Wednesday, January 01, 2025

THE SMILE MAN (2024) தி ஸ்மைல் மேன் (தமிழ் ) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )

     

                   நாட்டாமை , சூரிய வம்சம் , நட்புக்காக  போன்ற  மெகா  ஹிட் படங்களில்  நடித்த  சரத் குமாரின் 150 வது  படம்  இது . ஆனால்  பெரிய அளவில்  பிரமோஷன் இல்லை .;போர்த்தொழில்  என்ற   லேட் டஸ்ட்  ஹிட்  கொடுத்தவர் அதே  பாணியில்  ஒரு த்ரில்லர்  படம்  நடித்தும்  போதுமான  அளவு  விளம்பரம் தராதது எதனால்?என்பது தெரியவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  க்ரைம்  பிராஞ்ச்  போலீஸ் ஆபீசர் .5 வருடங்களுக்கு முன்  நடந்த ஒரு விபத்தில்  அவருக்கு  அல்சைமர் வியாதி வந்து விடுகிறது . விரைவில்  அவர் தனது பழைய  நினைவுகளை எல்லாம் பரிபூர்ணமாக இழப்பார் என டாக்டர் சொல்லி விட் டார் .இதனால்  உடனடியாக நாயகன்  5 வருடங்களுக்கு முன்  நடந்த  ஒரு சீரியல் கில்லர்  பற்றி  ஒரு புத்தகம்  போடுகிறார் .அந்த புத்தகம்  வெளியானதும்  அந்த சீரியல் கில்லிங்க்   பேட்டர்னில்  ஒரு கொலை நடக்கிறது .

இந்தக்கொலையை விசாரிக்க  ஒரு புது ஆபீசர்  நியமிக்கப்படுகிறார் . இந்த ஆபீசரின் அப்பாவும்,  நாயகனும் சேர்ந்து தான்  5 வருடங்களுக்கு முன்  அந்த  ஸீரியல்  கில்லர்  கேஸை  டீல் செய்தது . அப்போதே  அந்த சீரியல் கில்லர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் , இப்போது  அதே  பாணியில்   நடக்கும்  கொலைகள் , அந்த  கில்லர்  உயிரோடுதான் இருக்கிறானா?  அல்லது அதே    பேட்டர்னில்  கொலை செய்யும் புதிய காப்பிகேட்  கில்லரா?  என்பதை  நாயகனும் , புது ஆபீசர்  டீமும்  இணைந்து கண்டு பிடிப்பதுதான் மீதி திரைக்கதை 

நாயகன் ஆக  சரத் குமார்  அனுபவம் மிக்க  அருமையான நடிப்பு .   ஆற்றாமை , மறதி  ஆகியவற்றால்  அவர் அவதிப்படும் காட்சிகள் செம .அவரது நடிப்பில்  ஒரு புதிய  உடல் மொழி  தென்படுகிறது .க்ளைமாக்சில்  வில்லனுடன் போடும் பைட்  தடிப்பு 

இரண்டாம்   நாயகன்  ஆக  வரும் ஸ்ரீ குமார்  முகத்தில்  நடிப்புக்கான  முயற்சியே இல்லை .மிகப்பெரிய  மைனஸ்  இந்த ஆர்ட்டிஸ்ட் செலக்சன் தான் இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக வரும் சிஜா ரோஸ்   நல்ல  ஆக்டிங் , ஆனால் அதிக வாய்ப்பில்லை .  ஓய்வு பெற்ற  போலீஸ் ஆபீசர் ஆக  வரும் கைதி  புகழ் ஜார்ஜ் மரியன்  கச்சிதமான நடிப்பு . கலையரசன்  நடிப்பு  இன்னும் மெருகேறி இருந்திருக்கலாம் .பிளாஷ்பேக்கில் வரும் இனியா  ஓகே ரகம் .அந்தக்குழந்தை   பேபி  ஷாலினி போல  ஓவர் ஆக்டிங் . +  அதீத  டயலாக் சுரேஷ்மேனனின்  உடல் மொழி  , நடிப்பு கச்சிதம் 


 விக்ரம்  மோகன் தான்  ஒளிப்பதிவு .பெரும்பாலான  காட்சிகள்  இரவு நேரத்தில்  வருவது போல  இருப்பதால் சவாலான பணி  தான் . இசை கவாஸ்கர் அவினாஷ் . பின்னணி  இசையில் சில  புதிய முயற்சிகள்  எடுத்திருக்கிறார் 


ஷியாம் ,பிரவீன் ஆகிய  இருவரும் தான்  இயக்குனர்கள் . திறமை உள்ளவர்கள் தான் , இன்னும் மெருகேற்ற வேண்டும் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன் , சீரியல் கில்லர்  இருவரும்  முதன் முதலாக  சந்தித்துக்கொள்ளும்  பரபரப்பான காட்சி 

2  பின் பாதி  பரபரப்பான , விறுவிறுப்பான  காட்சிகள் 

3   இதயத்துடிப்பை  எகிற வைக்கும் பின்னணி இசை 


ரசித்த  வசனங்கள் 

1  பழசை  எல்லாம் மறக்க  அல்சைமர் என்னும்  மறதி  வியாதி ஒரு வரம் 


2  அப்பா  இல்லாத  வலியை விட அப்பாவுக்கு என்ன ஆச்சு ?என்பது  தெரியாத  வலி தான் அதிகமா இருக்கு 


3  நாம  செய்யற வேலை நமக்குப்பிடிச்சு  இருக்கா?இல்லையா?என்பது வேலை முடிஞ்ச்ச ரிசல்ட்  வந்தாதான் தெரியும் 


4  கொலைகாரன் என்ன சொல்ல வர்றான்?  என்பது  ஒரு புறம் , யாருக்கு அதை சொல்ல  வர்றான் ?என்பது இன்னொரு புறம் 


5   அதிகமா சாதனை செய்தவருக்கு சின்னதா  தடுக்கி  விட் டாக்கூட அது பெரிய விஷயமாத்தெரியும் 

6  ஒருவர்     கோபமா   இருக்காரா?  அப்செட்டா இருக்காரா?   என்பதை முகத்தைப்பார்த்தே  சொல்ல  முடியாது 

7  எனக்கு யாருமே இல்லாத மாதிரி உனக்கும் யாரும் இருக்கக்கூடாது 


8  ஒரு போலீஸ்காரரின் உண்மையான பலம் அவரோட ஞாபகங்கள் தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பொதுவா போலீஸ் ஆபீஸருக்கு அவரோட சொந்த ஊரில் போஸ்ட்டிங்க் போடமாடடாங்க . இது  விதி .இப்போ  அது மாறிடுச்சா? 


2   ஐந்து  வருடங்களாக  ட்யூட்டியில்  இல்லாமல்  சிகிச்சையில்  இருக்கும்  நாயகன்  தாடியில்  இருப்பது ஓகே , ஆனால் இப்போது ஆன்  ட்யூட்டியில்  இருக்கும்  போலீஸ் ஆபீசர்  எதனால்  தாடியுடன்  இருக்கிறார் ? 


3   எந்த  போலீஸ் ஆபீசர்  ட்யூட்டியில்  இருக்கும்போது  தன ஹையர் ஆபீசரிடம்  கை  கட்டி  அடக்கமா  பேசி  இருக்கார்  ?  அட்டென்ஷனில்   நின்னு  பேசுவதுதான் வழக்கம் ?


4   த போன் கலெக்ட்டர்  THE  BONE COLLECTOR (`1999) , மெம்மாயர் ஆப் எ மர்டரர்- MEMOIR OF A MURDERER  (2017) ,அஞ்சாம்  பாதிரா -ANJAAM PATHIRAA (2020)ஆகிய படங்களில்  இருந்து பல காட் சிகள்  உருவப்பட்டு  சேர்க்கப்பட்டு உள்ளது அப்பட்டமாகத்தெரிகிறது 


5   பிளாஷ்பேக்  போர்ஷனில் அழுத்தம்  இல்லை . சீரியல் கில்லர்  உருவானதற்கு  நியாயமான காரணம் இல்லை . நாயகன்  உடல்  நிலை சரி இல்லாமல்  இருக்கும்போது  அந்தக்கேஸை  எடுக்கும் தேவை என்ன?  என்பதற்குப்பதில் இல்லை 


6 புதிய ஆபீசரின்  போலீஸ்  டீம்  சரி இல்லை .அதிலும் ஒருவர் சீரியஸான  கட்டங்களில்  மொக்கை ஜோக் அடிப்பது எரிச்சல் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ராட்சஷன் , போர் தொழில் பாணியில்  பிரமாதமாக  வந்திருக்க வேண்டிய படம் .முதல் பாதி  திரைக்கதை  தொய்வின் காரணமாக மெகா ஹிட் ஆகும் வாய்ப்பை   நூலிழையில் தவற  விட்ட  ஒரு நல்ல  படம் . விகடன்   மார்க் - 42 .குமுதம்  ரேங்க்கிங்க் - ஓகே .அட்ரா  சக்க  ரேட்டிங்  2.75 / 5 


thanx - ANICHAM  1/1/2025 

0 comments: