ஜனரஞ்சசகமான காட்சிகளோ , டூயட்டோ , காமெடியோ , சண்டைக்காட்சிகளோ இல்லாத மென்மையானபடம் .அனைவரும் ரசிக்கும்படியான படம் அல்ல
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகிக்கு 70 வயது . முன்னாள் டீச்சர், கணவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன .மகனுக்குத்திருமணம் ஆகி மனைவி ,, குழந்தை என இருக்கிறான் .. மகன் த ன் அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்கிறான் . இது நாயகிக்குப்பிடிக்கவில்லை . தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பலமுறை கூறியும் மகன் அதைக்கேட்பதில்லை .
நாயகனுக்கும் 70 வயது . மனைவி இறந்து விடடாள் இரு மகன்கள் உண்டு . முதல் மகனுக்குத்திருமணம் ஆகவில்லை . இரண்டாவது மகனுக்குத்திருமணம் ஆகி மனைவி , குழந்தை எனத்
தனியே இருக்கிறான் . நாயகன் நாயகி இருக்கும் முதியோர் இல்லத்தில் உணவு பரிமாறுவது உட்பட பல வேலைகள் செய்யும் பணியாள்
உணவு பரிமாறும்போது ஒரு நாள் நாயகி இங்கே இருக்கவே பிடிக்கவில்லை எனப்புலம்ப நாயகன் விளையாட்டாக என்னுடன் எனது வீட்டுக்கு வந்து விடுங்கள், எனக்கு டீ போட ஒரு ஆள் ஆச்சு எனக்கூறுகிறான் . அடுத்த நாள் நாயகி சரி , வருகிறேன் எனக்கூறி விடுகிறாள் . நாயகனுக்கு தர்மசங்கடம் . இதை எதிர்பார்க்கவில்லை . இதற்குப்பின் நாயகன் எடுத்தமுடிவு என்ன? இரு வீட்டின் வாரிசுகளும் , இந்த சமூகமும் இதை எப்படி டீல் செய்யுது என்பது மீதி திரைக்கதை
நாயகி ஆக லீலா சாம்சன் பிரமாதமாக நடித்திருக்கிறார் ,நமக்குத்தெரிந்த முகம் இவர் ஒருவர் தான் பத்ம ஸ்ரீ விருது பெற்ற பரத நாட்டிய நடனக்கலைஞர் இவர் .மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்.
நாயகன் ஆக கோழிக்கோடு ஜெயராஜ் நடித்திருக்கிறார். , நாயகன் ஆக இவர் நடிக்கும் முதல் படம் இது .இதற்கு முன் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். .இயற்கையான நடிப்பு
அனு சித்தாரா முதியோர் இல்லத்தில் பணி புரிபவராகக் கெஸ்ட் ரோலில் வருகிறார் .
படத்தில் நடித்த மற்ற அனைவருமே அவரவர்க்குக்கொடுத்த பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
எடிட்டிங் பக்கா.107 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்.ஒளிப்பதிவு ,இசை,பின்னணி இசை அனைத்தும் அருமை
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிசித் அசோகன் .
சபாஷ் டைரக்டர்
1 நாளை இட்லி பரிமாறும்போது அவளுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒரு இட்லி வைத்தால் அவளை நீ ஏத்துக்கறேனு அர்த்தம் என்று நாயகியின் தோழி நாயகனிடம். சொன்னதும் அடுத்த நாள் நடக்கும் நிகழ்வும்,அதற்கான மற்றவர்களின் ரெஸ்பான்சும் கவிதை
2 முதல் சீனிலிருந்து கடைசி வரை நாயகன் நாயகியை டீச்சரே என மரியாதையுடன் அழைப்பது அருமை.
3 நாயகனின் மகன் தன் காரியம் ஆகும் வரை காத்திருந்து பத்திரத்தில் நாயகன் சைன் செய்ததும் அம்போ என விட்டுப்போகும் சீன்
4. நாயகன் ,நாயகி சம்பந்தப்பட்ட அனைத்துக்காட்சிகளும் கண்ணியமான கவிதை
ரசித்த வசனங்கள்
1 அம்மாவையோ , அப்பாவையோ முதியோர் இல்லத்தில் விட்டவர்கள் திருப்பி அவங்களை வீட்டுக்கு அழைத்து சென்றதாக சரித்திரம் இல்லை
2 எத்தனையோ பிள்ளைகளுக்கு நல்ல விஷயம் சொல்லிக்கொடுத்த டீச்சருக்கு தன் சொந்த மகன்க்கு நல்லது சொல்லிக்கொடுக்க முடியல
3. நான் சிரிச்சதுக்குக்காரணம் அவன் என் காதலைப்புரிஞ்சுக்கனும்னு..ஆனா அவன் என்னடான்னா அப்பளம் எக்ஸ்ட்ரா வைக்கறதுக்காக சிரிக்கறதா நினைச்சு ஒரு அப்பளம் வெச்சுட்டுப்போறான்
4. இவ்ளோ வயசானபின் இப்படி ஒரு அதிர்ஷ்டம் யார்க்குக்கிடைக்கும்?5. லிவ்விங் டுகெதர் எல்லாம் அந்தக்காலத்துல மோசம்.இப்போ அதான் பேஷன்
6 இஷ்டம் உள்ளவரோடு வாழ்வது ஒரு பாக்கியம்
7 டீச்சரோடு இருப்பதால் முதன் முதலா ஒரு ஆள் என்னை சார்னு கூப்பிட்டான்.என் வாழ்நாளில் யாரும் அப்படிக்கூப்பிட்டதில்லை
8. பீடி குடிப்பது எனக்குப்பிடிக்காது.இதை என் புருசன் கிட்டே அப்பவே சொல்லி இருந்தா அவரு இப்போ உயிரோடு இருந்திருப்பாரு
9 ஆம்பளை கள்ளுக்குடிப்பது தப்பில்லைனு எனக்குத்தோணுது.
10.நான் இறக்கும்போது யாராவது ஓன்னு அழனும்.அது போதும் எனக்கு
11. எந்த நோய் நொடியும் இல்லாம பூரண ஆரோக்கியத்தோடு வாழும் ஒருவருக்கு சின்ன அசுகம் வந்தாலும் மனதில் பயம் வரும்
12 நல்லவங்களை ஆண்டவன் சீக்கிரமாவே தன்னுடன் அழைத்துக்கொள்கிறான்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -CLEAN U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற படம்.பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.ரேட்டிங் 3.5 /5
0 comments:
Post a Comment