7/2/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் கமர்ஷியல் ஆக மெகா ஹிட் ஆகவில்லை என்றாலும் விமர்சகர்களிடையே பாசிட்டிவான வரவேற்பைப்பெற்றுள்ளது .இன்னும் ஓ டி டி யில் வரவில்லை .ஒன்றே முக்கால் மணி நேரம் தான் ரன்னிங்க் டைம் என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் நம்ம ஊர் நக்கீரன் கோபால் மாதிரி இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட் ரிட்டையர் ஆன ஒரு சீனியர் கிரிமினல் லாயரைப்பேட்டி எடுக்கிறார் அந்தப்பேட்டியின் போது ஒரு அடையாளம் தெரியாத நபரால் அந்த லாயர் கொலை செய்யப்படுகிறார் நாயகனுக்கும் காயம் ஆகி இருக்கிறது சுய பாதுகாப்புக்காக லாயரைக்கொலை செய்த கொலையாளியை நாயகன் தாக்கிக்கொன்று விடுகிறார்
இந்தக்கேஸை விசாரிக்கும் போலீஸ் இந்தக்கொலைக் கேசில் நாயகன் தான் முக்கிய சாட் சி என்றாலும் நாயகன் தான் பிரைம் சஸ்பெக்ட்டும் கூட என நினைக்கிறது நாயகனே லாயரைக்கொலை செய்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறது
நாயகனுக்கும் லாயருக்கும் என்ன முன் விரோதம் ? எதனால் நாயகன் அந்தக்கொலையை செய்தான் என்பது மீதித்திரைக்கதை
நாயகன் ஆக கிசோர் குமார் நடித்திருக்கிறார் கச்சிதமான நடிப்பு லாயர் ஆக நடித்தவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் விசாரிக்கும் போலீஸ் ஆபீசர் ஆக வருபவர் சிக்ஸ் பேக் பாடியுடன் ட்ரிம் ஆகஇருக்கிறார் பாராட்டுக்கள்
ஆசாத்தின் பின்னணி இசையில் விறு விறுப்பு இருக்கிறது .கே ஏசுவின் எடிட்டிங்கில் படம் 104 நிமிடங்கள் ஓடுகிறது . சுனில் ஹூனாலி தான் ஒளிப்பதிவு .மொத்தப் படமும் ஒரே அறையில் நடப்பது போல காட்சி அமைப்பு இருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு சவாலான பணி தான்
பென்னி தாமஸ் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய சாகர் குமார் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் நடிகர்கள் , லொக்கேஷனும் ஒரே ஒரு இடம் தான் . செலவே இல்லாமல் பார்த்துக்கொண்ட விதம்
2 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான படம் எல்லாம் இல்லை .போர் அடிக்காமல் போகிறது .ரேட்டிங் 2.5 / 5
Anamadheya Ashok Kumar | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Sagar Kumar |
Screenplay by |
|
Starring |
|
Cinematography | Sunil Honnali |
Edited by | K Yesu |
Music by | Azad |
Production company | SKN Films |
Distributed by | Janani Pictures |
Release date |
|
Running time | 1 hour 44 minutes |
Country | India |
Languages | Kannada, Tamil |
0 comments:
Post a Comment