பெற்றோர் சம்மதத்துடன் அனைவரும் பார்க்கலாம் என்று சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் ஒரு தர்ம சங்கடமான , குடும்பத்துடன் பார்க்க முடியாத ஒரு குடும்பப்படம் தான் இது . சராசரி கமர்ஷியல் படம் பார்ப்பவர்கள் ரசிக்க முடிவது சிரமம் . பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தைக்கூறும் படம் இது
14/2/2025 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20ல் கோவாவில் 54 வது சர்வ தேச திரைப்பட விழாவில் திரை இடப்பட்டது . விருதுப்படங்களைப்பார்த்து பழக்கம் உள்ள பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு முற்போக்குவாதி . யூ ட்யூப் பதிவாளர் . திருமணம் ஆகி திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் . நாயகியின் கணவர் நாயகியைப்பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். நாயகியின் வீட்டில் ஒரு பணிப்பெண் இருக்கிறார் .
நாயகியின் மகள் தயங்கித்தயங்கி தன் அம்மாவிடம் தான் ஒருவரை விரும்புவதாக சொல்கிறாள் . நாயகி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை . வீட்டுக்குக்கூட்டிட்டு வா , பேசிக்கலாம் என்கிறாள்.
இப்போ தான் ஒரு திருப்பம். மகள் விரும்புவது ஒரு ஆணை அல்ல , ஒரு பெண்ணை . நாயகிக்கு இது பெரிய அதிர்ச்சி . தன் கணவனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறாள் . அந்தக்குடும்பம் இந்தப்பிரச்சனையை எப்படி எதிர்கொண்டது? . வாத விவாதங்கள் என்ன நிகழ்ந்தது? என்பது மீதித்திரைக்கதை
நாயகி ஆக ரோகினி ரகுவரன் அபாரமாக நடித்திருக்கிறார். தன் மகள் ஒரு லெஸ்பியன் என்பதை அறீந்து அவர் அதிர்ந்து போகும் இடத்தில் கலக்கலான நடிப்பு
நாயகியின் மகள் ஆக லிஜோ மோல் ஜோஸ் அமைதியாக நடித்து இருக்கிறார் . அவருக்கு இணையாக அனுஷா பிரபு நடித்திருக்கிறார். நாயகியின் கணவர் ஆக வினீத் குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார் . நாயகியின் வீட்டில் பணிப்பெண்ணாக தீபா சங்கர் கச்சிதமாக நடித்திருக்கிறார்
கண்ணன் நாராயணன் இசையில் ஒரே ஒரு பாடல் . சுமார் ரகம் , பின்னணி இசை கச்சிதம் ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு அருமை . ஒரே வீட்டில் நடக்கும் கதை என்பதால் சவாலான பணி , ஒளிப்பதிவாளருக்கு. டானி சார்லசின் எடிட்டிங்கில் படம் 120 நிமிடங்கள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
சபாஷ் டைரக்டர்
1 நாயகி , மகள் இருவருக்குமிடையே ஆன பாண்டிங் சிறப்பாக சொல்லப்பட்ட விதம்
2 தான் ஒரு லெஸ்பியன் என்பதை மகள் அம்மாவிடம் பூடகமாக சொல்லும் காட்சி கவிதை
3 முதல் காட்சியிலேயே நேரடியாக கதைக்குள் போன விதம்
4 பெற்றோர் தரப்பு , காதல் ஜோடி தரப்பு வாத விவாதங்கள் ஆரோக்கியமான சமூக அலசல்
5 500 ரூபாய் கடன் கேட்கும் பணிப்பெண்ணீடம் இந்த விஷயத்தை வெளில சொல்லிடாத என பணீப்பெண்னிடம் ரூ 1000 தர அவர் அதை மறுக்கும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 காதல் என்பது கடல் மணல் மாதிரி . சாப்ஃப்ட்டா பிடிச்சா கைல இருக்கும், இறுக்கிப்பிடிச்சா கை வலிக்கும்
2 நாம ஒருத்தர் மேல பிரியமா இருக்கோம்னா அவங்களை ஃபிரீயா விட்டுடனும் , இறுக்கிப்பிடிக்கக்கூடாது
3 சுலபமாகக்கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது
4 என்னோட டேஸ்ட் எல்லாம் தெரிஞ்ச உனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ் புரியாம போச்சே ?
5 அவ சொல்றதைக்காது கொடுத்துக் கேள் , அல்லது கேட்பது மாதிரி நடிக்கவாவது செய்யலாமே?
6 இந்த உலகில் எல்லாமே சாத்தியம் தான் , முதல்ல நம்மை நாம் நம்பனும்
7 ஒரு பெண்ணை லவ் பண்ணிட்டு இப்போ அவளோட பெஸ்ட் ஃபிரண்டா இருக்கியா? பெஸ்ட் ஃபிரண்டா நடிச்சுட்டு இருக்கேன்னு சொல்லு
8 இந்த ஆம்பளைங்க முதல்ல பெண்ணைக்கல்யாணம் பண்ணுவானுங்க , அப்புறம் குழந்தை கொடுப்பானுக , அப்புறம் மிதிப்பானுக
9 பொண்ணுங்க நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா யார் புருசன் ? யார் பொண்டாட்டி ? யார் தாலி கட்டுவா?
10 சமூகத்துக்குப்பயந்து வெளில வராம எத்தனையோ பேர் இருக்கலாம்
வெளிப்படையா இருப்பவங்க உண்மையா இருப்பாங்க , உண்மையா இருக்கறவங்க வெளிப்படையா இருப்பாங்க
11 இயற்கைல கறுப்பு வெள்ளை மட்டும் இல்லை , கலர்சும் இருக்கு
12 காதலை உணரத்தான் முடியும் , புரிஞ்சுக்க முடியாது
13 ஒரு ஆண் ஒரு பெண்ணைப்புரிந்து கொள்வதை விட ஒரு பெண் இன்னொரு பெண்ணைப்புரிந்து கொள்வது சுலபம்
14 பெரிய பெரிய தலைவர்கள் , துறவிகள் எல்லாம் மேரேஜே பண்ணிக்காம , குழந்தைகள் இல்லாம அர்த்தம் உள்ள வாழ்க்கை வாழலையா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 லெஸ்பியன் ஜோடி ஆக வரும் இரு பெண்களையும் அழகிகள ஆகவே காட்டி இருக்கலாம் . ஒருவரை மட்டும் திருநங்கை போல அல்லது ஆண் தன்மை உள்ளவராகக்காட்டி இருக்கத்தேவை இல்லை
2 நாயகியின் மகளுக்கு லெஸ்பியன் ஜோடி ஆக வரும் பெண் தனது திருமண வாழ்க்கை பற்றி விளக்கும் காட்சி கொடூரம் . கொஞ்சம் நாசூக்காகக்காட்சி அமைத்திருக்கலாம்
3 க்ளைமாக்சில் நாயகி தற்கொலை செய்ய முயற்சிப்பது போல ஆடியன்சை எண்ண வைத்து ட்விஸ்ட் தருவது தேவையற்றது
4 வினீத் தன் மனைவியை விட்டு வேறு பெண்ணுடன் இருப்பதற்க்குக்கூறும் காரணம் சால்ஜாப்பு மடத்தனம்
5 நாயகி மீது நமக்குப்பரிதாபம் வருகிறதே தவிர லெஸ்பியன் ஜோடி இணையட்டும் என்ற எண்ணம் வரவில்லை . அது திரைக்கதையின் பலவீனம்
6 அப்பா மகளுக்கு முன் தம் அடிப்பது , பிரிந்த மனைவியின் பெட்ரூமில் கணவனுக்காக சரக்கு பாட்டில் வைத்திருப்பது தேவையற்ற காட்சி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது எல்லோருக்கும் பிடிக்காது . 70 , 80 களில் பிறந்தோர் தவிர்க்கலாம் . 2 கே கிட்ஸ் ரசிக்கலாம் . ரேட்டிங் 2.25 / 5 . விகடன் - 40
Kaadhal Enbadhu Podhu Udamai | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Jayaprakash Radhakrishnan |
Written by | Jayaprakash Radhakrishnan |
Produced by |
|
Starring | |
Cinematography | Sree Saravanan |
Edited by | Dani Charles |
Music by | Kannan Narayanan |
Production companies |
|
Distributed by | Creative Entertainers and Distributors |
Release dates |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment