Tuesday, February 25, 2025

DHOOM DHAAM (2025)- ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் (காமெடி ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

              



ஜெயம் ரவி +கங்கனா ரணவத் காம்போவில்  ஜீவாவின் இயக்கத்தில் வெளியான   தாம் தூம் (2008)  படத்தின் கதைக்கும் , இந்த   தூம் தாம்  படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .14/2/2025அன்று வெளியான இப் படம் நெட் பிளிக்ஸ்  ல தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது 

           


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு வெட்னரி  டாக்டர் .அவருக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட் ட  திருமணம்  நடக்கிறது . அன்று இரவு அவர்களுக்கு முதல் இரவு . எங்கே  கொண்டாட  விடறாங்க ? ரூம் கதவை ரெண்டு பேரு டொக் டொக்னு தட்றாங்க . யாருடா இந்த நேரத்துல என பார்த்தா அவங்க  நாயகனிடம் "சார்லி  எங்கே?" அப்டினு கேட்கறாங்க



சார்லி  யார்?  என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் .வேலியே பயிரை மேய்ந்த கதையா   ஒரு வில்லன் போலீஸ் ஆபீசர்  10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கிறார் ., அதை  நாயகனின் மாமா வீடியோ எடுத்துடறார் . அந்த வீடியோ ஆதாரத்தை  ஒரு பென்  டிரைவில்  பதிவு பண்ணி  நாயகனுக்கு தந்த மேரேஜ் கிப்ட் பேக்கில் போ ட்டுடறார் .அந்த பென்  டிரைவ் சார்லி கம்பெனி பென்  டிரைவ் . இரண்டு வெவ்வேறு கும்பல் அதைத்தேடுது . வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் கும்பல் , அவங்களைப்பிடிக்கக்களம் இறங்கி இருக்கும் சி ஐ டி கும்பல் . இந்த இரண்டு தரப்புமே நாயகன்  அண்ட் நாயகியைத்துரத்தறாங்க 


இதுல நாயகன் ஒரு அம்மாஞ்சி . அவருக்கு தெனாலி  கமல் மாதிரி  ஏகப்படட போபி யாக்கள் இருக்கு .உயரமான இடத்தைக்கண்டால் பயம் , அடைபட் ட இடத்தைக்கண்டால்  பயம்  என 12 டஜன் போபியாக்கள் இருக்கு . நாயகி ஒரு கன்  பைட் காஞ்ச்சனா . விஜயசாந்தி மாதிரி ஆக்சன் நாயகி . . இந்த இரண்டு கும்பலிடம் இருந்தும் நாயகி  நாயகனை எப்படிக்காப்பாற்றினார் என்பதுதான் மீதிக்கதை 


 நாயகி  ஆக     யாமி கவுதம்  அதகளப்படுத்தி இருக்கிறார் .தெனாவெட் டான  பேச்சு , ஆக்சன்  ஸீக்வன்ஸ்   என சிக்ஸர் அடிக்கிறார் நாயகன்ஆக  பிரதீப் காந்தி அடக்கி வாசித்து இருக்கிறார் .பயந்த சுபாவம் உள்ளவராக அவர் காட்டும் முக பாவனைகள்  கச்சிதம் 


ரிஷப சேத  இயக்கி இருக்கிறார் . எடிட்டிங்க்  செம ஷார்ப் .108 நிமிடங்கள் டைம் டியூரேசன் 

சபாஷ்  டைரக்டர்


1  நிச்சயதார்த்தத்தின்போது பெண்ணைப்பற்றி அவர் அப்பா , அம்மா சொல்லும்  தகவல்கள்  எல்லாம் பொண்ணு ரொம்ப சாத்வீகம் என்பது போல இருப்பதும் , திருமணத்துக்குப்பின்  எல்லாம் தலைகீழாக  இருப்பதும்  நிஜ வாழ்வில் அப்படித்தான் இருப்பதால் நம்மால் ஈசியாக கனெக்ட் ஆக்கிக்கொள்ள முடிகிறது 


2  நாயகன் கார்  ஓட்டத்தடுமாறும்போது  நாயகி  டிரைவிங்  சீட்டில் அமர்வதும் நான் கார்    ரேஸ்  எல்லாம்  கலந்திருக்கேன் என்பது    அடிபொழி  ஆக்சன் ஸீக்வன்சுக்கான  லீடு 


3   தன மனைவிக்கு ஒரு ஆபத்து என்றதும் நாயகன்  ஆக்சனில்  இறங்குவது அதைக்கண்டு நாயகி பெருமைப்படுவதும்   கச்சிதம் 



4 படம் முழுக்க  சே சிங்க் இருந்தாலும் கிடைத்த கேப்பில்  எல்லாம் காமெடி , ரொமான்ஸ் கலந்தது சிறப்பு 


5  நாய் கக்கா போய்  இரண்டு நாட்கள்  ஆகுது  என்னும் வசனம் பட ஓப்பனிங்கில்  வருகிறது . அது தான் படத்தின்  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்   என்பது   செம  ஐடியா 



  ரசித்த  வசனங்கள் 



1   பசங்களை  விட பொண்ணுங்க  எந்த அளவு   கம்மியா  பேசறாங்களோ அந்த அளவுக்கு அவங்களுக்குப்பாதுகாப்பு 


2  மேரேஜ் ஆகி பர்ஸ்ட்  நைட் இன்னும் முடியல , அதுக்குள்ளே    நீ , வா , போ என   மரியாதை  இல்லாம புருசனைப்பேசறே ?   


3  பொண்ணுங்க  தேவைக்குன்னு பொய் சொல்றதில்லை , வேற வழி இல்லாம தான் பொய் சொல்றோம் 


4 பேச்சிலர் பார்ட்டியைத்தான் பூஜைன்னு சொன்னியா? 


5  என்னைப்பழி வாங்கத்தான் இவ உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட் டா 


6  சரியான உறவு நல்ல தம்பதியை சேர்த்து வைக்கும் 


7  நான்  ஒரு வெட்னரி டாக் டர் . அதனால  வெஜிட் டேரியன் .நான்வெஜ் எப்படி சாப்பிட முடியும் ? ஒரு டாக்ட்டரால பேஷண்டை சாப்பிட முடியமா? 


8   ஏத்துக்கும்  குணத்தை ஏத்துக்கறேன்னு சொல்லு 


9  விலங்குகள் யாரையும் எடை போடாது .ஜட்ஜ் பண்ணாது 


10 நிறைய  அழகான  பொண்ணுங்களுக்கு நடுவில் என்னை நானே ரிஜெக்ட் செய்து கொள்வேன் 


11   எந்த அளவு உன் போபியாவை எதிர்கொள்கிறாயோ அந்த அளவு உன் பயம் குறையும் 


12  திஸ்  ஈ ஸ்  அவர்  எக்ஸ்போஷர் தெரபி 


13  பார்க்க  ஹல்க்  மாதிரி  இருக்கான், ஆனால் சில்க் மாதிரி  வேலை  பன்றான் 


14    நான்  உங்களை மேரேஜ்  பங்க்சன்ல பார்க்கலையே? 


 அவ ஷை டைப் . யார் கண்ணுக்கும் தட் டுப்பபட மாட் டா 


15 நான்   உங்க அப்பனுக்கே அப்பன் டா  இதுதான் கோடு  வோர்டு 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



காமெடிப் படத்தில்  எதுக்கு லாஜிக் பார்க்கணும், ஜாலியா சிரிப்போம் 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆக்சன் ,சேசிங்க் ,காமெடி  என படம் பூரா செம ஸ்பீடு ன்.பார்க்கலாம் .ரேட்டிங் 2.75 / 5 

0 comments: