30/1/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது 14/3/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது . வெறும் 3 கோடி ரூபாய பட்ஜெட்டில் உருவான இப்படம் 18 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தி இருக்கிறது பத்திரிக்கைகளின் பாராட்டு மழையில் நனைந்த இந்தப்படம் எல்லாத்தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்காது .
கும்பாலங்கி நைட்ஸ் , ஆன்ட் ராயிடு குஞ்சப்பன் வெர்சன் 5.25, நான் தான் கேஸ் கொடு ஆகிய வெற்றிப்படங்களில் தயாரிப்பு வடிவமைப்பாளராகப்பணி ஆற்றிய ஜோதிஷ் சங்கர் இயக்கம்., இயக்குனர் ஆக அவரது முதல் படம் இது.
கொல்லம் மாவடடத்தில் குறிப்பாக மூணாந்துருத்தி என்ற இடத்தில் . பெரும்பான்மையான படப்பிடிப்பு நட ந்தது , ..ஜி ஆர் இந்து கோபன் எழுதிய நாலஞ்சு செருப்புக்கார் என்ற நாவலின் திரை வடிவம் இது ..பஸீல் ஜோசப் + லிஜோமோல் ஜோஸ் காம்போவில் உருவான படம் செம ஹிட் ஆகி இருப்பதால் இதே ஜோடி ராசியான ஜோடியாக வலம் வரும் என இண்டஸ்ட்ரி டாக்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகிக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்ட்து .விரைவில் திருமணம் சீராக 25 பவுன் நகை போடவேண்டும் , ஆனால் கையில் காசில்லை . நாயகியின் அண்ணன் ஒரு வெட்டித்தண்டம் . கட் சி , சரக்கு , குடி என இருப்பவன் .அம்மா மட்டும் தான் அப்பா இல்லை .சொந்தக்காரர்கள் அதிகம் பேர் திருமணத்துக்கு வருவார்கள் நல்ல மொய் கலெக்சன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடனுக்கு நகை வாங்க முடிவு செய்கிறார்கள்
நாயகன் ஒரு நகைக்கடையில் ஏஜென்ட் ஆக இருக்கிறான் . இது மாதிரி விசேஷ காலத்தில் கடனாக நகையைத்தந்து மொய்ப்பணம் வசூல் ஆனதும் பணத்தை வசூலிக்கும் வேலை . மொய்ப்பணம் வரவில்லை எனில் கொடுத்த நகையை திருப்பி வாங்கி ஜுவல்லரி ஷாப்பில் ஒப்படைக்க வேண்டும் . 50% பணம் வசூல் ஆனால் மீதி 50% க்கு அதற்கான நகையை ரிட்டர்ன் எடுக்க வேண்டும் . இதுதான் நாயகனின் பணி
நாயகிக்குத்திருமணம் நடக்கிறது . நாயகன் 25 பவுன் நகை தந்து விடுகிறான் . நாயகியின் கணவன் தான் வில்லன் .இவன் ஒரு முரடன் . குடிகாரன் .மீன் பண்ணையில் வேலை செய்பவன் . இவனுக்கு திருமணம் ஆன ஒரு தங்கையு ம் , திருணம் ஆகாத இன்னொரு தங்கையும் உண்டு . திருமணம் ஆன தங்கைக்கு பெண்டிங்க் நகை போட வேண்டி இருக்கு. திருணம் ஆகாத இன்னொரு தங்கைக்கு சீராக நகை போட வேண்டி இருக்கு .இரண்டுமே வில்லனுக்கு சீராக நாயகி கொண்டு வந்த 25 பவுன் நகையை வைத்துத்தான் மேக்கப் செய்யவேண்டும்
எதிர்பார்த்தபடி மொய் வசூல் ஆகவில்லை . 13 லட்ஷ ரூபாய் தர வேண்டும் . 6 லட்சம் தான் வசூல் ஆகி இருக்கு .மீதி 7 லட்ஷம் பாக்கி தர வேண்டும் . இந்த பாக்கியை நாயகன் வசூல் செய்தானா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக பஸீல் ஜோசப் அருமையாக நடித்திருக்கிறார் . ஆனால் அவரது கேரக்ட்டர் டிசைனில் சில குழ ப்பங்கள் . நாயகி ஆக முதல் பாதியில் அடக்கமான பெண்ணாகவும் , பின் பாதியில் தைர்ய லட் சுமியாகவும் , மாறுபட் ட நடிப்பை வழங்கி இருக்கிறார் லிஜோமோல் ஜோஸ்
வில்லனாக சஜின் கோபு அசல் முரடனாகவே வாழ்ந்திருக்கிறார் . ஆஜானுபாவகமான தோற்றம் , நாயகியின் அண்ணனாக ஆனந்த மன்மதன் அசத்தி இருக்கிறார்
ஜெஸ்ட்டின் வர்கீசின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் . பின்னணி இசை சிறப்பு நிதின் ராஜ் அருளின் எடிட்டிங்கில் படம் 127 நிமிடங்கள் ஓடுகிறது .மெதுவாக திரைக்கதை நகர்கிறது . சானு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு பிரமாதம் . கொல்லத்தின் அழகைக்கண் முன் நிறுத்துகிறது
நாவல் ஆசிரியர் இந்துகோபன் , ஜெஸ்ட்டின் மேத்யூவு இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள் .நிஜமாக நிகழ்ந்த சம்பவத்தை நேரில் பார்ப்பது போல உயிரோட் ட,மான காட் சிகள் [படத்தின்ப பலம்
சபாஷ் டைரக்டர்
1 இந்த நகைக்கடை ஏஜென்ட் கடனுக்கு நகை தரும் கான்செப்ட்டே புதுசு . கவரிங்க் நகை தான் நாம் கேள்விப்பட்டது . தங்க நகையே கடனாகத்தருவார்கள் என்பது புதுசு .அந்தக்கதைக்களத்தில் களமாடியது அருமை
2 படத்தில் அனைத்து முக்கியக்கேரக்டர் களும் சித்தரிக்கப்படட விதம் அருமை அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்
3 அடுத்து என்ன நடக்குமோ என்ற டென்சன் பில்டப் ஆகும் விதம் சிறப்பு
4 நாயகன், நாயகி , வில்லன் , நாயகியின் அண்ணன் என நான்கு கேரக்டர்களின் நடிப்பும் அருமை
செம ஹிட் சாங்க்ஸ்
1 அலை பாயம் கடலோரம் அசையாது நடை போடு
2 மணவாட்டியே மணவாட்டியே மணவாளன் கை கோர்க்கும்
ரசித்த வசனங்கள்
1 வாழ்க்கைல பொறுமை ரொம்ப முக்கியம், எதுக்கெடுத்தாலும் முறைச்சுக்கிட்டு இருந்தா முன்னேற முடியாது
2 நம்ம ஸ்டேட்டசைத்தீர்மானிப்பதே பணம் தான்
3 வாழ்க்கைல த்ரில் இல்லைன்னா அந்த வாழ்க்கை வீண்
4 வெத்தலை பாக்கு வாங்கவே வக்கில்லையாம், பீடிக்கு உலக்கை வேணுமாம்
5 மடியில் ஜுவல்லரி , நடமாடும் ஜுவல்லரி , இப்போ தூங்கும் ஜுவல்லரி ஆக ஆகிட் டான்
6 என் தங்கை இப்படி சொல்வா என எதிர்பார்க்கலை .தோளில் அவளை சுமந்து பீச் எல்லாம் சுத்தி இருக்கேன்
உலகில் யாருமே செய்யாத காரியத்தை இவரு செய்த மாதிரி பேசறாரு
7 கிடைக்கற நேரத்துல சந்தோஷமா இருக்கணும் , கிடைக்காத நேரத்தில் போராடனும்
8 அலெக்ஸ்சாண்டர் மாதிரி போராடி ஜெயிப்பேன்
9 இங்கே பொண்ணுங்களுக்குப்பஞ்சம் இல்லை, நகைக்குத்தான் பஞ்சம்
10 பாவிகளோட பாரத்தை மட்டும் நீ சுமந்துக்கோ , என் பாரத்தை நான் சுமக்கிறேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன், , வில்லன் , நாயகியின் அண்ணன் என பல கேரக்டர்கள் , அவர்களது நண்பர்கள் அனைவரும் குடிகாரர்கள் .காட்சிக்கு காட்சி சரக்கு அடிக்கறாங்க . டி டோட்டலரக்ள் , பெண்கள் முகம் சுளிக்கும்படி தண்ணி அடிக்கும் சீன்கள் அதிகம்
2 உன் கிட் டே எப்படி நகையை வசூல் செய்யணும்னு எனக்குத்தெரியும் என்ற டயலாக்கை நாயகன் வில்லனிடம் 6 தடவை சொல்றார் . ஆனா கடைசி வரை நீட் விலக்கு ரகசியம் மாதிரி அவர் எதுவுமே செய்யலை
3 நாயகன் கை வசம் 6 லட்சம் பணம் இருக்கு .அதை பேங்க்கில் கட் டனும் , அல்லது நகைக்கடையிடம் ஒப்படைக்கணும், இரண்டும் செய்யாமல் தண்ணி போட்டுட்டு மப்பில் பீச்சில் விழுந்து கிட க்கார்
4 வில்லனுக்கு வீட்டில் நகை வைத்திருப்பது ஆபத்து என்பது தெரிந்து விட்டது ,ஒண்ணா நகையை தங்கை வீட்டில் வைக்கணும் , அல்லது பேங்க் லாக்கரில் வைக்கணும் , அதை செய்யாமல் இடுப்பில் வேட்டியில் 13 பவுன் நகையை பொட்டலம் கட்டிக்கொண்டு அலைவது எனோ ?
5 வில்லன் நாயகனைக்கத்தியால் வயிற்றில் குத்தியதும் நாயகன் அலறணும் , அலல்து ஹாஸ்பிடல் போகணும் .எதுவும் செய்யாமல் வில்லனைப்பார்த்து சவால் விட்டுட்டு இருக்கார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கேரளாவில் சூப்பர் ஹிட் என்பதால் பார்த்தேன் . ஆனால் எனக்குப்படம் பெரிய அளவில் பிடிக்கவில்லை .நம்ப முடியாத காட் சிகள் அதிகம் . மாறுபட் ட கதைக்களம், நடிப்பு மட்டுமே பிளஸ் . ரேட்டிங்க் 3 / 5
Ponman | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Jothish Shankar |
Written by | G. R. Indugopan Justin Mathew |
Based on | Nalanchu cheruppakkar by G. R. Indugopan |
Produced by | Vinayaka Ajith |
Starring |
|
Cinematography | Sanu John Varghese |
Edited by | Nidhin Raj Arol |
Music by | Justin Varghese |
Production company | Ajith Vinayaka Films |
Distributed by | Ajith Vinayaka Release |
Release date |
|
Running time | 127 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹3 crore[2] |
Box office | ₹18.30 crore[2] |
0 comments:
Post a Comment