4/7/2025 முதல் சோனி லைவ் ஓ டி டி யில் வெளியான இந்த வெப் தொடர் மொத்தம் 7 எபிசோடுகள் கொண்டவை . . ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் டு 50 நிமிடங்கள் ஆக மொத்தம் அஞ்சே முக்கால் மணி நேரம் ஒதுக்கினால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்
அநிருத்யா மித்ரா எழுதிய 90 டேஸ் ,த ட் ரூ ஸ்டோரி - ஆப் த ஹண்ட் பார் ராஜீவ் காந்தி அசாசினேஷன் என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட் ட திரைக்கதை . ஹைதராபாத் ப்ளூஸ் (1998) ,ஹைதராபாத் ப்ளூஸ் 2 (2004) மாடர்ன் லவ் ஹைதராபாத் வெப் செரிஸ் @ அமேசான் ப்ரைம் (2022) ,பாதாள் லோக் பாகம் 2 @ அமேசான் ப்ரைம் ( 2025) ஆகிய புகழ் பெற்ற படைப்புகளை வழங்கிய இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கிய வெப் சீரிஸ் இது
ஹிந்தியில் வெளியான இந்தத்தொடர் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது .அனைவரும் பார்க்கும் தரத்த்தில் எடுக்கப்பட்ட யு படம் தான் ( வெப் சீரிஸ் தான் )
சோனி லைவில் இதுவரை வெளியான வெப் ஸீரிஸில் அதிகம் பேரால்பார்க்கப்பட்டது என்ற பெருமையைப்பெற்றது இது .இந்தத்தொடர் முழுக்க முழுக்க அரசாங்கத்தரப்பு , சி பி ஐ கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ல் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீ பெரும்புதூர் கூட் டத்தில் கலந்து கொள்ள வந்தபோது விடுதலைப்புலி அமைப்பு சிவராசன் தலைமையில் மனித வெடிகுண்டாக செயல்பட் ட தாணு , முருகன் , நளினி , சுபா , வெடிகுண்டு தயாரித்துக்கொடுத்த பேரறிவாளன் ஆகியோர் எப்படி சி பி ஐ இடம் சிக்கினார்கள் என்பதை விபரமாக சொல்லும் கதை இது
ஜூனியர் விகடன் , நக்கீரன் , குமுதம் ரிப்போர்டடர் ஆகிய இதழ்களிலும் ,தினசரிகளில் நாம் படித்த விஷயங்கள் தான் என்றாலும் அப்போது தெரியாத பல விஷயங்களை ஒரு தொகுப்பாக இந்த வெப் சிரிஸில் காண முடிகிறது
சபாஷ் டைரக்டர்
1 போட்டோ கிராபர் ஹரிபாபுவின் கேமரா எந்த விதமான சேதமும் இல்லாமல் போலீஸ் கையில் கிடைத்த விதம் கேஸ்க்கு மிகப்பெரிய பலம் .அதன் மூலம் தான் குற்றவாளிகளை ஆரம்பக்கட்டத்தில் அடையாளம் காண முடிந்தது .அந்த சீன்கள் எடுக்கப்படட விதம் அருமை
2 ராஜீவ் காந்தியின் பின்னால் நின்று பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்ட்டர் அனுசூயா மிக முக்கியமான சாட் சி . அவர் தாணுவைத்தடுத்திருக்கிறார் .முடிந்தவரை போராடி இருக்கிறார் .படுகாயம் அடைந்த நிலையிலும் அவரது சாட் சி கேஸ்க்கு பக்க பலம் .அவர் சம்பந்தப்பட் ட காட் சிகளின் படமாக்கம் தரம்
3 எல் டி டி ஈ அமைப்பைக்கன்ட்ரொல் செய்வது பிளாக் டைகர் என்ற அமைப்பு என்ற விஷயத்தைக்கண்டறியும் தருணம் அருமை
4 போட்டொ ஜர்னலிஸ்ட் ஆன ரவி சங்கர் , பகவான் சிங்க் ஆகியோர் ஒவ்வொருவர் ஆக மாட்டுவது த்ரில்லிங்க்
5 முருகனுக்குப்பல பெயர்கள் உண்டு . தாஸ் என்ற பெயரில் நடமாடினான் . நளினியும் அவனும் அண்ணன் - தங்கை என்று சொல்லியே வீடு எடுத்துத்தங்கினான் .அனால் நிஜத்தில் அவர்கள் காதலர்கள் என்ற விஷயங்களைக்கண்டறியும் தருணங்கள் \
6 சயனைடு சாப்பிடுவது மரணிப்பது விடுதலைப்புலிகளிடம் உள்ள சவாலான விஷயம் .அதைத் தடுக்க சிபிஐ டீம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் அருமை சயனைடு சாப்பிட் ட முதல் 30 நொடிகளில் 3 விதமான முதல் உதவிகளை செய்ய வேண்டும் , அடுத்த 30 நிமிடங்களில் ஹாஸ்பி டல் போகணும் போன்ற பிராஸஸ் களை விளக்கும் சீன் அருமை
7 போட்டோ கிராபர் ஹரிபாபுவின் லவ்வர் நர்ஸ் சுந்தரி போலிஸிடம் மாட் டும் சீன் ,ஹரிபாபுவின் அம்மாவிடம் பணம் புழங்குவதைக்கண்டு சந்தேகப்படுவது , அதைத்தொடர்ந்து வரும் சீன்கள்
8 முருகன் , நளினி ஜோடியை பஸ் ஸ்டேண்டில் பொறி வைத்
துப்பிடிக்கும் சீன் மாஸ் சீன்
9 முருகனை விசாரிக்கும்போது சைக்கலாஜிக்கல் அப்ரோச் ஆக நலினியை வைத்து மிரட்டும் சீன் பதை பதைக்க வைக்கும் சீன்
10 ராஜீவ் காந்தி அசாசினேஷன்நடத்தும் முன் வி பி சிங்கை வைத்து ஒத்திகை பார்க்கும் சீன் பயங்கரம்
11 ஆயுத வியாபாரி பிடிப டும் சீன் ,அவன் தப்பும் சீன் பரபரப்பு
12 சிவராசன் பெங்களூரில் தங்கும் வீட்டில் மிருதுளா ஆஸ்துமா பிராப்ளத்தில் மாட்டுவதும் அதைத்தொடர்ந்து வரும் சீன்களும்
13ஆதிரா - கனகசபாபதி ஹோட் டல் ரூமில் மாட்டும் சீன்
14 மேலிட ஆர்டர் வராமல் சிவராசன் பெங்களூரில் தங்கும் வீட்டில் நான்கு நாட்கள் போலீஸ் டேரா போட்டிருக்கும் சீன்
15 சிவராசன் பெட்ரொல் டேங்கர் லாரியில் தப்பிக்கும் சீன் செம
16 போலீஸ் ஆபீசர் ஆக வரும் பகவாதிப்பெருமாள் என்கிற பக்ஸ் நடிப்பும் , மற்ற அனைவர் நடிப்பும் செம
ரசித்த வசனங்கள்
1 சஞ்சய் காந்தி , இந்திரா காந்தி , ராஜிவ் காந்தி , என வரிசையா பலி , காந்தி குடும்பம் பாவம்
2 சார் , இந்த பில்டிங்க் ராசி இல்லாத இடம்
நாங்க செய்ய வந்த வேலைக்கும் அதிர்ஷ்டத்துக்கும் சம்பந்தமே இல்லை
3 த டிபிகல்ட் ஈஸ் பாசிபிள் . த இம்ப்பாஸிபிள் வில் டேக் ஏ லாங்க் டைம்
4 பொதுவா போலீஸ் பெண்களை அதிகம் சந்தேகப்பட மாட்டாங்க .அதனால் பாம் பிளாஸ்ட்க்கு லேடியை செலக்ட் பண்ணி இருக்கலாம்
5 பொய் சொல்லும் வாய்க்கு போஜனம் மட்டுமில்லை , தண்ணீர் கூட கிடைக்காது . உண்மைகளை சொன்னா தண்ணீர் கிடைக்கும்
6 மனசுல சந்தோஷம் இல்லைன்னா நாக்கில் ருசி தெரியாது
7 உங்க கண்ணுக்கு அவங்க தீவிரவாதி , அவங்க கண்ணுக்குஅவங்க போராளி
8 ஒரு கதைல இருக்கும் உண்மைகளைக்கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆகும்
9 நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்
10 கொலையை பங்க்சன் என சொல்லாத
11 ஒருத்தனைத் தோளில் ஏற்றினால் அவன் தலையில் ஏறிக்குவான்
12 ஒயிப் ஆல்வேஸ் நோ டிஸ்ட்ரே க்சன் , ஒன்லி சப் போர்ட்
13 காரியம் நல்லபடியா முடிஞ்சா திருப்பதி போய் மொட்டை போட்டுக்கறதா வேண்டுதல்
செஞ்சது கொலை ..
ஒன மேன் 'ஸ் ஹீரோ அனதர் மேன் "ஸ் டெரரிஸ்ட்
14 குற்றவாளி இந்த பஸ்ல வர்றானா?என இந்த வழியாப்போகும் எல்லா பஸ்ஸிலும் செக் பண்ணனும்
லாட்டரி .டிக்கெட் வாங்கறவன் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பிரைஸ் கிடைச்சிருக்கா?என செக் செய்வது போல ?
15 நீ சோல்ஜர் தான் ,போராளி இல்லை
16 தியாகிகளை எந்தக்காலத்திலும் மறக்க முடியாது , ஆகாயத்தில் நட்ஷத்திரமாக ஒளி வீசுவார்கள் .நாளை என்னை நீ ஆகாயத்தில் பார்ப்பாய்
17 பக்கத்து நாட்டு ஆளுங்களுக்குக்கண்ணீர் விட்டுட்டு நம்ம நாட்டு ஆளை க்கொல்வீங்களா?
18 ரெண்டு நிமிஷம் டீ சாப்பிட்டுட்டு வாங்க , இவன் உடம்பு அவ்ளோ தான் தாங்கும்
19 நான் உண்மைகளை சொன்னா எனக்கு என்ன கிடைக்கும் ?
எவ்ளோ பேசறியோ அவ்ளோ கிடை க்கும்
20 இந்தக்கேஸ் ஒரு புதையலைத்தேடுவது போல இருக்கு
21 உண்மைகளைக்கண்டு பிடிக்க வந்து காம்ப்ளிக்கேட்டட் பொலிடிக்கல் பிரஷர் ல மாட்டிக்கிட் டோ ம் .எல்லா நாடுகளிலும் இது நடக்கும்
22 விதியையும் , அதிர்ஷ்டத்தையும் இன்வெஸ்டிகேஷன்ல முடிச்சுப்போட நினைக்க வேண்டாம்
23 படத்தில் காட்டுவதை விட நிஜத்தில் பயங்கரமா இருக்கு
24 சிவராஜன் வீட்டுக்கு முன்னாடி எல்லாரும் ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ பார்க்கற மாதிரி கூடி இருக்காங்க
25 சார் காலைல இருந்து வெயிட்டிங்க்
ம், வெயிட்டிங்க் ஆர்டர் தான் வந்திருக்கு
எப்போ அட் டாக்கிங்க் ஆர்டர் வரும் ?
26 அலோபதி மெடிஸன்ல எக்ஸ்பயரி ஆனாலும் 14 நாட்கள் யூஸ் பண்ணலாம்
27 சிவராஜ் அண்ட் கோ தற்கொலை செய்து கொண்டு இறந்தது நம் டீம் க்குக்கிடைத்த தோல்வி தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விடுதலைப்புலிகள் தரப்பில் செய்த மிகப்பெரிய தவறு போட்டோ கிராபர் ஹரிபாபுவின் கேமரா போலீஸ் கையில் சிக்கியது ,, நளினி யி ன் அம்மா நளினியைக்காட்டிக்கொடுத்தது
2 போலீஸ் தரப்பில் தவறு ..லஞ்ச்ம வாங்கிக்கொண்டு சிவராசன் லாரியில் தப்பிக்க உதவியது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது சரித்திரப்பதிவு .அனைவரும் பார்க்க வேண்டிய வெப் சீ ரிஸ் . ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை . ரேட்டிங்க் 3.5 / 5
The Hunt: The Rajiv Gandhi Assassination Case |
---|
 |
Genre | |
---|
Based on | Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins by Anirudhya Mitra |
---|
Story by | Rohit G. Banawlikar Nagesh Kukunoor Sriram Rajan |
---|
Directed by | Nagesh Kukunoor |
---|
Starring | |
---|
Music by | Tapas Relia |
---|
Country of origin | India |
---|
Original languages | Hindi,Tamil |
---|
No. of seasons | 1 |
---|
No. of episodes | 7 |
---|
|
Executive producer | Moiz Tarwadi |
---|
Producers | Nagesh Kukunoor Sameer Nair |
---|
Cinematography | Sangram Giri |
---|
Editor | Farooq Hundekar |
---|
Running time | Applause Entertainment Kukunoor Movies |
---|
|
Network | SonyLIV |
---|
Release | 4 July 2025 |
---|