Saturday, November 23, 2024

எமக்குத்தொழில் ரொமான்ஸ் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

           

          போர்த்தொழில்  படம் ஹிட் ஆனதும் அடுத்த படத்தின் டைட்டிலில் தொழில் என வருவது போல வைத்து விட்டார்களோ என நினைத்தால் அது  தப்பு . இந்தப்படம்  முடிந்து பல  வருடங்கள்  ஆகிடுச்சாம் . இப்போ தான் ரிலீஸ் ஆகி இருக்கு    


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சினிமாவில்  அஸிஸ்டெண்ட்  டைரக்டர் . நாயகி தனியார் ஹாஸ்பிடலில்  நர்ஸ் . இருவரும்  காதலிக்கிறார்கள் . நாயகனின்  தோழிக்கு  ஒரு காதல்  உண்டு . காதலனால் கர்ப்பமான தோழி  அதைக்கலைக்க  நாயகனை தனது  கணவனாக  நடிக்கச்சொல்கிறாள் .இதைத்தவறாகப்  புரிந்து கொள்ளும் நாயகி அதிர்ச்சி ஆகி   பிரேக்கப்  சொல்கிறாள் . நாயகன்  நாயகியை எப்படி சமாளித்து கரம்  பிடிக்கிறான்  என்பது மீதிக்கதை 


நாயகன் ஆக அசோக் செல்வன் கச்சிதமான  நடிப்பு .படத்தில்  ஒரே ஆறுதல் இவர் தான் .காமெடி , ரொமான்ஸ்  இரண்டும் நன்றாக  இவருக்கு வருகிறது


நாயகி ஆக  அவந்திகா மிஸ்ரா .அழகான  முகமும் , வாளிப்பான  உடல் அமைப்பும் இருந்தும் நடிப்பு அவ்வளாவாக வரவில்லை  


நாயகனின் அம்மாவாக ஊர்வசி , அப்பாவாக அழகம் பெருமாள்  இருவருக்கும் அதிக வேலை இல்லை .நாயகனின் நண்பனாக  பகவதி பெருமாள் , இவருக்கும் அதிக வேலை இல்லை 


இசை நிவாஸ் கே பிரசன்னா .பாடல்கள்  சுமார் தான் .பின்னணி இசையும் படு சுமார் தான் .ஒளிப்பதிவு  கணேஷ் சந்திரா ஓகே ரகம் . எடிட்டிங்க் பரவாயில்லை 112 நிமிடங்கள் .திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  பாலாஜி  கேசவன் 



சபாஷ்  டைரக்டர்


1  இது சில வருடங்களுக்கு முன்பே ஷூட்டிங்க் முடிந்தபடம் என்பதை  யாருக்கும்  தெரியாமல் இருக்கட்டும் என விக்கிபீடியாவில் கூட அப்டேட்  செய்யாத சாமர்த்தியம் 


2  நல்ல  டைட்டில்  , அழகான நாயகி  


  ரசித்த  வசனங்கள் 

1   காலைல ஒரு கனவு ,நான் ஆஸ்கார் விருது வாங்கற* மாதிரி 


 வாங்கிக்கோடா, வருசா வருஷம் நானே   வாங்கிட்டு இருந்தா  எப்படி ? 


2  கல்யாணம்  எனக்கு , மருதாணி உனக்கா? 


3  பேஷண்ட்டோட   பல்ஸ்   தெரிஞ்சவன்    டாக்டர் 

ஆடியன்சோட  பல்ஸ்   தெரிஞ்சவன்   டைரக்டர் 

4  சிங்கத்துக்கும் , எனக்கும் ஒரே வித்தியாசம்தான் . அது ஷேவிங்  பண்ணாது , நான் ஷேவிங்க் பண்ணுவேன் 


5   நாம  நம்ம  தலைவரோட கட் அவுட்டுக்கு பால் ஊத்துனோம் , ஆனா இந்த  டைரக்டர் நம்ம  தலைவருக்கே பால் ஊத்திட்டான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பேரு  வெச்சியே  சோறு  வெச்சியா? என்பது போல  நல்ல  டைட்டில்  வைத்து திரைக்கதையில் கோட்டை  விட்டது 


2  யோகி  பாபு  தன முகத்தைக்கண்ணாடியில்  பார்க்காமல் படங்களில்  பலரை  உருவ கேலி   செய்வது போல  இயக்குனர்  திரைக்கதையில் கோட்டை  விட்டு  விட்டு  இதில் டைரக்டர்  டி ஆர் அவர்களை  கிண்டல் செய்வது போல  சில காட்சிகள் வேற 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எமக்குத்தொழில் ரொமான்ஸ் (2024) - தமிழ் = 1998 ல்  ரிலீஸ்  ஆன கார்த்திக்கின் படமான அரிச்சந்திரா  படத்தின்  பட்டி  டிங்கரிங்க்  அட்லி  வெர்சன் தான்  இது . திரைக்கதை யில் சுவராஸ்யம் இல்லை .அவந்திகா  நடிப்பும் சுமார் . ஒரே பிளஸ் அசோக் செல்வன் தான் .விகடன் - 38 . குமுதம் - சுமார் .மை  ரேட்டிங்க் - 2 / 5