக்கி வெச்சுடுவாங்க 


16   மறந்த மாதிரி  நடிச்சாத்தான் நிஜமா மறக்க முடியும் 


17  உங்களை மாத்தணும்னு நினைக்காத பொண்ணு கிடைத்திருக்கு 


18  என் உடம்பு பூரா அவ பரவி இருக்கா 


நீ பேசலை , நீ குடிச்சு இருக்கும் சரக்கு பேசுது 


19   ரொம்ப நல்லவனா இருக்காதே 


20  காதலுக்கு சரி சமமான காதல் தான் வேணும் 


21 பக்திக்குத் தேதியும்  சந்தர்ப்பமும் தேவை இல்லை 


22  நாட்டில் இருக்கும் பாதி ஆம்பளைங்க இப்படித்தான் இருக்காங்க ., அவங்களுக்கு இப்படித்தான் கத்துக்கொடுக்கப்பட்டிருக்கு 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனின்  அண்ணி  கேரக்ட்டர்  தன கணவன்  தன மீது  அன்பு வைக்கவில்லை  , மதிக்கவில்லை  என தன மகன் வயது ஆளுடன் கள்ளக்காதலில்  ஈடுபடுவது , அதை நியாயப்படுத்துவது 


2  நாயகி  தனது  முதல்    காதல்  பிரேக்கப் ஆனதுக்கு  சொல்லும் காரணம் 


3  நல்ல   பர்சனாலிட்டி  ஆன  நாயகனுக்கு  42 வயது   வரை  தோழிகள் ,கேர்ள்  பிரண்ட்ஸ்  அமையாதது  நம்ப முடியவில்லை 


4 அதே   போல  32 வயது ஆன நாயகி  தன வாழ்நாளில்  ஒரே ஒரு ஆள்   தான் ப்ரப்போஸ் செய்து இருக்கிறான் என்பதும் ஏற்புடையது அல்ல 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாதர் சங்க  உறுப்பினர்களுக்கு , முற்போக்குவாதப்பெண்களுக்கு , நாகரிகமான  பெண்களுக்கு , சரக்கு , தம் அடிக்கும் பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும் ., ஆண்கள்  பார்த்தால்  கடுப்பாவார்கள். ரேட்டிங்க்  2.75 / 5  



Wednesday, July 16, 2025

ஓஹோ எந்தன் பேபி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

         




                

 இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய பைவ்  ஸ்டார் படத்தில்  கனிகாவின் முதல் கணவனாக  வரும் நடிகர் கிருஷ்ணா  தான்  அறிமுக இயக்குனர்  ஆன கிருஷ்ணகுமார்  ராம் குமார் . நடிகர்   விஷ்ணு விஷாலின் தம்பி ஆன ருத்ரா  இயக்குனர் ஏ ஆர்  முருகதாஸ்  இடம்  உதவி  இயக்குனர் ஆகப்   பல  படங்களில்  பணி புரிந்தவர் .இந்தப் படத்தில்  நாயகன் ஆக   நடித்து இருக்கிறார் . மராத்திய    நடிகை ஆன மிதிலா  பால்கர் தான்  இந்தப்படத்தில் அறிமுக நாயகி .11/7/2025   முதல்   திரை   அரங்குகளில்  வெளியான இந்தப் படம்  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்று வருகிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  சினி  இண்டஸ்ட்ரியில்  அஸிஸ் டெண்ட்  டைரக்டர் ஆகப்பணிபுரிபவர் . புது இயக்குனர் அவதாரம் எடுக்க தன்னிடம் உள்ள இரு கதைகளை ஒரு ஹீரோவிடம் சொல்லப்போகிறார் . அவரது   இரு கதைகளும்       ஹீரோவுக்குப் பிடிக்கவில்லை . வேறு  காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்கிறார் 


 நாயகனின் வாழ்க்கையில்  3 காதல்கள்   நடந்து  இருந்தன ,. முதல் காதல்  தன்னை விட சீனியர் ஆன பக்கத்து வீட்டுப்பெண்  உடனான   காதல் . அவளுக்கு  இன்னொரு காதலன் உண்டு . நாயகனை  ஸ்பேர் ஆக  வைத்து இருக்கிறாள் . ஒரு கட்டத்தில் நாயகனைக்கழட்டி விட்டு விடுகிறாள் .. இது   நாயகனின் பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவம் 


 காலேஜ்  படிக்கும்போது   நாயகன்  ஒரு பெண்ணை லவ்வுகிறான் . அது ஒரு ஒன்  சைடு லவ் . அதுவும் புட்டுக்கொள்கிறது 


 3வதாக  நாயகன் - நாயகி காதல்  கதை . 

நாயகனோட அம்மா,அப்பா  இருவரும்  எப்பப்பாரு சண்டை போட்டுக்கொ ண்டே இருப்பதால்  அவர்களைப்போலல்லாமல் ஒரு லவ் ,மேரேஜ்  செய்து கொள்ள வேண்டும் என்பது நாயகனின் ஆசை . நாயகியின் அப்பா சின்ன வயதிலேயே இறந்திருந்தாலும்  நாயகியின் அம்மா, அப்பா இருவருக்குமான லவ் இனிமையானது இந்த  நாயகன் - நாயகி   இருவருக்குமான காதல்  அழகாக  மலர்கிறது . ஒரு கட் டத்தில்  பிரேக்கப்பும் ஆகிறது.இதற்குப்பின் இவர்கள்  காதல்  என்ன ஆனது   என்பது மீதி திரைக்கதை   


நாயகன் ஆக ருத்ரா  கச்சிதமாக நடித்து இருக்கிறார் . தனுஷ்  போல , சிவகார்த்திகேயன்  போல , சித்தார்த் போல  இவரும்  ஸ்கூல்  ஸ்டூடன்ட் , காலேஜ் ஸ்டூடன்ட் ,  இளைஞன்  என 3 கெட் டப்களில் வருகிறார் .நல்ல   நடிப்பு .நல்ல எதிர் காலம் உண்டு 


 நாயகி ஆக மிதிலா  பாலகர்  பால்கோவா மாதிரி  இருக்கிறார் . நடிப்பும் நன்றாக வருகிறது . கிளாமர்  உடைகளுடன் வலம் வருகிறார் .இவரது  ஹேர் ஸ் டைல் , டிரஸ்ஸிங்க் சென்ஸ்  அருமை 


நாயகனின்  ஸ்கூல்  லவ்வர் ஆக திவ்யா திவ்யமாக இருக்கிறார் .அடக்கம், பவ்யம்  என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போல 


கதை  கேட்கும்  ஹீரோவாக  விஷ்ணு  விஷால் வருகிறார் . தேவைக்கும் அதிகமாகவே அவரது கேரக்ட்டர்  டெவலப் செய்யப்பட்டு இருக்கிறது . அவரது  பி ஏ  ஆக ரெடின்  கிங்க்ஸ்லி  வழக்கம் போல ஓவர் ஆக்டிங்க் .ஓவர் சவுண்ட் 


 நாயகனின்   சித்தப்பா ஆக  கருணாகரன்  கச்சிதமான   குணச்சித்திர  நடிப்பு 


 நாயகனின்       அம்மா,அப்பா   ஆக  விஜயசாரதி , கஸ்தூரி  நடித்து இருக்கிறார்கள் , அதிக வாய்ப்பு இல்லை 


இயக்குனர்  மிஷ்கின்  அவராகவே  வருகிறார் . ஷூட்டிங்க்  ஸ்பாட்டில்  அவரது   நடவடிக்கைகள்,    நடிப்பு  கை  தட்டலை  அள்ளுகிறது 



  ஜென்  மார்ட்டின்  இசையில்  இரண்டு  பாடல்கள்  ஹிட் . பின்னணி இசை அருமை ஒளிப்பதிவு   கலக்கல் ரகம் . எடிட்டிங்க்  கனகச்சிதம் .இரண்டே  கால் மணி நேரம் படம் ஓடுகிறது .முதல்  பாதி  செம ஜாலி , நல்ல ஸ்பீடு ., பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ 

சபாஷ்  டைரக்டர்


1  ஸ்கூல்  லவ்  போர்ஸனில்  துள்ளுவதோ  இளமை  பட   பாணியில் ஓவர் கிளாமர் புகுத்தியது 



2   நாயகியின்  நடிப்பு அழகு , இளமை 


3  இயக்குனர்   மிஷ்கின் போர்சன் 


4 மனதைக்கவரும் தத்துவ வசனங்கள் 


  ரசித்த  வசனங்கள் 

1   காதலைப்    புரிந்து கொள்ள சிலருக்கு ஒரே ஒரு காதல் கதை இருந்தாலே ( அமைந்தால் ) போதும் , சிலருக்குப் பல   காதல் கதைகள்  இருந்தாலும் போதாது , புரியாது 


2   எந்த ஹீரோவும்  டயட்  விஷயத்தில் சொல்வதைக்கேட்பதில்லை ,அப்புறம் வயிறு  வந்திடுச்சு ,ம யிறு  வந்திடுச்சு என புலம்புவது 


3 ரசனையே  இல்லாதவன் தான் ஒயிட் டிசைன்ல ஸ்ட்ரைப்ஸ்  சர்ட்  போடுவான் 


4 பொண்ணுங்க லவ் பண்ணிய  பசங்களைக்கழட்டி விடுவதுதான் இப்போ ட்ரெண்ட் 


5  இவன் என்ன  கதை ரெடி பண்ணுவதில் அட்லியை விட வேகமா இருக்கான் ? 


6  நம்ம  மனசுக்குப்பிடிச்ச விஷயத்தை ,நம்ம  மனசுக்குப்பிடிச்ச நபரிடம் ,நம்ம  மனசுக்குப்பிடிச்ச  டைம்ல   சொல்வதை விட வேற எப்போ சொல்வது ? 




7   எனக்காக  யார் ரெஸ்பான்ஸ்பிலிட்டி  எடுத்துக்கொண்டாலும் எனக்கு ஓகே தான் , ஆல்ரெடி  ஐ காட்  மோர்  ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ் 


8  தண்ணீர் மோருக்கே வழி இல்லையாம், தயிருக்கு   ஸீட்  எழுதினாளாம் சிறுக்கி 


9 இவ்ளோ அழகான பொண்ணை ஒருவன் விட்டுட்டுப்போயிட் டானா? நம்ப முடியலையே? 


இதுதான்  உன் பிக்கப்  லைனா?



10  உன் பிரேக்கப்பை விட கதை சொன்ன விதம் அருமை 


11  நான்  லவ் பண்ற  பொண்ணு எப்படி இருக்கணும்னு நினைச்சனோ அப்படியே இருக்கா 


12 ஒரு  குழப்பமான விஷயத்தை அனைவருக்கும் புரியும்படி சொல்வது ஒரு இயக்குநரோட வலிமை 


13   சண்டை  போடும் பொண்ணு வேண்டாம் என நினைச்சேன் , ஆனா உன் கூட இருந்தா தினமும் சண்டை மட்டும் தான் போடுவேன் 


14   இது   இடைவேளை  இல்லை .க்ளைமாக்ஸ் 


15  பி  ரெடி 


 என்னது ?காலைலயே  பீர்   ரெடியா? 


16   காதலில்  விழுவது   என்பது சரண்டர் ஆவது 



17 உண்மையான காதலுக்கு தியாகம் செய்யணும் , யூ  யூ லூசர் 


18 உண்மை க்கதை  ஆடியன்ஸ்  மனசுக்கு நெருக்கமாக ரிலேட் ஆகும் 

19 நடிக்கும்போது  தப்பு பண்ணினா   ஒன மோர்   டேக்  இருக்கு , வாழ்க்கைல தப்பு பண்ணினா ?


20 நம்ம  பசங்க  ஒரு இடத்துல  தப்பு பண்ணிட் டா  வாழ்க்கை பூரா  அங்கே   தலை வெச்சுப்  படுக்க மாட்டாங்க 


21 கோபம்  ஒரு உணர்வு அல்ல , அது ஒரு நோய் , அதைப் புரிஞ்ச்சுக்க எனக்கு இத்தனை வருசம் ஆச்சு 


22  எந்த ஒரு விஷயம் உனக்கு சந்தோசம்  தருதோ  அதுதான் உனக்கு கஷ்டத்தையும் தரும் 


23  எந்த ஒரு விஷயமும் ஒரு எக்ஸ்ட்ரீம்  லெவலுக்கு மேல் போனா மனது  ஏத்துக்காது 


24  காதலில் மட்டும் நம்பிக்கையை விட்றாத 


25  உன் வாழ்க்கைல இல்லாத ஒரு பெண்ணுக்காக  நீ செய்த தியாகம் இருக்கே ,... 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகிக்கு  வேறு ஒருவருடன்  மேரேஜ்  பிக்ஸ் ஆகி இருக்கு என  காட்டி இருக்கலாம் . வேறு ஒரு ஆளுடன்  பல வருடங்கள்  வாழ்க்கையே நடத்தி விடடாள்  எனும்போது  நாயகனுடன்  நாயகி சேர்வாரா? என்ற எண்ணம் எப்படி ஆடியன்ஸுக்கு வரும் ? 


2  நாயகன்  - நாயகி பிரேக்கப் ஆகும் தருணம் செயற்கை 


3  நாயகியின் மாமா  நாயகியின் குடும்பத்தை டாமினேட் செய்கிறார் என்பது நம்ப முடியவில்லை 


4   நாயகனின்  அம்மா,அப்பா   இருவரும்  அடிக்கடி   அடித்துக்கொள்வது மனதில் ஒட்டவில்லை 


5  விஷ்ணு விஷாலபோர்சன்  தேவை இல்லாத நீளம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+    5  லிப்  லாக் சீன்  இருக்கு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு ஜாலியான கமர்ஷியலான  காதல் கதை . ரசிக்கலாம் , ரேட்டிங்க்   3 / 5   விகடன் மார்க் யூகம் 42 

Tuesday, July 15, 2025

SOOTHRAVAKYAM(2025) - பார்முலா - மலையாளம் - சினிமா விமர்சனம் ( (மிஸ்ட்ரி த்ரில்லர் ))

           

           11/7/2025   அன்று   திரை  அரங்குகளில்  ரிலீஸ் ஆன இந்தப்படம் கமர்ஷியலாக மீடியம் ஹிட் அடித்துள்ளது  என்றாலும்  தமிழ் ஆடியன்ஸுக்கு  பொறுமையை  சோதிக்கும் படமாகவே இருக்கும் என கணிக்கிறேன்    


ஸ்பாய்லர்  அலெர்ட்


 வில்லன்  ஒரு முரடன் .சொந்தத்  தங்கையையே  முரட்டுத்தனமாக அடிப்பவன் .அவனது  சுபாவம் தெரிந்தும்   அவனது  தங்கை  ஸ்கூலில்  சக  மாணவனுடன்  நெருக்கமாகப்  பழகுகிறாள்  . அது பிடிக்காத  வில்லன்  சகட்டுமேனிக்குத்தங்கையை அடித்து விடுகிறான் . வில்லனின்  அம்மா, அப்பா  வயதானவர்கள்   என்பதால்  அவனைக்கண்டிக்க முடியாமல் இருக்கிறார்கள் அந்த ஊரில்  நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் ஆக இருக்கிறார் .



 மாணவர்களுக்கு  போலீஸ் ஸ்டேஷனிலேயே  மாடியில் டியூசன் எல்லாம் எடுக்கிறார் . அவருக்கு வில்லனின் விவகாரம் தெரிய வர அவனை ஸ்டேசன் வரவழைத்து அடித்து மிரட்டி  அனுப்புகிறார் . அதற்குப்பின்  வில்லனின் தங்கைக்கு பர்த்டே வருகிறது .  அன்று   வில்லனின்  தங்கையை  அவளது   பாய் பிரெண்ட்  வாழ்த்தி  கேக்  வெட்டி   ஊட்டுகிறான் .அப்போது அங்கே   வந்த   வில்லன்  இருவரையும்  கண்டபடி தாக்கி விடுகிறான் 



இதனால் செம   கடுப்பான  அந்த பாய் பிரண்ட்  வில்லனை  பழி வாங்கத்துடிக்கிறான் . வனத்தில் மிருகங்களைப்பிடிக்கப்பயன்படுத்தும் பொறி ஒன்றை வைத்து வில்லனைக்காயப்படுத்தத் திட்டம்  போடுகிறான் .. ஆனால்   விபரீதமாக   வில்லன்  கிணற்றில்  விழுந்து  விடுகிறான் 

 இதற்குப்பின்   நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 

வில்லனுக்கு   ஒரு காதலி உண்டு . அவளது  வங்கிக்கணக்கில்  3 கோடி ரூபாய்  பணம்  வரவு வைக்கப்[பட்டு இருக்கிறது .அந்த ப்ணம்  அனுப்பிய   பெண் காணவில்லை 


 இந்த இரண்டு கேஸையும்   நாயகன் எப்படி டீல் செய்கிறார் என்பது  தான் பின் பாதித்திரைக்கதை 


நாயகன் ஆக ஷைன்  டாம் சாக்கோ  நடித்திருக்கிறார் .முதல் பாதியில்  அவர் போலீஸ்  ஆபீசர்  வேலையைக்கவனிக்காமல் ட்யூசன் எடுப்பது எல்லாம் ஓவரோ  ஓவர் . அதற்கு  அரசாங்கம் அனுமதி அளிக்குமா?  அனுமதித்தாலும் அவருக்கு நேரம் இருக்குமா? 


வில்லன் ஆக  தீபக்  பரம்போல்  கச்சிதமான   நடிப்பு .அவரது காதலியாக வரும்  வின்சி  ஆலோசியஸ்  நடிப்பு ஓகே ரகம் ,  ஆனால் அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை 



படத்தில்  இரு க்ரைம்கள்  நடந்தாலும்  இரண்டும்  ஆடியன்ஸுக்கு பெரிய கனெக்ட் டைக்கொடுக்கவில்லை .


வில்லனின்   காதலிக்கு  ஒரு டீன்  ஏஜ் பெண்  3 கோடி கடன் கொடுப்பது எல்லாம் காதில் பூச்சுற்றல் 


வில்லன்  ஓங்கி ஒரே  ஒரு அறை  தான்  கொடுக்கிறான் .அதிலேயே ஆள் அவுட்  ஆவதும் நம்பும்படி இல்லை 


இந்த  படத்தில்   பாடல்கள்   பொறுமையை  சோதிக்கின்றன .பின்னணி இசை   பரவாயில்லை 


திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர்  யூஜியன் ஜோஸ் சிரம்மேல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கேரளாவில்  மலையாள  ஆடியன்ஸ்  கை  தட் டி ரசித்துப்பார்த்தார்கள் . ஆனால்  எனக்குப்பிடிக்கவில்லை . ரேட்டிங்க் 2 / 5 

Monday, July 14, 2025

த ஹண்ட்: த ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்- வெப் தொடர்- THE HUNT:THE RAJIV GANDHI ASSASSINATION CASE - WEB SERIES - (2025) -ஹிந்தி / தமிழ் - விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )@சோனி லைவ்

               


         4/7/2025  முதல் சோனி லைவ்  ஓ டி டி  யில்   வெளியான இந்த  வெப் தொடர் மொத்தம்  7 எபிசோடுகள் கொண்டவை . . ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் டு  50 நிமிடங்கள் ஆக மொத்தம் அஞ்சே  முக்கால் மணி நேரம்  ஒதுக்கினால் ஒரே  சிட்டிங்கில் பார்த்து விடலாம் 


அநிருத்யா மித்ரா எழுதிய 90 டேஸ் ,த ட் ரூ  ஸ்டோரி  - ஆப்  த ஹண்ட்  பார்  ராஜீவ்  காந்தி அசாசினேஷன்  என்ற  புத்தகத்தைத் தழுவி எழுதப்பட் ட திரைக்கதை . ஹைதராபாத் ப்ளூஸ் (1998) ,ஹைதராபாத் ப்ளூஸ் 2 (2004) மாடர்ன்  லவ் ஹைதராபாத்  வெப் செரிஸ் @ அமேசான் ப்ரைம் (2022) ,பாதாள்  லோக்  பாகம் 2  @ அமேசான் ப்ரைம் ( 2025)  ஆகிய   புகழ் பெற்ற  படைப்புகளை  வழங்கிய இயக்குனர் நாகேஷ்  குக்குனூர்  இயக்கிய வெப் சீரிஸ் இது 


ஹிந்தியில்  வெளியான  இந்தத்தொடர்  தமிழ்   டப்பிங்கில் கிடைக்கிறது .அனைவரும் பார்க்கும் தரத்த்தில் எடுக்கப்பட்ட யு   படம்  தான் (  வெப் சீரிஸ் தான் )   


சோனி லைவில்  இதுவரை வெளியான வெப் ஸீரிஸில்  அதிகம் பேரால்பார்க்கப்பட்டது என்ற  பெருமையைப்பெற்றது இது .இந்தத்தொடர்   முழுக்க  முழுக்க அரசாங்கத்தரப்பு , சி பி ஐ  கண்ணோட்டத்தில்  சொல்லப்பட்டுள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

முன்னாள்   பிரதமர்  ராஜிவ்  காந்தி 1991 ல் தேர்தல் பிரச்சாரத்துக்காக  ஸ்ரீ  பெரும்புதூர்  கூட் டத்தில்   கலந்து கொள்ள வந்தபோது  விடுதலைப்புலி  அமைப்பு  சிவராசன் தலைமையில்  மனித    வெடிகுண்டாக  செயல்பட் ட தாணு , முருகன் , நளினி  , சுபா , வெடிகுண்டு  தயாரித்துக்கொடுத்த   பேரறிவாளன்   ஆகியோர்  எப்படி   சி பி ஐ இடம் சிக்கினார்கள்   என்பதை   விபரமாக சொல்லும் கதை இது 


ஜூனியர்  விகடன் , நக்கீரன் , குமுதம் ரிப்போர்டடர்  ஆகிய   இதழ்களிலும் ,தினசரிகளில்  நாம் படித்த விஷயங்கள் தான் என்றாலும்  அப்போது  தெரியாத  பல விஷயங்களை  ஒரு தொகுப்பாக இந்த வெப் சிரிஸில்  காண முடிகிறது 

சபாஷ்  டைரக்டர்


1 போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் கேமரா  எந்த விதமான  சேதமும் இல்லாமல் போலீஸ் கையில் கிடைத்த  விதம் கேஸ்க்கு மிகப்பெரிய பலம் .அதன் மூலம் தான்  குற்றவாளிகளை  ஆரம்பக்கட்டத்தில் அடையாளம் காண முடிந்தது .அந்த  சீன்கள்  எடுக்கப்படட விதம்  அருமை 


2   ராஜீவ்   காந்தியின்  பின்னால் நின்று பாதுகாப்புப்பணியில்  ஈடுபட்ட  சப் இன்ஸ்பெக்ட்டர்  அனுசூயா  மிக முக்கியமான சாட் சி . அவர் தாணுவைத்தடுத்திருக்கிறார் .முடிந்தவரை போராடி இருக்கிறார் .படுகாயம்  அடைந்த நிலையிலும் அவரது சாட் சி  கேஸ்க்கு பக்க பலம் .அவர்  சம்பந்தப்பட் ட  காட் சிகளின் படமாக்கம் தரம் 


3   எல் டி டி  ஈ   அமைப்பைக்கன்ட்ரொல்  செய்வது   பிளாக் டைகர்  என்ற   அமைப்பு என்ற   விஷயத்தைக்கண்டறியும் தருணம் அருமை 


4  போட்டொ  ஜர்னலிஸ்ட் ஆன  ரவி சங்கர் ,  பகவான் சிங்க்  ஆகியோர்  ஒவ்வொருவர் ஆக மாட்டுவது  த்ரில்லிங்க் 



5 முருகனுக்குப்பல பெயர்கள் உண்டு . தாஸ்  என்ற   பெயரில் நடமாடினான் . நளினியும் அவனும்  அண்ணன் - தங்கை என்று சொல்லியே   வீடு   எடுத்துத்தங்கினான் .அனால்   நிஜத்தில் அவர்கள் காதலர்கள்   என்ற   விஷயங்களைக்கண்டறியும் தருணங்கள்  \


6   சயனைடு  சாப்பிடுவது  மரணிப்பது    விடுதலைப்புலிகளிடம் உள்ள   சவாலான விஷயம் .அதைத் தடுக்க சிபிஐ  டீம்   மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் அருமை சயனைடு  சாப்பிட் ட  முதல் 30 நொடிகளில் 3 விதமான முதல் உதவிகளை செய்ய வேண்டும் , அடுத்த   30 நிமிடங்களில்   ஹாஸ்பி டல்   போகணும்  போன்ற   பிராஸஸ் களை விளக்கும் சீன்  அருமை 


7  போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் லவ்வர் நர்ஸ்   சுந்தரி  போலிஸிடம் மாட் டும் சீன் ,ஹரிபாபுவின்  அம்மாவிடம்    பணம் புழங்குவதைக்கண்டு  சந்தேகப்படுவது , அதைத்தொடர்ந்து வரும் சீன்கள் 


8  முருகன் , நளினி   ஜோடியை பஸ்  ஸ்டேண்டில் பொறி   வைத்

துப்பிடிக்கும் சீன்  மாஸ் சீன் 


9 முருகனை   விசாரிக்கும்போது  சைக்கலாஜிக்கல் அப்ரோச்  ஆக நலினியை  வைத்து மிரட்டும் சீன்   பதை பதைக்க வைக்கும் சீன்  


10  ராஜீவ் காந்தி அசாசினேஷன்நடத்தும் முன்  வி பி சிங்கை   வைத்து  ஒத்திகை பார்க்கும் சீன்  பயங்கரம் 


11 ஆயுத   வியாபாரி  பிடிப டும் சீன்  ,அவன் தப்பும் சீன்   பரபரப்பு 


12    சிவராசன்    பெங்களூரில்  தங்கும் வீட்டில்  மிருதுளா  ஆஸ்துமா   பிராப்ளத்தில்   மாட்டுவதும்  அதைத்தொடர்ந்து வரும் சீன்களும் 


13ஆதிரா  - கனகசபாபதி   ஹோட் டல்   ரூமில்  மாட்டும்  சீன்  


14  மேலிட  ஆர்டர்   வராமல் சிவராசன்    பெங்களூரில்  தங்கும் வீட்டில்    நான்கு நாட்கள்  போலீஸ்  டேரா  போட்டிருக்கும் சீன்  


15   சிவராசன்  பெட்ரொல்  டேங்கர்   லாரியில்   தப்பிக்கும் சீன் செம 


16 போலீஸ்  ஆபீசர் ஆக  வரும் பகவாதிப்பெருமாள்   என்கிற பக்ஸ்    நடிப்பும்  , மற்ற  அனைவர் நடிப்பும் செம 


ரசித்த  வசனங்கள் 

1  சஞ்சய்   காந்தி ,  இந்திரா காந்தி , ராஜிவ்  காந்தி   , என வரிசையா  பலி , காந்தி  குடும்பம் பாவம் 


2   சார் , இந்த பில்டிங்க்  ராசி   இல்லாத  இடம் 


 நாங்க  செய்ய வந்த வேலைக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமே இல்லை 


3 த டிபிகல்ட் ஈஸ்   பாசிபிள் . த இம்ப்பாஸிபிள்  வில்   டேக்   ஏ லாங்க்   டைம் 


4  பொதுவா  போலீஸ்   பெண்களை  அதிகம் சந்தேகப்பட மாட்டாங்க .அதனால்  பாம்  பிளாஸ்ட்க்கு லேடியை  செலக்ட் பண்ணி இருக்கலாம் 


5  பொய்  சொல்லும் வாய்க்கு போஜனம் மட்டுமில்லை , தண்ணீர்   கூட கிடைக்காது . உண்மைகளை சொன்னா தண்ணீர் கிடைக்கும் 


6  மனசுல   சந்தோஷம்   இல்லைன்னா   நாக்கில்   ருசி   தெரியாது 


7   உங்க   கண்ணுக்கு  அவங்க  தீவிரவாதி , அவங்க கண்ணுக்குஅவங்க  போராளி 


8 ஒரு   கதைல   இருக்கும் உண்மைகளைக்கண்டுபிடிக்க பல  வருடங்கள் ஆகும் 



9   நாம்   என்ன   செய்ய வேண்டும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும் 


10 கொலையை  பங்க்சன்   என   சொல்லாத 


11 ஒருத்தனைத் தோளில் ஏற்றினால்  அவன்   தலையில் ஏறிக்குவான் 


12   ஒயிப்  ஆல்வேஸ்  நோ  டிஸ்ட்ரே க்சன் , ஒன்லி   சப் போர்ட் 


13   காரியம்   நல்லபடியா முடிஞ்சா  திருப்பதி போய் மொட்டை  போட்டுக்கறதா   வேண்டுதல் 


செஞ்சது கொலை ..


ஒன மேன் 'ஸ்  ஹீரோ  அனதர் மேன் "ஸ்  டெரரிஸ்ட்


14  குற்றவாளி  இந்த பஸ்ல  வர்றானா?என இந்த வழியாப்போகும் எல்லா பஸ்ஸிலும் செக் பண்ணனும் 


லாட்டரி  .டிக்கெட்  வாங்கறவன்  ஒவ்வொரு டிக்கெட்டுக்கும்  பிரைஸ் கிடைச்சிருக்கா?என செக் செய்வது போல ? 


15   நீ   சோல்ஜர் தான் ,போராளி இல்லை 


16    தியாகிகளை  எந்தக்காலத்திலும்  மறக்க   முடியாது , ஆகாயத்தில் நட்ஷத்திரமாக ஒளி வீசுவார்கள் .நாளை   என்னை நீ  ஆகாயத்தில் பார்ப்பாய் 



17  பக்கத்து நாட்டு ஆளுங்களுக்குக்கண்ணீர் விட்டுட்டு நம்ம நாட்டு ஆளை க்கொல்வீங்களா? 


18  ரெண்டு   நிமிஷம்   டீ  சாப்பிட்டுட்டு வாங்க , இவன்  உடம்பு   அவ்ளோ   தான்  தாங்கும் 


19    நான்   உண்மைகளை சொன்னா எனக்கு என்ன கிடைக்கும் ?


 எவ்ளோ  பேசறியோ  அவ்ளோ   கிடை க்கும் 


20  இந்தக்கேஸ்   ஒரு புதையலைத்தேடுவது போல இருக்கு 


21  உண்மைகளைக்கண்டு பிடிக்க வந்து  காம்ப்ளிக்கேட்டட்  பொலிடிக்கல் பிரஷர் ல மாட்டிக்கிட் டோ ம் .எல்லா நாடுகளிலும் இது நடக்கும் 


22  விதியையும் , அதிர்ஷ்டத்தையும்  இன்வெஸ்டிகேஷன்ல  முடிச்சுப்போட நினைக்க வேண்டாம் 


23  படத்தில்  காட்டுவதை   விட நிஜத்தில்  பயங்கரமா   இருக்கு 


24  சிவராஜன்   வீட்டுக்கு முன்னாடி  எல்லாரும் ரஜினி படம்  முதல் நாள் முதல் ஷோ பார்க்கற  மாதிரி  கூடி இருக்காங்க 


25  சார்   காலைல இருந்து வெயிட்டிங்க் 


 ம், வெயிட்டிங்க் ஆர்டர் தான் வந்திருக்கு 


 எப்போ அட் டாக்கிங்க் ஆர்டர் வரும் ? 


26   அலோபதி   மெடிஸன்ல எக்ஸ்பயரி ஆனாலும் 14   நாட்கள்   யூஸ் பண்ணலாம் 


27   சிவராஜ் அண்ட்  கோ  தற்கொலை செய்து  கொண்டு   இறந்தது   நம் டீம் க்குக்கிடைத்த  தோல்வி தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1   விடுதலைப்புலிகள்   தரப்பில்  செய்த மிகப்பெரிய தவறு போட்டோ கிராபர்  ஹரிபாபுவின் கேமரா போலீஸ்   கையில்  சிக்கியது ,, நளினி யி ன் அம்மா நளினியைக்காட்டிக்கொடுத்தது 


2   போலீஸ்   தரப்பில்  தவறு ..லஞ்ச்ம   வாங்கிக்கொண்டு   சிவராசன்  லாரியில் தப்பிக்க உதவியது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  சரித்திரப்பதிவு .அனைவரும் பார்க்க வேண்டிய வெப் சீ ரிஸ் . ஒரு சீன்    கூட போர் அடிக்கவில்லை . ரேட்டிங்க்  3.5 / 5 


The Hunt: The Rajiv Gandhi Assassination Case
Genre
  • Crime
  • Drama
Based onNinety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins
by Anirudhya Mitra
Story byRohit G. Banawlikar
Nagesh Kukunoor
Sriram Rajan
Directed byNagesh Kukunoor
Starring
Music byTapas Relia
Country of originIndia
Original languagesHindi,Tamil
No. of seasons1
No. of episodes7
Production
Executive producerMoiz Tarwadi
ProducersNagesh Kukunoor
Sameer Nair
CinematographySangram Giri
EditorFarooq Hundekar
Running timeApplause Entertainment
Kukunoor Movies
Original release
NetworkSonyLIV
Release4 July 2025