இது குழந்தைகளுக்கான படம் .அனிமேஷன் படம் . பெரியவர்களும் பார்க்கலாம் . மன அழுத்தம் மன பதட் டம் குறைய அல்லது நீங்க குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் அல்லது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்களைப்பார்த்து மனம் மகிழ வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்
த கர்ஸ் ஆப் த வேர் ரேபிட் (2005) பட த்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் அதே யூனிட் , அதே கதாபாத்த்திரங்களுடன் களம் இறங்கி இருக்கு . ஷங்கர் இயக்கிய எந்திரன் படமே பாரீன் படமான ஐ ரோபோட் படத்தின் தழுவல், தான் .,,அந்தக்கதையை ,நினைவுபடுத்துகிறது . ஆனால் செம ஜாலியான படம், ,தமிழ் டப்பிங்கில் இருக்கிறது .தமிழ் டப்பிங்கில் இருக்கிறது .படம் ஓடும் நேரம் 79 நிமிடங்கள் மட்டுமே என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ,, நாயகி இருவரும் தம்பதி . சகிதமாக ஒரு வீட்டில் வசிக்கிறார்கள் . நாயகன் பெரிய அறிவாளி . புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கண்டு பிடிக்கிறார் .தோட்ட வேலை செய்ய ஒரு ரோபோ வை உருவாக்குகிறார் . அது பிரமாதமாக வேலை செய்கிறது . அக்கம் ,பக்கம் இருப்பவர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அதை வாடகைக்கு எடுத்து தங்கள் வேலைகளை முடிக்க ஆசைப்படுகிறார்கள் . இதனால் நாயகன் தான் உருவாக்கிய ரோபோ போலவே பல ரோபோக்களை உருவாக்க முடிவு
செய்கிறார்
வில்லன் ஒரு கொள்ளைக்காரன் . அபூர்வமான வைரம் ஒன்றைக்கொள்ளை அடிக்க முயலும்போது நாயகனிடம் மாட்டிக்கொள்கிறான் , நாயகன் வில்லனை போலீசில் பிடித்துக்கொடுக்கிறான் . ஜெயிலு க்குப்போன வில்லன் நாயகனைப்பழி வாங்க நினைக்கிறான் .ஜெயிலில் இருந்தபடியே நாயகனின் ரோபோவை இயக்கி தீய ரோபோவாக மாற்றுகிறான்
வில்லனின் ஆணைப்படி கெட்ட ரோபோ கண்டபடி வேலை செய்து குட்டையைக்குழப்புகிறது . அண்டை வீட்டார் அளித்த புகாரின்படி நாயகனை போலீஸ் கைது செய்கிறது . நாயகி இந்த சிக்கலில் இருந்து நாயகனை எப்படி காப்பாற்றுகிறாள் ? வில்லனை எப்படி மாட்ட வைக்கிறாள் ? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ,, நாயகி ,வில்லன் , ரோபோ , போலீஸ் ஆபீசர் , அவரது அஸிஸ்டெண்ட் என ஆறே ஆறு முக்கியக்கேரக்டர்கள் . அனைத்தும் அனிமேஷன் கேரக்டர்கள் தான் .பார்க்கக்காமெடியாக இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 ரோபோ செய்யும் அதிவேக வேலைகள் அலாவுதீன் பூதத்தை நினைவுபடுத்துகிறது . குழந்தைங்களுக்குக்கொண்டாட்டமான கேரக்ட்டர்
2 மனைவியாக வரும் கேரக்ட்டர் ஒரு டயலாக் கூட பேசவில்லை . பெண்கள் அமைதியானவர்கள் என்பதை நம்ப மனம் மறுக் கிறது . ஆனால் நாயகி செய்யும் சாகசங்கள் அபாரம்
3 ஓப்பனிங் சீனில் நாயகன் எப்படி தயார் ஆகிறான் ? என்பதை காமெடியாக விளக்கிய விதம் அருமை
4 வில்லனின் கேரக்ட்டர் டிசைன் அருமை .எதற்கும் அலட்டிக்கொள்ளாத பாங்கு
5 போலீஸ் ஆபீசர் , அவரது அஸிஸ்டெண்ட் என இருவரும் அடிக்கும் லூட்டிகள் கல கல
ரசித்த வசனங்கள்
1 கண்டுபிடிப்புகளை மலிவாக செய்து விட முடியாது
2 எந்த வேலையும் சின்னதல்ல
3 நமக்கு என்ன தேவை என்பதை நம்மை விட இந்த ரோபோ நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கு
4 உங்க பன்னிக்குட்டியை யாரோ கிள்ளீட்டாங்களா? ஓ , தண்ணித்தொட்டியை தள்ளி விட்டுட் டாங்களா?
5 அன் - இன் பார்ம்டு போலீஸ் ஆபீசரின் சேவை இந்த நாட்டுக்குத்தேவை
ஐயோ ராமா , அது யூனிபார்ம்டு போலீஸ் ஆபீசரின் சேவை இந்த நாட்டுக்குத்தேவை என வரணும்
6 நைட் தூங்கும் முன் இப்பப் பாதில விட் டதை அதாவது தூக்கத்தை இப்போ முடிச்சு டேலி பண்ணிட் டேன்
7 அந்தப் படகு என் படகு போலவே அழகா இருக்கில்ல?
சுத்தம் , உங்க படகைத்தாங்க வில்லன் அபேஸ் பண்ணிக்கொண்டு போறான்
8 தேவை தான் எல்லாக்கண்டுபிடிப்புகளுக்கும் மாமியார்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
சுட்டி டி வி பார்க்கும்போது , கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஜாலியாகப்பார்த்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் . ரேட்டிங் 3 / 5
Wallace & Gromit: Vengeance Most Fowl | |
---|---|
![]() Official Netflix release poster | |
Directed by |
|
Screenplay by | Mark Burton |
Story by |
|
Based on | Wallace & Gromit by Nick Park |
Produced by | Richard Beek |
Starring | |
Cinematography | Dave Alex Riddett |
Edited by | Dan Hembery |
Music by | Lorne Balfe Julian Nott |
Production company | |
Distributed by | |
Release dates |
|
Running time | 79 minutes[1] |
Country | United Kingdom |
Language | English |
0 comments:
Post a Comment