ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பாரன்சிக் நிபுணர் மேலும் ஹேக்கர் . டியூட்டியில் இருந்தபோது பல கேஸ்களை அசால்ட் ஆக டீல் செய்தவர் . ரிட்டயர் ஆகி 19 வருடங்கள் ஆகின்றன . இப்போது தன் நண்பர் ஆன அசிஸ்ட்டண்ட் கமிஷனர் அழைப்பின்படி ஒரு முக்கியமான கேசில் உதவி செய்ய கொச்சி ( எர்ணாகுளம் ) வருகிறார் .
நகரில் வித்தியாசமான முறையில் சில கொள்ளைகள் நடக்கின்றன . கோயிலில் தங்க சிலையை விட்டு விட்டு ஒரு சாதா சிலை திருடு போகிறது . கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள வெற்றிக்கோப்பை திருடு போகிறது. ஒரு கண் காட்சியில் சில ஆயிரம் மதிப்பே உள்ள நாக மாணிக்கக்கல் திருடு போகிறது. இதனால் அரசுக்கு பெரிய இழப்பு எதுவும் இல்லை . ஆனால் ஒவ்வொரு கொள்ளை நடக்கும் முன்பே அசிஸ்ட்டண்ட் கமிஷனர்க்கு கொள்ளையன் மெயில் , எஸ் எம் எஸ் , கடிதம் என எதோ ஒரு வழியில் தொடர் பு கொண்டு க்ளு கொடுத்திருக்கிறான் . ஆனால் ஆபீசரால் அப்போது அந்த க்ளூவை உணர ,முடியவில்லை . கொள்ளை நடந்த பின் தான் தெரிய வருகிறது
இதனால் மும்பையில் இருக்கும் நாயகனை வர வைக்கிறார் .அவர் வந்து நான்காவது கொள்ளை நடக்கும்போது கொள்ளையர்களில் ஒருவரைப்பிடிக்கிறார்கள் . ஐந்தாவதாக ஒரு மெகா கொள்ளை நடக்க இருக்கிறது . இதுவரை நடந்தவை சும்மா ட்ரெய்லர் தான் என்பதை உணர்கிறார்கள் . இருவரும் சேர்ந்து அந்த அதாவது கொள்ளையை நிறுத்தினார்களா? என்பது க்ளைமாக்ஸ் . வழக்கம் போல இதில் ஒரு ஸ்விஸ்ட் உண்டு
அசிஸ்ட்டண்ட் கமிஷனர் ஆக கவுதம் மேனன் கம்பீரமாக நடித்திருக்கிறார் , மம்முட்டிக்கு இணையான ரோல்,. கவுதம் மேனனி ன் மனைவி ஆக திவ்யா பிள்ளை சில சீன்களில் மட்டும் வருகிறார்
நாயகன் ஆக மம்முட்டி நடித்திருக்கிறார் .ஏகப்பட்ட பில்டப் காட் சிகள் இவருக்கு . இவர் ஸ்லோமோஷனில் நடக்கும் சீன்களை கட் பண்ணினாலே 20 நிமிடங்கள் மிச்சம் ஆகும் .வீடியோ கேம் பிளேயர் ஆக வினய் போர்ட் நடிப்பு கச்சிதம் . பெரும்பாலான காட் சிகள் பஸ்ஸில் இருவரும் பயணிப்பது போல , நாயகன் இவரிடம் கதை சொல்வது போல வருவது சலிப்பு
ஐஸ்வர்யா மேனன் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் . அசிஸ்ட்டண்ட் கமிஷனர் கவுதம் மேனன் போலீஸ் டீமில் போலீஸ் ஆக வரும் ஒரு பெண் போலீசின் நடிப்பு அருமை ( அவர் பெயர் தெரியவில்லை ) .க்ளைமாக்சில் வரும் பாபு ஆண்டனி ,கெஸ்ட் ரோலில் வரும் சைன் டாம் சாக்கோ இருவருக்கும் அதிக வேலை இல்லை
ரூபி வர்கீஸ் ராஜ் + நிமிஷ ரவி இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் . பிரம்மாண்டமான காட் சிகள் அதிகம் சையத் அப்பாஸின் இசையில் ஒரே ஒரு ஹீரோ பில்டப் சாங்க் உண்டு , சகிக்கவில்லை . பின்னணி இசை கச்சிதம் . நிசாத் யூஸுப் , பிரவீன் பிரபாகர் இருவரும் இணைந்து எடிட்டிங்க் செய்திருக்கிறார்கள்.151 நிமிடங்கள் படம் ஓடுகிறது .120 நிமிடங்களில் முடித்திருக்கலாம் . திரைக்கதை எழு தி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ்
சபாஷ் டைரக்டர்
1 லண்டன் பிரிட்ஜில் கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கும் சீன் பிரம்மாண்டம் . அதற்கான க்ளுவை பர்த் டே க்ரீட்டிங்க் கார்டு மூலம் கண்டுபிடிப்பது சுவராஸ்யம்
2 ஓப்பனிங்க் சீனில் வரும் விமானத்தில் வைரக்கடத்தல் சீன் செம
ரசித்த வசனங்கள்
1 க்ளுவைத்தேடி நாம் போறப்ப நம்மைத்தேடி க்ளூ வரும்
2 நான் என் தொழிலில் வரும் சவால்களை நேசிக்கிறேன் .ஒவ்வொரு கேஸையும் வெற்றிகரமாக முடிக்கும்போது எனக்குக்கிடைக்கும் ஜாப் சேடிஸ்பேக்ஸன் அருமை
3 இந்தக்கதைல உங்க ரோல் என்ன?
நான் பண்ணாத ரோல் இல்லை
4 என்ன? கால்குலேட்டர் மாதிரி சிரிக்கறீங்க?
5 இவங்க சண்டை எல்லாம் முடிந்ததும் தீபாவளி முடிந்த மாதிரி இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு விபத்தில் அம்மா , மகள் (சிறுமி) இருவரும் அடிபடுகிறார்கள் .அம்மாவை ஒரு ஆட்டோ வில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு சிறுமியை அனுப்ப வாகனம் தேடுகிறார்கள் . அந்த ஆட்டோ வில் இருவரையும் அனுப்பி இருக்கலாமே?
2 ஹை ரிஸ்க் ஆனால் லோ வேல்யூ திருட்டு நடப்பதற்கு வலுவான காரணம் இல்லை .போலீசுக்கு க்ளு
குடுப்பது எதற்கு என்பது தெரியவில்லை . சைக்கோ என்பதால் என சமாளிப்பு வேற
3 ஓப்பனிங்க் சீனில் சின்னக்குழந்தைக்குக்கூட அந்த ஓவியத்தில் வைரங்கள் இருப்பது தெரிகிறது . யூகிக்க முடியுது , ஆனால் ஏர்போர்ட் ஆபீசர் கோடடை விடுகிறார்கள்
4 தமிழ் நாடு போலீஸ் இருவர் தவற விட் ட ஆளை கேரளா போலீஸ் சாமார்த்தியமாகப்பிடிப்பது போல ஒரு சீன தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்
5 விஷப்புகை அடிக்கும்போது வில்லன் க்ரூப் மாஸ்க் போட்டிருக்கிறார்கள் . ஆனால் அதைக்கூட போலீசால் கெ ஸ் பண்ண முடியவில்லை . கவுதம் விளக்கிய பின் தான் போலீசுக்குத்தெரிகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மம்முட்டி ரசிகர்களில் பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம் .மத்தவங்க ஓ டி டி யில் கூடப்பார்க்க முடியாத குப்பைப்படம் . ரேட்டிங் 1.75 / 5
Bazooka | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Deeno Dennis |
Written by | Deeno Dennis |
Produced by |
|
Starring | |
Cinematography | Nimish Ravi Roby Varghese Raj |
Edited by | Nishadh Yusuf Praveen Prabhakar |
Music by | Saeed Abbas |
Production companies | |
Distributed by | Capital Cinema |
Release date |
|
Running time | 151 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹28 crore[2] |
0 comments:
Post a Comment