12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸ் ஆகி முதல் 10 நாட்களில் 41 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . இன்னும் 25 நாட்களில் நெட் ஃபிளிக்ஸ் ல வரும்
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் . அவர் தன் மனைவி , இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் . அவரது முதல் மகளை ஒரு ஆள் காதல் வலையில் வீழ்த்தி நாசமாக்கி விட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறாள் .மகளின் தற்கொலைக்கு தன் கணவனின் முன் கோபம் தான் காரணம் என மனைவி நினைத்து பிரிந்து வாழ்கிறாள் . மெயின் கதைக்கும் நாயகனின் இந்த பர்சனல் கதைக்கும் சம்பந்தம் உண்டு
சம்பவம் 2 - ஒரு பஸ் கண்டக்டர் தன் மகளின் செயினை ஒரு கடையில் அடகு வைக்கும்போது அந்த நகை போலி என சொல்லி கடைக்காரர் அவரை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் . நாயகன் தான் அந்தக்கேசை விசாரிக்கிறார். . விசாரணையில் பஸ் கண்டக்டர் உடைய மகள் தன் காதலனுக்கு அந்த நகையை தந்து டூப்ளிகெட்டை மாற்றி வைத்தது தெரிய வருகிறது . திடீர் என பஸ் கண்டக்டர் உடைய மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். பஸ் கண்டக்டர் தன் மகளது மரணத்துக்கு நாயகன் தான் காரணம் என கேஸ் போடுகிறான்
சம்பவம் 3 - ஒரு போலீஸ் ஆபீசர் யாரோ ஒருவரின் மிரட்டலுக்கு படிந்து தற்கொலை செய்து கொல்கிறார்
சம்பவம் 4 - வில்லன்கள் க்ரூப்பில் 2 பெண்கள் , மூன்று ஆண்கள் . எல்லாரும் போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் . ஒரு இரவில் ஒரு பஸ் பயணம் மேற்கொள்கிறார்கள் . அதில் பப்ளிக்காக போதை மருந்து உட்கொள்கிறார்கள் . அதே பஸ்சில் நாயகனின் மனைவியும் , மகளும் பயணிக்கின்றனர் .நாயகனின் மனைவி இந்தக்கொடுமையைத்தட்டிக்கேட்கிறாள் . பஸ் கண்டக்டரிடம் புகார் செய்கிறாள் . வில்லன்கள் க்ரூப் , நாயகனின் மனைவி,. பஸ் கண்டக்டர் இருவரையும் தாக்குகிற்து . போலீஸ் வந்து தொக்காக வில்லன்கள் க்ரூப்பை தூக்கி செல்கிறது . கைது செய்து அழைத்துச்செல்லும் வழியில் அந்த ஆபீசர் வில்லன்கள் க்ரூப்பில் இருக்கும் இரு பெண்களை மானபங்கம் செய்கிறார்
மெலே சொன்ன சம்பவம் 4 தான் மீதி 3 சம்பவங்களுக்கும் அடி நாதம் . நாயகன் இந்த வில்லன்கள் க்ரூப்பை எப்படி டிரேஸ் செய்து பிடிக்கிறார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக குஞ்சாக்க போபன் அபாரமாக நடித்து இருக்கிறார் . அவரது முன் கோபம் . போலீஸ் மிடுக்கு எல்லாம் அட்டகாசம் . அவரது மனைவி ஆக பிரியாமணி நடித்திருக்கிறார் . பேலியோ டயட்டில் இளைத்த மாதிரி பரிதாபமாக இருக்கிறார் . நடிப்பு குட்
பஸ் கண்டக்டர் ஆக வரும் ஜெக்தீஷின் நடிப்பு அருமை
வில்லன்கள் க்ரூப்பில் ஐவர் + 1 என்றாலும் இரு ஆண்கள் , இரு பெண்கள் அதிக ஸ்கோப் , மிரட்டி இருக்கிறார்கள் .வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டாலே அந்த திரைக்கதை வெற்றி பெற்று விடும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இது
ஜெக்ஸ் பிஜாய் தான் இசை . பின்னணி இசை மிரட்டல் ரகம் . கலக்கி இருக்கிறார் / ரொபி வர்கீஸ் ராஜ் தான் ஒளிப்பதிவு . கன கச்சிதம் சாமன் சாக்கோவின் எடிட்டிங்க் ஷார்ப் ஆக 137 நிமிடங்கள் டைம் டியூரேசன்
நயாட்டு , இளவீலா பூஞ்சிரா , கன்னூர் ஸ்குவாட் ஆகிய படங்களில் இயக்குனர் ஆகப்பணிபுரிந்த ஷாகி கபீர் தான் திரைக்கதை . . இவர் ஒரு முன்னாள் போலீஸ் ஆபீசர். அதனால் இவர் திரைக்கதை அமைக்கும் படங்களில் போலீசுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஜித்து அஷ்ரப் தான் இயக்கம் . இரட்ட மலையாளப்படத்தில் அஞ்சலியின் கணவராக நடித்தவர் + இளவீலா பூஞ்சிரா படத்தில் போலீஸ் ஆபீசர் ஆக வருபவர்
சபாஷ் டைரக்டர்
1 ஒரு அறிமுக இயக்குனர் தன் முதல் படத்திலேயே பிரமாதமான திரைக்கதை , மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் .. இது முதல் படம் என்ற தயக்கம், பதட்டம் இல்லை . அனாயசமாக பண்ணி இருக்கிறார்
2 ஒளிப்பதிவு + பின்னணி இசை இரண்டும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்படி முதுகெலும்பாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு
3 மார்ச்சுவரி பைட் சீக்வன்ஸ் கலக்கல் ரகம் , ஆக்சன் தெறிக்கிறது
4 வில்லன்கள் 6 பேர் . அனைவரது நடிப்பும் மிரட்டல் ரகம்
5 நேரடியாக கதை சொல்லாமல் நான் லீனர் கட்டில் கதை சொன்ன விதம் அருமை
6 வில்லன் லைட்டரில் தம் அடிக்கும்போது சரக்கை ஊற்றி பற்ற வைக்கும் ஐடியா
ரசித்த வசனங்கள்
1 என்னை எதுக்காக இத்தனை கேள்விகள் கேட்கறீங்க ? போலீஸ் மாதிரி சந்தேகப்படறீங்க ?
ஏன்னா நான் ஒரு போலீஸ் ஆபீசர்
2 தற்கொலைக்கடிதம் எழுதுபவர்கள் அவர்களாக எழுதும்போது இயற்கையான கையெழுத்தாக இருக்கும் ,இன்னொருவர் மிரட்டி எழுத வைத்தால் நடுக்கமாக எழுத்து இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பெரும்பாலான போலீஸ் படங்களில் நாயகன் சஸ்பெண்ட் ஆனவர் ஆக வருவதும் , டியூட்டியில் ஜாயின் பண்ணீயதும் வரும் முதல் கேஸ் தான் படத்தின் கதையாக வருவதும் ரொட்டீன் ஆகிறது
2 வில்லன் க்ரூப் பாதிக்கப்பட்டது பிரியாமணியால் . பழி வாங்க அவரைத்தான் ரேப் செய்ய வேண்டும் . அவரது மகளை எதனால் டார்கெட் செய்கிறார்கள் ?
3 வேட்டையாடு விளையாடு படத்தின் பாதிப்பு பின் பாதியில் தெரிகிறது . குறிப்பாக வில்லன்களின் கேரக்டர் டிசைன் , ஆச்கன் சீக்வன்ஸ் , கெட்ட போலீஸ் ஆபீசரின் செய்கை
4 க்ளைமாக்ஸ் முடிந்த பின்னும் 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு எக்ஸ்ட்ரா க்ளைமாக்ஸ் வைத்தது தேவையற்றது
5 வில்லன்கள் பழி வாங்கத்தான் எல்லாம் செய்கிறார்கள் . தேவை இல்லாமல் ஒவ்வொரு மர்டர் ஸ்பாட்டிலும் செயினை எடுத்து ஏன் க்ளூ கொடுக்கிறார்கள் ?
6 வில்லன்களுக்கு எப்படி பெயில் கிடைத்தது ? போதை மருந்து கேசில் பெயில் கிடைக்காது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான க்ரைம் ஆக்சன் க்ரைம் த்ரில்லர் சீட் எட்ஜிங்க் த்ரில்லர்.. பார்க்கலாம். ரேட்டிங் 3.5 / 5
Officer on Duty | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Jithu Ashraf |
Written by | Shahi Kabir |
Produced by |
|
Starring | |
Cinematography | Roby Varghese Raj |
Edited by | Chaman Chakko |
Music by | Jakes Bejoy |
Production company | Martin Prakkat Films |
Release date |
|
Running time | 137 minutes |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹12 crore[1] |
Box office | ₹41 crore[2] |
0 comments:
Post a Comment