Tuesday, March 18, 2025

பெருசு (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( அடல்ட் காமெடி டிராமா ) 18 +

                         


2023ம்  ஆண்டு வெளியான டெண்ட்டிகோ  என்ற  சிங்களப்படத்தின்  தமிழ்  ரீமேக்  தான் இது . அதே  இயக்குனர் தான் இதையும்  இயக்கி  இருக்கிறார் . ஒரிஜினல்  வெர்சன்  செம  காமெடி  என  சிலர்  சொன்னார்கள் , நான் இன்னும்  அதைப்பார்க்கவில்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  60 +வயசு ஆன  பெருசு . ஊர் மக்கள் அனைவரும் அவரை பெருசு என்றே  அழைக்கிறார்கள் . அவருக்கு  சட்டப்படி ஒரு சம்சாரம், செட்டப் படி இன்னொரு சமாச்சாரம் . அவர்  தன் முதல் மனைவி , 2 மகன்கள் , 2 மருமகள்கள்  ஆகியோருடன் கூட்டுக்குடித்தனமாக வாழ்ந்து வருகிறார் . இப்படி இருக்கும்போது  ஒரு நாள்  வீட்டில் டி வி பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீர் என மாரடைப்பால் நாயகன் இறந்து விடுகிறார் .


அப்பா  இறந்தது ஒரு புறம் துக்கம்  என்றாலும்  அவர் எந்த நிலையில் பிணமாக கிடக்கிறார் என்பதில் இரு மகன்களுக்கும் ஒரு தர்மசங்கடம் . . அந்த  விஷயத்தை  ஊராருக்குத்தெரியாமல் மறைக்க வேண்டும் . அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தான் மொத்தத்திரைக்கதையும் 


  நாயகனின் முதல் மகனாக சுனில்   காமெடி  கலந்த   நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . நுணுக்கமான சில முக உணர்வுகளை கச்சிதமாக  காட்டுகிறார் . அப்பாவிடம் கடைசி காலத்தில் சரியாகப்பேசவில்லை என்ற குற்ற உணர்வைக்காட்டுவதும்  அருமை 


 நாயகனின் இரண்டாவது  மகனாக, குடிகாரனாக வைபவ்   முதல்  பாதியில் சுமார்  ரக நடிப்பையும், இரண்டாம்  பாதியில்  கச்சிதமான நடிப்பையும் வழங்கி உள்ளார் 

  நாயகனின் முதல்   மருமகளாக   சாந்தினி   கச்சிதம் ,   நாயகனின்  இரண்டாவது மருமகளாக நிஹாரிகா  அனாயசமாக  நடித்துள்ளார் . 

  நாயகனின் முதல்   மனைவியாக   தனலட்சுமி  அற்புதமாக நடித்துள்ளார் .  , அதுவும்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  சக்களத்தி  வந்தவுடன்  அவர் காட்டும்  ஆவேசம்  ஆசம் 


 பால  சரவணன் , முனீஷ் காந்த் , ரெடின்  கிங்க்ஸ்லீ   ஆகிய  மூவரும் தங்களால் முடிந்தவரை  படத்தை தூக்கி  நிறுத்த  உதவி   இருக்கிறார்கள் . சக்களத்தி ஆக வரும் சுபத்ரா  ஆஹா  நடிப்பு . பக்கத்து  வீட்டு  ஆண்ட்டியாக   உளவு  பார்க்கும் ரமாவின்  நடிப்பு  அருமை 


 இவர்கள்  போக வி டி வி கணேஷ் . லொள்ளு  சபா  சுவாமி நாதன்  ஆகியோர் பங்களிப்பும்  ஓக்கே  ரகம் 


ஒளிப்பதிவு  சத்ய திலகம் ஓக்கே  ரகம் . இசை  அருள்  ராஜ் . பாடல்கள்   சுமார்  ரகம் ., பின்னணி  இசை   சராசரி   தரம் எடிட்டிங்க்  சூர்ய  குமர குரு . 135  நிமிடங்கள்  டைம்  டியூரேஷன் . முதல்  பாதியில்  காமெடியாகப்போனாலும் பின் பாதியில்   திரைக்கதை  போதாமையால் தடுமாறுகிறது . பாலாஜி ஜெயராமனின்  வசனங்கள்  வார்த்தை  விளையாட்டு   ஜாலங்கள் 


 திரைக்கதை  அமைத்து  இயக்கி இருப்பவர்  இளங்கோ  ராம் 


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு   அடல்ட்  காமெடி   டிராமா   கதையில்  முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ ,  நெளிய வைக்கும் வசனங்களோ  இல்லாமல்  முடிந்தவரை  நாகரீகமா திரைக்கதை ,   காட்சிகளை  வடிவமைத்த  விதம் 


2  கிரேசி  மோகன்  டைப்  வார்த்தை  ஜாலங்கள் . வார்த்தை  விளையாட்டுக்காமெடிகள்  ஒர்க் அவுட் ஆன விதம் 


3   நடித்தவர்கள்  அனைவருமே  முடிந்தவரை  காமெடியை புல் ஆஃப் பண்ணிக்கொண்டு போன விதம் 


4   நாயகனின்  முதல்  மகன்  நடிப்பு    அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   செவிட்டு  மிஷின் எங்கே? 


 வீட்டுலயே வெச்சுட்டு வந்துட்டேன்


 காதையும்  வீட்டுலயே வெச்சுட்டு வந்து இருக்கலாமில்ல ? 


2   என் புருசன்  செத்துட்டாரு  நீ  என்னடான்னா? வெட்டிக்கவா? கட்டிக்கவா? என பெசிட்டு இருக்கே ?


3   ஊர்ல தலை நிமிர்ந்து   வாழ்ந்த  மனுசன் அவரு \\\


 தலை மட்டும் நிமிர்ந்து இருந்தா பிரச்சனை இல்லை 


4    செத்தா   உன்  அப்பான் மாதிரி  சாகனும் . மாஸ்  சாவு 


5   சித்தி  , அப்பா இறந்ததும்  அம்மாவுக்கு  வர வேண்டிய கவலை எல்லாம் உனக்கு ஏன் வருது ?  


 அது  வந்து.. நானும்  அம்மா மாதிரி  முறை  தானே? அதான் 


6  ஸ்கூலில் எட்டாவது  படிக்கும்போது சயின்ஸ்  டீச்சருக்கே லவ்  லெட்டர்  கொடுத்தவன் இப்போ ஸ்கூல் ஹெச்  எம் , இது எவ்ளோ பெரிய கேவலம் ? 


7    MALE ( மேல் ) டாக்டர்  யாரும் இல்லையா? 


 இவருக்கும்  மேலயா? 


8   டாக்டர் .. மேலே  போய்ட்டார்


 நான்  தான்  கீழே இருக்கேனே? 


9   அது  வந்து   டாக்டர், அப்பாவோட பாயிண்ட்.. 


 உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டே  கொடுத்திருக்கக்கூடாது 


10  இழவு  வீட்டில் கூட வலது காலை எடுத்து வெச்சு உள்ளே வா  என  சொல்லும்  உன்  மனசு இருக்கே? 


11    மை  கிரஷ்... 


 கிரேஷ்? 


12   நீ தான்  குடிக்கவே  இல்லையே? எதனால உளறிட்டு இருக்கே? 


 இப்போ குடிக்கறேன் . அதுக்கு அட்வான்சா உளறுனேன் . ஓக்கே வா? 


13   உன்  அப்பாவை  அவ  ஏன் டார்லிங்க்னு கூப்பிடறா? 


  அப்போ அவளை  நான் ஆண்ட்டினு  கூப்பிட  முடியாதா? 


14   ஓ! வனிதாமணி ?


 எஸ்  நான் வனிதாமணி  தான் , ஆனா  என் இனிஷியல்  ஓ இல்லை 


15    படிச்சாதான்  டாக்டர்  ஆக முடியுமா? எம் ஜி ஆர் எல்லாம்  வாத்தியார்  ஆகலையா? 


16   இவ  என்  பால்ய  காதலி \\

 ஓ பாலியல்  காதலியா? 


17    அப்பா  ,  மேலே  போய்ட்டாரு\


எதுக்கு  போனாரு ? நான் இங்கே  கீழே தானே  இருக்கேன் 


18  அப்பா  ,  மேல  போய்ட்டாரு\


 ஏப்ரல்க்கு  அப்புறம்  வருமே  அந்த மே ல யா? 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்குப்   என்ன  ஆனது ?  என்பதை  ஒருவரிடம் ஒருவர் விஅக்கும்போது  அவர் காட்டும் ரீ ஆக்சன் நல்ல காமெடி   ஆனால்  அதுவே  தொடர்ந்து   7  வெவ்வேறு  கேரக்டர்கள்  கேட்பது  , அதே  ரீ ஆக்சன்  போர் 


2   பிணத்தை  வைத்து  தடுமாறும்  முதல்  பாதி  திரைக்கதை  காமெடி  ஓக்கே  , ஆனால்  பின் பாதியில்  கதையை  நகர்த்த  தடுமாறி  இருக்கிறார்கள் 


3  இந்தக்கதை  ஒரு 45  நிமிடங்களில்  ஷார்ப்பாக  முடிக்க  வேண்டிய  கதைதான்  . ஆனால்    இரண்டு  மணி  நேரத்துக்கு  மேல் இழுக்கும் அளவுக்கு  சரக்கு இல்லை 


4  காமேடிக்காக  நாயகனுக்கு நிகழ்ந்த  சம்பவம் சொல்லப்பட்டாலும்  அறிவியல் ரீதியாக் அப்படி நடக்க வாய்ப்பில்லை 


5     நாயகனுக்கு  ஒரு  சின்ன  வீடு இருந்தது  , ரெகுலராக  விசிட்   அடிப்பது  ஒரு  கிராமத்தில்  யாருக்கும்  தெரியாமல்  நடப்பது  சாத்தியமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   கிளாமர்  காட்சிகள்  இல்லை ,  விரசமான  வசனங்கள் இல்லை , ஆனால்  கதைக்கருவுக்காக  ஏ  சர்ட்டிஃபிகெட் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -   அனைவரும்  ரசிக்கும்  வகையில்  முதல்  பாதி  அடல்ட்  காமெடி ,  சுமாரான  பின்  பாதி .  விகடன்  மார்க் 41  . ரேட்டிங்  2.5 / 5 

0 comments: