1988ல் கொலையும் செய்வாள் பத்மினி என்ற டைட்டிலில் க்ரைம் நாவல் வெளி வந்தது .பரபரப்பாகப்பேசப்பட்ட்து .கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை சாமர்த்தியமாக மாற்றி டைட்டில் ஆக்கிய சாதுர்யத்துக்காக பேசப்பட்டது . தன கற்பைக்காப்பாற்றிக்கொள்ள கொலையும் செய்வாள் பத்தினி என்பதுதான் அந்தப்பழமொழியின் சாராம்சம் . ஆனால் தனக்கு துரோகம் செய்தால் கணவனைக்கொலையும் செய்வாள் பத்தினி என்பதுதான் இந்தக்கதையின் சாராம்சம் .பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் விதத்தில் எடுக்கபபட்ட இந்ப்படம் 7/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . ஓடி டி யில் வர இன்னும் 20 நாட்கள் ஆகும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு எல் ஐ சி ஏஜென்ட் . தன் புது மனைவியுடன் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறான் . இருவரும் மிகவும் அந்நியோன்யமான தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் . நாயகி இப்போதிருக்கும் மாடர்ன் பெண்களைப்போல எல்லாம் இல்லாமல் புருஷனை மதிக்கிறாள் .சமைக்கிறாள் . அடக்க ஒடுக்கமான குடும்பப்பெண்ணாக இருக்கிறாள்
நாயகியின் தோழியின் தங்கை ஒரு நேர்முகத்தேர்வுக்காக நாயகியின் வீட்டுக்கு வந்து ஓர் வாரம் தங்கி இருக்க வேண்டிய சூழல் . அப்போதுதான் நாயகனின் சுயரூபம் வெளிப்படுகிறது . நாயகியின் தோழியின் தங்கை இடம் நாயகன் தவறாக நடக்க முயற்சித்த போது ஆக்சிடன்ட்டல் ஆக நாயகன் கீழே விழுந்து மயக்கம் ஆகிறான் . அப்போது நாயகி அங்கே வருகிறாள் . அப்போது நாயகனின் செல் போன் ஒலிக்கிறது . நாயகி அதை அட் டென்ட் செய்தபோதுதான் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது
திருமணத்துக்கு முன்பே நாயகனுக்கு ஓர் காதலி உண்டு . அவள் கூட இப்போதும் குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறான் நாயகன் . இதை அறிந்ததும் நாயகிக்கு பெரும் அதிர்ச்சி . புருஷனை அருகில் இருந்த அரிவாளால் ஒரே போடு ஆள் க்ளோஸ்
இதற்குப்பின் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகி ஆக லிஜி மோல் ஜோஸ் அட்டகாசமான நடிப்பு . கணவனுடன் கொஞ்சுவது என்ன? சமைக்கும் லாவகம் என்ன?அமைதியான முகத்துடன் வலம் வருவது என்ன? போலீசை , சக்களத்தியை டீல் செய்யும் லாவகம் என்ன? அசத்தி விட்டார்
நாயகியின் சக்களத்தி ஆக லாஸ்லியா அழகான , இளமையான முகத்துடன் வந்து போகிறார் . முதல் பாதியில் நாயகி ஸ்கோர் செய்கிறார் எனில் பின் பாதியில் லாஸ்லியா ஸ்கோர் செய்கிறார்
நாயகன் ஆக ஹரிகிருஷ்ணன் நடித்திருக்கிறார் .பசுத்தோல் போர்த்திய அசைவப்புலி கேரக்டர் . அதிக வாய்ப்பு இல்லை எனினும் வந்தவரை ஓகே ரகம் .இவர் மெட்ராஸ் (2014) படத்தில் நடித்தவர்
முக்கியமான இந்த 3 கேரக்டர்கள் தவிர பக்கத்து வீட்டு ஆண்ட்டி ,போலீஸ் , அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆகிய ரோல்களும் உண்டு .அனைவரும் கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளனர்
96 படப்புகழ் கோவிந்த் வசந்தா வின் இசையில் இரு பாடல்கள் ஓகே ரகம் . பின்னணி இசை கலக்கல் ரகம் இளையராஜா சேகரின் எடிட்டிங்கில் படம் 110 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி ரொம்ப ஸ் லோ , பின் பாதி வேகம் , காத்தவராயனின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் கை தட்டல் பெறுகின்றன , வசனம் யுக பாரதி .. திரைக்கதை எ ழுதி இயக்கி இருப்பவர் ஜோஸ்வா சேதுராமன்
சபாஷ் டைரக்டர்
1 குறைவான பட்ஜெட்டில்.3 முக்கியமான கேரக்டர்கள் .ஒரே லொக்கே ஷனில் படம் பிடித்தது
2 நாயகி யின் அற்புதமான நடிப்பு
3 ஒளிப்பதிவு ,வசனம் , இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை
ரசித்த வசனங்கள்
1 நீ எது சமைத்தாலும் எனக்குப்பிடிக்கும், ஏன் எனில் ஐ லவ் யூ
2 நல்லா சமைக்கறவங்களுக்கு கைப்பக்குவம் நல்லா இருக்கும்னு சொல்வாங்க,உனக்கு எல்லாமே பக்குவமா இருக்கே?
3 பால் பாத்திரத்தைத்திறந்து வெச்சிருக்குதா எல்லாப்பூனைகளும் வந்து அடடகாசம் பண்ணத்தான் செய்யும் ( டபுள் மீனிங் )
4 அவ பார்க்கத்தான் அப்புராணியா இருக்கா, வாய்ப்புக்கிடைத்தா வெச்சு செஞ்சுடுவா ( டபுள் மீனிங் )
5 ஏண்டா , நான் உனக்கு மந்த் எண்டு பிரசரா?
6 அவ பார்க்க பாவமா இருப்பா , ஆனா ஆளையே முழுங்கிடுவா
7 நீ பண்ற தப்புக்கெல்லாம் நான் பாவ மன்னிப்புக்கேட்கணுமா?
8 நான் மனுஷங்களை உடனே நம்பிடுவேன்
உ ங்களை மாதிரி பாசிட்டிவ் ஆட்களுக்கு எதுவும் தப்பா நடக்காது
9 ஒரு ஆம்பிளையை எனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லிக்க எல்லாம் திருமணம் பண்ணிக்க முடியாது
10 நேரில் வராதுஞ்சு தெரிந்தும் ஆண்டவனை நம்புவதில்லையா?
11 ஏமாற்றுபவர்கள் யாரும் தெரியாம செய்வதில்லை , வேணும்னே தான் செய்யறாங்க
12 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னால மட்டுமில்லை, அந்தரங்கத்துக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பா
13 பெண்களுக்கு ரகசியத்தை மூடி வைக்கத்தெரியாது
14 டியர் , டோன்ட் ஒர்ரி , எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்
எதைப்பார்க்க என எனக்கு மட்டும் தான் தெரியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அவ்ளோ பெரிய அபார்ட்மென்ட்டில் சிசிடி வி கேமரா இல்லாதது எப்படி ?
2 மனைவியின் தோழி ஒரு வாரம் தங்கி இருக்கப்போகிறாள் என்பது தெரிந்த நாயகன் முதல் நாளே அவ்ளோ ரிஸ்க் எடுத்து கை வைபப்து எப்படி ? கொஞ்ச்ம பழகிய பின் தானே ட்ரை பண்ணுவாங்க ?
3 நாயகன் தன செல் போனில் காதலியுடன் நிகழ்ந்த உரையாடல்களை , அந்தரங்க படங்களை அழிக்காமல் வைத்திருப்பது எப்படி ?
4 டெட் பாடியின் ஸ்மெல் வெளிவராமல் இருப்பது எப்படி ?
5 பெண்கள் விஷயத்தில் வீக் ஆக இருக்கும் அசிஸ் டெண்ட் கமிஷனர் லாஸ் லியா வீட்டுக்கு வந்த முதல் நாளே கை வைப்பது எதனால் ? ஒரு வாரம் பழகிய பின் கை வைக்கலாமே?
6 லாஸ் லியா வுக்கு நாயகி நாயகனின் போனில் இருந்து பேசுகிறாள் .அந்தத்தகவலை போ லிசில் சொல்லவே இல்லை
7 பொதுவாக தம்பதியில் ஒருவர் மிஸ்ஸிங்க் எனில் போலீசின் முதல் சந்தேகம் அவரது துணை மீது தான் விழும் .ஆனால் பெரிய அளவில் விசாரிக்கவே இல்லையே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -மெதுவாக நகரும் முதல் பாதி , விறுவிறுப்பான பின் பாதி , பெண்களுக்குப்பிடிக்கும் க்ரைம் திரில்லர் . பல நம்ப முடியாத காட் சிகள் . விகடன் மார்க் - 42 . ரேட்டிங் 2.75 / 5
Gentlewoman | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Joshua Sethuraman |
Written by | Joshua Sethuraman Yugabharathi (Dialogues) |
Produced by |
|
Starring | |
Cinematography | Sa Kathavarayan |
Edited by | Elayaraja Sekar |
Music by | Govind Vasantha |
Production companies |
|
Distributed by | Uthraa Productions |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment