ரோஷன் மேத்யூ + அன்னா பெண் காம்ப்போவில் வெளியான கப்பீலா (2020) என்ற மலையாளப்படத்தை இயக்கிய முகமத் முஸ்தபா இயக்கிய இரண்டாவது படம் தான் இது . உப்பும் மிளகும் என்ற மலையாள டி வி சீரியல் எடுத்த சுரேஷ் பாபுதான் இதன் திரைக்கதை ஆசிரியர் . திருவனந்தபுரம் , தென் காசி , சென்னை ,பெங்களுர் ஆகிய நகரங்களில் 57 நாட்களில் படமாக்கப்பட்ட லோ பட்ஜெட் படம் இது 8/11/2024 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ல தமிழ் டப்பிங்க்கில் கிடைக்குது . வசூல் ரீதியாக இது பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் ஆக்சன் சீக்வன்சில் தெறிக்க விட் ட படம் ஒ டி டி யில் செம ஹிட் ஆகி விட்ட்து
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு லோக்கல் தாதா.சின்னச் சின்ன அடிதடி ,கட்டப்பஞ்சாயத்து என நடத்தி வருபவர் . அவரிடம் நான்கு இளைஞர்கள் புதிதாக வேலைக்கு சேர்கிறார்கள் .வில்லன் மேல் பாசமாக இருக்கிறார்கள் . வில்லனுக்கு ஒரு டாஸ்க் வருகிறது . ஒரு இடத்தில் கறுப்புப்பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது .அதை கொள்ளை அடிக்க வேண்டும் . வில்லன் அந்த நான்கு இளைஞர்களிடம் அந்த வேலையை ஒப்படைக்கிறான் .
இதே வேலையை ஆல்ரெடி செய்ய முயன்ற 2 பேர் தோற்றுப்போய் விட்ட தகவலையும் வில்லன் சொல்ல அந்த நான்கு பேரும் அந்த 2 பேரின் விபரங்களை வாங்கி அவர்களை சந்தித்து அவர்களைக்கூடடாக சேர்த்து ரிஸ்க் எடுத்துப்பணத்தைக்கொள்ளை அடித்து விடுகிறார்கள் .இப்போது வில்லனிடம் தங்கள் கமிஷன் எவ்வளவு ? எனப்பேரம் பேசுகிறார்கள் . வில்லனுக்கு அந்த டாஸ்க்கைத்தந்த ஆளுக்கும் , 6 இளைஞர்களுக்கும் மோதல் உருவாகிறது .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் , அதிரடி ஆக்ஸன்கள் தான் மொத்தப்படமும்
வில்லன் ஆக சுராஜ் வெஞ்சார மூடு கச்சிதமாக நடித்திருக்கிறார் . வில்லி ஆக கனி குஸ்ருதி பிரமாதப்படுத்தி இருக்கிறார் . 6 இளைஞர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை
கிறிஸ்ட்டி ஜோபி யின் பின்னணி இசை அருமை .பஸீல் நாசரின் ஒளிப்பதிவு குட் . சாமன் சாக்கோ வின் எடிட்டிங்க் ஷார்ப் . . திரைக்கதையை சுரேஷ் பாபு எழுத முகமத் முஸ்தபா விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 ஸ்ட ண்ட் மாஸ்டர் தான் முக்கியப்பங்கு வகிக்கிறார் .ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம் . ஷூட்டிங்க் போலவே தெரியவில்லை . நிஜமான சண்டை போலவே இருக்கிறது
2 படத்தின் பின் பாதி எல்லாம் பரபரப்பான தீப்பொறி பறக்கும் திரைக்கதை
ரசித்த வசனங்கள்
1 அம்மா,அப்பாவுக்கு ரீபிளேஸ்மென்ட்டே கிடையாது , அவங்க இடத்தை வேற யாராலும் நிரப்ப முடியாது
2 என்னடா இது ? ரொம்ப வயசான பொண்ணு மாதிரி இருக்கு ?
ஓல்டு ஈஸ் கோல்டு
3 நான் வேணா பில் பே பண்ணிடவா?
நீ இதுக்கு முன்னால எப்பவாவது எங்கேயாவது பில் பே பண்ணி இருக்கியா?
4 டியர் , நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாம்
ஐயோ , இப்போ வேணாம்,நான் படிக்கணும்
எதனால இந்தப்பொண்ணுங்க எப்போப்பாரு படிக்கணும்னு டீசன்ஸி இல்லாம பேசறாங்க ?
5 பணத்தை பத்திரமா வெச்சுக்கோ ,அதுக்கு ரீபிளேஸ்மென்ட்ட்டே கிடையாது
6 கூட ஷேர் பண்ணிக்க துணை இல்லாதப்ப எவ்ளோ பணம் சம்பாதிச்சாலும் வேஸ்ட் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மொத்தப்படமே 2 மணி நேரம் தான். ஆனால் மெயின் கதைக்கு உள்ளே வர 45 நிமிடங்கள் ஆகிறது . இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் .
2 அவ்ளோ பணத்தை ரொம்ப சுலபமாக கொள்ளை அடிப்பதாகக்காட்டியது நம்பும்படி இல்லை
3 வன்முறை தூக்கல்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+ வன்முறைக்காட்சிகளுக்காக ஏ சர்ட்டிபிகேட் பெற்ற படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் ,சண்டைப் படக்காடசிகளை விரும்பிப்பார்ப்பவர்கள் , பைட்டுக்காகவே படம் பார்ப்பவர்கள் தவற விடக்கூடாது படம் . ரேட்டிங் 2.75 / 5
Mura | |
---|---|
Directed by | Muhammad Musthafa |
Written by | Suresh Babu |
Produced by | Riya Shibu |
Starring | Hridhu Haroon Suraj Venjaramoodu Kani Kusruti Maala Parvathi |
Cinematography | Fazil Nazer |
Edited by | Chaman Chakko |
Music by | Christy Joby |
Production company | |
Distributed by | HR Pictures |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment