Saturday, March 01, 2025

டிராகன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

       

         ஓ மை  கடவுளே (2020)   என்ற  ஹிட் படத்தின் இயக்குனர்  அஸ்வத் மாரிமுத்து +  லவ் டு டே (2022)  படத்தின் இயக்குனர் + நாயகன்  பிரதீப் ரங்கநாதன்  இருவரும் இணைந்திருக்கும் படம் இது .படம் ரிலீஸ் ஆகும் முன்பே  பல சர்ச்சைகள் .  ஒரே  ஒரு ஹிட்   கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய்  சம்பளம் கேட் கிறார்  என புலம்பல்கள் . இந்தப்படமும்  மெகா  ஹிட் ஆகி விட்ட்தால்  இனி 25 கோடி ரூபாய் சம்பளம்  கேட்கலாம் . வன்முறை  , அடிதடி  இல்லாமல்  ஏ, பி, சி   என  ஆல்  சென்ட்டர்  ஹிட் அடித்திருக்கும் இந்தப்படத்தைப்பற்றிப்பார்ப்போம்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

பிளஸ் டூ  படிக்கும்போது  96% மார்க் வாங்கி கோல்டு மெடலிஸ்ட் ஆக விளங்கும்  நாயகன்  தன பள்ளித்தோழி இடம்  லவ் பிரப்போஸ்  செய்கிறார் . ஆனால் அந்தப்பெண்   சொன்னது .. உன்னை மாதிரி  நல்ல பசங்க எனக்கு செட் ஆக மாட் டாங்க , என்னை மாதிரி அழகான  பொண்ணுங்க  பொறுக்கி , ரவுடி  மாதிரி  இருக்கும் பையன் பின்னால போனாதான் கெத்து   என்கிறாள்


 பொதுவாக  இந்த மாதிரி  ஆகாவளிகளுக்கு  அழகான  பெண் காதலி ஆக அமைவாள் என்பது தலை எழுத்து . அப்படி அமைந்த பெண் ஒரு கட்டத்தில்  நாயகன்  வாழ்க்கையில்   செட்டில் ஆக வழி இல்லை  என்பதை உணர்ந்து  லவ் பிரேக்கப் செய்கிறாள் . அமெரிக்காவில்  ஒரு வரன் பார்த்து  திருமணம் செய்து கொள்கிறாள் 


நாயகன்   செம   கடுப்பு ஆகிறான் .தன்  முன்னாள் காதலியின் கணவனை  விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐடியா செய்கிறான் .போலி  சார்டடிபிகேட்   ரெடி   செய்து .போலியான  இண்ட் டர்வ்யூ  மூலம்   ஒரு மிகப்பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்கிறான் .அங்கே  அவனது திறமை மூலம் முன்னுக்கு வருகிறான் .கார் , பங்களா என லைபில் செட்டில் ஆகிறான் 


ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன்  நாயகனுக்குத்தன் பெண்ணைத்திருமணம் செய்து கொடுக்க முன் வருகிறார் . பொதுவாக  அதிர்ஷட லட் சுமி இந்த மாதிரி மடத்தனமான அட்ரசில் போய் தான் கதவைத்தட்டும் என்பதால்  நாயகனுக்கு ஜாக்பாட் அடிக்கிறது . அப்போதான்  சனீஸ்வரன்  எதிரே   வருகிறான் 


 ஒரு நாள்  எதேச்சையாக  நாயகனின் காலேஜ்  பிரின்சிபால் அவனை சந்திக்கிறார் .நாயகனின் பிராடுத்தனங்களை அறிந்து அவனை  எச்சரிக்கிறார் .ஒழுங்காக  48 அரியர்ஸையும் கிளியர் செய்து விடு இல்லாவிட்டால்  உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவேன் என்கிறார் 


வேறு வழி இல்லாமல் அதற்கு ஓகே சொன்ன  நாயகன்  ஒரு மூன்று மாதங்கள்  லீவ்  எடுத்து  மீண்டும் காலேஜில் சேர்கிறான் . வேலை செய்யும்  கம்பெனியில் , வருங்கால மாமனாரிடம்  எதோ   போய் சொல்லி எஸ் ஆகிறான் .அவன்  48 அரியர்ஸையும்   3 மாதங்களில்  கிளியர்  செய்தானா?  அந்த கோடீஸ்வரி யைத்திருமணம் செய்தானா? இல்லையா? என்பது மீதி  திரைகக்தை 


நாயகன்  ஆக   பிரதீப் ரங்கநாதன் அசால்ட் ஆக  நடித்திருக்கிறார் .முதல் படத்தில் நடித்ததை விட இதில் அதிக வாய்ப்பு . பின்னிப்பெடல்  எடுத்திருக்கிறார் . காலேஜ்  மாணவனாக  வரும்போது அசல்  பொறுக்கி  மாதிரியே  ஹேர் ஸ்டைல் , உடல்  மொழி  அனைத்தையும்   கொண்டு வருபவர் , கம்பெனியில் வேலைக்கு சேரும்போது  பக்கா  டீசண்ட் ஆக  மாறுவது   அருமை .வருங்கால  மனைவியிடம்  போனில் சமாளிப்பது , காலேஜில்  முன்னாள்  காதலி லெக்சரர் ஆக  வருவது  கண்டு  பம்முவது  என  நடிப்பதற்கு ஸ்கோர் அதிகம் 

காதலி ஆக வும் ,காலேஜ்  லெக்சரர்  ஆகவும் வரும்  அநுபமா  பரமேஸ்வரனும் நடிப்பில், அழகில் அசத்தி இருக்கிறார் கோடீஸ்வரி  ஆக   வரும் கயோடு லோஹர்  இதில் தான் அறிமுகம் .அளவான  நடிப்பு , அளவுக்கு மீறிய கிளாமர்  என  பிழைக்கத் தெரிந்தவராக இருக்கிறார் .இவனா சிநேகா  கெஸ்ட் ரோலில் வந்து கை  தட் டல்  பெறுகிறார் 


காலேஜ்   பிரின்சிபால் ஆக   வரும் மிஷ்கின்  அசத்தி இருக்கிறார் .கிட்டத் தட் ட   வில்லன்   ரோல் .ஆனால்  நல்லவர் .கம்பெனி  எம் டி ஆக  கவுதம் வாசு தேவ்  மேனன்  மிடுக்கான நடிப்பு . நாயகனின்  அப்பாவாக  ஜார்ஜ்  மரியம்  உருக்கமான   குணச்சித்திர   நடிப்பைத்தந்துள்ளார் 


லியோன்  ஜேம்ஸின் இசையில் 6 பாடல்கள் . 3 செம ஹிட் . பின்னணி   இசையும் அருமை  சிலம்பரசன் பாடிய  ஏண்டி என்னை விட்டுப்போன ?பாடலில்   தியேட் டரில் ஆராவாரம் .நிகித்  பூமியின் ஒளிப்பதிவில்  பிரம்மாண்டமாக  காட் சிகள்  அழகு .பிரதீப்  ராகுவின் எடிட்டிங்கில்  படம் 155 நிமிடங்கள் ஓடுகிறது 


 பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து   கதை எழுதி ய  அஸ்வத் மாரிமுத்து  திரைக்கதை  எழுதி   இயக்கி  இருக்கிறார்  



சபாஷ்  டைரக்டர்


 1  டி ராகவன்    எப்படி டிராகன் ஆக  மாறுகிறான் என்ற   தாட்  பிராசஸ்    அருமை . D RAG"AVA"N ராகவன்  ல இருக்கும் அவள் ஐ  (AVA)  தூக்கிட்டு   ஓ  போடு . எனும் சீனில் தியே ட்டரில் ஆரவாரமான  கை  தட் டல் 


2  ஆன் லைன்  இண்டர்வ்யூ நடக்கும்போது   நாயகன் ஏமாற்று வதும் , கவுதம்   நாயகனிடம்  இந்த ரூமை  சுற்றிக்காட் டு  எனும்போது  நாயகனின் சமாளிபிகேஷனும் அருமை 

3   காலேஜ்  மீண்டும்  போகும்போது அங்கே  முன்னாள்   காதலி லெக்சரர் ஆக  இருப்பது  டிவிஸ்ட்   என்றால்   அவள் நாயகனுக்கு உதவுவது , அதற்கு சொல்லும் காரணம் ட ச்சிங்க் 


4   காலேஜ் லைபில்  குட்டி டிராகன் ஆக  ஒரு உருப்படாதவன் இருப்பதைக்கண்டு நாயகன் மனம்  வெதும்புவது வெடிச்சிரிப்பு 


5  மிஸ்கின்   கொடுக்கும் இடைவேளை  டிவிஸ்ட்  அசத்தல் 

6 மங்காத்தா  , சதுரங்க  வேட் டை  மாதிரி   படங்களில்   நாயகன் கெட் டவன்  ஆக  இருந்தாலும் ஜெயிக்கிறான் என்ற தவறான மெஸேஜை சொல்வார்கள் . இதில்  நாயகன்  நல்லவன் ஆக  இருப்பதே  சிறப்பு என்பதை உணர்வது பாசிட்டிவ் ஆன விஷயம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மேரேஜ்  பண்ணிட்டு   எங்களை எல்லாம் மறந்துடாத 


 மேரேஜ்  பண்ணப்போறதே  உன்னைத்தான் ,.ஐ லவ் யூ


2  ஐ லைக்  பேடு பாய்ஸ், .கெத்தா  இருக்கும் 


3  ஏண்டி , அந்த பாரீன் மாப்பிளையை  ரிஜெக்ட் பண்ண ரீசனே இல்லை . அப்புறம் என்ன சொல்லி ரிஜெக்ட் பண்ணினே ? 


அந்த பாரீன் மாப்பிளையை  ரிஜெக்ட் பண்ண ரீசனே இல்லை. அதனால  யோசிக்கிறேன் 


4  ஒரு தப்புப்பண்றதால நாம லைப் பூரா நல்லா இருக்கலாம்னா  அந்தத்தப்பைப்பண்றதுல தப்பே இல்லை 


5  தோத்துக்கிட் டே  இருக்காங்க   என்பதற்காக  நமக்குப்பிடிச்ச டீ மை விட்டுக்கொடுக்க முடியாது , மாத்திக்க முடியாது 


6   ஹனிமூன்  எங்கே  போலாம்னு இருக்கே? 


 எங்கே  போனா என்ன? எப்படியு ம் பெட் ரூம்;ல தான் இருக்கப்போறோம் 


7   டிகிரி   என்பது  அஸ்திவாரம்  மாதிரி .நீ அஸ்திவாரம்  இல்லாமையே பில்டிங்க் கட்டிட் டே


8   உன் கூட   என்ன   ரிலேஷன்ஷிப் ? 


 வெக்கேசன்ஷிப்  . ஒண்ணா   சேர்ந்து ஊர் சுத்துவது 


9  மியா கலி பாவே வந்தாலும் அசர மாட்டேன் 


10  பசங்க  அட்டென்சன்   தர்லைன்னா  நாம  தான் அட்டென்சன் கேதர்  பண்ணனும் 


11   அவ   நல்ல பெண்ணாச்சே?  உன்னை எப்படி செலகட்   பண்ணினா ?


12    ஒரு   தப்புபண்ணிட்டு   ஈஸியா  அதைக்கடந்துடலாம்னு நினைக்கிறே  , ஆனா காலம் பூரா அந்த குற்ற உணர்வு உன்னைத்துரத்திக்கிட்டே  இருக்கும் 


13  பண்ணின   தப்புக்களை கரெக்ட்  பண்ண   எல்லாருக்கும்    சான்ஸ்  கிடைக்காது 


14   அப்புறம் என்ன?   லவ்வை சொல்லி செருப்படி வாங்கறது ? 


15   கெத்து   காட்டினா  பொண்ணுங்க ரசிப்பாங்க , ஆனா  வாழ்க்கைல செட்டிலானாதான் நம்ம கூட வாழ நினைப்பாங்க 


16  அனுபவத்துல சொன்னா   பூமரா? 


17   லவ் பண்ணின    நாளில் இருந்து   எனக்காக எத்தனையோ செய்திருக்கே,   ஆனா உனக்காக நான் எதுவுமே செய்ததில்லை 


18   நான்     உனக்கு  தகுதியானவன்  இல்லை 


19    அமெரிக்காவில்  படிச்சுட்டு  ஏண்டி   இப்படி பழைய   சோறா இருக்கே? 


20  நான்   கெட்டவன்   தான் , ஆனால்  இன்னொருத்தன் வாழ்க்கையை அழிச்சிட்டு  அதன் மூலம்   வாழும் அளவு கெட் டவன்    இல்லை 


21  வாழ்க்கைல எல்லாரும்  வெற்றியின் பின்னால் தான் ஓடிட்டே  இருக்காங்க . ஆனா   சிலர் மாத்திரம் தான் கீழே  விழுந்தாலும்    மீண்டும்  எழுந்து   ஓடுவாங்க 


22   நிறைய   தப்புப்பண்ணி   திருந்தி  வாழ்பவன்  வாழ்க்கைல நல்லா இருப்பான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    ஆன்   லைன்   இண்டர்வ்யூ நடக்கும்போது   நாயகன் ஏமாற்று வது  ஓகே , ஆனால்   நேரில்   வரும்போது  ஒரு  ரி  டெஸ்ட்   வைக்க   மாட்டார்களா? 


2  நாயகன்  வாழ்க்கையில்  பல கட்டங்களில்  தன்  உயர்வுக்காக  ஏமாற்று கிறான் . ஆனால்  க்ளைமாக்சில்  திடீர் என திருந்துவது எப்படி ? 


3  திருமண   மண்டபத்தில்  நாயகன்   தாலி கட்டாமல்  எழுந்து   செல்வது சரி .ஆனால்   கோடிஸ்வரப்பெண், மாமனார்  ரி  ஆக்சன் என்ன? என்பதை சொல்லவே இல்லை . . திருமண  பந்தலில்  அப்டி  விட்டுப்போக சம்மதிப்பார்களா?  


4   கடந்த  10 வருட  வினாத்தாள்களைப்படித்தால் போதும் , எக்ஸ்சாம்ல பாஸ் ஆகிடலாம் என காதலி சர்வ சாதாரணமாக சொல்கிறாள் . அதுவே  80%  மொத்த   சிலபஸ்   ஆக இருக்குமே? அத்தனையையும் ஒரு ஆளாக  காதலி டைப் செய்து தருவது எப்படி ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 படிக்கின்ற   மாணவர்கள்  மனதில்  ஒரு பாசிட்டிவான எண்ணத்தை  விதைக்கும் நல்ல படம் .குடும்பத்துடன் பார்க்கலாம் . இது  ஆல் செண்ட்டர்  ஹிட் மெட்டிரியல் . விகடன் மார்க் யூகம் 46 . குமுதம் ரேங்க்கிங்க்  நன்று . ரேட்டிங்க்  3 / 5 


Thanx to anicham 1/3/2025 issue


0 comments: