Sunday, April 06, 2025

TEST(2025)- தமிழ் -சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @நெட்பிளிக்ஸ்


TEST(2025)- தமிழ் -சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @நெட்பிளிக்ஸ்


திரை அரங்கு வெளியீடாக இல்லாமல் நேரடியாக நெட் பிளிக்சில் 4/4/2025 முதல் ரிலீசான இந்தப்படம்  கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் கை மையமாக வைத்து உருவாகிய ஸ்போர்ட்ஸ் டிராமா.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன். இந்திய கிரிக்கெட் அணிப்0ஒ0ப்யின் முன்னணி வீரர்.ஆனால் இப்போதுசாங்க்ஸ்ச்களில் அவரால் சோபிக்க முடியவில்லை.அவர்டீமை விட்டுத்தூக்கப்படலாம் என ஒரு பேச்சு மீடியாக்களில் உலா வருகிறது.இப்போது நடக்க இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் தான் அவரது கடைசி மேட்ச் என ஒரு வதந்தி.அதனால் அவர் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.இவருக்கு ஒரு மனைவி ஒரு மகன் .


நாயகி திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்.ஒரு முறை கரு தரித்து கலைந்து விட்டது.பல சிகிச்சைகளுக்குப்பின் டாக்டர்கள் கடைசி வாய்ப்பாக ஒரு நாள் குறிக்கிறார்கள்.அந்த நாளில் நாயகி தன் கணவனுடன் சேர வேண்டும்.நாயகியின் முன்னாள் வகுப்புத்தோழன் தான் நாயகன்.நாயகியின் அப்பா தான் நாயகனுக்குக்கிரிக்கெட் குரு ,ஆலோசகர் எல்லாம்.ஆனால் கடைசி சில மேட்ச்களில் நாயகன் சரியாக விளையாடாததால் அவரைக்கடுமையாக விமர்சனம் செய்ததால் நாயகியின் அப்பா உடன் நாயகன் பேசுவதில்லை.அவரது மரணத்துக்குக்கூட போகவில்லை.


வில்லன் மூலிகை பெட்ரோல் ராமர் போல மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும் பிராஜக்ட்க்காக உழைக்கிறார்.ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அவருக்கு 50 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது.பைனான்ஸ் காரன் நெருக்குகிறான்.வில்லனுக்குப்பணத்தேவை இருக்கிறது.50 லட்சம் கடன்+ குழந்தைக்கரு சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் கட்ட வேண்டும்.


வில்லனின் மனைவி தான் நாயகி.நாயகனின் மகனின் ஸ்கூல் டீச்சரும் கூட



இப்போது நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சில் இந்தியாவைத்தோற்க வைக்க 100 கோடி பணம் தர ஒரு க்ரூப் ரெடியாக இருக்கிறது.


வில்லன் நாயகனின் மகனைப்பணயக்கைதியாக வைத்து நாயகனை மேட்சில் தோற்கும்படி மிரட்டுகிறான்.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக சித்தார்த் கச்சிதமான நடிப்பு.ஒரு காலத்தில் அற்புதமாக ஆடி இப்போது பார்மில் இல்லாத வலியை செமயாகப்பிரதிபலிக்கிறார்.அவரது மனைவியாக மீரா ஜாஸ்மின்.அதிக வேலை இல்லை


நாயகி ஆக நயன் தாரா.பரிதாபமாக இருக்கிறார்.அவரது முகத்தில் களை இல்லை.உடலில் வனப்பு இல்லை.உடல் மொழியில் உற்சாகம் இல்லை.நடிப்பில் குறை இல்லை.ஐயா காலத்து நயனை ரசித்தவர்கள் பார்த்தால். மனம் நோவது உறுதி


வில்லன் ஆக மாதவன் அனுபவம்  மிக்க நடிப்பு.விரக்தி ,ஏமாற்றம் ,இயலாமை,கோபம் அனைத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறார்


வில்லனின் நண்பன் ஆக காளி வெங்கட் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


சுமந் குமாருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் சசிகாந்த்.


விராஜ் சிங் கோலி தான் ஒளிப்பதிவு.குட் ஒர்க்.சுரேசின் எடிட்டிஙகில்  படம். 141 நிமிடங்கள் ஓடுகிறது.

சக்தி ஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்


சபாஷ டைரக்டர்


1 நாயகன்,நாயகி,வில்லன் மூவர் நடிப்பும் அருமை.சம வாய்ப்பு.

2 முதல் பாதி பர பரப்பான திரைக்கதை

3  மக்களுக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் கிரேசை வைத்து திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான்.ரூல்ஸ்தான் அதோட அழகே!


2. களத்தில் இறங்கி விளையாடனும்.நோ. சாய்ஸ்


3. லட்சத்தைப்பார்க்காதே! லட்சியத்தைப்பார்


4. பொய் சொல்றவஙகளோட நான் பிஸ்னெஸ் பண்றதில்லை


5. சிம்ப்பிள் மேட்டர் .சால்ட் வாட்டர்


6. இந்தியா ஜெயிக்கனுமா? நீ ஜெயிக்கனுமா?


போரில் ஒரு வீரன். சண்டை போடுவது தன்னைக்காப்பாத்திக்கவா? தன் நாட்டைக்காப்பாத்தவா?

7. இந்த உலகம். நாளை எப்படி இருக்கனும்னு. இன்னைக்கே கனவு காண சிலரால் தான் முடியும்

8. பணம்,புகழ் இன்னும் எதெதுக்கோ ஆட பலர் இருக்காஙக.ஆனா கேம்க்காக ஆட அர்ஜூன் மட்டும் தான்


9 கனவு கண்டா மட்டும் போதாது.ஜெயிக்கனும்.ஜெயிச்சாதான் மதிப்பு.ஒன்லி வின்னர்ஸ் ஆர் கிரேட்


10. சராசரி என்னும் சாக்கடைல விழாதே

11. ஒன்லி வின்னர்ஸ் ஹேவ் டேலண்ட்


12 தோற்பதும் ,ஜெயிப்பதும் ஒரே காயினின் இரு பக்கங்கள்


13. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு வெற்றி இருக்கும்.ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு தோல்வி இருக்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர்.அவரது போன் பேட்டரி டவுன் ஆகி இரு முக்கியக்கட்டங்களில். பிரச்சினை .பவர் பேங்க் வெச்சுக்க மாட்டாரா?

2 நாயகி ஒரு டீச்சர்.உடை கண்ணியமா இருக்க வேண்டாமா? பேக் நெக் லோ யு நெக் ஜாக்கெட் 


3 நாயகன் வில்லநால். ட்ராப்செய்யப்படும். வரை படம் ஸ்பீடு.அதற்குப்பின் தொய்வு.பின் பாதி நம்ப முடியாத  காட்சிகள்

4 நாயகனிந் மகன் மிஸ்சிங்.கவலையில் சோகமாக நாயகன்.ஆனால் அம்மா மீராஜாஸ்மின் நிம்மதியா தூங்கறார்?

5 நயன் பேசும் தன் கனவு விருப்ப டயலாக் தெற்கத்திக்களளன் டயலாக் உல்டா


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - TEST(2025)-தமிழ்- (த்ரில்லர்)@நெட்பிளிக்ஸ் - கிரிக்கெட் ரசிகர்களைக்குறி வைத்து எடுக்கப்பட்ட மேட்ச் பிக்சிங் கதைக்கரு கொண்ட  படம்.மாதவன்,சித்தார்த்,நயன் தாரா மூவர் நடிப்பும் அருமை.ஆனால் நம்ப முடியாத திரைக்கதை,ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தின் பலவீனம்.விகடன் மார்க் 41 ரேட்டிங் 2.25 / 5

0 comments: