Wednesday, February 12, 2025

தருணம் (2025) - தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் )

       

                 தேஜாவு (2022)  என்ற  வெற்றிப்படத்தைக்கொடுத்த  இயக்குனர் அரவிந்த்  சீனிவாசனின் இரண்டாவது படம் இது . தனது முதல் படத்தை  த இன்விசிபிள் கெஸ்ட் (2016) என்ற ஸ்பானிஷ்  படத்தை  பட் டி டிங்கரிங்க்  பண்ணி   உருவாக்கி இருந்தாலும்  விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றவர் .முதல் நீ  முடிவும் நீ  என்ற  சுமார்  ரகப்படத்தில் நாயகன் ஆக நடித்த  கிஷன் தாஸ்  நடிப்பில் உருவான படம் இது .15/1/2025  அன்று  திரை அரங்குகளில்  வெளியான இப்படம்  சரியான  மெயின் தியேட்டர்கள்  அமையாததால் மீண்டும்  ரி  ரிலீஸ் ஆக 31/1/2025 அன்று  வெளியாகி உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு போலீஸ் ஆபீசர் . இப்போது சஸ்பென்ஷனில் இருக்கிறார் . ஒரு திருமண  விழாவில்  நாயகியை சந்திக்கிறார் .நாயகனுக்கு ஆல்ரெடி  ஒரு காதலி  இருந்தாள் .ஆனால்  போலீஸ்  வேலை  அவளுக்குப்பிடிக்காததால் பிரேக்கப் ஆகி விட்ட்து .முன்னாள்  காதலியின் திருமணம் தான் இது 


 நாயகிக்கும்  ஒரு முன்னாள் காதல் உண்டு . காதலன் தன்னை நம்ப வில்லை .சந்தேகப்பிராணியாகவும் மடச்சாம்பிராணியாகவும் இருக்கிறான் என நாயகி விலகி விடடாள் . முன்னாள்  காதலனின்  திருமணத்துக்குத்தான் நாயகி இப்போது  வந்திருக்கிறாள் 


நாயகன் , நாயகி அறிமுகம்  பின் நட்பாகி , காதல் ஆகி  திருமணம்  வரை  வந்து  விட்டது 


நாயகிக்கு ஒரு பாய்பெஸ்ட்டி  இருக்கிறான் . பொதுவாக  மாடர்ன் பெண்கள்  உலகில் பாய்பெஸ்ட்டி   என்றால் எடுபுடி  , வேலைக்காரன் என்று தான் அர்த்தம் . யூஸ் அண்ட்  த்ரோ  மாதிரி  உபயோகப்படுத்திக்கொள்வார்கள் . இது தெரியாத  வில்லன்  நாயகியை அடைய நினைக்கிறான் 



 ஒரு சந்தர்ப்பத்தில்  நாயகி வில்லனைப்போட்டுத்தள்ளி விடுகிறாள் .வீட்டில்  வில்லனின் பிணம் .நாயகனுக்கு  போன் செய்கிறாள் . நாயகன்  வந்து  நிலைமையை எப்படி சமாளித்தான் ? என்ன என்ன  பிரச்சனைகளை  எதிர் கொண்டான் ? என்பது மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக   கிஷன் தாஸ்  யதார்த்தமாக   நடித்திருக்கிறார் .அலட்டிக்கொள்ளவே  இல்லை . ரொமாண்டிக்  சீன்களிலும் சரி ,காமெடி சீன்களிலும் சரி  கச்சிதமாக நடித்திருக்கிறார் 

நாயகி ஆக  ஸ்ம்ருதி  வெங்கட்  கொழுக்  மொழுக் என இருக்கிறார் . நடிப்பும்  பரவாயில்லை 


 நாயகனின் நண்பனாக  பால சரவணன் கச்சிதமாக நடித்திருக்கிறார் 


வில்லன் ஆக ராஜ் அய்யப்பா   நடித்திருக்கிறார் .சுமார் ரகம் 


தற்புகா  சிவாவின் இசையில்  இரண்டு பாடல்களுமே  நன்றாகஇருக்கின்றன .பின்னணி இசை  சராசரி ரகம் .ஒளிப்பதிவு  ராஜா படடாச்சார்யா  சுமார் ரகம் .நாயகிக்கு க்ளோசப்  சீன்கள்   அதிகம் வைக்கவில்லை . வைத்தவரையில்  பெரியதாக சைன் செய்யவில்லை 


சபாஷ்  டைரக்டர்

1   பொதுவாக க்ரைம் திரில்லர்  படங்களில்  ரொமான்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் . ஆனால்  வழக்கத்திற்கு மாறாக  இதில்  ரொமாண்டிக் போர்சன் ரசிக்கும்படி இருக்கிறது . . பெண்களின்  சைக்காலஜியும் அலசப்பட்டிருக்கிறது 


2 முதல்  பாதி  ரொமான்ஸ் , பின் பாதி  க்ரைம் என  பிரித்து  திரைக்கதை அமைத்த  விதம் 


3  போர் அடிக்காமல் முழுப்படத்தையும்  ரசிக்கும்படி எடுத்த விதம் 


4   வில்லனின் அம்மாவாக நடித்தவரின் உடல் மொழி , நடிப்பு அனைத்தும் அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1   கடவுளுக்கே  அவனை ரொம்பப்பிடிச்சுப்போய் சீக்கிரமாகவே  தன்  கூட அழைச்சுக்கிட் டார்  போல 


2   வேலை  முக்கியமா? பொண்ணு முக்கியமா? எனக்கேட் டா  எனக்கு வேலை தான் முக்கியம் 


3  நான் வருசா வருஷம் ஜிம் மெம்பர்ஷிப்புக்குப்பணம் கட்டுனதுக்கு சொந்தமா  ஒரு ஜிம்மே   ஓப்பன் பண்ணி இருக்கலாம் 


4    மேனேஜெர்  ஆகிட்டியாமே? வாழ்த்துகள் .சரி . இதை வாங்க எவ்ளோ  செலவு ஆச்சு ? 


5  என்  பியான்சியும்  இவ தான் , இந்த பார்ட்டிக்கு பைனான்சியரும் இவ தான் 


6   லவ்ல   நம்மகூடஇருக்கறப்ப  மட்டும் தான்  அவ சந்தோஷமாயிருக்கணும்னு இல்லை , நம்மை விட்டுப்பிரிஞ்ச்சு போனபின்பும் எங்கிருந்தாலும் அவ நல்லாருக்கணும் 


7  ரொமாண்டிக்  & டிராமாட்டிக் ஆக  பிரப்போஸ்  பண்ணினா  பெண்களுக்குப்பிடிக்கும் 


8   என்னைக்கொஞ்சி  எழுப்பி விடுடா 


செல்லம் எந்திரி 


 இதுதான் கொஞ்சலா?  அட்லீஸ்ட்  ஒரு முத்தமாவது கொடுடா 


 இச் 


 இதுதான் முத்தமா? கன்னத்தில் கொடுப்பதெல்லாம் கணக்கில் வராது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  நண்பன்  உடல் எடை 80 கிலோ  இருக்கும் .உயரம்  5அடி 4 அங்குலம்  இருக்கும் . வில்லனின்  உடல் எடை  65 கிலோ தான் இருக்கும் .உயரம்  அஞ்சே  முக்கால் அடி   இருக்கும் .சி சி டி வி கேமராவில் ஆள் மாறாட் டக்குழப்படி பண்ண நாயகன் செய்யும் டிரிக் எடுபட   இருவரும்  ஒரே  உயரம் , உடல் எடை  இருக்க வேண்டும் .அது போக  வில்லன் சிவப்பு . நாயகனின்  நண்பன்   மாநிறம் 


2  சிசிடிவி  கேமரா  பற்றி  விசாரிக்கும்போது  அபார்ட்மெண்ட் வாசிகளின் பிரைவசி  கருதி  காரிடாரில் சிசிடிவி  கேமரா  வைக்கவில்லை  என்பது செமக்காமெடி . . பெடரூமில் , பாத்ரூமில்   வைக்காமல் இருப்பதுதான்  பிரைவசி  கருதி... காரிடாரில் சிசிடிவி  கேமரா   வைத்தால் எப்படி  பிரைவசி பாதிக்கப்படும் ?


3   பக்கத்து ரூமில் டெட் பாடியை வைத்துக்கொண்டு நாயகியால்   எப்படி அசால்ட் ஆக தூங்கமுடிகிறது ? 


4  நாயகியின்  கேரக்ட்டர்  டிசைன் சரி இல்லை . வில்லனை  எப்படி  அவ்ளோ  தூரம் அனுமதிக்கிறாள்/?  தன் தோழிகளை பதம் பார்த்தவன் என்று  தெரிந்தபின் கட் பண்ணி இருக்க வேண்டாமா? 


5  இது ஆக்சிடெண்டல்  டெத்  என்கிறாள் நாயகி . பிறகு  நான் தான் கொலை  செய்தேன்  என்கிறாள் . பதட் டத்தில் ஆம்புலன்சுக்கு கால்   பண்ணிட் டேன்   என்கிறாள் . எல்லாம் முன்னுக்குப்பின் முரண் 


6  வில்லன்  பல பெண்களை அடைந்தவன் . நாயகியும் வில்லனும்  பல முறை  வீட்டில்  தனிமையில்  இருக்கிறார்கள் . மயக்கமருந்து  கொடுத்து சுலபமாக  அவளை அடைந்திருக்கலாம் .அதை செய்யவில்லை . நாயகி மறுத்தபின்   அவளை   வில்லன் கொலை செய்ய முயற்சிப்பது எதனால் ? வில்லனின் டார்கெட்  நாயகியை அடைவது தானே? 


7 வில்லனின் அம்மா  நாயகியின் வீட்டுக்கு வந்து   தன மகனுக்கு கால் பண்ணும்போது  மகனின் செல்போனில்  ரிங்க்  அடிக்கும் சத்தம் தெளிவா  கேட் கிறது . ஆனால்   நாயகன் தன போனை அட்டென்ட் செய்வது போல நடித்து சமாளிப்பது  எப்;படி ? இன்னொரு முறை கால் பண்ண மாடடாளா? 


8   வில்லனின்   டெட் பாடியை  நாயகன்  அபார்ட்மெண்ட் டில்   இடம் மாற்றுவது எல்லாம் சாத்தியமே இல்லாதது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பின் பாதி  க்ரைம்  திரில்லர்  போர்சனில்   வில்லனின் அம்மாவின் நடிப்புக்காகவும் , முதல் பாதியில் ரொமாண்டிக் போர்சனுக்காகவும் பார்க்கலாம் . விகடன் மார்க்  41 .ரேட்டிங்  2.5 / 5 



தருணம்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்அரவிந்த் ஸ்ரீனிவாசன்
எழுதியவர்அரவிந்த் ஸ்ரீனிவாசன்
தயாரித்தவர்
  • புகழ்
  • ஈடன்
நடிப்பு
ஒளிப்பதிவுராஜா பட்டாச்சார்ஜி
இசையமைத்தவர்
தயாரிப்பு
நிறுவனம்
  • ஜென் ஸ்டுடியோஸ்
வெளியீட்டு தேதி
  • 31 ஜனவரி 2025
இயக்க நேரம்
137 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: