Wednesday, January 15, 2025

SANKRANTHIKI VASTHUNAM(20025)-சங்கராந்திகி வஸ்துனம்-(தெலுங்கு)- சினிமா விமர்சனம் ( கிட்னாப் காமெடி ட்ராமா)

                   


        SANKRANTHIKI VASTHUNAM(20025)-சங்கராந்திகி வஸ்துனம்-(தெலுங்கு)- சினிமா விமர்சனம் ( கிட்னாப் காமெடி ட்ராமா)


இயக்குனர் அனில்ரவிபுடி + விக்டரி வெங்கடேஷ் காம்போ மூன்றாம் முறையாக ஹிட் அடித்திருக்கிறது.F1  &  F2 ஆகிய இரு படஙகளும் ஆல்ரெடி ஹிட்.இதுவும் ஹிட் ஆனதால் இது ஹாட்ரிக் ஹிட்.குடும்பத்துடன் பார்க்கத்தகுதியான கண்ணியமான காமெடி டிராமா இது


ஸ்பாய்லர்  அலெர்ட்


உலகின் மிகப்பெரிய கம்பெனியின் சி இ ஓ வை வில்லன் கடத்தி வைத்துக்கொண்டு அவனது கேங் ஆளை ரிலீஸ் செய்தால்தான். எக்சேஞச் ஆபர் முறையில் இவரை ரிலீஸ் செய்வேன் என்கிறான்.


போலீஸ் ஆபீசர் மீனாட்சி ஒரு ஐடியா தருகிறாள்.என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹீரோ பேரை சொல்லி அவர் ட்யூட்டியில் ஜாயின் பண்ணினால் போதும்.ஊதித்தள்ளி விடுவார். என்கிறார்


ஹீரோவும் ,மீனாட்சியும் ஒரு காலத்தில். லவ்வர்ஸ்.இப்போது பிரேக்கப்பில் பிரிந்திருக்கிறார்கள்.ஹீரோவுக்கு   வேறு. ஒரு பெண்ணுடன் மணம் ஆகி விட்டது.மனைவி ஒரு சந்தேகப்பிராணி


ஹீரோ கிட்னாப் மீட்புப்படலத்தில் இறஙக முற்படுகையில் மனைவி தானும் கூட வருவேன். என்கிறாள்.முன்னாள் காதலி ,இன்னாள் மனைவி இருவரையும் ஹீரோ எப்படி சமாளிக்கிறார். என்ற காமெடி போர்சன் முதல் பாதியில்.


வில்லனின் ஆளை ஹீரோவின் மனைவி கை தவறி மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவன் இறந்து விடுகிறான்.அந்த விஷயம் வில்லனுக்குத்தெரியாது.இறந்த அவன் பிணத்தை வைத்து உயிர் உள்ள ஆள் போல் செட்டப் செய்து. டிராமா போடும் காமெடி பின் பாதியில்


ஹீரோவாக வெங்கடேஷ்.அசால்ட் ஆக நடித்திருகிறார்.பேமிலி ஆடியன்சைக்கவரும் வகையில் காமெடி செய்வது. அவருக்குக்கை வந்த கலை.கெட்டப்பில். ஜெயிலர். ரஜினி ,இது ஜோடி காமெடியில் வீரா ரஜிநி. உதவி இருக்கிறார்


ஹீரோயின் ஆக மனைவி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் குட் ஆக்டிங.இன்னொரு ஹீரோயின் ஆக மீனாட்சி சவுத்.ரி கிளாமருடன். கூடிய காமெடி ஆக்டிங.காமெடி செய்வது இவருக்கு இதுதான் முதல் முறை .சமாளிக்கிறார்

சாய்குமார்,விஜய் கிருஷ்ணா,நரேன் உட்பட. அனைவரது நடிப்பும் அருமை..


இசை. பீம்ஸ் செசிரேலியா.கலக்கலான 3 பாட்டுக்கள் ஆல்ரெடி ஹிட்..பிஜி எம் ஆல்சோ குட்.சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு கலர்புல்கலக்கல்.137 நிமிடங்கள். படம் ஓடுகிறது.ஒரு சீன் கூட போர் அடிக்கவில்லை



சபாஷ்  டைரக்டர்

1 மெயின் கதைக்குள் போகும் முன் இடைவேளை வந்து விடுகிறது.டைம் பாஸ் காமெடி குட்

2 சக்களத்தி  சண்டைகாமெடி என்றும் அலுக்காது


3. மகளிர் மட்டும் ,மதகஜராகஜா உட்பட பல படஙகளில் ஹிட் அடித்த. டெட் பாடி காமெடி. இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

4. க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்தப்பொஙகல் குத்தாட்டம் கலக்கல் ரகம்



  ரசித்த  வசனங்கள் 

1. பொண்ணுங்க ம்க்கும் என இழுத்தால் வான்னு அர்த்தம்


2. ஓடி டி வெப்சீரிஸ் பார்த்து அவன் எல்லாக்கெட்ட வார்த்தைகளையும் கத்துக்கிட்டான்


3. சும்மா சாதா இருமல் வந்த மாதிரி நடிச்சுக்காட்டுன்னா இவன். லங்க்ஸ் கேன்சர். பேஷண்ட் போல ஓவர் ஆக்டிங்க் பண்றான்


4. ஜோக்கர் ஆக விருப்பம். இல்லாமல். ஹீரோ ஆக முடிவெடுத்தேன்


5. பேரென்ன?


மீனாட்சி


ஏதோ ஒரு பட்சி


6. வாட் த ஹெல்?


என்னது? ஹால்லயே ரெண்டு பேரும். ரூம். புக் பண்ணிட்டீஙகளா?


7 டவுட் எனக்கு டெட் உன்க்கு


8.  ஐ எக்ஸ்பர்ட் பாலொ மீ ஹவ் ஐ ஸ்டேண்ட் ஹவ். ஐ சிட்?


9. பிளான் சி ஆக்டிவேட்டட்.சி பார் கேட்


10 உன். பாடி. இருக்கும் கண்டிசநுக்கு குத்தாட்டம் தேவையா?














 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


நோ லாஜிக்ஸ்.  ஒன்லி எஞ்சாய் காமெடி மேஜிக்



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனம் விட்டு சிரிக்க வைக்கும் காமெடி ட்ராமா.ரேட்டிங். 3. /5

0 comments: