குடும்பஸ்தன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )
தமிழ் சினிமாவில் விசு , வி சேகர் காலத்துக்குப்பின் குடும்பப் படம் இயக்க ஆட்களே இல்லையோ என ஏங்கி இருந்த வேளையில் அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளி சாமி நம்பிக்கை நட்சத்திரமாக வந்திருக்கிறார் . ரஜினி ,கமல், அஜித் , விஜய் உட்பட அனைத்து முன்னணி நாயகர்களும் ஆக்சன் மசாலா பக்கம் இருப்பதால் காமெடிப்படங்கள் , குடும்பப்படங்கள் வருவது அரிதாகி விட்ட்து
பீட்ஸா 2 வில்லா படத்தில் உதவி இயக்குனராக அறிமுகம் ஆன கே மணிகண்டன் இந்தியா பாகிஸ்தான் (2015) இல் ஆரம்பித்து சில நேரங்களில் சில மனிதர்கள் (2022) வரை 12 படங்களில் பல ரோல்களில் நடித்தாலும் நாயகன் ஆக நடித்த குட் நைட் (2023) , லவ்வர் (2024 ) ஆகிய இரு படங்களும் செம ஹிட் . 3 வதாக ஹாட் ரிக் வெற்றியைத்தொட்டு விட் டார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மிடில் கிளாஸ் மாதவன் .காதலித்துக்கல்யாணம் செய்து கொண்ட மனைவி , அம்மா , அப்பா என கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார் . மனைவி ஐ ஏ எஸ் எக்ஸாம்க்குப்படிக்கிறார் . .அந்த செலவு இருக்கு அப்பாவுக்கு வீட் டைப்புதுப்பிக்க வேண்டும், அம்மா வுக்கு ஆன்மீக டூர் போக வேண்டும் .கல்யாணம் கட்டிக்கொடுத்த அக்காவின் குழந்தைக்கு சீர் செய்ய வேண்டும் . இப்படி ஏகப்பட் ட கமிட்மெண்ட்ஸ் இருக்கும் நாயகனுக்கு திடீர் என ஆபீசில் வேலை போய் விடுகிறது . வீட்டில் சொல்லாமல் அதை மறைக்கிறான் . சம்பளம் தரணுமே? கடன் வாங்கி சமாளிக்கிறான் . இருக்கிற பிரச்சனைகள் போதாது என வில்லனாக அக்காவின் கணவர் .இவற்றை எல்லாம் எப்படி நாயகன் சமாளிக்கிறார் என்பது சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர்
நாயகன் ஆக மணிகண்டன் அபாரமாக நடித்திருக்கிறார் . மிடில் கிளாஸ் ஆளின் பிரச்சனைகளை யதார்த்தமாகப்பிரதிபலிக்கிறார் . மனைவி ஆக புதுமுகம் சானவே மோகனா புதுமுகம் என்றே சொல்லமுடியாதபடி செமையாக நடித்திருக்கிறார் . நாயகன் அம்மாவாக குடச்சநாடு கனகம் , , அப்பா ஆக ஆர் சுந்தரராஜ ன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .வில்லனாக அக்காவின் கணவர் ஆக குரு சோமசுந்தரத்தின் நடிப்பு மிரட் டல் ரகம் . கலக்கி இருக்கிறார் .இவர்கள் போக நாயகன் நண்பர்கள் ஆக நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் , திவாகர் கூட் டணி ரகளையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
வைஸாக்கின் இசையில் இரு பாடல்கள் சுமார் ரகம் தான் , பின்னணி இசை பரவாயில்லை . கண்ணா பாலுவின் எடிட்டிங்கில் படம் 155 நிமிடங்கள் ஓடுகிறது . ஒரு சீன் கூடபோரடிக்கவில்லை . சுஜித் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அருமை
காமடியனாக நடித்த நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்திரன் தான் வசனம் , திரைக்கதை உதவி எல்லாமே ., அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளி சாமி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 சத்யா படத்தில் கமலுக்கு வில்லனாக வந்த கிட்டியைப்போல சிரித்து சிரித்தே கடுப்பு ஏற்றும் வில்லனாக குரு சோமசுந்தரத்தின் கேரக்டர் டிசைன் , நடிப்பு அருமை
2 படத்தில் நடிப்பவர்கள் டென்ஷன் ஆக இருக்கிறார்கள் , ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு சிரிப்பு வருகிறது இந்த மாதிரி காமெடி டிராக் அமைப்பது சிரமம் , இயக்குனர் அசால்ட் ஆக அதை செய்திருக்கிறார்
3 படம் முழுக்க கொங்கு மண்டல வட்டார வழக்கு பாஷை களை கட்டுகிறது . அதைப்பேசும் ஆட்கள் இயல்பான ஆட்களாக கண் முன் நடமாடுவது அருமை
4 யார்ரா நீ? வேற யாராவது இருந்திருந்தா வெலவெலத்துப்போயிருப்பான் , நீ அசத்தறே . எல்லாப்பிரச்சனைகளையும் சால்வ் பண்றே . என நாயகன் தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் சீன் கலக்கல்
5 ஆபீசில் மேனேஜர் ஆக நாயகனின் நண்பன் நடிக்க , வில்லன் அங்கே வர , அத பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் அபாரம்
6 நாயகன் சந்திக்கும் எல்லாப்பிரச்சனைகளும் படம் பார்க்கும் அனைவருமே தங்கள் வாழ்க்கையுடன் கனெக்ட் பண்ணிக்கொள்ள முடிவது பெரிய பிளஸ்
7 ஆர் சுந்தர்ராஜன் - கனகம் செகண்ட் மேரேஜ் பழைய பாட்டுக்காமெடிக்கு தியே ட் டரில் ஆரவாரமான கை தட் டல்
ரசித்த வசனங்கள்
1 சாதி மாறிக்கல்யாணம் பண்ணி வைப்பது என்பது வீதில போற ஆசாரியை வீட்டுக்குக்குக் கூப்பிட்டு ஆப்பு வெச்சுக்கற மாதிரி
2 மேடம் இங்கே கட்டிப்பிடிச்சுக்கலாமா?
பொதுவா யாரும் இந்த மாதிரி கேட்ட்தில்லை .....
3 வீட்டுக்கு வந்து உன்னை விசேசத்துக்குக் கூப்பிடலை என்பது உன் பிரச்சனை , ஆனா என்னைக்
கூப்பிடவே இல்லை
4 டியர் , யூ லுக் காஷியஸ்
ஐயோ ராமா , அது கார்ஜியஸ்
5 ஏம்ப்பா , சர்வர் ..எஸ் .. சி அப்டினு போட்டிருக்கே ? அப்படின்னா?
சிவனாண்டி கேட்டரிங்க்
ஓ . நான் கூட வெளிப்படையாவே போட்டுட் டீங்களோ? என நினைச்சேன்
6 மருதமலைக்குப் போகச்சொன்னா இமயமலை போக பிளான் போட்டுட்டு இருக்கே
7 உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்
இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாம என்னை ஆசீர்வாதம் பண்றே ?
8 உண்மை பேசுனா கேட் டவன் தான் அதை ஞாபகம் வெச்சுக்கணும் , ஆனா பொய் பேசுனா பேசுன நான் தான் அதை ஞாபகம் வெச்சுக்கணும்
9 எங்க அண்ணன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட் டான்,ஏண்ணே ,அப்படி பண்ணியா?
ஆமா, பண்ணேன்
10 மரிக்கொழுந்து மருந்து குடிச்சுட் டா
அவ குடிச்சா குடிச்சுட்டுபோறா , நீ போய் வேலையைப்பாரு
11 உடம்பு எப்படி வெயிட் போட்டுச்சு ? டெய்லி யோகா பண்றியா?>
ம்
எத்தனை தடவை ?
டெய்லி 5 தடவை பண்ண அது என்ன தொழுகையா?
12 வேலை எல்லாம் எப்படிப்போகுது மாப்பிளை ?
வேலை எதுவும் போகலையே ?
வேலை எல்லாம் எப்படிப்போகுது என யதார்த்தமாத்தானே கேட்டேன்
13 என்ன ?மாப்பிளை மாதிரி டிரஸ் பண்ணி இருக்கே?
என் மாமியாருக்கு பர்த் டே சார்
14 20 வருசமா கிளி ஜோஸ்யக்காரனா நடிச்சு செட் ஆகிட் டே ன் , திடீர் என கேரக்ட்ரை மாத்தினா? நான் என்ன சிவாஜி கணேசனா?
15 அவனவன் பிரச்சனைகளை அவனவனே பார்த்த்துக்கற மாதிரி இருந்தா சொந்த பந்தம், சாதி சனம் எதுக்கு ?
16 உலகத்துல ரெண்டே விதமான ஆட்கள் தான் 1 கடன் வாங்குபவன் 2 கடன் கொடுப்பவன்
17 பிச்சை போடறவன் பெருந்தன்மையாதான் போடுவான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நண்பனை அறைந்தார் என்பதற்காக கம்பெனியின் எம் டி யையே நாயகன் பளார் என்று அறைவது சினிமாத்தனம் .நிஜ வாழ்வில் அப்படி நடக்க வாய்ப்பில்லை .மிடில் கிளாஸ் ஆள் முதலில் தன ஸே ஃபடியைத்தான் பார்ப்பான் , தன வேலையை விடத்துணிய மாடடான்
2 நாயகனின் அம்மாவாக வரும் குடச்சநாடு கனகம் மனதில் ஓட் டவில்லை . ஒருவேளை டி வி சீரியல் பார்க்கும் பெண்களுக்குப்பிடிக்கலாம்
3 வேலை போன விஷயத்தை தன் மனைவியிடம் மட்டுமாவது சொல்லி விடுகிறேன் என நண்பனிடம் கெஞ்சுவது எதுக்கு ?
4 ஆபீசில் ஆபீசரிடம் அனுசரணையாக நடந்து கொள்பவன் வில்லன் . ஆனால் ஹையர் ஆபீசரை கை நீட்டி அடித்து வேலையைத்தொலைக்கிறான் நாயகன் . இது இடிக்குதே? பொதுவாக நாயகனின் கேரக்ட்டர் டிசைன் தான் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி காமெடி கலக்கல் , பின் பாதி கொஞ்சம் ஸ்லோ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி எனப்பேருக்குப் போஸ்ட்டர்ல விளம்பரம் பண்ணுவாங்க , நிஜமாகவே இது ஏ , பி, சி என ஆல் சென்ட்டர் ஹிட் அடிக்கப்போகும் ஒரு பேமிலி எண்ட் டர் டெய்னர் .விகடன் மார்க் 45 , ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment