Thursday, April 03, 2025

THE DOOR (2025) - தி டோர் (தமிழ் ) - - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் )




 நடிகை  பாவனா  நம்மள் (2002)   என்ற  மலையாளப்படத்தில் அறிமுகம் ஆனாலும் நாயகியாக நடித்த முதல் படம்   ஸ்வப்னக்கூடு (2003) .என்ற  மலையாளப்படம் .  தமிழில்  இவர் நடித்த முதல் படம் சித்திரம் பேசுதடி (2006) . தமிழில் இவர் நடித்த கடைசிப்படம்  அசல் (2010) 15  வருட இடைவெளிக்குப்பின்  ஒரு கம் பேக் படமாக இந்த ஹாரர் திரில்லர் கதையில் நடித்துள்ளார் .க்ரைம் திரில்லர்  பாணியில்  எடுக்கப்பட் ட இந்த ஹாரர் த்ரில்லர் எப்படி ?என்பதைப்பார்ப்போம் . இது 28/3/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி ஓடுகிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம்  1 -  கணவனை இழந்து  விதவை ஆக இருக்கும் ஒரு பெண்  தனது 16 வயது  மகளுடன்  தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் .அவரது பெயரில்  கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் இருக்கிறது .அந்த நிலத்தை ஆட்டையைப்போட வில்லன்கள் குழு  மூவர் அவரை சுற்றி வருகின்றனர் .ஆனால்  அந்தப்பெண்  நிலத்தை விற்கத்தயார் இல்லை 


சம்பவம் 2 - அந்தப்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகுகிறார்  ஒரு ஆள் .அந்தப்பெண்  அவரை நம்புகிறாள் .ஒரு கட்டத்தில் தான் அவளுக்குத் தெரியவருகிறது .அந்த ஆள்  வில்லன்கள்  க்ரூப்பின்  கையாள் .வில்லன்கள்  க்ரூப்  அந்தப்பெண்ணைக்கொலை  செய்து விடுகிறது .கொலை செய்த  இருவரும்  சாலை விபத்தில்  இறக்கிறார்கள் .அந்த விபத்தை நேரில் பார்த்த மூன்றாவது ஆள்  அதிர்ச்சியில்  மாரடைப்பில்  மரணம் அடைகிறார் .இப்போது  மிச்சம் இருப்பது  அந்தப்பெண்ணின் ஆசைக்காதலன் , மோசடிப்பேர்வழி  மட்டும் தான் 


 சம்பவம் 3  - நாயகி  ஒரு ஆர்க்கிடெக் ( கட்டிடக்கலை நிபுணர் ) நாயகியின் அப்பா ஒரு வக்கீல் .இவர்  ஒரு சாலை விபத்தில் இறக்கிறார் . அந்த சமயம்  நாயகி  கட்டிட  வேலை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த  வேலை பாதியில்   நிற்கிறது .மூன்று  மாதங்கள் கழித்து மீண்டும் வேலை ஆரம்பிக்கும்போது தொடர்ந்து  கொலை , தற்கொலை  விபத்து என  4 துர்மரணங்கள் நிகழ்கின்றன .நாயகிக்கு  இப்போது  சந்தேகம் வருகிறது .இந்த பில்டிங்கில் என்ன மர்மம் ?எதனால்   தொடர்ந்து  மரணங்கள்  நிகழ்கின்றன? 



சம்பவம் 4  - நாயகி   தங்கி இருக்கும் வீட்டில்  சில அமானுஷ்ய சம்பவங்கள்  நிகழ்கின்றன. நாயகி  ஒரு போலீஸ்  ஆபீசர்  உதவியை நாடுகிறார் . பேரா நார்மல்  ஆக்ட்டிவிட்டி நிபுணர் ஒருவர் நாயகிக்கு உதவியாக வருகிறார் 


 பிளாஷ்பேக்கில்  நிகழநத  சம்பவம் 1 ,2  ஆகியவற்றுக்கும்  20 வருடங்கள் கழித்து  இப்போது நடக்கும்   சம்பவம்  3, 4 ஆகியவற்றுக்கும்  என்ன சம்பந்தம் என்பது மீதி திரைக்கதை  


நாயகி ஆக   பாவனா  யதார்த்தமாக நடித்துள்ளார் . 15 வருடங்கள்  கேப்  விழுந்திருந்தாலும் அவர் முகத்தில் , உடலில் அதே இளமை . பயப்படும்  காட் சிகளில்  இன்னமும்  கவனம் தேவை .தமிழ் சினிமாவில் 

  பேய்ப்படங்களில் , திகில்  காட் சிகளில்  முகத்தில் பய உணர்வுகளை பிரமாதமாக வெளிக்கொணர்ந்தவர்கள் யார் ? , நூறாவது நாள் நளினி ,  ராமராஜன் இயக்கிய ஹலோ யார் பேசறது ?படத்தில் ஜீவிதா 



நாயகிக்கு உதவியாக வரும் போலீஸ்   ஆபீசர்  ஆக  கணேஷ் வெங்கட்  ராம் நடித்துள்ளார் .போலீஸ்   ஆபீசர்  ஆக   வரும் இவர்  எப்படி   தாடியுடன் , போலீஸ்  கட்டிங்க்  இல்லாத   ஹேர் ஸ்டை லில்  வருகிறார் என்பது தெரியவில்லை .இவரது  சிரிப்பும்,தத்துவ வசனங்களும் செயற்கை 


நாயகியின்  ரூம்  மேட் ஆக  வரும்  தோழி கேரக்ட்டரில்  சிந்தூரி  சிடு சிடு  முகமாக  ஆரம்பக்காட் சிகளில்  வருவது  எதற்கு  என்பது தெரியவில்லை 


இவர்கள் போக  ரமேஷ் ஆறுமுகம் , ஜெயப் பிரகாஷ் , ஸ்ரீ  ரஞ்சனி  உட்பட  பலரும்  கொடுத்த வேலையை  சரியாக செய்து இருக்கிறார்கள் 


ஜி  கவ்தமின் ஒளிப்பதிவில்  பாவனாவின் க்ளோசப் காட் சிகள் ,கொடைக்கானலில் இயற்கை   அழகுகள் அருமை .திகில்  படங்களில்  முக்கியம் அம்சமே  பின்னணி  இசை தான் . ஆனால்   இசை அமைப்பாளர்  வருண் உன்னி  அதில் கோட் டை விட்டு விட் டார்  . வெகு சுமாரான பிஜிஎம் . அதுல்   விஜயின்  எடிட்டிங்கில்  படம் 132   நிமிடங்கள்   ஓடுகிறது . பிளாஷ்பேக்  ரொம்ப நீளம் .இன்னமும்    ட்ரிம்   செய்து இருக்கலாம் .   சவுண்ட்   டிசைனிங்க்  இன்னமும்  துல்லியமாக அமைத்திருக்கலாம் 


கதை , திரைக்கதை  எழுதி இயக்கி இருக்கிறார்  ஜெயதேவ்  40 வருடங்களுக்கு  முன்   மலையாள கில்மாப்படங்களை இயக்கியவர் பெயரை டைட்டிலில்    ஜெய்  தேவ்     என பிரித்துப்போடுவார்கள் .அவரா?என்பது தெரியவில்லை 


சபாஷ்  டைரக்டர்

1 நாயகியும் , அவரது தோழியும்  தங்கி இருக்கும் வீட்டில்  நிகழும்  அமானுஷ்ய சம்பவங்கள்  நல்ல திகில் 


2   எடுத்துக்கொண்ட கதை ஹாரர் த்ரில்லர்   என்றாலும்   அமைத்த திரைக்கதை   க்ரைம் த்ரில்லர்   என்பதால் கூடுதல் சுவராஸ்யம் 


3  பாவனாவின் அழகும், நடிப்பும் 


  ரசித்த  வசனங்கள் 


1   நான்கு சுவருக்குள்  அடைந்து கிடக்காம மீண்டு வந்ததுக்கும் மீண்டும்  வந்ததுக்கும்   வாழ்த்துகள் 


2  அவங்கவங்க பாதுகாப்பு அவங்கவங்க கைகளில், குறிப்பாகப்பெண்கள் 


3    எல்லார்  வாழ்க்கைலயும்  நல்லதும் இருக்கும் ,கெட்டதும் இருக்கும், பாசிட்டிவை மட்டும் எடுத்துக்குவோம் 


4  இந்த உலகில் நம்மை விட அபாயகரமான சக்திகள் இருக்கின்றன 


 மனிதர்கள்   தான் இருப்பதில் அதிக அபாயம் 


5   ரொம்ப டயர்டில் தூங்கினா கெட்ட கனா வரும் 


6  நம்ம  கண்களுக்குத்  தெரி யாத  நிறைய   விஷயங்கள்   இந்த   உலகில் இருக்கின்றன 

 


7   ஒரு   வக்கீல்  ஒரு  பத்திரத்தில்    சாட் சிக்கையெழு த்து  போட்டிருந்தா  அதில் எதோ  வில்லங்கம்  இருக்கு என அர்த்தம் 


 8    சில நேரங்களில்  கதையை  விட நிஜம்  சுவராஸ்யமான இருக்கும் 


9   மனிதனின் தீராத வியாதி பேராசை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பட  டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை 


2   நாயகியும் , தோழியும்  ஒரே  வீட்டில் தங்குகிறார்கள் . இருவரும்  பெண்கள் . தனித்தனி  அறைகளில்  எதனால்  தங்கணும் ? திகில் , பேய்  பிரச்சனைகள் வந்த பின்னாவது ஒரே அறையில் தங்கி இருக்கலாம் 


3   வில்லனின்  அடியாளுக்கு  கோடீஸ்வரியைக்காதலிக்கும் வாய்ப்புக்கிடைக்குது .அவளைக்கல்யாணம்  பண்ணிக்கொண்டால்   அவன் கோடீஸ்வரன் . அதை செய்யாமல்   வில்லன் க்ரூ ப்புக்கு உதவி செய்து  சில லட் சங்களை சம்பளமாக வாங்குவார்களா? யாராவது ? 


4  படம்  போட்டு  97 வது   நிமிடத்தில்  வரும் பிஜிஎம்  பாடும் வானம்பாடி  படத்தில் வரும் அன்பே, அன்பே ,  அன்பே  பாடும் பாடல்  எங்கே  பாடலின்  தீம்  இசை 


5   வில்லன்  நாயகியிடம்   எல்லா உண்மைகளையும் எதனால் சொல்லணும் ?  அவன்  பாட்டுக்கு எனக்குத்தெரியாது என எஸ்கேப்  ஆகி இருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு மணி நேரத்தில்   முடிக்க வேண்டிய கதையை  இரண்டு மணி நேரம் இழுத்திருக்கிறார்கள் . மற்றபடி  நல்ல க்ரைம் த்ரில்லர் தான் . விகடன் மார்க் யூகம் 39 . ரேட்டிங்   2 / 5 

0 comments: