Sunday, February 09, 2025

THANARA (2024) - WHO ARE YOU - மலையாளம் - சினிமா விமர்சனம் ( கள்ளக்காதல் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

           

     கிரேசி மோகன் , எஸ்  வி சேகர்  போன்றவர்கள்  இயக்கிய நகைச்சுவை  நாடகங்கள்  பார்த்து  ரசித்தவர்கள் , காதலா காதலா,  நாம் இருவர் நமக்கு இருவர் , உதவிக்கு வரலாமா? போன்ற ஆள் மாறாட்டக்கதை உள்ள படங்களை  ரசித்தவர்கள் மட்டும்  இப்படத்தை ரசிக்க முடியும் . இதில்  பெரிய  கதை எல்லாம்  கிடையாது . ஒரே  ஒரு பங்களா . அதில் 3  செட் ஜோடிகள் .படம்  முழுக்க ஒரே லொக்கேஷன் .கண்ணியமான  நகைச்சுவை ,விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம் . நான்  இதை மிகவும் ரசித்தேன் .சிலர் இது எல்லாம்  ஒரு கதையா ? என அங்கலாய்த்தனர்          

23/8/24  அன்று   திரை அரங்குகளில்  வெளியான   இப்படம்  இப்போது அமேசான்  பிரைம்   ஓடி டி  யில் காணக்கிடைக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்  ஒரு மிடில் கிளாஸ்  திருடன் .மனைவி நிறை மாத கர்ப்பிணி .ஹாஸ்பிடல்  செலவுக்கு  சில லட்சங்கள்  பணம்  தேவைப்படுவதால்  அதைத்திருட  ஆளும்  கட்சி எம் எல் ஏ  வின்   கெஸ்ட்  ஹவுசில்  திருட முடிவு   செய்கிறான் . ஆபீசுக்குப் போகும்போது  சொல்லிட்டுப்போவது போல " நான்  திருடப்போய்ட்டு வர்றேன்"   என  சம்சாரத்திடம்   சொல்லிட்டுக்கிளம்புகிறான் .சம்சாரமும் பார்த்து பத்திரமா திருடிட்டு வாங்க என அனுப்புகிறாள் 


வில்லன் ஒரு எம் எல்  ஏ . ஜொள்  பார்ட்டி . 8  லட்ச ரூபாய்  சம்பளம் பேசி  ஒரே  ஒரு இரவு மட்டும்  ட்யூட்டி பார்க்க பிரபலமான  பாடகி  கம் டான்சர்  ஆன ஒரு பிரபலப்பெண்ணை   தன  கெஸ்ட்   ஹவுஸுக்கு அழைத்து   வருகிறான் 


திருட   வந்த   நாயகன்  டியூட்டியை முடித்து விட்டுக்கிளம்புகையில்  வில்லன்  அங்கே  வந்து  விடுகிறான் . நாயகன் மாட்டிக்கொள்கிறான் . அந்த சமயத்தில் காலிங்க் பெல் அடிக்கிறது . வில்லனின் மனைவி தான்  வந்திருக்கிறாள் . நிலைமையை சமாளிக்க வில்லன் நாயகனிடம்  நீ  இந்தப்பெண்ணின் கணவனாக நடி  என வேண்டிக்கேட்டுக்கொள்கிறான் 


வில்லனின்  மனைவிக்கு  இவர்கள் மீது சந்தேகம் . அவர்களைக்குறுக்கு  விசாரணை செய்கிறாள் . அந்த சமயத்தில்  வில்லனின் மனைவியின்  கள்ளக்காதலன்  போன்  செய்கிறான் .  கெஸ்ட்  ஹவுஸுக்கு    வருவதாக சொல்கிறான் .வில்லனின்  செட்டப்  கள்ளக்காதலியின் கணவன்  தான் வில்லனின் மனைவியின்  கள்ளக்காதலன்


இருக்கிற களேபரங்கள்  பத்தாது என   நாயகனின்  மனைவி   நாயகனைப்பார்க்க அங்கே  வருகிறாள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக விஷ்ணு உன்னி கிருஷ்ணன்  கலக்கலாக நடித்திருக்கிறார் . இப்படி ஒரு அப்பாவியா? என வியக்க வைக்கிறார் . அவரது   உடல்மொழி , திருட்டு முழி எல்லாம்   ஆர் பாண்டிய ராஜனை நினைவுபடுத்துகிறது 


வில்லன் ஆக ஷைன் டாம் சாக்கோ பிரமாதம் .பேரு தான்  வில்லன் .பண்றது பூராக்காமெடி தான் .அவரது செட்டப்  கள்ளக்காதலி ஆக தீப்தி  சதி  கிளாமராக   வந்து  போகிறார் 


நாயகனின்   மனைவி ஆக , வில்லனின்  மனைவி ஆக ,  வரும்  சாந்தினி   ஸ்னேகா   பாபு   இருவருமே  பாத்திரத்தை உணர்ந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்கள் . வில்லனின்  மனைவியின்  கள்ளக்காதலன் ஆக   வரும் அஜூ  வர்கீஸ்  போலீஸ்  ஆபீசர் ஆக  வந்தாலும்  காமெடியில்  பின்னி   விடடார் 


திரைக்கதை யை  ரபி  எழுத  ஹரிதாஸ் இயக்கி இருக்கிறார் .விஷ்ணு   நாராயணன் தான் ஒளிப்பதிவு . ஒரே பங்களாவில் தான் முழுப்படமும் என்பதால் சவாலான வேலை . சாஜனின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது .கோபி சுந்தரின்  இசையில்  ஒரு கிளப் டான்ஸ்  பாட்டு   ஹிட் . பி ஜிஎம்  ஓகே ரகம் 

சபாஷ்  டைரக்டர்


1  கோடிக்கணக்கில்  பீரோவில்   பணம்   இருக்க   நாயகன்  தனக்கு தேவையான  பணத்தை மட்டும்   எடுத்துக்கொள்வது .திருட   வந்த  பங்களாவில்  என்னென்னெ  இருக்கு என   மனைவிக்கு போன் போட்டு லைவ் ரிலே  சொல்வது செமக் காமெடி 


2   தன்  செட்டப்பின்  கணவன்  ஆக  நடிக்கச்சொல்லி   வில்லன் கேட்டுக்கொண்டதும்  இதுதான் சாக்கு என  நாயகன் அந்தப்பெண்ணைத்தொடுவது ,கிள்ளுவது என முன்னேற கண்டிக்கும்   வில்லனிடம்  அப்போதாங்க தத்ரூபமாக இருக்கும் என சமாளிப்பது 


3  ஆனந்த  விகடனில்  மதன்  ஜோக்சில்  வரும் சிரிப்புத்திருடன்  சிங்கார வேலு  போர்சனில்  இருந்து   உருவி  பொருத்தமாக    திரைக்கதையில்  புகுத்திய  விதம் 


4  கேட்பதற்கு  விரசமாக தோன்றும்  கதையில்  ஒரு  சீனில்  கூட முகம் சுளிக்க வைக்காமல் கண்ணியமான காமெடி தந்த விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 அங்க்கிளும் , ஆண்ட்டியும்   பிரெஞ்ச்  கிஸ்   தந்துட்டு இருக்காங்க 



 இந்த வாண்டுகளுக்கு  எப்படி  இதெல்லாம் தெரியுது ?


 ஸ்கூலில்   சொல்லித்தர்றாங்க 


 இதை எல்லாமா? சொல்லித்தரனும் ? 


2   இங்கே   நெட்   ஒர்க்  இ ல்லை


 ஐ ஜாலி , நீ  , நான் இருவர் மட்டும் தான் 


3  அத்தான் .நானும்   நீங்க திருட போன வீட்டுக்கு வரவா?  என்னென்ன  திருடலாம்னு செலக்ட்  பண்ண ? 


4  எனக்கு பயமா  இருக்குங்க 


ஒத்தையா  இருந்தாதான் பயபபடனும் , நாம ரெண்டு பேரும்     ஜோடியாதானே  இருக்கோம்?  என்ன பயம் ?


5  ரிஸ்க்   எடுக்க வேண்டாம் .புருஷன்  பக்கத்தில் தான் இருக்கான் 


 எனக்கு ரிஸ்க் எடுப்பது   ரொம்பப்பிடிக்கும் 


6  டியர் , நான்  அவ்ளோ  குண்டாவா  இருக்கேன் ? என்னைக்கட்டிப்பிடிக்க  உங்க 2 கைகளை அவ்ளோ  விசாலமா ஓப்பன் பண்ணிட்டு வர்றீங்க ? 


பரந்த மனசு, விசாலமான மனசு இருக்கறவங்க தான் குண்டா இருப்பாங்களாம் 


7   இது   வீடா?   லாட்ஜா?  அவன் பொண்டாட்டியை இவன் வெச்சிருக்கான், இவன் பொண்டாட்டியை அவன் வெச்சிருக்கான்


8  ஒன்னும்   பயபபடாதீங்க  , அவன் ஒன்னும் நம்மை மோசமான போஸில் பார்க்கலையே? 


9  இந்தா  சாக்லெட் 


 இதுக்கெல்லாம் நான் மயங்க மாடடேன் 


 இது மயக்க சாக்லேட் இல்லை , சாதா சாக்லேட்


10   பெண் என்பவள்   விற்பனைப்பொருள் அல்ல. வியாபார ரீதியில்   பெண்ணை   உபயோகிக்கக்கூடாது 


11  டேய் , எதுக்காக என் ஆளை க்கட்டிப்பிடிக்கறே?


 நீங்கதானே  நல்ல  தம்பதியா நடிங்கன்னீ ங்க ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பொதுவாக  திருமணம் ஆன பெண்கள்   அவரவர்   புருஷனை  வேலைக்காரனாக , எடுபுடியாக நடத்துவது சகஜம் தான் . ஆனால்  ஒரு எம் எல்  ஏ   வை   அவரது காதலி  அவ்ளோ  எடுபுடியாகவா  லக்கேஜ்   எல்லாம் தூக்க  வைப்பாள் ? 


2   ஒரு போலீஸ்  ஆபீசர்   தன கள்ளக்காதலியைப்பார்க்க   தனியாக செல்வாரா? கான்ஸடபிள்கள்  கூட செல்வாரா?   அவங்க  மேலிடத்தில் போட்டுக்கொடுக்க மாடடார்களா ?




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


 கண்ட் டென்ட்  மேலோட்டமாகப்பார்க்கும்போது  ஒரு மார்க்கமாக இருந்தாலும் கவலையை மறந்து சிரிக்க  கேரண்டி  உள்ள  படம் .ரேட்டிங்  3 / 5 

0 comments: