கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )
இயக்குனர் கே ரங்கராஜ் நெஞ்சமெல்லாம் நீயே (1983) , பொண்ணு பிடிச்சிருக்கு (1984) , நிலவு சுடுவதில்லை ( (1984) ஆகிய சுமார் ரகப் படங்களாக தொடக்கத்தில் தந்தாலும் உன்னை நான் சந்தித்தேன் ( (1984), உதயகீதம் ( (1985 ) ,நினைவே ஒரு சங்கீதம் ( (1987) ஆகிய வெள்ளி விழாப் படங்களைத்தந்தவர் .இவரது 17 வது படமாக எல்லைச்சாமி (1992) அமைந்தது . நீண்ட இடைவெளிக்குப்பின் 33 வருடங்களுக்குப்பின் ஒரு படம் தந்திருக்கிறார் . ஆனால் இவர் இன்னும் அப்டேட் ஆகவில்லை .1980களில் வந்த கதை அம்சம் கொண்ட காட்சி களுடன் தான் திரைக்கதை அமைத்திருக்கிறார் . மோசம் என சொல்லி விட முடியாது .பிரமாதம் என கொண்டாடிடவும் முடியாது
இரண்டு மோசடிப்பேர்வழிகளின் காதல் கதை என்பதால் இதற்கு 2 -420 'S-143 என டைட்டில் வைத்திருக்கலாம் .14/3/25 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இன்னும் ஓ டி டி யில் வர வில்லை . 20 நாட்கள் ஆகும்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு பெரிய கோடீஸ்வரரின் கம்பெணி யில் நாயகன் மேனேஜர் ஆகப்பணி புரிகிறான் . குதிரை ஏற்றம் , குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவன் .. ஓனர் வெளியூர் சென்று இருப்பதால் ஆல் இன் ஆல் நாயகனே பார்த்துக்கொண்டிருப்பதால் பார்ப்பவர்கள் அவன் தான் ஓனரோ என குழப்பம் அடைய வாய்ப்பு உண்டு .
ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் வயதான அம்மாவைப்பராமரிக்கும் நர்ஸ் கம் பணிப்பெண் ஆக நாயகி பணி புரிகிறார் . பங்களாவில் இருக்கிறார் . மார்க்கெட் போக வர காரில் போகிறார் . பார்ப்பவர்கள் இவர் ஒரு செல்வச் சீமாட்டி என நினைக்க வாய்ப்பு உண்டு
நாயகன் , நாயகி இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பெரிய பணக்காரர் என தவறாக நினைக்கிறார்கள் . இருவருமே ஒரு பந்தாவுக்காக அதை மெயிணட்டெயின் செய்கிறார்கள் .இவரைக்கல்யாணம் பண்ணிக்கொண்டால் லைபில் செட்டில் ஆகி விடலாம் என இருவருமே தவறாகக்கணக்கு போடுகிறார்கள் . இவர்களது சந்திப்பு , காதல் , பெண்பார்க்கும் படலம் என முதல் பாதி கலகலப்பாகச்செல்கிறது .
ஒரு கட்டத்தில் இருவரது சுயரூபமும் இருவருக்கும் தெரிய வர பிரேக்கப் செய்கிறார்கள்
தனது சொந்தக்கம்ப்பெனி யில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஒரு கோடீஸ்வரி . ஆள் தேடுகிறாள் . நாயகன் விண்ணப்பிக்கிறான் .அந்தக் கோடீஸ்வரிக்கு நாயகனைப்பிடித்து விடுகிறது .நீ என் வாழ்க்கையிலேயே ஹீரோவாக இரு என்கிறாள்
ஒரு கோடீஸ்வரன் கம்ப்பெனியில் நாயகிக்கு வேலை கிடைக்கிறது .அவனுக்கும் நாயகியைப்பிடித்து விட திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் . நாயகி சம்மதம் சொல் கிறாள்
நாயகன் , நாயகி இருவருக்கும் அவரவர் ஆசைப்படி கோடீஸ்வர வரன் அமைந்ததா? அல்லது காதல் தான் பெரிது என எண்ணி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்களா?என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக ஸ்ரீகாந்த் அழகாக வந்து போகிறார் . ஏப்ரல் மாதத்தில் , ரோஜாக்கூட்டம் கால கட்டத்தில் எப்படி இருந்தாரோ அதே அளவு இளமையடன் இருக்கிறார் ரொமான்ஸ் கை கொடுத்த அளவு காமெடி இவருக்குக் கை கொடுக்கவில்லை .
நாயகி ஆக பூஜிதா பன்னாட நடித்திருக்கிறார் .நாயகன் அளவுக்கு அழகிலும் பர்சனாலிட்டியிலும் இவர் இல்லை என்றாலும் பரவாயில்லை ரகம்
கே ஆர் விஜயா , டெல்லி கணே ஷ் இருவரும் கெஸ்ட் ரோலில் வந்தாலும் நடிப்பு இதம் . இயக்குனர் கம் காமெடியன் சிங்கம்புலி அவ்வப்போது சிரிப்பூட்டுகிறார்
கோடீஸ்வரன் , கோடீஸ்வரி ஆக வரும் பரதன் ,நிமி இமானுவேல் இருவருமே பரிதாபமாக இருக்கிறார்கள் . ஒரு பணக்கார கெத்து இல்லை
ஆர் கே சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை தேவலாம் ரகம் .கே கே வின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது .ஒளிப்பதிவு தாமோதரன் . நாயகனை மட்டும் அழாகாகக்கா ட்டி இருக்கிறார்
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கே ரங்கராஜ்
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதி திரைக்கதை ஒகே ரகம் .ஸ்ரீகாந்த்தின் நடிப்பு குட் , சிங்கம்புலியின் காமெடி டிராக் பரவாயில்லை ரகம்
2 கோடீஸ்வரன் , கோடீஸ்வரி பற்றிய க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் பி சுமார் ரகம்
ரசித்த வசனங்கள்
1 நீங்க இந்து இல்லை ?
இந்துவும் இல்லை தந்தியும் இல்லை, வைஷாலி
2 ஒரு குதிரை மேல யானை சவாரி போகுது
3 ஏங்க , உங்களுக்கு மூளை இருக்கா?
இருந்தா உன்னை ஏன் மேரேஜ் பண்ணிக்கப்போறேன் ?
4 வேலை என் அப்பா உடம்புக்கு செட் ஆகலை , படிப்பு எனக்கு செட் ஆகலை
5 நீங்க எதனால அவரை சார்னு கூப்பிடறீங்கன்னு யோசிக்கிறார்
டக்னு கேட் டா எப்படி ? யோசிக்கநும் , ஐ மீன் யோசிச்சு பதில் சொல்லனும்
6 அவரு கேனத்தனமாப் பேசுவதைப்பார்த்தா அவரும் என்னை லவ் பண்றார்னு தோணுது
7 எனக்கு வெட்கமா இருக்கு
அதெல்லாம் கூட இருக்கா ?
8 நுங்கை நோண்டித்தின்னவன் நீ , நொந்து நூடுல்ஸ் ஆனவன் நான்
9 வாடா மல்லி க்கலர் இருக்கா ?
வாடுன மல்லிக்கலர் ஒக்கே வா?
10 ஏன் இப்படிப்பதர்றீங்க ?
சரி வேற மாதிரி பதர்றேன்
11 ஒரு ஐடியா , நாம எல்லோரும் ட்வின்ஸ் என சொல்லிடலாமா?
12 யாரோ கதவைத்தட்ட்றாங்க
கதவு தானாகவா தட்டிக்கும் ? யாராவதுதான் தட்டுவாங்க
13 இந்த நேரத்துல எங்கே போனீங்க ?
வந்த நேரத்துல பாத்ரூம் போனேன்
14 பனாமா போகணும்
பிணமா போகணும் னு நினைச்சுட் டேன்
15 போனைப்போட சொல்லு
கீழேயா போடணும் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 எ ம் ஜி ஆர் , சிவாஜி காலத்தில் செல்போன் கிடையாது .அதனால் அந்தக்காலபபடங்களில் ஏர்போர்ட்டில் ஒருவரை வரவேற்க அல்லது ரிஸீவ் செய்ய கையில் அவர்கள் பெயர் எழுதிய போர்டைபிடித்து நிற்பார்கள் . இந்தக்காலத்தில் வாட்ஸாப்பில் போட்டொ அனுப்பினாப்போதுமே?
2 ஆள் மாறாடடம் அந்தக்காலத்த்தில் நடந்தது ஓகே , ஆனா இப்போ ஐடி கார்டு கேட்கலாமே?
3 கோடீஸ்வரனிடம் பிஸ்னஸ் டீல் செய்த பெண்மணி அவரை போட்டோ வில் கூடப்பார்த்திருக்க மாடடாரா?
4 ஒரு கோடீஸ்வர தொழில் அதிபரின் போட்டோ மீடியாக்களில் வந்திருக்காதா?
5 ஹீரோ , ஹீரோயின் கெமிஸ்ட்ரியே ஒர்க் அவுட் ஆகவில்லை . அவங்க சேர்ந்தா என்ன ? சேராட்டி என்ன? என்ற எண்ணம் தான் ஆடியன்ஸுக்கு வருது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான காதல் கதை , போர் அடிக்காமல் போகுது . டி வி ல போட் டாப்பார்க்கலாம் . விகடன் மார்க் மே பி 40 . ரேட்டிங்க் 2.25 / 5
Konjam Kadhal Konjam Modhal | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | K. Rangaraj |
Written by | K. Rangaraj |
Produced by | My India Manickam |
Starring | |
Cinematography | Dhamodharan |
Edited by | Kay Kay |
Music by | R. K. Sundar |
Production company | Sri Ganapathi Films |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment