Monday, February 24, 2025

PAINKILI (2025) - பைங்கிளி - மலையாளம் சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

       


  14/2/2025  ல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம்  மீடியம் ஆகத்தான் ஹிட்  ஆகி இருக்கிறது .ஓடி டி யில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை                  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு மைனர் . இன்னும் 18 வயது ஆகவில்லை . ஆனால் அவளது பெற்றோர் அவளைத்திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .இதனால் கடுப்பான நாயகி  வீடடை விட்டு ஓடி விடத்தீர்மானி த்து பல முறை முயற்சித்தும் அப்பாவிடம் மாட்டி பே க் டு த பவுலியன்  என வீட்டுக்கே வருகிறார் 



நாயகன்  சொந்தமாகத்தொழில் செய்பவர் .அம்மா,அப்பா ,நண்பர்கள்  ஏன அவர் பாட்டுக்கு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் .தொழில் சம்பந்தமாக ஒரு பொருள் வாங்க வெளியூருக்குப்போகிறார் . அங்கே  அவரது பைக்கை ஒருவன் திருடி விடுகிறான் . அவனைத்துரத்தப்போய் எதிர்பாராத விதமாக அவனைக்கொலை செய்து விடுகிறார் . கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மன நலம் சரி இல்லாதவர் போல நடித்து  ஒரு சர்ட்டிபிகேட் ரெடி செய்கிறார் . இந்த விஷயம்  நாயகன் உடைய .அம்மா,அப்பா ,நண்பர்கள் யாருக்கும் தெரியாது .நிஜமாகவே நாயகன் மன நலம் குன்றி இருக்கிறான் என ஊரில் சேதி பரவுகிறது 


 நாயகி   நாயகனைக்காதலிப்பது போல நடித்து  தன்  வீட்டில் இருந்து தப்பிக்க ஒரு டிராமா போடுகிறார் . இதற்குப்பின் என்ன ஆனது என்பதுதான்  மீதித்திரைக்கதை 



நாயகன்  ஆக  சஜின் பாபு கலக்கி இருக்கிறார் .அவரது உடல் மொழி பிரமாதம் தன்னையே சுற்றி  வரும் பெண்ணைக்கண்டுக்காமல் இருப்பது , வலிய வந்து தன்னைக்காதலிக்கும் நாயகியின் டிராமா புரியாமல் அவர் வலையில்  வீழ்வது , பைத்தியம் ஆக நடிப்பது  என  நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறார் 


நாயகி  ஆக அனஸ்வரா ராஜன் .இவரது இளமைக் குறும்புகள் ,சுட்டித்தனங்கள் எல்லாம் அட் டகாசம் பெரும்பாலான கேரளா நாயகிகள் கொழுக் மொழுக்  என இருக்க இவர் ஸ்லிம் பிட் ஆக இருப்பது கண்களைக்கவர்கிறது ( பின் குறிப்பு - கொழுக் மொழுக் நாயகிகளையம்  நாங்கள் ரசிப்போம் ) 


சந்து சலீம் குமார் ,ரோஷன் ஷாநவாஸ்  ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார்கள் 


பகத் பாசில்  நடித்த ஆவேசம்  படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் தான் இந்தப்படத்தின் கதை , திரைக்கதை , நடிகர் ஸ்ரீ ஜித் பாபு தான் இயக்கம் 


அர்ஜுனும் சேதுவின் ஒளிப்பதிவு  கலக்கல் ரகம் ,,, ஜெஸ்ட்டின் வர்கீசின் இசையில் இரு பாடல்கள்செம ஹிட் , பின்னணி இசை ஓகே ரகம் . எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் செய்து இருக்கலாம் .இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  அனஸ்வரா  ராஜன்  துள்ளலான  நடிப்பு ,நாயகன் சஜின் பாபு வின் அமரக்கள மான  பங்களிப்பு  இரண்டும் பெரிய பிளஸ் 


2 படம் முழுக்க எல்லாவற்றையும் காமெடியாக அணுகிய விதம் 


3   ஹார்ட் அட்டாக் என்னும்  பாடலை  மாறுபட்ட   கோணத்தில் படமாக்கிய விதம் 


4  கெஸ்ட் ரோலில்   இயக்குனரின் பங்களிப்பு , நடிப்பு அருமை 



  ரசித்த  வசனங்கள் 



1   சும்மா  அவனைப்பார்த்து சிரி ,போதும் கூகுள் பே  பண்ணிடுவான் ,எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரிதான் 


2 பாஸ்  , உங்களை மாதிரி  ஒரு முட்டாளை  ஒரு  பொண்ணு   எப்படி லவ் பண்ணும் ?  இன்சூரன்ஸ்  ஏஜன்ட்  ஆக இருக்கும் 


3  நானும்  ஒரு ரவுடி , நீயும்  ஒரு ரவுடி . ஒரு ரவுடியோட வாழ்க்கைல இன்னொரு ரவுடி புகுந்து தகராறு செய்யக்கூடாது 


4 ஜெயிலுக்குப்போவது டூர்  போற   மாதிரி  இல்லை .எல்லாரையும் கூட்டிட்டுப்போக , நீ மட்டும் போய்ட்டு வா 


5   லீகல் கன்சல் டெண்ட்  ஆக தான்  இப்ப இருக்கான்  , முதல்ல  ரவுடியா இருந்தான்


6   நீ   பைத்தியம்னு ஒத்துக்கிட் டா  பல   பிரச்சனைகள் தீரும் 



7  நான்   அவளைக்கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட் டென் 


 அதை  மலை மேல வந்துதான் சொல்வியா? அடிவாரத்துலயே சொல்லி இருக்கலாமில்ல? 


8 நிஜமா  என்னை லவ் பண்றியா?  வேற பொண்ணு கிடைக்காததால் என் கிட் டே  வர்றி யா? 


9 கண்ணின்  கருவிழி   கருப்புதான் .ஆனால் அது காணும் காட் சிகள் எல்லாம் கலர் புல் 


10  சாரி  மிஸ் , இந்த மிக்சியை ரெடி பண்ண முடியாது 


 சட்னி தந்தா போதும் . ஏழரை  மணிக்கு வேணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   முதல் பாதியில்பரபரப்பாகக்காட் டப்பட் ட   கொலை   வழக்கு   பின்  பாதியில்  அ ட்ரஸையே காணோம் 



2  நாயகி   பலரையும் தன்  லவ் டிராமாவில் மயக்குவது ஒரு கட்டத்தில் அவரது கேரக்ட்டரை சந்தேகப்பட வைக்கிறது 


3  படம் முழுக்க காமெடி இருக்க வேண்டும் என்பதற்காக சீரியஸ் ஆன சீன்களை எல்லாம் கோட் டை விட்டு விட் டார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - காமெடிப் படம் தான் , ஆனா எல்லாருக்கும் பிடிக்காது .ரேட் டிங் . 2.5 / 5 

0 comments: