Sunday, April 27, 2025

KESARI CHAPTER 2 - THE UN TOLD STORY OF JALLIANWALA BAGH(2025) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்ட்டாரிக்கல் கோர்ட் ரூம் டிராமா )


  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக் கில்  இந்தியர்கள்30,000 பேர்  ஜெனரல்  டயரால்  சுட்டுக்கொல்லப்பட் ட சம்பவம்  அனைவருக்கும் தெரியும் .அந்த  சம்பவத்தில்  மக்களுக்குத்தெரியாத  பல விஷயங்களை இந்தப்பட,ம் பேசுகிறது .இந்தியாவின் புகழ்  பெற்ற  வக்கீல் சங்கரன் நாயர்   என்பவர் தான்  இந்த வழக்கில் ஜெனரல்  டயருக்கு எதிராக வாதாடினார் . அந்த வக்கீலின்  வாரிசுகளான புஷ்பா பலட் , ரகு பலட்  ஆகிய இருவரும் இணைந்து எழுதிய  புத்தகம் ஆன THE CASE THAT SHOOK THE EMPIRE ஐ  தழுவி  திரைக்கதை  எழுதப்பட்டது ,திரைக்கதை எழுதியவர்கள் அமிர்தபால் சிங்க்  பிந்த்ரா  மற்றும்  ட்யாகி  ஆகிய இருவரும்தான் .இயக்கி  இருப்பவர்  கரண் சிங்க் ட்யாகி 

18/4/2025       அன்று  திரை  அரங்குகளில்   வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாக வசூலில்  கலக்கிக்கொண்டு இருக்கிறது ,150   கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான இந்தப்படம்  முதல்  7 நாட்களில்  90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஜெனரல்  டயர்  சிறுவனாக இருந்தபோது  படித்த பள்ளியில்  இந்திய  மாணவர்கள்  அதிகமாக  இருந்ததால்  அவன்  அவர்களால்  ராக்கிங்க்  செய்யப்பட்டான் .மனோவியல் ரீதியான  பாதிப்புக்கு உள்ளான அவன் இந்தியர்கள்  மீது  பொதுவான   வெறுப்பைக்கொண்டிருந்தான் .மிலிட்ரியில் சேரும்போது கூட   அவனுக்கு அளிக்கப்பட் ட மெடிக்கல்   சர்ட்டிபிகேட்டில் இவன் மன ரீதியாக    பாதிக்கப்பட்டவன் என்றே  குறிப்பு இருந்திருக்கிறது 



  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்னர் ஒரு ஆங்கிலேயப்பெண்மணி  ஒரு இந்திய மாணவனால்  பாலியல் வன்கொடுமை      செய்யப்பட்டார்    என்று புகார் வருகிறது .அந்த  இந்திய மாணவன்   கைது செய்யப்படுகிறான் .அந்த   மாணவனுக்கு  ஆதரவாக  சில இந்தியர்கள் போராட் டம்       நடத்த இருக்கிறார்கள் என்ற தகவல்  மிலிட் ரி ஆபீசர் ஆன ஜெனரல்  டயர் க்கு கிடைக்கிறது .உடனே  அவன்  திட் டம்     போடுகிறான் . இந்த  ரேப் கேசில்  ஒரு டிவிஸ்ட்  இருக்கிறது . அந்த ஆங்கிலேயப்பெண்மணியும் , இந்திய மாணவனும் காதலர்கள் . இருவரும்   தனிமையில் இருந்தபோது பெண்ணின் அப்பா   பார்த்து   விடுகிறார் . அவர்  செல்வாக்கு  மிக்கவர்  என்பதால்  இந்திய மாணவனை  சிறையில் அடைத்து விட்டு தன்  மகளைப்புகார்   தரச்சொல்லி மிரட்டிப்   பணிய வைக்கிறார் 


நாயகன்  ஆங்கிலேயே    அரசாங்கத்திடம்  சம்பளம் வாங்கும் பிரபல வக்கீல் . இவர்  ஒரு முறை  வில்லன் ஆன ஜெனரல் ட யரால்  அவமதிக்கப்படுகிறார் . ஓர் பார்ட்டி   நடக்கிறது .அங்கே  நாயகனும், வில்லனும் கலந்து கொள்ள செல்லும்போது நாயகன் தடுத்து நிறுத்தப்படுகிறார்  . இந்தியர்களும்  , நாய்களும்  இங்கே  அனுமதிக்கப்படுவதில்லை என்று போர்டு வைத்து அவமானப்படுத்துகிறார்கள் . இதனால்   நாயகன்   வில்லனைப்பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்   

ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம்  தொடர்பாக  ஒரு அறிக்கை  சமர்ப்பிக்குமாறு  ஆங்கிலேயே அரசாங்கம்  நாயகன்  ஆனா வக்கீல்  சங்கரன்   நாயரைக்கேட்டுக்கொள்கிறது .


ஜெனரல் டயரைப்பற்றிய  விபரங்களை  சேகரிக்கிறார் . மிலிட்ரியில்   அவருக்கு எதிராக  இருக்கும் ஆட் களைக்கண்காணிக்கிறார் ., பல தகவல்களைத்திரட்டுகிறார்      ஜாலியன்  வாலாபாக்  படுகொலை  சம்பவம் நடந்த பின்பு  ஜெனரல் டயர் மீது வழக்கு தொடுக்கிறார் .அந்த வழக்கில்  நாயகன்  எப்படி வாதாடினார் ?என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதையும் .      


நாயகன் ஆக, வக்கீல்  சங்கரன் நாயர் ஆக  அக்சய் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார் . குறிப்பாக   அவர் அவமானப்படுத்தப்படும் காட்சியிலும் , க்ளைமாக்சில்  ஜட்ஜையே  எதிர்த்துப்பேசும் காட் சியிலும் கை  தட்டலை  அள்ளும்   நடிப்பு .


வில்லன்  ஜெனரல் டயர் ஆக   சைமன் பைஸ்லே டே கலக்கலாக நடித்திருக்கிறார் . அவர் முகத்தைப்பார்த்தாலே  வெறுப்பு வரும் அளவுக்கு  அவரது கேரக்டர்  டிசைன்   வடிவமைக்கப்பட்டிருக்கிறது 


நாயகனுக்கு  உதவி ஆக வரும்   வக்கீல் ஆக அனன்யா பாண்டே  சிறப்பாக நடித்திருக்கிறார்.அவருக்கான ஒப்பனை , ஆடை வடிவமைப்பு , உடல் மொழி அனைத்தும்  அருமை 


வில்லன்  ஜெனரல் டயர்க்கு   ஆதரவாக   வாதாடும்   வக்கீல் ஆக மாதவன்  அசால்ட்   ஆக   நடித்திருக்கிறார் .  நாயகனின்  மனைவி ஆக ,பார்வதி  நாயர்  ஆக ரெஜினா கசாண்ட் ரா   வருகிறார் . அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே 


முக்கியமான   பாத்திரங்களில்  வ்ரும்   மற்ற   அனைவருமே  சிறப்பான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள்  


 நிதின் பைட்டின்  எடிட்டிங்கில்  135  நிமிடங்கள்   ஓடுகிறது .ஒரு சீன்  கூட   போர்   அடிக்கவில்லை .தெபோஜித்  ரே வின் ஒளிப்பதிவு அட் டகாசம் .பிரம்மாண்டமான  படமாக்கும் . கோர்ட் ரூம்  சீன்களில்   லைட்டிங்க்  சிறப்பு . இசை   மூவர் . சஷ்வத் சச்  தேவ் , கவிதா சேத்  , கனிஷ்க் சேத்  . நாயகன்  கோர்ட்டில் ஆஜர் சீன்களில்   வரும் ட்ரம்ஸ்  பிஜிஎம் கலக்கல் ரகம் ., கூஸ்பெம்ப்ஸ் மொமெண்ட்ஸ் .இயக்கி ருப்பவர் கரண்  சிங்க்  ட்யாகி                                 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின் ஓப்பனிங்க் சீனிலேயே ஜாலியன்  வாலா பாக்  படுகொலை   சம்பவம் காட்டப்படுகிறது , பிரமாதமான மேக்கிங்க் , எக்சிக்யூஸன் . ஒளிப்பதிவு  , ஆர்ட் டைரக்சன் அனைத்தும்   அருமை .பிணக்குவியல்களுக்கு அடியில் மாட்டிக்கொள்ளும் சிறுவனின்  குரல்  கிணற்றிலிருந்து   வருவது போல   தத்ரூபமான  சவுண்ட்   டிசைனிங்க் 


2   நாயகன் அக்சய் குமார்  , வில்லன்  ஜெனரல்  டயர் ,   அனன்யா  பாண்டே , மாதவன்  ஆகிய   நால்வர் நடிப்பும் அருமை 


3  நாயகன்  கோர்ட்டில்   வாதாடும்போது , கோர்ட்டில் என்ட் ரி   கொடுக்கும்போது   தரப்படும்   பிஜிஎம் செம 


4  க்ரைம்   த்ரில்லர் போலவே  சீன்கள்   சுவராஸ்யமாக சொல்லப்பட் ட விதம் 


ரசித்த  வசனங்கள் 


1    ரெஸ்ட்  எடுத்தா  வாழ்க்கைல   இலட் சியத்தை அடைய முடியாது 


2  கோர்ட்டில்  சரி எது ? தப்பு  எது? என பார்க்க மாட் டாங்க , வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள்  இப்படித்தான் இரு பிரிவுகளாகப்பார்ப்பார்கள் 


3   நீ    நல்ல   லாயர் தான் , ஆனா  ராங்க்   சைடில்  இருக்கே 


 நீங்க   நல்ல கவிஞர் தான் , ஆனா நாட்டுக்கு உங்களால ஒரு பிரயோஜனமும் இல்லை 



4   பிரிட்டிஷ்  இங்க்கால் தான்  அவங்க சரித்திரம் எழுதப்பட்டிருக்கு , அதை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை 


5  தீவிரவாதிகள்  1650 பேர்  சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்  என மிலிட்ரி  ரிப்போர்ட் சொல்லுது , ஆனா   ஹாஸ்ப்பிடல்  மெடிக்கல் ரிப்போர்ட் 10,312  பேர்  பிணமாக்கிடைத்ததா சொல்லுது 



6  உங்க   மிலிட் ரி ஆளுங்க  சுட்டதால 1650 பேர்   இறந்துட்டாங்க   என சொல்றீங்களே?  உங்க சைடு இறப்பு எவ்ளோ ?


 ஒரு ஆள்  கூட மிலிட்ரில இறக்கலை 



7   ஜாக்கிரதையா யோசிச்சு சொல்லுங்க அவங்க பாதிக்கப்பட் ட மக்களா?தீவிரவாதிகளா? 


8   உண்மை   லீவ்   எடுக்காது 


9  அமைதியா இருப்பதால் யார் பாதிப்பு அடைகிறார்கள் ? 


10 இது தான்   அவளோட  முதல் கேஸ் ,கடைசி கேஸாகவும் இதுதான் ஆகப்போகுது 


11  சம்பவம்   நடந்தப்ப சாட் சிகளாக  புகைப்படங்கள்  இல்லை , சாட்சிகள் இல்லை , கன்பெசன்ஸ்  இல்லை   எப்படி நிரூபிப்பீங்க ? 


 பெயிண்ட்டிங்க்ஸ் இருக்கே? 


12   நீ  பிரிட்டிஷ்  கவர்மெண்ட்டின்  அடிமை என்பதை மறக்காதே 


பேரரசே  பயத்தில் சுருங்கிப்போயிடுச்சு போல 


13   எதிரியை  பிரித்தாளு , வெற்றி பெறு 


14    சிகரெட்  உடல் நலனுக்குக்கெடுதல் , அதனால   நான் பைப்   தான் புகைக்கிறேன் 


15 உங்க எதிர்பார்ப்புக்கு நான் ஈடு கொடுக்க மாட் டேன் 


16    சில   மோசமான   விஷயங்களை   மறப்பது   நல்லது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  அறிந்திடாத   பல சுவராஸ்யமான  சம்பவங்கள்  விவரிக்கப்படுவதால்   அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம் இது . ரேட்டிங்க்   3.75 / 5