3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 14/2/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் 10 நாட்களில் முதலீட்டைப்போல 3 மடங்கு லாபத்தை ஈட்டி இருக்கிறது .பெரிய ஹீரோ இல்லை . பிரம்மாண்டம் இல்லை .பில்டப் இல்லை .சாதாரண காமெடிக்கதைதான் 32 கோடி ரூபாய் வசூல் .ஜோ அண்ட் ஜோ (2022) ஜர்னி ஆப் லவ் 18+(2023) (டைட்டில் தான் 18+ படம் யூ படம் ) ஆகிய 2 வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர் அருண் டி ஜோஸ் அவர்களின் ஹாட்ரிக் ஹிட் இது .இன்னும் ஓடி டி யில் ரிலீஸ் ஆகவில்லை
நாயகன் மேத்யூ தாமஸ் தமிழில் லியோ வில் விஜயின் மகனாக நடித்தவர் . கும்ளாங்கி ங்கி நைட்ஸ் ,தண்ணீர் மத்தின் தினங்கள் ,ஜோ அண்ட் ஜோ (2022) ஆகிய படங்களில் நடித்தவர் .விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இதன் இசைக்கு இன்சார்ஜ் .அதில் மெலோடி சாங்க்ஸ் ஆக இசைத்தவர் இதில் அதிரடி இசை காட்டி இருக்கிறார் , படத்தின் பெரிய பலங்கள் காமெடி , திரைக்கதை , இசை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அண்ணனைக்காணவில்லை என நாயகனுக்கு நாயகனின் அண்ணனின் நண்பன் போன் பண்ணி சொல்கிறான் .உடனே நாயகன் அண்ணனின் நண்பனைப்பார்க்க செல்கிறான் .அண்ணனுக்கு ஒரு காதலி உண்டு அவளுடன் பிரேக்கப் ஆகி விட்டது. அவள் ஒரு பல் டாக்டர் . அவளைப்பார்த்தால் ஏதாவது விபரங்கள் கிடைக்கலாம் என நாயகன் பேஷண்ட் போல அங்கே செல்கிறான் .சில காமடிகளுக்குப்பின் அவளை சந்திக்கிறான் . அப்போதுதான் ஒரு உண்மை தெரிய வருகிறது .நாயகனின் அண்ணனுக்கு இன்னொரு காதலி இருக்கிறாள் . அவளுக்கு வேறு ஒரு ஆளுடன் திருமணம் நடக்க இருக்கிறது .அங்கே போய் கலாட்டா பண்ணத்தான் போய் இருக்கிறான்
இப்போது நாயகன் ,நாயகனின் அண்ணனின் நண்பன் , நாயகனின் அண்ணனின் முதல் காதலி அனைவரும் அந்தக்கல்யாண நிகழ்வுக்குப்ப்போகிறார்கள் அங்கே நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை
கதையின் ஒன்லைனைக்கேட்கும்போது ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும் திரைக்கதையில் சுவராஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
நாயகன் ஆக மேத்யூ தாமஸ்.காமெடியான உடல் மொழி , நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் . ரட்ஷகன் படத்தில் நாகார்ஜுனா நரம்புகள் கோபத்தில் புடைப்பதைப்போல இவருக்கு ஸ்மார்ட் வாட்சில் பி பி எகிறுவது கலக்கல் காமெடி .
நாயகனின் அண்ணனின் நண்பன் ஆக அர்ஜுன் அசோகன் யதார்த்தமான நடிப்பு .நாயகனின் அண்ணனாக ஷியாம் மோகன் அளவான நடிப்பு சங்கித் பிரதாப்குட் ஆக்டிங்க்
நாயகனின் அண்ணனின் முதல் காதலி ஆக மகிமா நம்பியார் படம் முழுக்க வருகிறார் அழகு . நாயகனின் அண்ணனின் இரண்டாவது காதலி ஆக பாரத் பூபனா அதிக வாய்ப்பில்லை .கல்யாணப்பெண் என்பதால் அழகாகத்தெரிகிறார்
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் துள்ளாட்டம் போட வைக்கின்றன . பின்னணி இசையும் அருமை அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவில் இரு நாயகிகளும் அழகு .கல்யாண கலாட்டாக்கள் அருமை . சமன் சாக்கோவின் எடிட்டிங்கில் படம் 150 நிமிடங்கள் ஓடுகின்றது
சபாஷ் டைரக்டர்
1 கே எஸ் ரவிக்குமாரின் புரியாத புதிர் படத்தில் ஒரு புதுமையைப்புகுத்தி இருப்பார் . ஒரு காட் சியின் முடிவு சீன அடுத்த காட் சியின் தொடக்க சீன ஆக இருக்கும் .உதாரணமாக முதல் காட் சியில் வில்லன் சிகரெட்டை லைட் டரால் தீப்பற்றவைபப்து போல சீன எனில் அடுத்த சீன நாயகி கேஸ் ஸ்டவ் பற்ற வைப்பாள் .அது போல இந்தப்படத்தில் ஒவ்வொரு சீனிலும் ஒரு புது கேரக்ட்டர் அறிமுகம் ஆகும் ..அந்த கேரக்ட்டர் இன்னொரு புது கேரக்டரை சந்திக்கும் .. இந்த ஐடியா பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
2 திருமணத்தை நிறுத்த வரவில்லை ,காதலி தன்னிடம் வாங்கிய கடனை வசூல் பண்ண வந்திருக்கிறேன் என சொல்லும் சீன காமெடி
3 திருமணப்பெண்ணின் அண்ணன் மஹிமா நம்பியாருடன் பம்மும் சீன்கள் காமெடி
4 செல்போனை ஹேக் செய்ய 30 நொடிகள் வில்லனின் போனை அபேஸ் செய்யவேண்டும் என்ற டாஸ்க்கை செயல்படுத்த நடத்தும் ஐடியா செம
5 ஓப்பனிங்கில் அந்த பல் டாகடர் காமெடி சீக்வன்ஸ் கல கல
ரசித்த வசனங்கள்
1 அவ என்னை மொத்தமா ஏமாத்திட்டா .எனக்கு பேனிக் அட் டாக் வரும் போல இருக்கு
டோன்ட் ஒர்ரி , பேனிக் அட் டாக் ல யாரும் சாகறதில்லை
2 மிஸ்ஸிங்க் கேஸ்ல 48 மணி நேரத்துல ஆள் கிடைக்கலைன்னா அபாயம்
3 இவரு போதை மருந்து யூஸ் பண்ணுவாரா ?
டிப்ரஷன்ல இருந்திருப்பான்
ஓஹோ , டிப்ரஷன்ல இருந்தா அப்படிப்பண்ணலாமா?
4 பார்டி லோக்கல் ஆளா இருக்கான் ?
என் கண்ணுக்கு டான் லீ மாதிரி தெரியறான்
5 என்ன போலீஸ் நீங்க ?கண்ணுர் ஸ்குவாடுல மம்முட்டி பண்ற மாதிரி பண்ணுவீங்கன்னு பார்த்தா..
6 நீ தான் ஹேக் பண்றதுல எக்ஸ்பர்ட் ஆச்சே ?இந்த நாய்களை ஹேக் பண்ணு பார்ப்போம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
காமெடிப்படத்தில் நோ லாஜிக் ஒன்லி மேஜிக்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான காமெடிப் படம் , அனைவரும் ரசிக்கலாம் . ரேட்டிங்க் 3 / 5
Bromance | |
---|---|
![]() Theatrical Release Poster | |
Directed by | Arun D. Jose |
Screenplay by | Arun D. Jose Raveesh Nath Thomas P. Sebastian |
Produced by | Ashiq Usman |
Starring | Mathew Thomas Arjun Ashokan Mahima Nambiar Sangeeth Prathap Shyam Mohan Kalabhavan Shajohn Bharath Bopanna |
Cinematography | Akhil George |
Edited by | Chaman Chakko |
Music by | Govind Vasantha |
Production company | |
Distributed by | Central Pictures |
Release date |
|
Running time | 150 minutes |
Country | India |
Language | Malayalam |
Budget | 3 cr |
Box office | 11 cr |
0 comments:
Post a Comment