13/9/2024 அன்று திரை அரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்று கமர்ஷியலாக வெற்றி பெற்ற படம் இது 14/10/2023 ல் 67 வது லண்டன் பிலிம் பெஸ்டிவலில் திரை இடப்பட்டு பெரும் வரவேற்பைப்பெற்ற படம்
இது கரீனாகபூரின் சொந்தப்படம் .கேட் வின்ஸ்லெட் நடித்த மினி சீரிஸ் ஆன மேர் ஆப் ஈஸ்ட் டவுன் ல வரும் நாயகியின் கேரக்டர் டிசைன் போல இருந்ததால் கவரப்பட்டு நடிக்க சம்மதித்தேன் என்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு பிரிட்டிஷ் -இந்தியன் டிடெக்டிவ் ஆபிசர் . தனது மகன் ஒரு போதை ஆசாமியால் சுடப்பட் ட சம்பவத்தால் மனம் பாதிக்கப்பட்டு பக்கிங்க்ஹாம் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வருகிறார். . வந்த இடத்தில் அவரது மகன் வயதை ஒத்த ஒரு சிறுவன் மிஸ்ஸிங்க் கேஸ் டீல் செய்ய வேண்டிய கட் டாயம்
ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சிறுவன் போதை மருந்து சப்ளை செய்பவன் எனவும் அப்படி டீலிங்க் நடக்கும்போது உருவான தகராறில் ஒரு இளைஞன் ஏரியின் தண்ணீரில் மூழ்கடித்துக்கொலை செய்து விட் டான் எனவும் கொலைகாரனின் நண்பன் சாட் சி சொல்கிறான்
படம் ஆரம்பித்த 20 வது நிமிட த்திலேயே கேஸ் க்ளோஸ் . ஆனால் நாயகிக்கு ஒரு டவுட் வருகிறது . சக போலீஸ் ஆபீசர் அந்தக்கேஸை முடிப்பதில் காட்டும் அவசரம் . கொலை செய்யப்பட் ட சிறுவனின் அப்பாவுக்கு ஒரு கள்ளக்காதல் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்கள் நாயகிக்கு உறுத்துகிறது
வேறு ஒரு கோணத்தில் கேசை மீண்டும் விசாரிக்க துப்பு துலங்குகிறது .அந்த இன்வெஸ்டிகேஷன் போர்சன் தான் மொத்தப்படமும்
நாயகி ஆக கரீனா கபூர் கான் ஒரு பிரிட்டிஷ் -இந்தியன் டிடெக்டிவ் ஆபிசர் எப்படி இருப்பாரோ அதே தோரணை , உடல் மொழி , ஆடை வடிவமைப்பு அனைத்திலும் கவனம் செலுத்தி அந்த கேரக்ட்டருக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 போதை மருந்துக்கடத்தல் , இரண்டு வெவ்வேறு கள்ளக்காதல் கதைகள் , ஒரு போலீஸ் ஆபீசரின் துரோகம் என படத்தில் நான்கு ட்வீஸ்ட்கள் இருக்கின்றன .தரம்
2 ஒளிப்பதிவு , காஸ்ட்யூம் டிசைன் இரண்டும் பிரமாதம் . ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரம்
ரசித்த வசனங்கள்
1 ஐ ஹேட் பேப்பர் ஒர்க்ஸ்
நானும் தான் .இந்த உலகத்துலயே ரொம்ப போராண, கஷ்டமான விஷயம் பேப்பர் ஒர்க்ஸ் தான்
2 குழந்தையை இழப்பதை விட பெரிய சோகம் எதுவும் இல்லை
3 இந்த மிஸ்ஸிங்க் கேஸை எடுக்கமாட்டேன் என நீங்க தான் சொன்னீங்க .இப்போ இந்தக்கேஸை முடிக்காம விட மாட்டேன் என நீங்க தான் சொல்றீங்க
4 அப்பா , நான் ஒன்னும் சின்னக்குழந்தை கிடையாது . சிச்சுவேஷனை ஹேண்டில் பண்ணத்தெரியும்
எல்லாக்குழந்தைகளும் தனக்கு மெச்சூரிட்டி இருக்குன்னு தான் சொல்லும் . ஆனா ஆள் வளர்ந்த பின் குழந்தைத்தனமா நடந்துக்குவாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மொத்தபபடமும் 90 நிமிடங்கள் ஓடுகிறது எனில் நாயகியின் பர்சனல் லாஸ் , அவரது மகனின் நினைவுகள் , அப்பா வந்து சமாதானப்படுத்துவது இவை எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை .அரை மணி நேரம் விழுங்கி விடுகிறது
2 போதை மருந்து உபயோகிக்கும் காட் சிகள் இவ்வளவு விபரமாகக்காட்ட வேண்டுமா?
3 தனது மனைவியை பலாத்காரம் செய்ய முயலும் நபரை ஒரு ஆள் அடித்தே கொல்வது சரி , ஆனால் அவன் எப்படி பெட் ரூமுக்குள் வந்தான் என்ற சந்தேகம் எழவில்லையே? எதனால் ?
4 கேஸ் விசாரணையில் இருக்கு . போலீஸ் நம்மைக்கண்காணிக்கிறது என்பது தெரிந்தும் அவர் அசால்ட் ஆக தனது கள்ளக்காதலியை பப்ளிக்கா சந்தித்து மாட்டிக்கொள்வாரா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான யூகிக்கமுடியாத திருப்பங்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர் படம் இது .பார்க்கலாம். ரேட்டிங்க் 2.75 / 5
The Buckingham Murders | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Hansal Mehta |
Screenplay by |
|
Story by | Aseem Arrora |
Produced by | |
Starring |
|
Cinematography | Emma Dalesman |
Edited by | Amitesh Mukherjee |
Music by | Score: Ketan Sodha Night Song Records Songs: Bally Sagoo Payal Dev Karan Kulkarni |
Production companies |
|
Distributed by | Pen Marudhar Entertainment |
Release dates |
|
Running time | 107 minutes[1] |
Country | India |
Languages | English Hindi |
Box office | est. ₹14.56 crore[2] |
0 comments:
Post a Comment