ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - கதை நடக்கும் கால கட்டம் இண்ட்டர்நெட் இல்லாத 1980. சின்னவயதில் இருந்தே நாயகனுக்கு அடுத்தவங்களுக்கு வந்த கடிதங்களைப்படிப்பதற்கு அலாதி ஆர்வம் . நாயகன் ஒரு அநாதை .வளர்ந்து பெரியவன் ஆனதும் தபால் காரன் ஆகி விட் டால் பல கடிதங்களை தினம் படிக்கலாம் என நினைத்து தற்காலிகப்பணியாளர் ஆக அந்த ஊர் தபால் நிலையத்தில் போஸ்ட் மேன் ஆகிறான் . போஸ்ட் ஆபீசில் இருக்கும் போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு மகள் . நாயகனுக்கு மெயின் ஜாப் அடுத்தவங்களுக்கு வந்த லெட்டரைப்படிப்பது ,நாயகியை லவ் பண்ணுவது .பார்ட் டைம் ஜாப் ஆக சில விஷயங்கள் செய்கிறார் . சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்
சம்பவம் 2 - அந்த ஊரில் அடிக்கடி இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள் . போலீசால் அதைக்கண்டுபிடிக்க முடியவில்லை
சம்பவம் 3 - அந்த ஊரில் ஒரு குடிகாரன் இருக்கிறான் , அவனுக்கு ஒரு தங்கை அவளை வில்லன் பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறான் .வில்லனைப்பழி வாங்க அண்ணன் திட் டம் போட்டுக்கொலை செய்யப்போகும்போது நாயகன் வில்லனைக்காப்பாற்றி விடுகிறான் . பின் வில்லன் செயல் அறிந்து நாயகன் வில்லனைக்கொலை செய்கிறான்
சம்பவம் 4 - ஒரு கடிதம் மூலம் சமூக விரோத கும்பல் ஒன்று சட் ட விரோதமாக ஒரு பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதை அறிந்து நாயகன் அந்தக்கடிதத்தை அழித்து விட்டு போலியாக ஒரு கடிதத்தை ரெடி பண்ணி அந்தப்பணத்தை அபேஸ் செய்கிறான் .நாயகனின் இந்த செயலால் ஒரு அப்பாவியின் உயிர் பறி போகிறது
சம்பவம் 5 - மேலே சொன்ன 4 சம்பவங்களுக்கும் சூத்திரதாரி ஒரு வில்லி .அவள் தான் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை ரகசியமாகக்கடத்தி மும்பைக்கு அனுப்பி விற்று வருபவள் .தன் செயலுக்குத்தடையாக இருந்த நாயகனைப்போட்டுத்தள்ளப்பிளான் போடுகிறாள்
இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நான் சொன்ன கதை 25 % தான் .சுவராஸ்யம் கருதி முக்கியமான திருப்பங்களை சொல்லவில்லை
நாயகன் ஆக கிரண் அப்பாவரம் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் . பிரமாதமான நடிப்பு என சொல்ல முடியாவிடடாலும் பரவாயில்லை ரகம் என சொல்லலாம் . நாயகி ஆக நயன் சரிகா கண்ணியமான உடையில் வருகிறார் .கிராமத்துப்பெண் அழகு கண்களைக்கவர்கிறது டீச்சர் ஆக தன்வி ராம் நடித்திருக்கிறார் . கச்சிதம் . ரெடின் கிங்க்ஸ்லி காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு கத்துகிறார் .இவரும் , யோகிபாபுவும் ஒரே மாதிரி . ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருந்தால் தான் சிரிப்பு வரும்,ஆனால் இவர்கள் இருவரும் தா ங்கள் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிப்பார்கள் என நினைக்கிறார்கள் , ஐயோ பாவம் . நாயகியின் அப்பாவாக அச்சியுத் குமார் நல்ல குணச்சித்திர நடிப்பு . வில்லியாக வருபவருக்கு நடிப்பு சுமார் தான் , ஆளும் படு சுமார் தான்
சாம் சி எஸ் இசையில் 3 பாடல்கள் ஹிட் . பின்னணி இசை பிரமாதம் . ஸ்ரீ வரப்பிரசாதி எடிட்டிங்கில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது .145 நிமிடங்கள் டைம் ட்யுரேஷன் , விஷ்வாஸ் டேனியல் , சதீஷ் ரெட்டி மாசம் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் .கிராமத்து அழகைக்கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் . நாயகி ,, டீச்சர் இருவரையும் கண்ணியமாக , அழகாகக் காட்டி இருக்கிறார்கள் . சுஜித் & சந்தீப் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்கள் .
சபாஷ் டைரக்டர்
1 கதை சொல்லும் உத்தி பிரமாதம் . நாயகன் டூயல் ரோல் என்ற ட்விஸ்ட் டை ஓப்பன் செய்த விதம் அருமை என்றால் க்ளைமாக்சில் அதை வைத்து செய்த இன்னொரு டிவிஸ்ட்டும் அபாரம்
2 நாயகன் நாயகி இடையில் போஸ்ட் ஆபீசில் ரப்பர்ஸ்டாம்ப் சீல் வைக்கும் காட் சி
3 அருகருகே அறைகளில் அடைபட்டு இருக்கும் நாயகன் , டீச்சர் இருவரும் யார் ? அவர்களுக்கு இடையில் என்ன உறவு என்பதை ஓப்பன் செய்த விதம்
4 மலை கிராமமாக இருப்பதால் மதியம் 3 மணிக்கே கிராமம் இருளில் மூழ்கிவிடும் என்ற கான்செப்டை திரையில் கொண்டு வந்த விதம் அழகு
செம ஹிட் சாங்க்ஸ்
1 என் கண்ணம்மாவே , என் செல்லம்மாவே
2 நல்ல நல்ல செடிகளை சேர்ப்போமா?
3 ஆடு ஆடு நிலமெல்லாம் அதிரட்டும் ஆடு
ரசித்த வசனங்கள்
1 வாழ்க்கையில் நாம் பண்ணும் நல்லதும், கெட்டதும் எப்பவும் நம்மைத்துரத்திட்டு தான் இருக்கும்
2 ஓல்டு மங்க் ரம் குடிச்ச மான் குட்டி மாதிரி எதுக்கு துள்ளிக்கிட்டு இருக்கே?
3 இவ்ளோ அழகை நேரில் இப்போதான் பார்க்கிறேன்
இதே டயலாக்கை இன்னும் எத்தனை பேர் கிட் டே சொல்லி இருக்கே?
4 நீ என்ன ஜாதி ?
நான் காதலிக்கும் பெண் எந்த ஜாதியோ அந்த ஜாதி
5 என்னுடைய தனிமை தான் எனக்கு பயத்தை அறிமுகப்படுத்துச்சு
6 கிரிமினல் ஒரே இடத்தில் இருக்க மாட் டான்
7 கெட்டவங்களுக்கு உதவி செஞ்சா அவன் என்னைக்காவது தன் சுபாவத்தைக்காட்டுவான்
8 கண்ணுக்குத்தெரியும் ,மனிதனை விட கண்ணுக்குத்தெரியாத ஜாதி தான் இந்த உலகை ஆளுது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பணத்தைக்கை மாற்று வதற்கான கோட் வோர்டு "அம்மன் கோவில் " வில்லனின் அடியாள் நாயகனிடம் எந்தக்கோயில் ? எனக்கேட்பது மடத்தனம் . பாதி விடையை ஓப்பன் பண்ணிய மாதிரி இருக்கே?
2 வில்லன் ஒரு பெண்ணை ரேப் பண்ண பல நல்ல நேரங்கள் , வாய்ப்புகள் இருந்தன .பெண்ணின் அண்ணன் காரன் குடிகாரன் .90% நேரங்களில் அவன் வீடு தங்குவதில்லை .பெண் தனியாகத்தான் இருப்பாள் .அப்போ வந்து ஈசியாக ரேப் பண்ணாமல் கிறுக்கன் மாதிரி அண்ணன் இருக்கும்போது அடியாட்கள் இருவருடன் வந்து வாசலில் அண்ணனை கட்டி வைத்து தங்கை யை ரேப் செய்வது ரிஸ்க்
3 வில்லனின் உயிரை நாயகன் காப்பாற்றுகிறான் . வில்லன் பாட்டுக்கு பேசாம போக வேண்டியதுதானே? லூஸ் மாதிரி எதுக்கு நாயகனிடம் நான் ஒரு பெண்ணை ரேப் செய்தேன் என வாக்கு மூலம் தருகிறான் ? உங்களைக்கே ட்டா ங்களா? முருகேசா?
4 நாயகன் , நாயகி இருவரும் லவ் பண்ணுவது நாயகியின் அப்பாவுக்குத்தெரியாது . நாயகனின் ஹையர் ஆபீசர் தான் நாயகியின் அப்பா .அப்படி இருக்கும்போது என்ன தைரியத்தில் நாயகன் தன் வருங்கால மாமனார் முன்னிலையில் நாயகியின் கை பற்றி ஊர் மக்கள் முன் டான்ஸ் ஆடுகிறான் ? மாட்டுகிறான் ?
5 வில்லன் ஒரு குடிகாரன் . ஆள் ரொம்ப வீக்கா இருக்கான் . அந்தப்பெண் ஜைஜாண்டிக்கா இருக்கு . சும்மா ஒரு தள்ளு தள்ளி விட்டாலே வில்லன் கீழே விழுந்து விடுவான் போல . ஒரு ஸ்ட்ராங்க் ஆன ஆள் வில்லனாக நடிக்க கிடைக்கலையா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வேகமாகச்செல்லும் திரைக்கதை , பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த த்ரில்லர் மூவி , பார்க்கலாம் ரேட்டிங்க் 3 / 5
KA | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Sujith & Sandeep |
Written by | Sujith & Sandeep |
Produced by | Chinta Gopalakrishna Reddy Chinta Vineesha Reddy Chinta Rajashekar Reddy |
Starring | Kiran Abbavaram Nayan Sarika Tanvi Ram |
Cinematography | Viswas Daniel Sateesh Reddy Masam |
Edited by | Sree Varaprasad |
Music by | Sam C. S. |
Production companies | Srichakraas Entertainments KA Productions[1] |
Release date |
|
Country | India |
Language | Telugu |
Box office | ₹53 crore[2] |
0 comments:
Post a Comment