Wednesday, February 19, 2025

தினசரி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி காமெடி டிராமா )

           

       பெரிய  பெரிய ஹீரோக்களெல்லாம் ஆக்சன் மசாலாப்பக்கம்  ஒதுங்கி  விட்ட்தால்  இப்போது  வரும் படங்கள் ,  எல்லாம்  அடிதடி , வெட்டு ,குத்து  ,வன்முறை  என சகிக்கமுடியாத  குப்பைகளாக வந்து கொண்டு இருக்கின்றன .இயக்குனர் விசு , வி சேகர்  மாதிரி  குடும்பப்படங்களை  எடுப்பவர்கள் குறைந்து விட்டார்கள் .அந்தக்குறையைப்பபோக்கும்  வண்ணம்  சமீபத்தில்  குடும்பஸ்தன்  வந்தது  போல அறிமுக  இயக்குனர்  இ சங்கர்  களம்  இறங்கி  இருக்கிறார்       


ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  ஐ டி கம்பெனியில்  வேலை செய்பவன் . பேராசைக்காரன் . பணத்திலேயே  குறியாக இருப்பவன் . தனக்கு வரப்போகும்  மனைவி  தன்னை விட அதிக சம்பளம் வாங்குபவளாக இருக்கவேண்டும் எனநினைப்பவன் . பெண் பார்க்கப்போகும் இடங்களில் எல்லாம்  இதைப்பற்றியே  பேசுவதால்  எந்தப்பெண்ணும்  அவனுக்கு  செட் ஆகவில்லை 


 நாயகி  அமெரிக்காவில்  பிறந்தவள் ஆக  இருந்தாலும்  தமிழ்க்கலாச்சாரப்படி  ஹவுஸ் ஒயிப் ஆக இருந்து கணவனைக்கவனிக்க வேண்டும் என நினைப்பவள் . இப்போது   வேலைக்குப்போகிறவள் ஆக  இருந்தாலும் திருமணத்துக்குப்பின்  வேலைக்குப்போகமாட்டேன்  என கொள்கை  முடிவு எடுத்தவள் 


நாயகனின்  அம்மாவும் , அக்காவும்  சேர்ந்து  சதி வேலை செய்து  நாயகியை நாயகனுக்கு மணம் முடித்து வைத்து விடுகிறார்கள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 



நாயகன் ஆக  ஸ்ரீகாந்த் .ஆள் இன்னமும் இளமையாக அழகாக இருக்கிறார் .சீட்டுக்கம்பெனிக்காரன் மோசம் செய்து விட்டான் என்ற தகவல் தெரிந்து அவர் துடிப்பது அருமையான நடிப்பு .ஆள்  நல்ல கலராகஇருப்பதால் மிடில் கிளாஸ் ஆள் ஆக அவரை ஏற்க  மனம் மறுக்கிறது  


 நாயகி ஆக சிந்தியா தூர்டே . நிறமாக , அழகாக இருந்தாலும்  முக லட்ஷணம் குறைவு . நடிப்பும் பெரிதாக்கவரவில்லை . வசனங்களை  ஒப்பிப்பது போலிருக்கிறது 


நாயகனின் அப்பாவாக வரும் எம் எஸ்   பாஸ்கர்  அபாரமான நடிப்பு . கலக்கி இருக்கிறார் .அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் பாந்தமான நடிப்பு .  தமிழ் சினிமாவின் பிரமாதமான குணச்சித்திர  நடிகைகளில் ஒருவர் ஆன விநோதினி நாயகனின் அக்காவாக வருகிறார் . இவரது டயலாக் டெலிவரி செம 


நாயகனின்  நண்பனாக வரும்   பிரேம்ஜி தேவை இல்லாத ஆணி .எரிச்சல் ஏற்படுத்துகிறார் .அவரது அண்ணன் வெங்கட் படங்களில் மட்டும் நடிப்பது நல்லது .இவரது ஓவர் ஆக்டிங்க் .சேஷ்டைகள் கடுப்பேற்றுகின்றன 


ராதாரவி  கெஸ்ட் ரோல் . பெஸ்ட் ஆக்டிங்க் . சாந்தினி தமிழரசன் அழகாக  வந்து போகிறார் 

இசை இளையராஜா  என டைட்டிலில் போ ட்டதில் இருந் துதான் தெரிகிறது . பாடல்களும் சுமார் .பின்னணி இசையும்  சராசரி .வழக்கமாக   இவர் பிஜிஎம் மில் கலக்குவார் 

ஒளிப்பதிவு   பிரமாதம் . டெக்கினிக்கல் சைடில்  இவர் தான் உண்மையாகஉழைத்து இருக்கிறார் .எடிட்டிங்க்  கச்சிதம் 2 மணி நேரம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1   நாயகன் தமிழ் வாத்தியார் ஆன தன அப்பாவை மட் டம தட்டி ஆங்கிலத்தில் திட் ட பதிலுக்கு அப்பா ஆங்கிலத்தில் சிங்கிள் ஷாட்டில் பேசும்  வசனம் கலக்கல் ரகம் 


2  சீட்டுக்கம்பெனி  மோசடிகள் , அதிக வட்டிக்கு ஆசைப்படும்  மக்களுக்குப்படிப்பினை ஊட்டும் கருத்துக்கள் பலம் 


3   இயக்குனர் தான்   வசனகர்த்தா .. படம் முழுக்க  இயல்பான, நகைச்சுவை இழை ஓடும் வசனங்கள் அருமை 


4  கண்ணியமான , குடும்பப்பாங்கான  படங்கள்  வருவதே  அரிது . அதை ரசிக்கும்படி தருவது  கடிது 

5  முதல்   பாதி படத்தைக்காமெடியாகக்கொண்டு போன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   உன்  முகத்தைப்பார்த்துப்பேசுபவர்களை விட நீ போட்டிருக்கும் செருப்பின் பிராண்ட் பார்த்துப்பேசுபவர்கள் தான் அதிகம் 


2   உன்னால எனக்கு ஆறுதல் மட்டும் தான் சொல்லமுடியும் 


 இந்தஉலகத்துல தனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை என ஏங்குபவர்கள் நிறையபேர் இருக்காங்க 


3   நீ  போட்டி இட நினைத்தால் நீ களத்தில் இறங்கு , இன்னொருவனைப்பிடித்து தள்ளி விடாதே 


4  இரண்டு   யானைகள் சண்டை போட் டா பாறை மேல ஏறி நின்னு அதை வேடிக்கை பார்க்கறதுதான் புத்திசாலித்தனம் 


5 வாழ்க்கைல 90% விட்டுக்கொடுத்து 10%  வாங்கணும் .100% நமக்கே கிடைக்கணும்னு நினைக்கக்கூடாது 


6  சூதாட்டத்தில் விட் ட காசைத்திருப்பிக்கேட்கறவன் முட் டாள்  சூதாட்டத்தில் பெற்ற  காசைத்திருப்பிக்கொடுப்பவன்  அடி  முட் டாள்



7   சீட்டுக்கம்பெனி ல போட் ட பணத்தைத்  தி ருப்பிக்கொடுன்னு கேட்ட முதல் ஆள் நீ தான் 


8   நான்  மிட் நைட்  2 மணிக்குத்தான் பிறந்தேன் , அதனால  நைட்  எனக்குத்தூக்கம் வராது 


 அப்போ நைட் ஷிப்ட் வேலைக்குப்போ 


9   என்னடா  , அவன் வாயைப்பார்த்துட்டு இருக்கே ?அவன் நம்மைத்தான் திட்டுறான் 


10    எனக்கு என்ன   வேணும்னு  கேட்டிருந்தீங்கன்னா   நீங்க  மனுஷன் . எப்போப்பாரு உங்களுக்கு வேண்டியதைப்பறறியே   சிந்திச்சா? 



11   காதலைப்பிரிக்க  நம்ம  ஊரில் காரணமா இல்லை ?


12   எதுக்கு இந்தப்பெருமை பேசிட்டு இருக்கே? 


 சில எருமை மாடுகளுக்குப்புரியணும்னு தான் 


13  கைல   என்ன டா? 


 பூஸ்ட் 


  சரக்கு மாதிரி இருக்கு ? 



14  குழிப்பணி யாரம்  செய்யச் சொன்னீங்களே?எத்தனை  அடி  ஆழத்துலக்  குழி வெட் டனும் ? ( இது குமுதத்தில் வந்த ஜோக் ) 


15   எதுக்காக என் பிரச்சனைகளை எல்லார் கிட் டேயும்   ஷேர் செய்தே ? 


 நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னா ஷேர்   செய்யணும்னு சொன்னியே? 


16  இட்லி ல   இத்தனை ஓட் டைகள் இருக்கே? லேத் பட்டரைல சேஞ்சதா?


 அது இடியாப்பங்க 


17 காபிப்பொடிக்கும் சீயக்காய்  பொடிக்கும் வித்தியாசம் தெரியலையா? ( இது கல்கியில்  வந்த  ஜோக் ) 


18  என்னடா?உன் முதல் இரவு பாகுபலி  மாதிரி பிரம்மாண்டமா இருந்ததா? 


19    ஆசை தான்  ஒரு மனுஷனை ஏழை ஆக்கும் 


20   வேலை செய்யற   கம்பெனியையே இந்தத்தாங்கு தாங்கறானே?வாழ்க்கை பூரா கம்பெனி தரப்போகும் பெண்ணை எப்படித்தாங்குவான் ? 


21 எப்போ ப்பாரு படிச்சுக்கிட் டே   இருக்கியே?


படிச்சுக்கிட் டே   இருந்தா  தப்பு இல்லை ,குடிச்சுக்கிட் டே   இருந்தா தான் தப்பு 


22    மகாவிஷ்ணு கைச்செலவுக்கே  மகா லட் சுமி தான்  ஜி பே  பன்றாளாம் 



23  ம்க்கும், உனக்கு ரொம்ப தான் அக்கறை 


 ரொம்ப நேரமா  நிக்கறேன் 


24    உன் கலர் வெண்ணெய் உருண்டை  என் கலர் எள்  உருண்டை 


25     ஒரு தனி நபருக்கு மாதம் 800 ரூபா   இ ருந்தாப்போதும்னு அரசாங்கம் சொல்லுது 


26   நாம எத்தனை தடவை சாமி கும்பிடடாலும்  இவன் சாமி ஆடுவதை  நிறுத்த மாட் டான் 








 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மாதம்  70,000  ரூபாய்  சம்பளம்   வாங்கும்   நாயகன் ஒரு கோடி ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்குவது எப்படி ? முடியாது .நான்கு   வெவ்வேறு வங்கிகளில் தலா 25 லட் சம்   என சமாளித்தாலும் அதுக்கு வாய்ப்பு இல்லை 


2  என்னதான்  நாயகன்   பணப்பேய் ஆக இருந்தாலும் முதல் இரவு அன்று கூட தன மனைவியிடம்  எதிர் காலத்திட்ட்ங்கள்  பற்றி  விளக்குவது நம்பமுடியவில்லை 


3  க்ளைமாக்சில்   நாயகன் திருந்துவது   செயற்கை 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 


பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் . குடும்பப்பாங்கான படங்களை விரும்பும் ஆண்களும் பார்க்கலாம் . விகடன் 

 யூக  மார்க் - 41 . ரேட்டிங்க் 2.5/ 5 

0 comments: