ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு ஐ டி கம்ப்பெனி யில் வேலை பார்ப்பவன் .ஒரு கேர்ள் பிரண்ட் உண்டு , ஆனால் காதலி அல்ல .கேர்ள் பிரண்டுக்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டி இருப்பதால் செயின் பறிப்புத்தொழிலை சைடு பிஸ்னஸ் ஆக வைத்துக்கொள்கிறான் .கொள்ளை அடித்த செயினை விற்க ஒரு பார்ட்டி உண்டு . அவனிடம் வில்லனுக்கு ஒரு சமயம் மோதல் ஏற்படுகிறது
செயின் பறிப்பு சம்பவத்தில் ஒரு முறை எதிர்பாராதவிதமாக ஒரு பெண் இறக்கிறாள் . அந்தப்பெண்ணின் மரணத்துக்கு வில்லன் தான் காரணம் . ஆனால் வில்லனுக்கு அது பற்றிய குற்ற உணர்ச்சி எதுவும் இல்லை . உயிர் இழந்த பெண்ணின் அப்பா வில்லனைக்கண்டுபிடித்து பழி வாங்கத்துடிக்கிறார் .
வில்லனுக்கு ஆல்ரெடி ஒரு துரோகி இருந்தான் அல்லவா ? அவன் வில்லனை மாட்ட வைக்க ஸ்கெட்ச் போடுகிறான் . வில்லன் மாட்டினானா? தப்பினா? என்பது மீதி திரைக்கதை
வில்லன் ஆக மெட்ரொ படத்தின் நாயகன் சத்யா நடித்துள்ளார் . அப்பாவி ஐ டி ஊழியர் , கொடூரமான செயின் பறிப்புத்திருடர் என்று மாறுபட் ட இரு முகங்களை அருமையாகக்காட்டுகிறார் .ஆக்சன் ஸீக்வன்சில் , தப்பி ஓடும் சீன்களில் , க்ளைமாக்சில் இவரது நடிப்பு அருமை
வில்லனின் அம்மாவாக தீபா சங்கர் நடித்துள்ளார் . , இவர் ஆக்சுவலாக ஓவர் ஆக்டிங்க் ஓமனா ஜோதிகாவுக்கே பெரியம்மா முறை .ஆனால் இந்தப்படத்தில் அந்த தர்மசங்கடம் இல்லை .
வில்லனுக்கே வில்லன் ஆக டேனியல் ஆன்னி போப் நடித்திருக்கிறார் .வழக்கமாக காமெடியனாக வரும் இவர் இதில் கொடூரமான வில்லனாக வருகிறார் .நல்ல நடிப்பு
உயிர் இழந்த பெண்ணின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ் அனுபவம் மிக்க நடிப்பு . வில்லனைப்பழி வாங்க இவருக்கு உதவியாக வரும் போலீசாக ராஜா ராணி புகழ் பாண்டியன் கச்சிதமாக நடித்துள்ளார் .ஜெயில் கைதியாக சென்றாயன் அளவான நடிப்பு
மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ் எம் பாண்டி
மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜோகன் சிவநேசன் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசை கலக்கல் ரகம் . ஸ்ரீ காலத்தின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது .விறுவிறுப்பு ,பரபரப்புக்குப்பஞ்சம் இல்லை . உதய குமாரின் ஒளிப்பதிவு குட்
சபாஷ் டைரக்டர்
1 செயின் பறிப்பு சம்பவங்கள் , மக்களிடம் இருந்து வில்லன் தப்பி ஓடும் காட் சிகள் அனைத்தும் அபாரம்
2 ஜெயில் கைதி ஆனா சென்றாயன் கதை சொல்வதும் க்ளைமாக்சில் அவரை வைத்து ஒரு டிவிஸ்ட்டும் அருமை
3 வில்லனுக்கே வில்லன் ஆகும் ஒரு சம்பவம் . அவன் போடும் ஸ்கெட்ச் , 1000 பவுன் தங்கம் மேட்டர் எல்லாம் பிரமிக்க வைப்பவை
4 வில்லன் வரும் இடங்களில் வரும் பிஜிஎம் பட் டாசு
ரசித்த வசனங்கள்
1 தப்பைத்தப்பு என்று தெரிந்து செய்பவன் யாருக்கும் பயப்பட மாட் டான்
2 இந்த உலகத்தில் நல்லவன் , கெட் டவன் என் யாரும் இல்லை , மாட்டிக்கிட் டவன் , மாட் டிக்காதவன் ரெண்டே வகை தான்
3 சிட்டில டெய்லி 50 பவுன் நகை காணாம போகுது , ஆனா கேஸ் பதிவு ஆவது 5 பவுன் தான்
4 ஒரு பொண்ணோட பார்வை பட் டா போதும் , எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவான்
5 லவ் பண்றவனும் ,கொள்ளை அடிக்கிறவனும் மனசுக்குள் எதையும் வெச்சுக்கக்கூடாது , ஸ்ட்ரெஸ் அதிகம் ஆகிடும்
6 நீ என் மேல் கை வைப்பதை விட என் பொருள் மேல் கை வைப்பது எனக்கு அதிக கோபம் வர வைக்கும்
7 முக்கால்வாசி திருட்டுப்பசங்க நம்மை சுத்திதான் இருப்பாங்க
8 இங்கே ரெண்டு பிரச்சனை 1 எதுவும் இல்லை 2 இருந்தாலும் ஒழுங்கா இல்லை
9 சிட்டில 70% சிசிடிவி தான் ஒழுங்கா ஒர்க் ஆகுது
10 நான் திருடன் இல்லை , பிஸ்னஸ் மே ன்
ரெண்டும் ஒண்ணுதான்
11 இந்த உலகத்துல உன் அம்மாவைத்தவிர வேற யாரும் உன்னை மதிக்கலை
12 ஒரு அம்மாவுக்கு தன மகன் எவ்ளோ சம்பாதிக்கிறான் என்பது முக்கியம் இல்லை ,எவ்ளோ ஒழுக்கமா இருக்கான் என்பதுதான் முக்கியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் அந்தப்பெண்ணின் உயிர் போகக்காரணமாக அமைவது தவிர்த்திருக்கலாம் .அந்த அளவும் கொடூரமாக நடக்க வேண்டிய தேவை என்ன?
2 ஆயிரம் பவுன் நகை சேமித்து வைத்திருக்கும் வில்லன் வெரைட்டியாக பல பெண்களிடம் போகாமல் ஒரே ஒரு ஆசை நாயகியை மட்டுமே வைத்திருப்பது எதனால் ?
3 வில்லனும் , வில்லனுக்கே வில்லனும் மோதும் சீன் நம்பகத்தன்மை இல்லை . கடோத்கஜன் மாதிரி இருப்பவனை வில்லன் அசால்ட் ஆக டீல் செய்வது எப்படி ?
4 பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது ரொம்ப ரிஸ்க் .பேங்க் லாக்கரில் வைக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பாக செல்லும் நல்ல க்ரைம் த்ரில்லர் தான் .மெட்ரோ பார்க்காதவர்கள் இதைப்பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5 . விகடன் மார்க் 42
Robber | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | SM Pandi |
Written by |
|
Story by | Ananda Krishnan |
Produced by |
|
Starring | |
Cinematography | N. S. Uthayakumar |
Edited by | N. B. Srikanth |
Music by | Johan Shevanesh |
Production companies |
|
Distributed by | Sakthi Film Factory |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment