அனுராக் கரிக்கின் வெல்லம் (2016) ,உண்டா (2019) ,லவ் (2020) ,தள்ளுமலா(2022) ஆகிய வெற்றிப்படங்கள் தந்த இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கிய 5 வது படம் இது மஞ்சு மேல் பாய்ஸ் (2024) படத்தில் பிரசாத் ஆக நடித்தவர் தான் இவர்
தண்ணீர் மத்தன் தினங்கள் (2019) பிரேமலு (2024) ஆகிய படங்களின் நாயகன் நெஸ்லன் நடித்திருக்கும் 18வது படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனும் அவனது நண்பர்கள் 5 பேரும் 12 வது வகுப்பில் பெயில் ஆகிறார்கள் .காலேஜில் ஸீட் பிடிக்க ஒரு குறுக்கு வழி இருப்பதை உணர்கிறார்கள் .அதாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் பிடித்தால் காலேஜில் சேரலாம் .கால்பந்து ,கைப்பந்து மாதிரி விளையாட்டுகளில் போட்டி அதிகமாக இருக்கும், அதனால் பாக்சிங்க் கேடடகிரியில் போகலாம் என முடிவு செய்கிறார்கள்
ஆலப்புழா ஜிம்கானா என்ற ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள் /விளையாட் டாகத்தொடங்கிய இவர்கள் வேலை வினையாக மாநில அளவில் ஆன போட்டி வரை வந்து நிற்கிறது . வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக நெஸ்லன் இளமைக்குறும்புடன் நடித்திருக்கிறார் .அவரது ஹேர் ஸ்டைல் மகாநதி கமல் ஹேர் கட் போல பிரமாதமாக இருக்கிறது .தோழியிடம் சந்தேகம் கேட்பது , மாணவிகளிடம் கலாய்ப்பது என்ற ஜாலி வாலா பட் டாசுகளும் உண்டு
நாயகன் , நாயகனின் நண்பர்கள் ஆக நடித்திருக்கும் ஐவர் அனைவருமே தங்கள் உடலை முறுக்கேற்றி மெனெக்கெட்டு பயிற்சி செய்திருப்பது சிறப்பு .குறிப்பாக அந்த காரக்குழம்பு தலையர் எதிர்பாராதவிதமாக வெற்றி பெரும்போது அரங்கம் அதிர்கிறது
நாயகன் அண்ட் கோ விற்கு பயிற்சி அளிப்பவர்களாக லக்மன் அவரன் + கோட்டயம் நசீர் இருவரும் அனுபவம் மிக்க பக்குவமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் . மாணவிகளாக , வீராங்கனைகளாக வரும் பெண்கள் அழகுப்பதுமைகளாக இருப்பது , அனைவரையும் கலாய்ப்பது இளமை க்கொண்டாட் டம்
விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் .பின்னணி இசை கச்சிதம் ஜிம்சி காலித்தின் ஒளிப்பதிவில் ஆலப்புழாவில் அழகை எல்லாம் கடத்தி வந்திருக்கிறார்கள் , நிசாத் யூஸபின் எடிட்டிங்கில் படம் 135 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி இளமை க்கொண்டாட் டம், , காதல்,காமெடி என் நகரும் படம் பின் பாதி முழுக்க பாக்சிங்க் பாக்சிங்க் தான்
ஸ்ரீனி சசீந்திரனுடன் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கும் இயக்குனர் காலித் ரஹ்மான் தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தன காதலியை தனிமையான இடத்துக்கு அழைத்துச்செல்ல காதலி எனக்கு கிஸ் தானே தரப்போறே?எனக் கேட்கும்போது நாயகன் பயந்து ஓடுவது கலக்கல் காமெடி
2 நாயகன் தன தோழியிடம் முத்தம் பற்றி விளக்கம் கேட்க அவர் கூலாக பிராக்டிகல் கிளாஸ் நடத்துவது கவிதை
3 ஐந்து நண்பர்களின் பாக்சிங்க் போட்டிகள் அருமை என்பதும் நாயகன் தோல்வியைத்தழுவுவதும் யதார்த்தம்
ரசித்த வசனங்கள்
1 இப்படி மாத்தி மாத்திப்பேசினா பணி கிட்டும்
ஆமா , நாம எல்லாரும் பெயில் , அவன் மட்டும் பாஸ் , நிச்சயம் அவனுக்கு வேலை கிடைக்கும்
2 ஒரு பொண்ணு கிட்டே கிஸ் கேட்டு மெசேஜ் அனுப்பறது தப்பா?
ஆத்துல , குளத்துல மீன் பிடிக்க யார் வேணா தூண்டிலைபோடலாமே?
3 பார்ட்டிக்கு கேர்ள்ஸ் வரட்டும் , எத்தனை நாட்களுக்குத்தான் ஆம்பளைங்க முகத்தையே பார்ப்பது ?
4 என்னது ஹோம் டூரா?
என் வீட்டை அவளுக்கு சுத்திக்காட்டிட்டு வர்றேன்
5 என்னைக்கிஸ் பண்ணத்தானே இங்கே என்னைத்தள்ளிட்டு வந்தே ? ?பிரெஞ்ச் கிஸ்ஸா? பட் டர்பிளை கிஸ்ஸா? எஸ்கிமோ கிஸ்ஸா? வாம்ப்பயர் கிஸ்ஸா? சிங்கிள் லிப் கிஸ்ஸா?
சாரி , எனக்கு பி பி எகிறுது , நான் இந்த ஆட் டத்துக்கு வர்லை
6 கிஸ் என்றால் என்னனு தெரியாதா?கீப் இட் சிம்பிள் அண்ட் சுவீட்
7 கோல்டு மெடலா வாங்கிட்டு வரப்போறேன், நம்ம வீட்டில் இடம் இருக்கா?
8 தேஜாவு என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு ஆல்ரெடி பார்த்தாச்சு என்று அர்த்தம்
9 நீ தான் இவங்க கோச்சர்?
ஆமா
அவங்க மேல ஒரு மரியாதை வச்சிருந்தோம் , அதுவும் போச்சா?
10 மகனே ,போட்டிக்குப்போகும் முன் ஆம்புலன்ஸ் போன் நெம்பரை நோட் பண்ணிக்க
11 உனக்கு எப்படி இவ்ளோ தைரியம் வந்தது ?
2 பஞ்ச் முகத்துல வாங்கினா யாரா இருந்தாலும் தைரியம் வரும்
12 ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு காரணம் இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முதல் பாதி கலகலப்பாகக்கொண்டு போய் , பின் பாதியை ஒரே அடிதடி சண்டை என காட்டுவது போர்
2 ஹீரோயிசம் இல்லாமல் யதார்த்தமான கதை நகர்வில் கடைசி 20 நிமிடங்கள் வலிந்து திணிக்கப்பட் ட ஹீரோயிச சண்டைக்காட் சிகள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்குப்படம் பிடிக்காது . அடிதடியை விரும்பும் ஆண்கள் பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
Alappuzha Gymkhana | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Khalid Rahman |
Written by | Khalid Rahman Sreeni Saseendran |
Dialogues by | Ratheesh Ravi |
Produced by | Khalid Rahman Jobin George Sameer Karat Subeesh Kannanchery |
Starring | Naslen Lukman Avaran Ganapathi S. Poduval Sandeep Pradeep Anagha Ravi Franco Francis Baby Jean Shiva Hariharan |
Cinematography | Jimshi Khalid |
Edited by | Nishadh Yusuf |
Music by | Vishnu Vijay |
Production companies | Plan B Motion Pictures Reelistic Studios |
Distributed by | Central Pictures |
Release date |
|
Running time | 139 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
Box office | est.₹11.55 crore[2] |
0 comments:
Post a Comment