ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் வெளிநாட்டில் இருக்கிறான் . நான்கு வருடங்களாக தன ,அம்மா அப்பாவைப்பார்க்க சொந்த ஊருக்கு வரவில்லை .நெருங்கிய உறவினரின் திருமணம் .அந்த விழாவில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வருகிறான் .நீண்ட இடைவெளிக்குப்பின் மகன் வருவதால் அவனை பிக்கப் செய்ய அம்மா , அப்பா இருவரும் ஏர்போர்ட் வருகிறார்கள் . சந்தோஷமாக சிரித்துப்பேசி க்கொண்டே காரில் வீட்டுக்கு வரும் வழியில் ஒரு விபத்தில் அம்மா , அப்பா இருவரும் அகால மரணம் அடைந்து விடுகிறார்கள்
நாயகன் உயிர் தப்பி விடுகிறான் .ஆனால் அவனால் அந்த சோகத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . சரியாக தூக்கம் வரவில்லை .இன்சோம்னியா வியாதியால் பாதிக்கப்படுகிறான் .தூக்கமின்மையை சரி செய்ய யோகா , பிராணயாமம் , என என்ன என்னவோ முயற்சி செய்தும் அவனால் உறங்க முடியவில்லை .
நாயகனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பில்லை ,இனி எதற்காக , யாருக்காக வாழ வேண்டும் என விரக்தியாக இருக்கிறான் .இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகனாக நடித்து படத்தை இயக்கி இருப்பவர் வம்சி கிருஷ்ணா அப்பாவாக அச்சியுத் குமார் , அம்மாவாக சுதா ராணி இருவரும் அருமையான குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
படத்தில் மற்ற சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
சரண் ராஜின் இசையில் இரு பாடல்கள் சுமார் ரகம் .பின்னணி இசை மெலோடி ராகம் . அபிலாஷ் கலாதியின் ஒளிப்பதிவு அருமை . ரிஸ்க் ஆனா இந்தக்கதையை துணிச்சலுடன் படமாக்கி இருக்கும் தயாரிப்பாளர் நிவேதிதா சிவராஜ் குமார்
சபாஷ் டைரக்டர்
1 படத்தில் உயிர் நாடியாக இருப்பது வசனங்கள் . வார்த்தை ஜாலக்காமெடி
2 வாழ்வின் அர்த்தத்தை கவிதையாக சொன்ன க்ளைமாக்ஸ் சீன்
ரசித்த வசனங்கள்
1 வாழ்க்கை என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் பயணம் அல்ல . எதையும் அறிந்து கொள்ளாமல் இருபப்து
2 வாழ்க்கை யில் எல்லா விதமான சவால்களையும் நாம் எதிர்கொண்டு ஆக வேண்டும்
3 எதேச்சையான நிகழ்வுகளே நம் வாழ்வில் இல்லை , எல்லாமே விதியின் கையில் தீர்மானிக்கப்பட்டவை
4 பார்மல் டிரஸ் வயசை குறைத்துக்காட்டிடாது
5 நம் வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு இழப்பு ஏற்படும் எனில் ஏதாவது சகுனம் காட்டிக்கொடுக்கும்
6 இவன் கூட இருப்பதால் என் புருஷன் கூட சண்டை கூடப்போடமுயலை . ஒரு பிரைவசி இல்லை
7 அக்கார்டிங்க் டூ த தியரி ஆப் ரிலேட்டிவிட்டி ....
இவரு உங்க ரிலேடிவா?
நோ
8 பூ என்பது தானாக மலரினும் ,போர்ஸ் பண்ணி மலர வைக்க முடியாது , அது மாதிரி தான் சிரிப்பும்
9 அம்மா , அப்பா கூட இருக்கும் தருணங்கள் தான் வாழ்நாளில் மகிழ்வான நிமிடங்கள்
10 எதிலும் ஒரு நிச்சயமின்மை என்பது வாழ்வின் ஒரு அங்கம்
11 இத்தனை இசைக்கருவிகள் இருக்கே , எதுனா எடுத்து ஒலி எழுப்பு
சங்கு எடுத்து ஊதவா?
12 மேடம் , நீங்க கர்நாடகா தானே? கன்னடம் பேசத்தெரியாதா?
நோ .ஒன்லி ஹிந்தி ..கர்நாடகாவில் இருக்கும் உங்களுக்கு ஹிந்தி தெரியாதா?
எல்லாம் நேரம் ..கர்நாடகாவில் இருந்துட்டு கன்னடம் தெரியல . ஆனால் ஹிந்தி தெரியாதது ஒரு குத்தமா?
13 சாப்பிடும்போது பேசக்கூடாதுனு உங்க அம்மா, அப்பா சொல்லிக்கொடுத்து வளர்க்கலையா?
14 மிஸ் , நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
எனக்கு ஏற்கனவே தெரியும்
15 நீ கூப்பிட் டா நரகத்துக்குக்கூட உன் கூட வருவேன்
16 அங்க்கிள் .. வாட் ஈஸ் மெச்சூரிட்டி ?
என் புருசனுக்கு அது இல்லை
17 நான் உன்னை மாதிரி அநாதை இல்லை . வீட்டில் எனக்காக என் மனைவி காத்திருப்பா
18 கடந்த காலத்தை யாராலும் துரத்த முடியாது , எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது ,
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 30 நிமிடத்தில் முடிக்க வேண்டிய குறும்படம் அளவுக்குத்த்தான் கண்டென்ட் .இரண்டே கால மணி நேரம் இழுத்து விட் டார்கள்
2 கன்னடத்தில் புலமை பெற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும் .பல ஒன் லைனர்கள் கிரேசி மோகன் .,மவுலி ஸ்டைலி ல் இருக்கின்றன
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - CLESN U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -
தூக்கம் வராத நாயகனைப்பற்றிய கதை . ஆனால் பார்க்கும் நமக்கு நன்றாகத்தூக்கம் வருகிறது . ரேட்டிங்க் 2.5 / 5