ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - ஒரு செல்வந்தரின் மகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறாள் . ஆனால் வாய் பேசமுடியாத குழந்தையாகப்பிறப்பதால் அவள் அந்தக்குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை .குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள் . அந்த வாடகைத்தாய் வேறு வழி இல்லாமல் அந்தக்குழந்தையை வளர்க்கிறாள் . ஆனால் அவள் புருஷன் சரி இல்லை .அந்தக்குழந்தையை ரகசியமாக விற்று விட திடடம் போடுகிறான் . இதைக்கண்ட அந்த வாடகைத்தாய் ஒரிஜினல் அம்மாவின் பெற்றோர் குடி இருக்கும் வீட்டின் முன் குழந்தையை வைத்து விட்டு வந்து விடுகிறாள்
சம்பவம் 2 - நாயகி ஒரு டெய்லர் . ஏழை , அனாதை . இவள் கையில் ஒரு குழந்தையுடன் ஒரு ஊருக்கு அதிக நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வருகிறாள் . தனியாக வீடு எடுத்து தங்குகிறாள் . யாருடனும் அதிகம் பேசுவதில்லை . குழந்தையை அங்கண்வாடி ஸ்கூலில் சேர்த்து விட்டு வேலைக்குப்போய் விடுவாள் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குழந்தையை அழைத்துக்கொள்வாள் . குழந்தை யாருடையது எனக் கேட்டா ல் 2018 கேரளாவில் வெள்ளம் வந்தபோது யாரிடம் இருந்தோ கிடைத்த குழந்தை என்பாள் . ஆனால் அதை யாரும் நம்பவில்லை . ஏன் எனில் கணக்குப்படி குழந்தை வயசு டேலி ஆகவில்லை
சம்பவம் 3 நாயகன் ரோடு காண்ட் ராக்ட்டர் .அதே ஊருக்கு வருகிறான் . தங்க ஒரு வீடு கிடைக்கிறது .அங்கே தங்கி ரோடு போடும் வேலை எதுவும் பார்க்காமல் இந்த ஏரியாவில் யாராவது ஒரு பெண் கையில் குழந்தையுடன் சமீபத்தில் வந்தார்களா? என எல்லோரையும் விசாரிக்கிறான் . அவனது நடவடிக்கைகள் மர்மமாக இருக்கின்றன
மேலே சொன்ன மூன்று சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை , அவை என்ன? இறுதியில் என்னநிகழ்ந்தது என்பது மீதி திரைக்கதை
நாயகி ஆக தேவதர்ஷினி பிரமாதமான நடிப்பு ,உடல் நலம் குன்றி இருக்கும்போது , குழந்தைப்பாசம் கொண்டவர் ஆக , ரிசர்வ்டு டைப் கேரக்ட்டர் ஆக பல் பரிமாணங்களில் வெளுத்த்து வாங்குகிறார் .
நாயகன் ஆக திலிஸ் போத்தன் அடக்கி வாசித்திருக்கிறார் . சில சீன்களில் இவர் வில்லனாக இருப்பாரோ என்ற வ்ண்ணம் ஏற்படுவது பிளஸ்
மீரா வாசுதேவ் , ஜாபர் இடுக்கி , சுருதி ஜெயன் , மாலா பார்வதி உட்பட அனைவர் நடிப்பும் கனகச்சிதம்
சிறுமியாக வருபவரும் , கைக்குழநதை யாக வருபவரும் கலக்கலானநடிப்பு
கோபி சுந்தரின் இசை அருமை , முதல் பாதியில் த்ரில்லர் மூவி போலவும் பின் பாதியில் பேமிலி டிராமாவாகவும் கதை நடப்பதால் பிஜிஎம் மில் நல்ல வெரைட்டி காட்டி இருக்கிறார் . அனிஷ் லாலின் ஒளிப்பதிவு அட் டகாசம் . பாரஸ்ட் ஏரியா,அருவி என விளையாடி இருக்கிறது கேமரா . எடிட்டிங்க் அருமை . .கவிப்பிரசாத் கோபிநாத் என்பவர் தான் கதை ,திரைக்கதை . தாமஸ் கே செபாஸ் டியன் தான் இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 கைக்குழந்தையை வீட்டு வாசலில் விட்டு வரும் சீன கதிகலங்கவைக்கும் லாங்க் ஷாட் . பெண்களின் மனதைக்கலங்கடிக்கும்
2 பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணிடம் ஒரு பெண் இந்தக்குழந்தையைப்பார்த்துக்குங்க ஒரு நிமிஷம் என சொல்லி தரப்போக ஆசையாக கை நீட்டும்போது முன்னே பின்னே தெரியாத ஆளிடம் குழந்தையை கொடுக்கலாமா என அம்மா தடுப்பது , அந்தப்பெண் கலங்குவது கல் நெஞ்சையும் கரைக்கும்
3 மிஸ்ட்ரி திரில்லர் போல ஆரம்பித்து நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம்
4 நாயகன் ,, நாயகி , சிறுமி , கைக்குழந்தை அனைவரின் அட் டகாசமான நடிப்பு
5 பெற்ற அம்மா , வாடகைத்தாய் , வளர்ப்புத்தாய் , நிகழ்காலத்தாய் என நான்கு அம்மாக்களிடம் மாறி மாறி கை மாறி வளரும் ஒரு குழந்தையின் கதையை சொன்ன விதம்
6 பெற்ற அம்மா வைக்கடைசி வரை போட்டோ வில் கூடக்காட் டாத சாமர்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 எந்த ஊருக்குப்போனாலும் அந்தி ஊரின் சரித்திரத்தைத்தெரிஞ்ச்சுக்கணும்
2 யாரிடம் நான் பேசினாலும் அவங்க சொல்லும் முதல் கதையை நம்ப மாட் டேன்
3 உடல் ஊனமா பிறக்கும் குழந்தை வேண்டாம் என பலர் நினைக்கறறாங்க
4 நீ நடந்துக்கற விதத்தைப்பார்த்தா நீ ஒன்னு போலீசா இருக்கணும், அல்லது திருடனாயிருக்கணும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
இந்த மாதிரி நல்ல படங்கள் வருவதே அரிது .அதிலும் நொட் டை சொன்னா எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - CLEAN U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பாலுமகேந்திரா , மகேந்திரன் படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம் .ஆக்சன் மசாலா ரசிகர்கள் தவிர்க்கவும் . ரேட்டிங்க் 3. 5 / 5
Am Ah | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Thomas K. Sebastian |
Written by | Kaviprasad Gopinath |
Starring | Dileesh Pothan Devadarshini |
Cinematography | Anishlal RS |
Edited by | Bijith Bala |
Music by | Gopi Sundar |
Production company | Kaapi Productions |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment