Tuesday, April 08, 2025

க.மு ,க.பி (2025)-தமிழ் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

     


          க.மு ,க.பி (2025)-தமிழ் சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)


4/4/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் அருமையான வசனங்கள்,புதுமுக நடிகர்களின் நல்ல நடிப்பு ,அறிமுக இயக்குனரின் நல்ல கதை சொல்லும் யுக்திகளுடன் கவனிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது      


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் சினிமா வில் சாதிக்கத்துடிக்கும் நாளைய இயக்குனர்.அவனுக்கு ஒரு காதல்.காதலி வேலைக்குப்போகும் பெண்.வீட்டை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.கல்யாணத்துக்கு முன் இனித்த காதல் கல்யாணத்துக்குப்பின் கசக்கிறது.


இவர்களது திருமண வாழ்க்கை வெற்றியா?தோல்வி யா?என்பதை உணர்வுப்பூர்வமாக,யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்

நாயகன் ,நாயகி ஆக விக்னேஷ் ரவி ,சரண்யா ரவிச்சந்திரன் இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக நாயகியின் நடிப்பு அட்டகாசம்.ஒப்பனை இல்லாத யதார்த்தமான மாநிற அழகிகளை பாலுமகேந்திரா காலத்தில் பார்த்தது.க்ளோசப் காட்சிகள் அதிகம் என்பதால் நாயகிக்கு நல்ல வாய்ப்பு


நாயகன் சினிமாவுக்கு கதை சொல்லும் கதையில் வரும் காதல் ஜோடி ஆக டி எஸ் கே - ப்ரியதர்சினி இருவரும் பரவாயில்லை ரகம்


மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத கிளைக்கதையில் வரும் இன்னொரு ஜோடி ஆக நிரஞசன்- அபிராமி முருகேசன் இருவரும் கொஞ்சம் ஓவர்  ஆக்டிங


முக்கியமான இந்த 6 பேர் தவிர படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்


ஒளிப்பதிவு ஜி எம் சுந்தர்.ஒப்பனை இல்லாத நாயகியை அழகாகக்காட்டுவது சவாலான வேலை தான்.


பாடல்களுக்கான இசை ஷாம்நாத்.பரவாயில்லை. ரகம்.


பின்னணி இசை தர்சன்.சுமார் ரகம்.

சிவராஜ் பரமேஷ்வரின் எடிட்டிஙகில் படம் 104 நிமிடங்கள்.


ஆர்ட் டைரக்சன் கார்த்திக் .

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர். புஷ்பநாதன் ஆறுமுகம்.இவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு.

சபாஷ்  டைரக்டர்


1 ஒரே கதைக்கான காட்சிகளில் இரு வேறு காதல் ஜோடிகளை உலா வர விட்ட ஐடியா பிரமாதம்.இதனால் ஆடியன்சுக்கு போர் அடிக்காது

2 வாழ்வியல் யதார்த்தத்தைப்பிரதிபலிக்கும் செமயான வசனங்கள் பெரிய பிளஸ்

3 புதுமுகஙகளின் நடிப்பு ,குறிப்பாக நாயகியின் பர்பார்பார்மென்ஸ்

4 தேவை இல்லாத சீன்கள் என எதையுமே சுட்டிக்காட்ட முடியாத க்ரிஸ்ப் ஆன எடிட்டிங்

5 நாயகனிடம் நல்ல சீன்கள் ஆக 10 சீன் எழுதி வாங்கிக்கொண்டு ஒரு பிரபல டைரக்டர் வெறும் 150 ரூபாய் தரும்போது அதற்கு நாயகனின் எதிர் வினை செம.அனேகமாக இது இயக்குநரின் சொந்த அனுபவமாக இருக்கக்கூடும்


  ரசித்த  வசனங்கள் 

1. 

கல்யாணத்துக்குப்பின் இருக்கும் காதலை விட கல்யாணத்துக்குமுன் இருந்த காதலில் ஆழம் அதிகம்

2. எங்கே போகலாம்?


எங்கே போனாலும் கடைசியா தியேட்டருக்குத்தான் போகப்போறோம்.எங்கே போனா என்ன? எனக்கு உன் கூட இருக்கனும்.அவ்ளோதான்.

3 லவ் பண்றப்ப பெரிய தப்புக்கூட சின்னதாத்தெரிஞ்சுது.மேரேஜ்க்குப்பின் சின்னத்தப்புக்கூட சகிக்க முடியாததா ஆகிடுது


4 இண்ட்டர்கேஸ்ட் மேரேஜ்னா என்ன?

ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கறது


காதலில் ஏன் அரசியலை சேர்க்கறீங்க?


காதலே பெரிய அரசியல்  தான்


5. பொண்ணுங்களை எப்பவும் நம்ம காலுக்குக்கீழே வெச்சுக்கனும்.அப்பத்தான் நம்ம கண்ட் ரோலில் இருப்பாஙக


6. எங்கே போகனும் மேடம்?

மாமியார் வீட்டுக்கு


தப்பு பண்ணினவங்கதானே அங்கே போவாங்க?

ஒரு வெட்டிப்பையனை லவ் பண்ணி தப்புப்பண்ணிட்டேன்

7. அவன் தேடிப்போன சினிமாத்தொழிலில்தான் அவன் தொலைஞ்சு போவான்னு அப்போ எனக்குத்தெரியலை


8. வெயிட் பண்றப்ப என் மேல் கோபம் வர்லையா?


வெயிட் பண்றப்ப இன்னமும் எப்படி எல்லாம் லவ் பண்ணலாம்?என யோசிச்சுட்டு இருப்பேன்


9. வாசத்தை மட்டும் சாப்பிடலாம்னா உன் வாசமே மூணு வேளைக்கும் போதும்


நீ எப்படிப்பேசுனாலும் இன்னைக்குக்கிஸ் கிடையாது. 

10.'எப்போ கணவன் ,மனைவிக்கு நடுவே இன்னொரு நபர் வர்றாரோ அப்பவே நம்பிக்கை போயிடும்


11 லைப் டார்ச்சர் ஆக இருக்குனு குடிக்க வந்திடறோம்


லைப் டார்ச்சரா? ஒயிப் பா?

12. லவ் பண்றப்ப இருக்கும் சந்தோஷம். மேரேஜ் பண்றப்ப ஏன் இல்லை?

லவ்வரை அட்ராக்ட் பண்ணனும்னு ஒரு எக்சைட்மெண்ட் லவ் பண்றப்ப இருக்கும்..மேரேஜ் ஆன பின் இவ நம்ம மனைவி தானேன்னு எண்ணம் வந்திடும்


13 தனியா இருந்தா புருசனுக்குப்புத்தி வரும்னு நினைக்கக்கூடாது.அதுவே அவஙகளுக்குப்பழகிடும்


14.  போனைக்கட் பண்ணினா திரும்பக்கூப்பிடக்கூடாது.அதுதான் மேனர்ஸ்.

15. வெளி ல இருந்து ஒரு ஆள் தம்பதியிடம் மத்தியஸ்தம் செய்தா அது  தம்பதியில் யாரோ ஒருவருக்கு எதிராதான் அமையும்.தம்பதியே அவஙகளுக்குள் பேசி தீர்த்துக்கனும்


16. யாரோட பிரச்சனைக்கும்யாராலும் தீர்வு சொல்ல முடியாது


17. பேமிலியா இருக்கத்தானே பிளான் பண்ணினோம்? பேமிலி பிளான் ( கு.க)பண்ணலையே?

18. உனக்கு நாய் பிடிக்குமா?பூனை  பிடிக்குமா?


ஒரு வேளை சோறு போட்டாலே. காலம் பூரா வாலை ஆட்டிக்கிட்டு நன்றியோட இருக்கும் நாய்.ஆனா வாழ்நாள். பூரா. சோறு போட்டுட்டு ஒரு வேளை சோறு போடலைன்னாலும். பூனை தன்னை எஜமான் போல தாந் நினைக்கும்.

19. இந்த ஆம்பளைங்க  கிட்டே குப்பை கொட்ட நாய் படாத பாடு பட வேண்டி இருக்கு

20.  முதல். முறையா அவளோட முத்தம் அவனுக்குக்கசப்பா இருந்துது


21. ஆம்பளை நான் தான் கெத்து என சொல்லும் எவனாலும். பொண்ணுங்களைப்புரிஞ்சுக்க முடியாது


22 சும்மாதானே இருக்கே?பாத்திரங்களை. வாஷ் பண்ணி.வைக்கலாமில்ல?


வாஷ். பண்ணி வைனு சொல்லு.ஆனா சும்மா இருக்கேன்னு குத்திக்காட்டாதே


23. பாய் பிரண்டுன்னா பாய்க்கு நடுவில் வந்து படுத்துக்குவியா?

24. ஒயிப் கூட இல்லைனா. ஒரு ஆணுக்கு வெற்றி கூட தோல்வி தான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. படத்தில். வரும். இரண்டாவது ஜோடி நாயகன் சொல்லும் கதையின கேரக்டர்கள் என்பது எல்லோருக்கும் புரியுமா? ஒளிப்பதிவில் தனி கலரிங்க் காட்டி. இருக்கலாம்


2. படத்தில் வரும். மூன்றாவது ஜோடியில் கணவன் ஆணாதிக்கம்,மனைவி அடங்கிப்போதல் இரண்டுமே ஒட்டவில்லை



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சினிமாவில். வாய்ப்புத்தேடுபவர்கள்,காதலர்,தம்பதி இவர்களுக்குப்பிடிக்கும்.விகடன். மார்க். யூகம். 42.ரேட்டிங் 3/5

0 comments: