Tuesday, April 01, 2025

வீர தீர சூரன் (2025) -(தமிழ் ) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )


நாளைய  இயக்குனர்  என்ற  ஒரு உருப்படியான நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில்  நடைபெற்றபோது  அதில் இயக்கிய குறும்படத்தை  விஜய்சேதுபதியை  வைத்து  பண்ணையாரும்  பதமினியும் (2014) என்று  தன முதல் படத்தை இயக்கினார் அறிமுக இயக்குனர்  அருண் குமார் .திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றாலும் , விமர்சகர்கள் பாராட்டைப்பெற்றாலும் கமர்ஷியலாக அது வெற்றி பெறவில்லை . சேதுபதி (2016)ஹிட் . சிந்துபாத் (2019) தோல்வி .தொடர்ந்து  3 படங்களை  விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்தே  இயக்கியவர் சித்தார்த்தை  வைத்து சித்தா (2023) என ஒரு வெற்றிப்படம்  கொடுத்தார் . இப்போது  சீயான் விக்ரமை  வைத்து  தூள்  பட பாணியில்  கைதி  திரைக்கதை  அமைப்பில்  ஒரு   கமர்ஷியல் ஹிட்படம்  கொடுத்துள்ளார் .



 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  மனைவி , இரு குழந்தைகளுடன்  மளிகைக்கடை நடத்தி  மாணிக்கம் ஆக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . ஒரு கால கட்டத்தில்  மாணிக்  பாட்ஷா  ஆக   வாழ்ந்தவர் தான் ,இப்போது எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக   இருக்கிறார் 



வில்லன்  ஆக  பெரியவர் , அவரது மகன் என இருவர் . அந்த ஊரில்  பெரிய தாதாக்கள் ஒரு நாள்   ஒரு சிக்கலில் மாட்டுகிறார்கள் . அதை தனக்கு சாதகமாகப்பபயன்படுத்தி  என்கவுண்ட்டரில்  அவர்களைப்போட்டுத்தள்ள  முடிவெடுக்கிறார்  ஒரு போலீஸ் ஆபீசர்.இந்த   விஷயம்  வில்லன் ஆன 

 பெரியவருக்குத் தெரிய வர  அவர்  தன்  மகனுடன்  நாயகனைப்பார்க்கப்போகிறார் 


 ஒரு கால கட்டத்தில்   நாயகன்  பெரியவரிடம் இணக்கமாக இருந்தவர் தான் . வில்லன் நாயகனிடம் போலீஸ் ஆபீசரின் என்கவுண்ட்டரில் இருந்து  தங்கள்  இருவரையும் காப்பாற்றும்படிக் கேட்டுக்கொள்கிறார் .ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பிறகு ஒத்துக்கொள்கிறார் 



நாயகன்  அந்த போலீஸ் ஆபீசரைப் போட்டுத்தள்ளப்போட் ட பிளான்  ஒர்க் அவுட்  ஆகவில்லை .இதனால் கடுப்பான வில்லனின் மகன் நாயகனின்  குடும்பத்தை  கார்னர்  செய்கிறார் . இப்போது    நாயகன் வேறு வழி இல்லாமல் தன குடும்பத்தைக்காப்பாற்ற போலீஸ் ஆபீசர் உதவியை நாடுகிறான் .அந்த போலீஸ் ஆபீசர்  வில்லன்களைப்பிடிக்க  நாயகனிடம் உதவி கேட்கிறார் 


 நாயகன்   எடுத்த   முடிவு என்ன?  என்கவுண்ட்டர்  நடந்ததா?  நாயகனின் குடும்பம் காப்பாற்றப்பட்டதா? இவற்றை  எல்லாம்  பரபரப்பாக  விறுவிறுப்பாக   சொல்வதுதான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக   சீயான்   விக்ரம் . நீண்ட  இடைவெளிக்குப்பின் ஒரு கமர்ஷியல்  ஹிட் கொடுத்திருக்கிறார் . அவரது  பாடி பிட்னஸ்  அபாரம் .கமலுக்குப்பின்  தன் உடலை  வருத்தி  நடிக்கும்  ஒரு நல்ல கலைஞர்  வெற்றியை சுவைத்திருப்பது மகிழ்ச்சி   


நாயகி ஆக துஷாரா  விஜயன்  கச்சிதமாக   நடித்துள்ளார் .  காதல் காட் சிகளில்  செம   ரொமாண்டிக்  ஆக நடித்திருந்தாலும் ஒரு  சீனில் பெஞ்சில்    புரண்டு    கீழே  விழும்  சீனில்   ரிஸ்க்  எடுத்து   டூப்  போடாமல் நடித்திருக்கிறார் 


 போலீஸ் ஆபீசர் ஆக    நடிப்பு  அரக்கன் எஸ் ஜே  சூர்யா  அனாயசமாக நடித்து இருக்கிறார் . வழக்கமாக  அவர்  கையாளும்   ஓவர் ஆக்டிங்க்  உத்தி   இதில் இல்லை .நல்ல நடிப்பு . நக்கல் , நையாண்டி , வில்லத்தனம் எல்லாம் பக்கா 


  வில்லன் ஆக  பெரியவர்  ரோலில் பிருத்வி   அருமையான  நடிப்பு . அவரது மகனாக சுராஜ் வெஞ்சாரமூடு  தமிழில் நடிக்கும் முதல் படம் இது .. முக்கியப்பாத்திரங்கள்  போக  மீதி நடித்த துணை நடிகர்கள் அனைவர் நடிப்பும்  கச்சிதம் 

டெக்னிக்கல்  டீமில்  முதல் மார்க்  ஒளிப்பதிவாளர் தேனி  ஈஸ்வருக்குத்தான் . முழுப்படமும்  ஒரே நாள்  இரவில் நடக்கும் கதை என்பதால் சவாலான வேலை தான் . அது  போக  க்ளைமாக்சில்  16 நிமிட  சிங்கிள்  ஷாட்  சீனில்  அசத்தி இருக்கிறார் . அடுத்து ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை .5 பாடல்களில் 3 பரவாயில்லை ரகம் . பின்னணி இசையில்  பிரித்து    மேய்ந்திருக்கிறார் . குறிப்பாக  நாயகனுக்கு ஆக்சன் சீக்வன்சில் போடப்பட் ட  பிஜிஎம்  அபாரம் ,தியேட்டர்  தெறிக்கிறது 



 ஜி கே  பிரசன்னா வின்  எடிட்டிங்கில் படம் 170  நிமிடங்கள்  ஓடுகிறது .பிளாஷ் பேக் சீனின் நீளத்தை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 

 திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர்  அருண் குமார் 


சபாஷ்  டைரக்டர்


1  படம் போட்டு  முதல் இருபது நிமிடங்கள்  கழித்துத்தான் ஹீரோ என்ட்ரி . முக்கியமான  கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி  விட்டு  ஹீரோ  வரும் சீனில்  டைட்டில்  போடுவது  நல்ல   உத்தி 


2  ஹீரோ , ஹீரோயின்  ரொமாண்டிக்  போர்சன்   அருமை . இருவரும் காட்டும் அன்னியோன்யம் செம 


3    போலீஸ் ஆபீசர்  எஸ் ஜே  சூர்யா  என்கவுண்ட்டர்  பிளானை  எக்சிக்யூட்  செய்யும் முன்  விவரிக்கும்  சீன் கலக்கல் ரகம் 


4   நாயகன்  கண்ணி  வெடி  செட்   செய்யும்  சீன்  பதைபதைப்பான சீன்  


5  க்ளைமாக்சில்  முக்கியமான  ட்விஸ்ட்டை  நாயகன்  நாயகியிடம்   ஓப்பன் செய்யும்போது  பாத்ரூமில் ஒரு ஆள் ஒட்டுக்கேட்பதும் , அதைத்தொடர்ந்து  நாயகன்  எடுக்கும் முயற்சிகளும் , முன்னெடுப்புகளும் அருமை 


6   தூள்  படத்தில்   வரும் ஏ சிங்கம் போல  நடந்து  வர்றான்  பாட் டை   யூஸ்   செய்த  இடம் செம . அப்ளாஸ்  தெறிக்கிறது 


7  ஹீரோ  விக்ரம்  போலீஸ் ஸ்டேஷனில்  எஸ்  ஜே  சூர்யா  முன் சரண்டர் ஆக  வரும் சீன்  செமயான ரகளையான சீன் . போலீஸ்  ஸ்டேஷனிலேயே அவர்  செய்யும்  சம்பவம்  கூஸ்பம்ப் கிளப்பும்  மாஸ்  மசாலா ஆக்சன் ஸீக்வன்ஸ் அது .அந்த சீனில்  விக்ரமின்  தெனாவெட் டான  பாடி லேங்க்வே ஜும் , எஸ்  ஜே  சூர்யா    ரீ  ஆக்சனும்  அட் டகாசம்  என்றால்  பிஜிஎம்  தேறி மாஸ் , தியேட் டரில்  கை  தட் டல்  அடங்கவே  2 நிமிடங்கள் ஆனது 


8  பெரியவரின்  கடைசிப் பெண்  ஆக வருபவரின்  வில்லித்தன  நடிப்பு மிரட் டல் ரகம்


  ரசித்த  வசனங்கள் 


1   கத்தி  இன்னும்  கழுத்துக்கிட் டே  வரலை , வர்றப்ப பார்த்துக்கலாம் 


2   உயிருக்கு முன்னாடி மானம்  எல்லாம் ..... 


3  உன் மூச்சுக்காத்தை  வெச்சே  நீ உண்மை பேசுறியா? பொய் பேசுறியா?   என்பதை சொல்லிடுவேன் 


4   எவனா   இருந்தாலும்   அவன் கிட்டே  உன் குடும்பத்தைத்தூக்கிடுவேன்னு சொல்லக்கூடாது .தூக்கிட் டே ன்னு சொல்லணும் 



5   அவன்   எங்கே ?


 தெரிஞ்சா சொல்றேன் 


 தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லு 


6   எல்லாத்தையும் மறந்துட்டேன் , குடும்பத்துக்கு ஒண்ணுன்னா  எல்லாத்தையும்  ரீ கால்  பண்ண வேண்டி வரும் 


7    என்  கிட்டே   அடி  வாங்குனவன்    சாக மாட் டான் .ஏன்னா  என்கவுண்ட்டர்  டெத் ல  ஆள்  உடம்பில் அடிபட்டிருக்கக்கூடாது , இப்போ   சொல்லு , அடி    வேணுமா? சாவு வேணுமா? 


  சார் சார்  என்னை  எவ்ளோ வேணாலும் அடிங்க சார் 


8  அவரு மாட்றதா  இருந்தா தானா மாட்டிக்கிடட்டும்  நான் உதவி செஞ்சு  மாட் டினதா இருக்க வேண்டாம் 


9  காதுக்கும் நெத்திப் பொட்டுக்கும் ரெண்டு இன்ச் தான் தூரம்'


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   படம்  செம ஸ்பீடாகப்போய்க்கொண்டு இருக்கும்போது  பிளாஸ்பேக்கை  ஓப்பன்  செய்து  அந்த டெம்ப்போவையே  குறைத்து விட்டார்கள் . படத்தின்  ஓப்பனிங்கிலேயே பிளாஸ்பேக்கை   வைத்திருக்கலாம் 


2   போலீஸ்  ஆபீசர் ஆன  எஸ்  ஜே  சூர்யாவை  வில்லன்கள்  இருவரும் ஒரு கான்ஸடபிள்  ரேஞ்ச்சுக்குத்தான் மதிக்கிறார்கள் .


3   நாயகனுக்கும்  , வில்லன் ஆன பெரியவருக்கும்  ஒரு புரிதல் இருக்கு , ஆனால்  பெரியவரின் மகனுடன் புரிதல் இல்லை . இதை  பிளாஸ்பேக்கில்   நன்கு  விளக்கி  இருக்க வேண்டும் 


4   தூள்  படத்தில்  ஒரு கொண்டாட்ட மன நிலையில்  அனைவரும் இருக்கும்போது  அந்த பாட்டு  இடம் பெற்றது . ஆனால்  இதில்  நாயகன் படுகாயம் அடைந்து  இருக்கும்போது  வருது . என்னதான்  தியேட்டரில்  கூஸ்பம்ப்  மொமெண்ட்ஸ்  இருந்தாலும்  அது சரியாக செட் ஆகவில்லை 


5 படத்தில்  வரும் முக்கியமான கேரக்டர்கள்  நாயகன்  , போலீஸ் ஆபீசர் ,  வில்லன் , வில்லனின் மகன்  என  நான்கு பேருமே  கெட் டவர்கள்  தான்  என்பதால்  இவர் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம்  ஆடியன்ஸுக்கு எழவில்லை , அது ஒரு மைனஸ் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கெட் ட ப்   சேஞ்ச்  எல்லாம் செய்யாமல்  ஒரு கமர்ஷியல்  ஹிட் படம் கொடுத்திருக்கும் விக்ரமு க்காகப்பார்க்கலாம் , விகடன்  மார்க்  மே  பி  43  . ரேட்டிங்  3 /. 5 


thanx - ANICHAM  APRIL ISSUE

வீர தீர சூரன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எசு. யு. அருண்குமார்
தயாரிப்புரியா சுபு
கதைஎசு. யு. அருண்குமார்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
விநியோகம்கே. செந்தில்
வெளியீடு27 மார்ச்சு 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: