21/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் இந்தப்படம் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால் + ஷாம் காம்போ வில் உருவான படம் பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வந்திருக்கும் நல்ல படம் இது . தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓ டி டி யில் ரிலீஸ் ஆகும்போது மிஸ் செய்யாமல் பார்க்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய மன்னர் சதுரங்க விளையாட்டில் தன்னை வெற்றி பெற்ற சிப்பாயை வாள் மூலம் தன வயிற்றைக்கிழித்துத்தற்கொலை செய்ய வைக்கிறார் அரசாங்க துரோகிகளுக்குத்தான் அது போன்ற தண்டனை வழங்கப்படும் என்பதால் அந்த சிப்பாயை துரோகி என மக்கள் நினைக்கிறார்கள்
சம்பவம் 2 - வில்லன் சிறு வயதில் இருந்தே செஸ் பிளேயர் . அவனுக்கு ஒரு தம்பி உண்டு .. ஒரு நாள் வில்லனின் தம்பி வில்லனை செஸ் விளையாட்டில் தோற்கடிக்க வில்லன் சம்பவம் 1ல் வந்த ஜப்பானிய மன்னர் கதையைப்படித்தவன் என்பதால் அதே பாணியில் தன் தம்பியைக்கொலை செய்கிறான்
சம்பவம் 3 - நாயகன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவர் ஏரியாவில் பப்ளிக் பார்க்கில் ஒரு ஆள் தன் வயிற்றைக்கத்தியால் கிழித்துத்தற்கொலை செய்து கொள்கிறார் . அது தற்கொலை தான் என்பதற்குப்பல சாட் சிகள் இருக்கின்றன . ஆனால் அதே பேட்டர்னில் மேலும் 2 தற்கொலைகள் வெவ்வேறு ஊ ரில் நடக்க நாயகன் உஷார் ஆகிறான் ..அனைத்தும் திட் டமிட் ட கொலைகள் என்பதை நாயகன் உணர்கிறான்
அதை நிரூபிக்க நாயகன் என்ன என்ன செய்தான் ? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஷாம் நடித்திருக்கிறார் .கம்பீரமான நடிப்பு . ஓவர் பில்டப் எல்லாம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பு . நாயகி ஆக நிரஞ்சனி நடித்திருக்கிறார் , இவருக்கு அதிக வாய்ப்பில்லை .வந்தவரை பரவாயில்லை
மனவியல் மருத்தவர் ஆக நிழல்கள் ரவி நல்ல நடிப்பு . வில்லனின் சிறுவயது கேரக்டர் ஆக மாஸ் டர் விதேஷ் ஆனந்த் நல்ல நடிப்பு .இவரது கேரக்டரை இன்னமும் டெவலப் செய்து இருக்கலாம் . ஆனால் வில்லன் வளர்ந்து பெரிய ஆள் ஆன பின் கேரக்டரை டம்மி பண்ணி விட் டார்கள் .வில்லனாக நடித்தவரும் சரி இல்லை
படம் முழுக்க நாயகன் உடன் வரும் கான்ஸடபிள் கேரக்டரில் சுமந்த் சுமாரான நடிப்பு தான்
கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் . பின்னணி இசை அருமை .
கல்யாண் வெ ங்கட் ராமனின் ஒளிப்பதிவு குட் . வில்லனின் சின்ன வயது பையனுக்கு லைட்டிங்க் அருமை
பூபதி வேதகிரியின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது .நல்ல விறு விறுப்பு
எம் எஸ் ஜகன் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால்
சபாஷ் டைரக்டர்
1 பிளாக் அண்ட் ஒயிட் கலருக்கும் , கொலைகளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி நாயகன் துப்பு துலக்கும் காட் சிகள் அருமை
2 கிறிஸ்துவர் போல கிராஸ் செய்யும் முறையால் முதலில் குழப்பம் ஆகி அதை செஸ் ராஜாவுக்கான சிம்பல் என்பதை நாயகன் கண்டு பிடிக்கும் சீன் செம
3 வில்லன் சின்னப்பையனாக இருக்கும்போது சைக்கோவாக நடப்பது திகில்
4 என்னதான் நடக்கிறது என்பதே புரியாமல் முதல் பாதி வரை சஸ்பென்ஸ் ஆகக்கொண்டு சென்று பின் பாதியில் ஒவ்வோன்றாக ஓப்பன் செய்யும் விதம்
ரசித்த வசனங்கள்
1 நம்ம வீட்டில் இருப்பவர்களை விட நம்மை அதிகம் கவனிப்பவர்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான்
2 கறிக்கடைக்கு வரும் கூட்டத்தை விட குழந்தைக்கருத்தரிப்பு மையத்துக்கு வரும் கூட் டம் தான் அதிகம்
3 மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் பண்ணி வளர்க்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை
4 மதம் மாறினாதான் ரட்சிப்பார்னா அவர் கடவுள் இல்லை , கட் சித்தலைவர்
5 மனிதர்கள் சில விபரீத முடிவுகள் எடுக்க கால அவகாசம் ஒரு வினாடி போதும்
6 தோல்வி ஒரு மனிதனை எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் கொண்டு போகும்
7 அரசியல்வாதிகளும், சாமியார்களும் தான் மீண்டும் மீண்டும் நமக்கு அவங்க தேவையை உணர்த்துகிறார்கள் , நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்கள்
8 மெஸ் மரிசம் என்பது ஒரு சூடோ சயின்ஸ்
9 வெற்றி மீது அதீத நம்பிக்கை வைப்பது , தோல்வியை ஏத்துக்க முடியாத நிலை இரண்டுமே தப்பு தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் - நாயகிக்குக் குழந்தை இல்லை என்பது , பிறந்த குழந்தை இறந்து விட்டது என்பது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது .பெண்களின் கவனத்தைக்கவர வலியத்திணிக்கப்பட் ட காட்சி
2 நாயகன் தனது கொலீக்கின் வீட்டு சீமந்த நிகழ்ச்சிக்கு செல்வது அங்கே ஒரு பாட்டு என்பது ஸ்பீடு பிரேக்கர் . டி வி சீரியலா ஓடுது ?இது ஒரு க்ரைம் த்ரில்லர் மூவி .எதுக்கு சென்ட்டிமென்ட் சீன் ?
3 படம் முழுக்க நாயகனுடன் உலா வரும் அந்த கான்ஸ்டபிள் கேரக்ட்டர் செய்தவர் ஈரோடு மகேஷ் சாயலில் இருந்தாலும் நடிப்பு சுத்தமாக வரவில்லை
4 ஒரு கேசில் நாயகனுக்கு கையில் அடிபடுவது முதல் பாதி முழுக்க அவர் கையில் கட்டுடன் வருவது தேவை இல்லாத காட் சிகள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட் ட கதை அம்சம் கொண்ட நல்ல படம் , நடிகர்கள் தேர்வு , திரைக் கதையில் கவனம் கொண்டிருந்தா இன்னமும் நல்ல வெற்றி கிடைத்திருக்கும் . விகடன் மார்க் 41 , ரேட்டிங் 2.75 / 5
Asthram | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Aravind Rajagopal |
Written by |
|
Produced by | DSM Dhana Shanmugamani |
Starring |
|
Cinematography | Kalyan Venkatraman |
Edited by | Bhoopathy Vedhagiri |
Music by | K.S. Sundaramurthy |
Production company | Best Movies |
Distributed by | Five Star Company |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment