19/4/2024 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம் , ஆஹா தமிழ் ஆகிய ஓ டி டி தளங்களில் காணக்கிடைக்கிறது . தமிழ் டப்பிங்கும் உண்டு . இது ஒரு லோ பட்ஜெட் படம் . நல்ல சோசியல் மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் . ஒன்றரைமணி நேரம் தான் டைம் டியூரேஷன் என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓப்பனிங்க் ஷாட்லயே நாயகன் காரில் ஒதுக்குப்புறமான ஏரியாவுக்கு வந்து தான் கொண்டு வந்த சூட்கேஸ் /பேக்கில் இருந்த தன மனைவியின் பிணத்தை பெட்ரொல் ஊற்றி எரிக்கிறான் . அதே சமயம் போலீஸ் ஜீப்பில் வந்து அவனைத்தொக்காய்த்தூக்கி செல்கிறது
நாயகன் குடி இருக்கும் அதே அபார்ட்மென்ட்டில் இன்னொரு ஆள் தற்கொலை முயற்சி செய்து பிழைத்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறான்
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு ? நாயகன் தன மனைவியை அதிகம் நேசித்தவன் .தற்கொலை முயற்சி செய்து பிழைத்த ஆளுக்கும் , நாயகனின் மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை .
இந்தக்கேஸை விசாரிக்கும் போலீசுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் கிடைக்கின்றன .அவை தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக சத்யம் ராஜேஷ் அடக்கி வாசித்து இருக்கிறார் .சோகம் கலந்த அவர் முகத்தைப்பார்த்த போதே இவர் கொலை செய்திருக்க மாடடார் என்பது தெரிந்து விடுகிறது . பின் எதனால் மனைவியின் பிணத்தை எரிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது திரைக்கதையின் பலம்
.தற்கொலை முயற்சி செய்து பிழைத்த ஆளாக பரத் காந்த் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்
இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் ஆக எஸ்தர் நொரானா மிடுக்கான உடல் மொழி , அருமையான ஆடை வடிவமைப்பு என கம்பீரம் காட்டி இருக்கிறார்
சாந்தனா , மெகா சவுத்ரி இருவருக்கும் சம அளவு வாய்ப்பு . நல்ல நடிப்பு . ஆடுகளம் நரேன் வந்து போகிறார்
சாகித்ய சாகர் தான் இசை .பாடல் கள் இரண்டும் சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை
விஜய முக்தாவரப்பு தான் எடிட்டிங்க் ஒன்றரைமணி நேரம் தான் டைம் டியூரேஷன்.ஜெமின் ஜாம் தான் ஒளிப்பதிவு . இரு நாயகிகளை க்ளோஸப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்
சீனிவாசன் வர்மாவின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் யுகாந்தர்
சபாஷ் டைரக்டர்
1 நேரடியாகக்கதை சொன்னால் 20 நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய சாதாக்கத்தைதான் . ஆனால் நான் லீனியர் கட்டில் மாற்றி மாற்றி இரு கதைகளையும் துண்டு துண்டாகக்காட்டி சொன்ன விதம் அருமை
2 ஒரு சிறுகதையின் முதல் வரி வாசகனை கதைக்குள் இழுத்து வர வேண்டும் என்பார் மேஜிக் ரைட்டர் அமரர் சுஜாதா . படத்தின் ஓப்பனிங் சீன் அட்டகாசம்
3 குடிகாரன் கூட சகவாசம் வெச்சுக்காதே . போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆனவன் எப்போதும் அபாயகரமானவன் என்பதுதான் கதையின் நீதி . அதை சொன்ன விதம் குட்
ரசித்த வசனங்கள்
1 நமக்குப்பிடிச்சவங்களோட சந்தோஷத்தை விட வேற என்ன பெருசா வேணும் நமக்கு ?
2 அவன் உன் மேல வைத்திருப்பது இஷ்டம் ,உன் குடும்பம் உன் மேல வைத்திருப்பது அன்பு இஷ்டத்துக்காக அன்பை பலி கடுத்துடாத
3 ராமனே சீதையை சந்தேகப்பட்டா ன் , ஆனா அதுக்கான தண்டனையை அனுபவித்தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் காரின் அருகிலேயே பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார் பெட்ரோல் டே.ங்க்கில் பறறா தா? அது ஆபத்தாச்சே ?
2 எரிந்த டெட் பாடியின் சாம்பலை எடுக்காமல் போலீஸ் போகுதே? டி என் ஏ எப்படி மேட்ச் பண்ணுவாங்க?
3 ஒரு சீனில் நாயகியின் செல்போனைப்பிடுங்கி பக்கத்து வீட்டு லேடி போன் செய்கிறார் . லாக் பேட்டர்ன் எப்படித்தெரியும்? அப்போதுதான் அறிமுகம்
4 நாயகனின் அப்பார்ட்மெண்ட்டில் இருவர் தற்கொலை செய்ய முயற்சித்து ஒருவர் இறந்து ஒருவர் பிழைக்கிறார் . ஆனால் போலீஸ் ஆரம்பித்தில் இதை சொல்லவே இல்லை
5 ஒரு குடிகாரன் அவனது கே ங்கில் இருக்கும் தோழிகள் இருவரை எதுவும் செய்யாமல் அறிமுகம் இல்லாத இருவரை பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான க்ரைம் திரில்லர் தான் . விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங் 2 /5
Tenant | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Y. Yugandhar |
Screenplay by | Y. Yugandhar |
Story by | YS Srinivasa Varma |
Produced by | Mogulla Chandrashekhar Reddy |
Starring | Satyam Rajesh Megha Chowdhury |
Cinematography | Jemin Jom Ayyaneth |
Edited by | Vijay Mukthavarapu |
Music by | Sahityya Sagar |
Production company | Mahateja Creations |
Release date |
|
Running time | 96 minutes |
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment