ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் ஒரே காலேஜில் படிப்பவர்கள் .நாயகன் தறுதலையாக இருந்து ஒருதலையாக நாயகியைக்காதலிக்கிறான் . ஆனால் நாயகி அவனை மனுசனாகக்கூட மதிக்கவில்லை . காலேஜ் கடைசி நாள் அன்று சவால் விடுகிறான் . இன்னும் நான்கு வருடங்களில் உன்னை விட அழகான , பெண்ணைக்காதலித்துக்கல்யாணம் செய்து காட்டுகிறேன் .ஏண்டா இவனை மிஸ் செய்தோம் என உன்னை வருத்தப்பட வைக்கிறேன் என்கிறான் .
ஆனால் எதிர்பாராத விதமாக நாயகியின் வீட்டில் வேலைக்காரன் ஆக வேலை செய்ய வேண்டிய சூழல் . இதற்குப்பின் நிகழும் காமெடி சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஹரிபாஸ்கர் .இவர் யூ ட்யூப் பிரபலமாம் . கேள்விப்பட்டேன் . யோகராஜ் என்பவர் கே பாக்யராஜ் மாதிரி நடித்தது போல இவர் கமல், ரஜினி , கே பாக்யராஜ் என கலந்து கட்டி நடித்திருக்கிறார் . . நாயகி ஆக பிக் பாஸ் புகழ் லாஸ் லியா .அழகு . ஆனால் டயட்டில் இருந்து மெலிந்து மெருகில்லாமல் சருகு மாதிரி காய்ந்து போய் இருக்கிறார் . அப்பாவாக வரும் இளவரசு நல்ல குணச்சித்திர நடிப்பு . மற்றவர்கள் நடிப்புப்பரவாயில்லை
அறிமுக இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் .பிஜிஎம் சராசரி .குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவு ஓகே ரகம் . இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 காலேஜ் கெட் டுகெதர் பங்க்சனில் நாயகி நாயகனை திட்டம் போட்டு அவமானப்படுத்ததும் சீன் கே பாக்யராஜ் டச்
2 நாயகன் நாயகியுடன் இணைந்து செல்லும் பெண்பார்க்கும் படலத்தில் மணப்பெண்ணின் தம்பி டான்ஸ் ஆடும் காட் சி
ரசித்த வசனங்கள்
1 ஒரு பொண்ணுக்கு ஒரு பையன் என்ன எல்லாம் செஞ்சா பிடிக்காதோ அதை மட்டும் தான் நீ செஞ்சு இருக்கே
2 பொண்ணுங்க வெளில இருக்கற மாதிரி தான் அவ பர்சனல் லைஃப்லயும் இருப்பா என்ற உன் எண்ணத்தை மாத்திக்கோ
3 காலேஜ் படிக்கும்போது பாய் கூட இல்லாம ஹாஸ்ட்டல்ல படுத்திருப்பே , இப்போ துபாய்ல வேலை செய்யறியா?
4 என்ன? இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க ? புது டிரஸ் போட்டிருக்கீங்க? வயசுக்கு வந்துட்டீங்களா?
5 உன் வாழ்க்கையின் கோல் தான் என்ன?
கோலா ? இந்த மாதிரி ஆட் களோட வாழ்வதே பெரிய விஷயம் தான்
6 பிளைட் ல போலாம்களா?
எங்கே ? சுடுகாட்டுக்கா?
7 டேய் , தூங்குடா
எல்லாரும் ஒரு நாள் தூங்கத்தானே போறோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் புதுமுகம் .தனக்கு என சொந்தமாக ஒரு பாணி நடிப்பை உருவாக்கிக்கொள்ளக்கூடாதா? கமல் , ரஜினி , கே பாக்யராஜ் மாதிரி மாறி மாறி இமிடேட் செய்கிறார். நமக்கு இரிடேட்ட் ஆக இருக்கு
2 1990 களில் வந்திருக்க வேண்டிய படம் .ரொம்ப அவுட் டேட்டடாக இருக்கு . இந்தக்காலப்பெண்கள் தாலி கட்டிய புருஷனையே வேலைக்காரனாகத்தான் நடத்துகிறார்கள் . வேலைக்காரனாக இருக்கும் ஆளை லவ் பண்ணுவார்களா?
3 தெரிந்தோ , தெரியாமலோ கே பாக்யராஜ் இயக்கி நடித்த டார்லிங் டார்லிங் டார்லிங் (19823) படத்தின் திரைக்கதை பல இடங்களில் கிளாஸ் ஆகிறது
4 நல்லவேளை , கேப்டன் , விஜயகாந்த் உயிரோடு இல்லை . இருந்திருந்தால் நாயகனுக்கு ஹானஸ்ட் ராஜ் என பெயர் வைத்ததற்கு தலையில் மடார் என அடி போட்டிருப்பார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A , டபுள் மீனிங் டயலாக்ஸ் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தியேட்டரில் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை .டி வி ல போடும்போது பார்க்கலாம் .விகடன் மார்க் - 40 . ரேட்டிங் 2.25 / 5
0 comments:
Post a Comment