சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ரெடி செய்த கதை இது . யாரடி நீ மோகினி கால கட்டத்தில் உருவான இந்த ஐடியா ஏனோ செயல் படுத்த முடியாமல் போய் விட்ட்து .இப்போது இந்தக்கதையில் தான் நடித்தால் சரியாக இருக்காது என நினைத்து தன தங்கை மகனை நாயகன் ஆக்கி இயக்கி இருக்கிறார் .பவர் பாண்டி (2017) , ராயன் (2024) ஆகிய படங்களுக்குப்பின் தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் மூன்றாவது படம் இது .21/2/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் சூப்பர் ஹி ட்டும் ஆகவில்லை , பிளாப்பும் ஆகவில்லை .பரவாயில்லை ரகம் என பெயர் எடுத்திருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சமையல்காரர் (செப்) பணிக்காக்கப்படித்துக்கொண்டு இருப்பவர் . நாயகி ஒரு சாப்பாட்டு சீதை .இந்த ஒரு காரணம் போதாதா? இந்தக்காலப்பெண்களுக்கு சமையல் என்றால் என்ன என்றே தெரியாத நிலை இருக்கும்போது ஆண்கள் சமையல் கலையைக்கற்று அதன் மூலம் பெண்களைக்கவர்ந்து வருகிறார்கள் .
நாயகன் , நாயகி இருவரும் காதலிக்கிறார்கள் .பின்னால் தான் நாயகி ஒரு கோடீஸ்வரர் மகள் என்பது நாயகனுக்குத்தெரிய வருகிறது . நாயகியின் அப்பா தன் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .நாயகனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் நாயகியின் அப்பாவுக்கு லங்க்ஸ் கேன்சர் ஸ்டேஜ் 4 , இன்னும் 6 மாதங்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது நாயகனுக்குத்தெரிய வருகிறது ,இந்த விஷயம் நாயகிக்குத்தெரியாது
உயிரோடு இருக்கும் வரை அவர் நிம்மதியாக மகளுடன் இருக்கட்டும் என நாயகன் நாயகியைத்தவிர்க்கிறார் .லவ் பிரேக்கப் ஆகிறது
நாயகனுக்கு வீட்டில் ஒரு பெண்பார்க்கிறார்கள் . பெண்பார்க்கும் வைபவத்தின் போதுதான் அந்தப்பெண் நாயகனின் கிளாஸ் மேட் , ஸ்கூல் மேட் என தெரிகிறது . இருவருக்கும் சம்மதம் . அப்போதுதான் நாயகியின் திருமணப்பத்திரிக்கை நாயகனுக்கு வருகிறது
நாயகன் அந்த திருமணத்துக்கு செல்கிறான் .அந்த திருமண விழாவில் ஒரு பெண் அறிமுகம் .ஆகிறாள் அவளுக்கும் நாயகனின் சமையல் பிடித்துப்போய் காதலிக்கிறாள் .நாயகிக்கு உண்மை தெரிய வருகிறது .இப்பொது நாயகன் இந்த மூவரில் யாரைத் திருமணம் செய்து கொண்டான் என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக பவிஸ் நாராயண் பிரமாதமாக நடித்திருக்கிறார் .முதல் படம் என்ற தயக்கமே இல்லாமல் கலக்கி இருக்கிறார் .உடல் மொழி , முக பாவனை , டயலாக் டெலிவரி அனைத்திலும் தனுஷின் பாதிப்பு இருப்பது பிளசா? மைனஸா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்
நாயகி ஆக அனிகா சுரேந்திரன் .இவரை பேபி அனிகாவாக பல படங்களில் பார்த்து இருப்பதால் இப்போது அவரைக்குமரியாக ரசிக்க முடியவில்லை , நடிப்பு ஓகே ரகம்
மற்ற இரு நாயகிகள் ஆக வரும் பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா ரங்கநாதன் இருவருமே மெயின் நாயகியை விட அழகாக இருக்கிறார்கள்
நாயகனின் நண்பன் ஆக மேத்யூ தாமஸ் கலக்கி இருக்கிறார் .இவரது காமெடியும் அருமை .காதல் கதையும் அருமை
சரத் குமார் நாயகியின் அப்பாவாக கெஸ்ட் ரோலில் வருகிறார் .அனுபவம் பேசுகிறது .நாயகனின் அம்மா , அப்பாவாக சரண்யா பொன் வண்ணன் , ஆடுகளம் நரேன் அசத்தி இருக்கிறார்கள்
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் நான்கு பாடல்களுமே அருமை , அதிலும் மேரேஜ் பங்க்ஷனில் பாடும் கோல்டன் ஸ்பாரோ கலக்கல் ரகம் , அதற்கான நடன அமைப்பும் அருமை .
லியோன் பிரீட்டொ வின் ஒளிப்பதிவில் காட் சிகளில் இளமை கொப்புளிக்கிறது .மூன்று நாயகிகள் + காமெடியனின் காதலி என நான்கு பெண்களையும் அழகாக்கா ட்டி இருக்கிறார்
ஜி கே பிரசன்னாவின் எடிட்டிங்கில் படம் 131 நிமிடங்கள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி தயாரித்து இயக்கி இருப்பவர் தனுஷ்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் பெண்பார்க்கும் படலத்தில் தன கிளாஸ் மேட் டே மணப்பெண்ணாக இருப்பதைப்பார்த்து நாயகன் வியப்பதும் . டே ய் நீயா?என பெண் இயல்பாகப்பேசுவதும் கல கல .நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரியை விட இந்த ஜோடி கெமிஸ்ட்ரி பிரமாதம்
2 காமெடியனின் காதல் கதை போர்சன் மனதைத்தொடுவதாக உள்ளது .காமெடியனின் கேரக்ட ர் டிசைனும் அருமை
3 இடைவேளைக்குப்பின் வரும் திருமணக்கொண்டாட் டத்தில் எதிர்பாராத வரவாக ஒரு புதுக்காதலி கிடைப்பது சுவராஸ்யம்
4 பாடல்களைப் படமாக்கிய விதம் ,ஆர்ட் டைரக்ஷன் ,ஒளிப்பதிவு , இசை அனைத்தும் தரம்
ரசித்த வசனங்கள்
1 இதயத்தைப்பிடுங்கி காலில் போட்டு நங்க் நங்க் என மிதிச்சா அது தான் காதல்
2 இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஏண்டா இருக்கே?
நான் குரங்குன்னா அப்போ நீயும் அம்மா குரங்கு தானே?
3 உன் வாழ்க்கைல எதுவும் நார்மலாவே நடக்காதா?
4 எதுவும் கேட்காம , எதுவும் தெரியாம வர்றதுதான் லவ்
5 ஏண்டி நீ ஸ்கூலில் சுமாராத்தானே இருப்பே?இப்போ எப்படி இவ்ளோ அழகா இருக்கே?
6 நீ சரியான பைத்தியம்
எல்லா ஜீனியஸையும் இந்த உலகம் முதலில் அப்படித்தான் நினைக்கும்
7 பொண்ணுங்க தான் தங்கள் காதலை ஓப்பன் பண்ணாம இழுத்தடிப்பாங்க , ஆனா பசங்க அபப்டி இல்லை
8 லவ்வர்ஸுக்கு லேட்டாதான் தங்கள் காதல் தெரியும் ,ஆனா அவங்க பிரண்ட்ஸுக்கு முதலிலேயே தெரிஞ்சுடும் , மோப்பம் பிடிச்சுடுவாங்க
9 சமைக்கறது தான் உலகிலேயே பெரிய கலை
10 பக்கத்தில் இருப்பவங்க நாம சமைத்ததை சிலாகிக்கும்போது கிடைக்கும் இன்பம் இருக்கே?
11 ஐந்து நாட்களாக அவன் சாப்பிடவே இல்லை
நாங்க சண்டை போட் டே 2 நாட்களாகதானே ?
12 ரிஸ்க் எடுக்காம லைப்ல எதுவும் சாதிக்க முடியாது
13 எப்பவுமே ஒரு பையனுக்கு தான் காதலிக்கும் பெண் முன்னால் தான் ஒரு பெரிய ஆள் ஆகணும்னு எண்ணம் இருக்கும்
14 தன்னுடைய காதலன் ஒரு நாள் பெரிய ஆளா வருவான் என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும்
15 அம்மா , தோராயமா நீ இன்னும் எத்தனை வருடங்கள் உயிரோட இருப்பே?
16 பசங்களுக்கு திடீர்னு நம்ம மேல இன்ட்ரஸ்ட் போயிடுச்சுன்னா அவங்களுக்கு வேற ஒரு காதலி உருவாகிட்டா ங்கனு அர்த்தம்
17 லவ்வுக்கும் , லவ் பெய்லியருக்கும் நடுவே மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்
18 ஒரு பொண்ணு நீ வேணாம்னு முடிவு பண்ணிட் டா நீ என்ன முயற்சி செஞ்சாலும் ரீச் ஆக முடியாது
19 ஓ சி ல குடிக்க ஊரு விட்டு ஊரு கூட வருவானுங்க
20 காதல் இருக்கும்போது தரும் சுகத்தை விட இல்லாதப்ப தரும் வலி அதிகம்
21 நான் வேணா அ வ கிட் ட உன் லவ்வைப்பற்றி சொல்லட் டா?
உன் லவ்வைப்பார்த்துக்கவே உனக்கு வக்கு இல்லை
22 பணக்காரப்பசங்க என்ன சொன்னாலும் சிரிக்க ஒரு பொண்ணுங்க கூட் டம் சுத்திக்கிட் டே இருக்கும்
23 காதலிக்கும்போது ஒரு மரமே நம் மீது விழுந்தாலும் நமக்குத் தெரியாது , லவ் பிரேக்கப் ஆன பின் ஒரு மருதாணி நம்மைப்படுத்தும் பாடு இருக்கே /..
24 நீ சமையல்காரனா?
இல்லை ,ஒரு செப்
இரண்டும் ஒன்னு தானே?
25 பார்க்க பொறு க்கி மாதிரி இருக்கும் பசங்க தான் நல்லவங்களா இருப்பாங்க
26 காதலி போயிட் டா வேற காதலி கிடைப்பா . ஆனா நண்பன் போயிடடா அவனை மாதிரி ஒருத்தன் கிடைப்பானா?
27 பொய்யான புருஷன் பொண்டாட்டியா வாழ்வதை விட உண்மையான நண்பன் - தோழி ஆக வாழலாம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தில் வரும் அனைத்துப்பெண் கேரக்ட ர்களும் சரக்கு அடிக்கிறார்கள் . இது எதுக்கு ? தேவை இல்லாத தலைவலி
2 கோடீஸ்வரி ஆன நாயகி நாயகன் நல்லா சமையல் கற்றவன் என்பதற்காககாதலிப்பது நெருடுகிறது
3 நாயகனுக்கு தான் காதலிக்கும் நாயகி கோடீஸ்வரி என்பதே தெரியாது என்பதும் நம்ப முடியவில்லை
4 நாயகன் - நாயகி இருவரும் க்ளைமாக்சில் சேரவேண்டும் என்ற தவிப்பே ஆடியன்ஸுக்கு வரவில்லை .மற்ற இரு பெண்களில் யாரையாவது கட்டிக்கிட் டா தேவலை என்று தான் தோன்று கிறது இது திரைக்கதையின் பலவீனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - படம் ஜாலியாகப்போகிறது .நான்கு அழகிகள் இருப்பதால் ,பாடல்கள் , இசை அருமை என்பதால் ஆண்கள் பார்க்கலாம் .விகடன் மார்க் யூகம் - 41 .ரேட்டிங்க் 2.75 / 5