DRAMA என்ற ஆங்கில சொல்லுக்கு நாடகம் என்று பொருள் , இது அனைவருக்கும் தெரிந்த வார்த்தை . ஆனால் TRAUMA என்ற ஆங்கில சொல்லுக்கு ஒரு நிகழ்வின் காரணமாக பேரதிர்ச்சிக்கு ஆளான நிலை என்று பொருள், இது எத்தனை பேருக்குத்தெரியும் ? டைட்டிலை எதற்காக அவ்ளோ சிரமப்பட்டு ஆங்கிலத்தில் வைக்க வேண்டும் ? என்பது தெரியவில்லை . பல மொழிகளில் மொழி பெயர்க்க சிரமம் எனில் ரஜினியின் பட டைட்டில் மாதிரி பெயர்ச் சொல்லாக வைக்கலாமே?
21/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் இயக்குனர் தம்பி துரை மாரியப்பனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் . ஓ டி டி யில் இன்னமும் வெளியாகவில்லை .ஜனரஞ்சகமாகவும் இந்தப் படம் வெற்றி பெறவில்லை , விமர்சன ரீதியாகவும் பாராட் டுப் பெறவில்லை . எங்கே தப்பு நடந்தது என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - நாயகி ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் பணியில் இருக்கிறார் . அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் .அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .நாயகன் நாயகியை சுற்றி சுற்றி வந்து ஒன் சைடாக லவ்வுகிறான் .நாயகி அவனைக்கண்டுக்கவில்லை என்றாலும் உள்ளூர அவனைப்பிடித்திருக்கிறது . ஒரு சமயம் நாயகி பெட்ரோல் பங்க் ஓனர் வீட்டுக்கு இரவில் தனிமையில் சென்று கலெக்சன் பணத்தை ஒப்படைக்கும்போது ஓனர் நாயகியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார் .அப்போது நாயகன் எம் ஜி ஆர் மாதிரி ஆஜர் ஆகி காப்பாற்றுகிறார் .இந்த சம்பவத்துக்குப்பின் நாயகி , நாயகன் இருவரும் நெருக்கம் ஆகிறார்கள் . ஒரு கட்டத்தில் ஓவர் நெருக்கம் ஆகி நாயகி கர்ப்பம் அடைகிறார் . ஆனால் நாயகன் எஸ்கேப் . வீட்டுக்குத் தெரிந்து நாயகி க்கு செம திட்டு கிடைக்கிறது .கருவைக்கலைக்கட்டாயப்டுத்தப்படுகிறார்
சம்பவம் 2 - திருமணம் ஆன தம்பதிக்குக்குழந்தை .இல்லை . ஆண்மைக்குறைவு தனக்கு இருக்கிறது என்பதை கணவன் , மனைவியிடம் மறைக்கிறான் . செயற்கைக்கருத்தரிப்பு மையத்தில் இருவரும் போய் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் . அது ஒரு டுபாக்கூர் ஹாஸ்பிடல் .அதன் ஓனர் ஆள் வைத்து பணம் பறிக்கும் வேலை செய்பவன் .அவனது ஏற்பாட்டின் படி வில்லன் அந்த மனைவி மயக்கத்தில் இருக்கும்போது பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ ஆக எடுத்து வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறான்
சம்பவம் 3 - இது ஒரு காமெடி டிராக் .காமெடியன் தன நண்பனுடன் சேர்ந்து கார்களைத்திருடி விற்கலாம் என முயற்சிக்கிறான் . ஒரு காரை ஆட் டையைப்போட்டு கிளப்பும்போது காரில் டிக்கியில் ஒரு டெட் பாடி இருக்கிறது
மேலே சொன்ன மூன்று சம்பவங்களையும் எந்தப்புள்ளி இணைக்கிறது ? கடைசியில் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை
முதல் கதையின் காதல் ஜோடிகளாக பார்த்தோஸ் - பூர்ணிமா ரவி இருவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள் .நல்ல கெமிஸ்ட்ரி. பார்த்தோஸ் க்கு கிட்டததட்ட வில்லன் ரோல் .நன்றாக நடித்திருக்கிறார் . பூர்ணிமா ரவி காதல் ததும்பும் புன்னகையிலு ம் சரி , கருவைக்கலைக்க முடியாது என அப்பாவிடம் கதறும்போதும் சரி அருமையான நடிப்பைவெளிப்படுத்தி இருக்கிறார்
இரண்டாம் கதையின் ஜோடியாக விவேக் பிரசன்னா - சாந்தினி தமிழரசன் இருவரும் கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள் . குற்ற உணர்வில் கூனிக்குறுகும்போதும் சரி ,மனைவியிடம் அன்பை வெளிப்படுத்தும்போதும் சரி விவேக் பிரசன்னா பிரமாதமான நடிப்பு .. குழந்தை மீது ஆர்வம் கொண்டவராக சாந்தினி தமிழரசன் அம்மாவின் ஏக்கத்தைப்பிரதிபலிக்கிறார்
மூன்றாம் கதையில் காமெடியன்கள் ஆக ஈஸ்வரும் இன்னொரு நபரும் நடித்திருக்கிறார்கள் . ஈஸ்வரின் நடிப்பு பரவாயில்லை ரகம் , ஆனால் அவரது நண்பராக வருபவர் பெண் வேடம் போட்டு காமெடி என்ற பெயரில் செய்வது எல்லாம் மரண மொக்கை
ராஜ் பிரதாப் இசையில் நான்கு பாடல்கள் சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் .அஜித் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் இரு நாயகிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது கேமரா . முகண்வேலின் எடிட்டிங்கில் படம் 112 நிமிடங்கள் ஓடுகிறது . மிக மெதுவாக நகர்வது பலவீனம்
கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் தம்பி துரை மாரியப்பன்
சபாஷ் டைரக்டர்
1 லோ பட்ஜெட் படம் என்பதால் குறைவான நடிகர்கள் ,குறிப்பிட் ட சில லொக்கேஷன்களில் படத்தை முடித்த விதம்
2 படத்தில் நடித்த இரு நாயகிகளின் அழகும், இளமையும், நடிப்பும் பிளஸ்
3 மேலோ டிராமாவாக ஆரம்பித்து க்ரைம் த்ரில்லர் ஆக முடித்த விதம்
ரசித்த வசனங்கள்
1 உலகிலேயே பெரிய கொடுமை குழந்தை கொடுக்கத்தகுதி இல்லாதவன் ஆக ஒரு ஆண் இருப்பதுதான்
2 சம்சாரம் கிட்டே சொல்லும் ஒவ்வொரு பொய்யும் பலூன்ல அடைக்கும் காற்று மாதிரி , ஒரு நாள் வெடித்து வெளியே வந்தே தீரும்
3 பிக் பாக்கெட் காரனை விட பிச்சைக்காரன் அதிகமா சம்பாதிக்கிறான் . எல்லாரும் கூகுள் பே யூஸ் பண்ணினா பிக் பாக்கெட் காரன் கத என்ன ஆகும் ?
4 வாழ்க்கைல வலியே இருக்கக்கூடாது என கடவுளை வேண்டுவாங்க .ஆனா பிள்ளை பெற்றுக்கொள்ளும் வலியைத்தா என நான் வேண்டுகிறேன்
5 இந்த உலகம் எதை நோக்கிப்போய்க்கொண்டு இருக்கு தெரியுமா? பணம் இருக்கறவன் கிட் டே இருந்து பணம் பறிக்கும் வேலை யில்
6 உன்னை மாதிரி நண்பன் 100 பேர் வரலாம், ஆனா பணம் வருமா?
7 பணம் தான் மிகப்பெரும் ஆயுதம்
8 குழந்தை வேண்டி ஒரு கூட் டம் , அம்மா , அப்பா இல்லாத அனாதைக்குழந்தைகள் ஒரு பக்கம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பெட்ரொல் பங்க் ஓனர் வீட்டுக்கு கலெக்சன் பணம் தரப்போகும்போது நாயகி ஒரு பேக் உடன் செல்கிறார் .ஆனால் திரும்ப வரும்போது அந்த பேக்கை அங்கேயே விட்டு வருகிறார் .கண்டினியுட்டி மிஸ்ஸிங்க்
2 இவ்ளோ பிரச்சனை நடந்த பின்னும் அதே பெட்ரொல் பங்க் ஓனர் இடம் நாயகி வேலை பார்ப்பது எப்படி ?
3 திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகியும் நாயகிக்கு தன கணவன் மேல் தான் குறை என்பது தெரியாதா> ?பல ஹாஸ் பிடல்ஸ் போயாச்சு . ரிபோர்ட் தெரியாமயா இருக்கும் ?
4 பெட்ரொல் பங்க் ஓனர் மீது நாயகி போலீசில் புகார் தராதது எதனால் ?
5 க்ளைமாக்சில் வில்லன் செய்யும் ஓவர் ஆக்டிங் சகிக்கவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட் டா பார்க்கலாம் என்ற அளவில் தான் இருக்கு .சுமாரான படம் . விகடன் மார்க் 39 . ரேட்டிங் 2/ 5
Trauma | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Thambithurai Mariyappan |
Written by | Thambithurai Mariyappan |
Produced by | S Uma Maheshwari |
Starring |
|
Cinematography | Ajith Srinivasan |
Edited by | Mugan Vel |
Music by | RS Rajprathap |
Production company | Turm Production |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment