ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் பேத்திக்குக்காதுகுத்து .அந்த விழாவில் தோடு எடுத்துக்கொடுக்கணும் , 12,000 ரூபா செலவு ஆகும் .ஆடி மாதம் என்பதால் தொழில் சரி இல்லை , கையில்காசு இல்லை . நாயகன் ஒரு பத்திரப்பதிவு தனியார் அலுவலகத்தில் வேலை செய்பவர் .பத்திரம் எழுதும்போது சாட்சிக்கையெழுத்துப்போடுபவர் .ஆடி மாதத்தில் பத்திரப்பதிவு எதுவும் நடக்காது என்பதால் வேலை இல்லை . நாயகனின் மருமகன் அவர் காது படவே எகத்தாளமாகப்பேசுகிறான் . அவன் வாயை அடைக்க எப்படியாவது தோடு சீர் செய்ய வேண்டும் .நாயகன் என்ன செய்தார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக நடித்தவர் இயற்கையான கிராமத்து வெள்ளந்தி மனிதர் பாத்திரத்தை அப்படியே உள் வாங்கி நடித்திருக்கிறார் .அவரது மனைவியாக வருபவரின் டயலாக் டெலிவரி அருமை .படத்தில் நடித்த மீதி கேரக்ட்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வினு .ஆனால் டைட்டிலில் ஆங்கிலத்தில் விண்ணு என வருகிறது . நே மாலஜி , நியூமராலஜி ஆக இருக்கலாம்
சபாஷ் டைரக்டர்
1 கிராமத்து மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகக்காட்டிய விதம்
2 ஒளிப்பதிவு ,லொக்கேஷன் செலக்சன் இரண்டும் அருமை
ரசித்த வசனங்கள்
1 மெட்டியை அடகு வெச்சா வீட்டுக்கு ஆகாது
2 ஆடி மாசமும் அதுவமா அவனவன் பொண்டாட்டியை தங்கத்தால் இழைச்சுக்கிட்டு இருக்கான் .இவன் என்னடான்னா மெட்டியை அடகு வைக்க வந்திருக்கான் , தரித்திரம் பிடிச்சவன்
3 செய்யறது பூரா அயோக்கியாத்தனம் , ஆனா சாமி எப்படிக்கும்பிடறான் பாரு
4 இந்த மாதிரி களவாணிப்பயல்களுக்குத்தான் சாமி கருணை காட்டுது
5 காலைல ஒரு உதவி கேட்டிருந்தேனே ?
காசைத்தவீர என்ன உதவி வேணாலும் கேளு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் வறுமையிலஷ்டப்படுவதாக காட்டுகிறார்கள் . ஆனால் டியூட்டியில் முதல் நாளிலேயே ஒரு பார்ட்டியிடம் 3000 ரூபா , இன்னொரு பார்ட்டியிடம் 5000 ரூபாய் சம்பாதிக்கிறார் . அது போக ஓனர் ஒரு 1500 ரூபாய் தருகிறார் . மொத்தம் 9500 ரூபாய் .நமக்குப்பார்க்கும்போது எழும் கேள்வி . ஒரு மாசத்துக்கு எப்படியும் 25,000 ரூபாய் அசால்ட் ஆக வருமானம் வரும் போலயே .அந்தப்பணம் எல்லாம் என்ன ஆச்சு ? என்பதே .அவர் மீது பரிதாபம் வரவில்லை
2 ஒரு சீனில் கோபத்தில் நாயகன் ஒரு ஆளிடம் தன பாக்கெட்டில் இருந்த பணத்தை வீசி எறிகிறார் .நகரத்து ஆட்கள் வேணா பணத்திமிரில் அப்படி செய்யலாம், ஆனால் பணக்கஷ்டத்தில் இருக்கும் ஏழைக்கு அது லட் சுமி .அவமானப்படுத்த மாட் டார்கள்
3 க்ளைமாக்சில் ஒரு ஆள் நாயகனுக்கு உதவுகிறான் .அவன் தன சொந்தத்தங்கைக்கே உதவாதவன் , அறிமுகம் இல்லாத ஆளுக்கு அவ்ளோ பணம் தருவானா?
4 கிராமத்து மக்களிடம் சேமிப்பு இருக்கும் . நாயகன் தினசரி சம்பாதிக்கும் பணத்தின் சேமிப்பை என்ன செய்தார் ? என்பதற்கு பதில் இல்லை
5 நாயகனை சாட் சி சொல்ல கோர்ட் போக வேண்டாம் என ஒரு ஆள் அடிக்கிறான் .அதை தன முதலாளியிடமோ , சம்பந்தப்பட் ட பார்ட்டியிடமோ சொல்லாமல் மறைக்கிறார் .மாடு முட்டிடுத்து என பொய் சொல்கிறார் . அது எதனால் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் -
நல்ல படம் தான் பார்க்கலாம் . ஆனால் சில கேள்விகள் எழுகின்றன . ரேட்டிங்க் 2.5 / 5
0 comments:
Post a Comment