இது உண்மையில் நடந்த சம்பவம் .அயர்லாந்து மீ டியாவில் பரபரப்பாகப்பேசப்பட்ட கொலை வழக்கு . கணவனைக்கொன்றதாக மனைவி மற்றும் , மாமனார் கைது செய்யப்பட்டு 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அப்பீலில் 7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு குற்றவாளிகள் இருவரும் இப்போது விடுதலை ஆன நிலையில் அந்த கொலை வழக்கு . பற்றிய விபரங்கள் ஓர் டாக்குமெண்டரி ஆக எடுக்கப்பட்டிருக்கிறது . சுவராஸ்யமான இந்த வழக்கைப்பற்றிப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மிகப்பெரிய கோடீஸ்வரன் கம் தொழில் அதிபர் . தனது முதல் மனைவியுடன் காதல் திருமணம் புரிந்தவருக்கு 3 வயதில் ஒரு மகனும் , ஒரு வயதில் ஒரு மகளும் உண்டு . குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர் . 2006 ம் ஆண்டு முதல் மனைவி க்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்பட்டு மரணம் அடைகிறார் .இப்போது குழந்தைகள் இருவரைப்பார்த்துக்கொள்ள ஆள் தேவை
நாயகன் பேப்பரில் விளம்பரம் கொடுத்து நாயகியை நர்ஸ் ஆக நியமிக்கிறார் . குழந்தைகள் இருவரைப்பார்த்துக்கொள்வதுதான் நாயகியின் வேலை . நாயகி குழந்தைகள் இருவரையம் நன்றாகக்கவனித்துக்கொள்வதோடு அவர்களிடம் பாசமாகவும் நடந்து கொள்கிறார் . இரு குழந்தைகளும் நாயகியிடம் ரொம்ப அட்டாச்மெண்ட் ஆக இருக்கின்றனர்
ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியைத்திருமணம் செய்து கொள்கிறார் . அதற்கு வரதட்சணையாக நாயகியின் அப்பாவுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றைக்கொடுக்கிறார் .
நாயகன் , நாயகி இருவரது திருமண வாழ்க்கை இனிமையாகப்போய் க்கொண்டிருக்கிறது .இருவருக்கும் குழந்தை இல்லை . முதல் மனைவிக்குப்பிறந்த குழந்தைகளையே தன் குழந்தைகளாகப்பார்த்துக்கொள்கிறார் நாயகி , அந்தக்குழந்தைகளும் நாயகியை அம்மா என்றே அழைக்கின்றனர்
சில சட்ட சிக்கல்களைக்களைய , பாஸ்போர்ட் எடுக்க அந்தக்குழந்தைகளை சட்டப்படி தத்து எடுத்துக்கொள்ள நாயகி ஆசைப்படுகிறார் . இது நாயகனுக்குப்பிடிக்கவில்லை . நாயகி எதோ சதித்திட்டம் தீட்டுவதாக நாயகன் சந்தேகப்படுகிறார்
இரு குழந்தைகளும் தங்கள் அப்பாவை நெருங்க , பழக நாயகி அனுமதிப்பதில்லை . எப்போதும் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார் . இதுதான் நாயகனுக்கு சந்தேகம் வரக்காரணம் .அதாவது சட்டப்படி நாயகி அந்தக்குழந்தைகளை தத்து எடுத்துக்கொண்டால் ஒருவேளை டைவர்ஸ் அப்ளை செய்தால் குழந்தைகளை பராமரிக்க மிகப்பெரிய தொகையை நாயகன் நாயகிக்குத்தர வேண்டி இருக்கும்
சம்பவம் நடந்த 2015 ஆம் ஆண்டு நாயகி யின் அப்பா நாயகி + நாயகன் வீட்டில் தான் கெஸ்ட் ஆக வந்து இருக்கிறார் . நாயகன் , நாயகி இருவருக்கும் எதோ சண்டை .பலத்த வாக்குவாதம் .சத்தம் கேட்டு நாயகியின் தந்தை மேலே வந்து பார்த்த போது நாயகியின் கழுத்தை நாயகன் பிடித்து நெறிப்பதைப்பார்த்ததாக கோர்ட்டில் தகவல் சொல்கிறார்
தற்காப்புக்காக நாயகி ஒரு செங்கல்லால் நாயகனைத்தாக்கியதாகவும் . தன் மகளைக்காப்பாற்ற ஒரு பேட்டா ல் நாயகனின் தலையை அடித்ததாகவும் வாக்குமூலம் தருகிறார்கள் .நாயகன் ஆள் அவுட்
ஒரு கை கலப்பு , சண்டை நடந்தால் இரு தரப்புக்கும் காயம் இருக்க வேண்டும் . ஆனால் நாயகிக்கோ , நாயகியின் அப்பாவுக்கோ காயங்கள் ஏதும் இல்லை .போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி நாயகனின் தலை மிக பலமாக தாக்கப்பட்டிருக்கிறது . அது தற்காப்புக்காக தாக்குதல் அல்ல, வெறி கொண்ட வன்முறைத்தாக்குதல் என ரிப்போர்ட கூறுகிறது
குழந்தைகள் இருவரும் நாயகிக்கு ஆதரவாக வாக்குமூலம் தருகிறார்கள்
கொலைக்குற்றத்திற்காக நாயகி , நாயகியின் அப்பா இருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபப்டுகிறது .குழந்தைகள் இருவரும் நாயகனின் தங்கை குடும்பத்தாரால் பார்த்துக்கொள்ளப்படுகிறது . நாயகன் இதை உயிலிலே எழுதி வைத்திருக்கிறார்
சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் இருவரும் வளர்ந்து டீன் ஏஜ் அடைகிறார்கள் . இப்போது நாயகனின் தங்கை ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் . மீண்டும் கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது . இரு குழந்தைகளும் பொய் சாட் சி அளித்ததாகவும் அப்போது நாயகி தான் அப்படி சொல்லச்சொன்னதாகவும் கூறுகிறார்கள்
இப்போது நாயகி தரப்பு வக்கீல் நாயகனின் முதல் மனைவி யின் மரணமே இயற்கையானது அல்ல .அதில் மர்மம் இருக்கிறது என அந்த போஸ்ட் மார்ட் டம் ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கிறார் . அந்த ரிப்போர்ட்டில் முதல் மனைவி மூச்சு திணறி இறந்ததாக இருக்கிறது . கழுத்தை நெரித்தும் கொன்றிருக்கலாம்
முதல் மனைவி இருக்கும்போது +.இறக்கும்போது முதல் மனைவியின் தங்கை அங்கே இருந்திருக்கிறாள் . ஒருவேளை நாயகன் , தனது மச்சினியுடன் சேர்ந்து அந்தக்கொலையை செய்திருக்கலாம் .அல்லது நிஜமாகவே அது ஒரு இயற்கை மரணமாக இருக்கலாம்
கோர்ட் தீர்ப்பிலேயே முதல் மனைவியின் மரணம் மர்மம் நிறைந்தது என சொல்லி இருக்கிறார் ஜ்ட்ஜ்
நாயகி யின் அப்பீலில் 25 ஆண்டுகள் தண்டனை 7 ஆண்டுகளாகக்குறைக்கப்பட்டு 2024ம் ஆண்டு நாயகி , நாயகியின் அப்பா இருவரும் ரிலீஸ் ஆகி விட் டார்கள்
சபாஷ் டைரக்டர்
1 வழக்கில் சம்பந்தப்பட் டவர்கள் மட்டுமே இதில் தோன்றி இருக்கிறார்கள் .எல்லாம் லைவ் லொக்கேஷன்
2 சிறப்பான , படமாக்கம் , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு
ரசித்த வசனங்கள்
1 குற்றவாளி தரும் ஸ்டேட்மெண்ட்டை 100% அப்படியே நாம் நம்பினால்; எங்கேயோ நாம் தப்பு செய்கி றோம் என்று அர்த்தம்
2 குழந்தைகளை என்னிடம் இருந்து நீ பிரிக்க நினைத்தால் உன்னிடம் இருந்து குழந்தைகளை நான் பிரித்து விடுவேன்
3 என்ன சொல்லணும் என குழந்தைக்கு சொல்லித்தருவது வேறு . , பொய் சொல்ல சொல்லிக்கொடுப்பது வேறு
4 வெளில இருந்து பார்ப்பவர்களுக்கு இது சந்தோஷமான பேமிலி போலத்தோன்றும்
5 இது அழுவதற்கான நேரம் இல்லை , கோபப்படுவதற்கான நேரம்
6 சித்தி மேல அன்பு வெச்சிருந்தது உண்மை , ஆனா அதுக்காக அவங்க சொல்படி எல்லாம் கேட்க முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் முதல் மனைவியின் தங்கையிடம் கோர்ட் விசாரணை செய்யவே இல்லை அது எதனால் ?
2 நாயகியின் அப்பா ஒரு முன்னாள் அரசு அதிகாரி , எப் பி ஐ ஏஜென்ட் ஆகத்திறன்படப்பணிப்புரிந்தவர் என்பதால் அவருக்கு தண்டனைக்காலம் குறைக்கப்படுகிறது என தீர்ப்பில் இருக்கு.சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா ?
3 எப் பி ஐ ஏஜென்ட் ஆகபணி புரிந்தவர் என்பதால் போலீஸ் எப்படி எல்லாம் விசாரிக்கும் ? எப்படி பதில் சொல்ல வேண்டும் என மகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறதே?
4 நாயகி நாயகனை மாட்டி விட அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடை பெறும்போதெல்லாம் ரகசிய டேப் ரெக்கார்டிங் செய்திருக்கிறார் . அதை கோர்ட் கண்டு கொள்ளவில்லை
5 நாயகன் தனது தங்கைக்கு அனுப்பிய மெயிலில் ஏதோ தப்பு நடக்கிறது , திருமண வாழ்க்கை திருப்தியாக இல்லை என கூறி இருக்கிறார் .அது நாயகிக்கு எதிரான ஒரு பாயிண்ட் .அதையும் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை
6 அவ்வளவு பெரிய கோடீ ஸ்வரன் முதல் மனைவி இறந்ததும் வசதிக்குத்தக்கபடி இரண்டாம் திருமணமே புரிந்திருக்கலாம், எதற்கு நர்ஸ் தேவை விளம்பரம் ?என தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் ?
7 நாயகி தன சக்களத்தியின் குழந்தைகளை வைத்து சொத்துக்களை அடைய திட்டம் போட்டதற்குப்பதிலாக தன மூலம் ஒரு குழந்தையை பிறக்க வைத்து இன்னமும் வலிமையாகப்போராடி இருக்கலாமே? எதற்காக கர்ப்பத்தைக்கலைத்தார் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பான சினிமா பார்ப்பது போல உள்ளது .அனைவரும் பார்க்கலாம், பெண்களும் ரசிக்கும்படியான குழந்தை அம்மா சென்ட்டிமென்ட் சீன்களும் உண்டு , ரேட்டிங் 3 / 5