Sunday, March 16, 2025

COURT STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்



                        COURT  STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்


14/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் விரைவில் நெட்பிளிக்சில் வர இருக்கிறது.விதி,.நேர்கொண்ட பார்வை டைப் படம் இது.போக்சோ சட்டத்தைத்தவறாக எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கதைக்கரு.முதல் பாதி ஜனரஞ்சகமான  காதல் கதையாகவும் ,பின் பாதி லீகல் டிராமாவாகவும் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல திரைக்கதையால் கவனம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 17 வயது ஆன மைனர் பெண்.வசதியான வீட்டுப்பெண்.நாயகன் 19 வயதான பையன்.சலவைத்தொழிலாளியின் மகன்.இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா தான் வில்லன்.தன் மகளை கடத்தி மிரட்டியதாக போக்சோ சட்டத்தில் புகார் பதிவு செய்கிறார்.ஒரு கட்டத்தில் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்ப்புகார் தருகிறார்.


கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது.வில்லன். நாயகன். தரப்பு வக்கீலை விலைக்கு வாங்கி விடுகிறான்.இதனால். நாயகன் பக்கம் கேஸ் நிற்கவில்லை.இன்னும் 3 நாட்களில். தீர்ப்பு என ஜட்ஜ் சொல்லி விடுகிறார்.இந்தக்கேசை. ஒரு புது வக்கீல் தன் முதல் கேசாக எடுத்து வாதாடுகிறான்.வில்லன் உருவாக்கி வைத்த பொய் சாட்சிகளை அந்த வக்கீல் எப்படி முறியடித்து நாயகனுக்கு நீதி வாங்கிக்கொடுத்தான் என்பது மீதி திரைக்கதை


வக்கீல் ஆக பிரியதர்சினி புலிகொண்டா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஜூனியர் வக்கீல் ஆகவே எத்தனை நாட்கள் இருப்பது என்ற அவரின் ஏக்கமும்,முதல் கேசில் வாதிடும் லாவகமும் செம.


நாயகன் ஆக அப்பாவி முகத்துடன். ஹர்ஸ் ரோசன் வருகிறார்.நாயகி ஆக ஸ்ரீ தேவி குடும்பப்பாங்காந  முகத்துடன் கண்ணிய உடைகளுடன் வருகிறார்.


இப்போது வரும் நாயகிகளை அரை குறை உடையுடன் பார்த்துப்பார்த்து கண்ணியமான தோற்றத்தில் நாயகியைப்பார்க்கவே ஆறுதலாக இருக்கிறது.


வில்லனாக சிவாஜி என்ற தெலுங்கு நடிகர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.வில்லநின்  மனைவி ஆக ரோகினி ரகுவரன் பாந்தமான நடிப்பு.


இவர்கள். போக சாய் குமார், ஹர்சவர்தன்,சுபலேகா சுதாகர் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்


விஜய் புல்கனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு கனகச்சிதம்.கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங்கில் படம் 149 நிமிடங்கள் ஓடுகிறது.


முதல் பாதி கமர்சியலாகவும் ,பின் பாதி விறுவிறுப்பான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இருக்கிறது.


கார்த்துகேயன் சீனிவாஸ்,வம்சிதர் சிரிகிரி இருவருடன் இணைந்து திரைக்கதை  எழுதி. தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்  ராம் ஜெகதீசன்


சபாஷ்  டைரக்டர்


1 வில்லனின் கேரக்டர் டிசைன் ,நடிப்பு இரண்டும் கலக்கல்.வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் பலமாக அமைந்தாலே உறுதியான வெற்றி உண்டு


2. ஜூனியர் வக்கீலாக வந்து தனி கேஸ் நடத்தத்துடியாய் துடிக்கும் காட்சிகள் ஜீவன் உள்ளவை


3. பொய் சாட்சி சொன்ன 3 பேரை தனித்தனியாகக்குறுக்கு விசாரணை செய்து மடக்கும் காட்சி அபாரம்


4  நாயகியைக்கோர்ட்டுக்கே வர விடாமல். தடுக்க வில்லன் போடும் திட்டங்களை வக்கீல் முறியடுப்பது செம



  ரசித்த  வசனங்கள் 


1. கோர்ட்டுக்கு உள்ளே வரும்போது செப்பலைக்கழட்டி விட்டு வரத்தேவை இல்லை.ஆனா அன்பு ,கருணை ,பரிதாபம் இரக்கம். இவற்றை எல்லாம் விட்டுட்டு வரனும்


2. வேலைக்குப்போவது ,ஆபீசுக்குப்போவது இரண்டும் வேற வேற


3. ஹேப்பி நியூ இயர்


காலண்டர் மாறலாம்.ஆனா கேரக்டர் மாறாது


4.  ஒரு மகளை வளர்த்தி பெரியவ ஆக்குவது சாதாரண விஷயம் இல்லை


5.  சாரி


எதுக்கு?


நான் நினைச்ச அளவு நீ முட்டாள் இல்லை


6. திட்டறதுக்குத்தானே கூப்பிடுவே?


ஏன்?திட்டலைனு ஏக்கமா இருக்கா?


7

அவன் அடிக்கடி போன்ல யார் கிட்டே பேசறான்?


எனக்குத்தெரியாது


ரெண்டு பேரும் ஒரே செட்டாதானே சுத்தறீங்க?


அவன் யார் கூட பேசறான்னு அவனுக்கே தெரியாது

8. இண்ட்டலிஜெண்ட்டான. ஆட்களால் விரைவாக முடிவெடுக்க முடியாது


9 உன் கிட்டே இருந்து பதிலை எதிர்பார்க்கலை.இது எப்படி சாத்தியம்?நு கேள்வி கேட்பே என நினைத்தேன்.வக்கீல்களுக்கு. கேள்வி  ரொம்ப முக்கியம்


10. நீங்க தான் என் வெற்றிக்குக்காரணம்


யாரும் யாருக்கும் வெற்றியைத்தர முடியாது


11 போக்சோ சட்டத்தில் திருத்தம் தேவை.40 வயசு ஆள் 6 வயசு சிறுமியை ரேப் செஞ்சா போக்சோ சரி.ஆனா 17 வயசுபெண்ணை 19 வயசுப்பையன் லவ் பண்ணினா அதுக்கும் போக்சோவா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1.நாயகன் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது கோர்ட்டில் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஜட்ஜும் நீ என்னபா சொல்றே? என கேட்கவே இல்லை


2. பூட்டிய அறையில் 16 நிமிடங்கள் நாயகனும் ,நாயகியும் என்ன செய்தார்கள்? என்பது முக்கிய ட்விஸ்ட்.அதை ஓப்பன் செய்த விதம் செமக்காமெடி.ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை


3. ரேப் செய்யப்பட்டதாகப்பொய்ப்புகார் வந்தால்  மெடிக்கல் செக்கப்பில் சுலபமாகக்கேசை உடைக்கலாமே?


4. வீட்டில் கணவனைக்கண்டு அஞ்சி நடுஙகும் மனைவி கோர்ட்டில். அனைவர் முன்பும் பளார் அறை தருவது சினிமாத்தனம்


5 போலீஸ் ஸ்டேசன் வாசலில் பசியுடன் ஒரு முழுநாள் பட்டினியுடன் இருக்கும் நாயகனின் அம்மாவுக்கு மாலையில் குடிக்க பழச்சாறு தராமல்  பெப்சி,கொக்கோகோலா தர்றாஙக.கஷ்டம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான திரைக்கதை ,நிறைவான நடிப்பு.அனைவரும் பார்க்கலாம்.ரேட்டிங். 3/5

0 comments: