கலைப்புலி எஸ் தாணு + கன்னட நடிகர் சுதீபா (கிச்சா சுதீப் ) இருவரும் இணைந்து லோ பட்ஜெட்டில் மகாபலிபுரத்தில் சூட் செய்யப்பட் ட இப்படம் கமர்ஷியலாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றி + வசூல் + விமர்சனங்களைப்பெற்றிருக்கிறது . லோகேஷ் கனகராஜின் கைதி பட பாணியில் ஒரே இரவில் ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மொத்தக்கதையுடம் நடப்பது போல விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டது . வில்லி ஆக வரலட்ஸ்மி சரத் குமார் நடித்திருப்பது கூடுதல் பிளஸ் . இந்த ஆண்டின் பிரம்மாண்டமான ஆக்சன் த்ரில்லர் இது .25/12/2024 அன்று கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியான இப்படம் அதிரி , புதிரி வெற்றியை ருசித்து இருக்கிறது .ஒரு படத்துக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியம் ? ஹீரோவை நம்பாதே ,ரைட்டரை நம்பு என்று பிடரியில் பொளேர் என அடித்து சொல்லி இருக்கும் படம் இது
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் ஆன விஜய் கார்த்திகேயாதான் படத்தின் இயக்குனர் . அதனால் திரைக்கதையில் கைதி + விக்ரம் பாகம் 2 இவற்றின் தாக்கம் அதிகம் ஆக இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . ஒரு ஏரியாவுக்கு அடுத்த நாள் காலை ட்யூட்டியில் ஜாயின் பண்ண வேண்டியவர் . முன் தின இரவில் அந்த ஸ் டேஷன் பெண் கான்ஸடப்பிள் இடம் தகராறு செய்யும் இரு ரவுடிகளை லாக்கப்பில் அடைக்கிறார் . அவர்கள் இருவரும் ஆளும் கட் சி அமைச்சரின் மகன்கள் , விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகி விடும் என பலரும் எச்சரிக்கிறார்கள் . நாயகன் அதை சட் டை செய்யவில்லை . அந்த இரு ரவுடிகளும் மர்மமான முறையில் லாக்கப்பில் இறந்து கிடக்கிறார்கள் .அவர்களுக்குள் மோதலா? வேறு யாராவது கொலை செய்தார்களா? என்பது நாயகனுக்கு அப்போது தெரியவில்லை .ஆனால் அவர்கள் இருவரும் இறந்த விஷயம் மினிஸ்டருக்குத்தெரிந்தால் அவ்வளவு தான் . அதனால் பிணத்தை அப்புறப்படுத்த வேண்டும் . ஆனால் அதற்குள் மினிஸ்டரின் கையாளும், வில்லியம் ஆனா க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ரூபா அங்கே விசிட் அடிக்கிறார் . இதற்குப்பின் நிகழும் அதிரடி ஆக்சன்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே.
நாயகன் ஆக கிச்சா சுதீப் கலக்கி இருக்கிறார் .அவரது உயரம், உடல் மொழி ஆகியவை விஷாலை நினைவுபடுத்துகிறது . ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான சாமுத்ரிகா லட்ஷணம் அனைத்தும் பொருந்தி இருக்கிறது . வில்லி ஆக வரலட்ஸ்மி சரத் குமார் ஓப்பனிங்கில் கலக்கலான இனட்ரோவுடன் வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பில்லை . ஹெட் கான்ஸடபிள் ஆக வரும் இளவரசு அட் டகாசமான குணச்சித்திர நடிப்பு .வில்லன் ஆக சுனில் . இவரது கேரக்ட்டர் டிசைன் இன்னும் வலுவாக எழுதி இருக்கலாம்
அஜனீஷ் லோக்நாத் இசையில் 3 பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசையில் பிரித்து மேய்ந்து விட்டார் .சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் லைட்டிங்கில் கவனம் எடுத்து உழைத்திருக்கிறது .கணேஷ் பாபுவின் எடிட்டிங்கில் படம் 134 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதி செம ஸ்பீடு . பின்பாதி ஓகே ரகம் . கேஜி எப் பாணியில் பஞ்ச் வசனங்கள் தெறிக்கின்றன
சபாஷ் டைரக்டர்
1 போலீஸ் ஸ்டேஷனில் நாமும் ஒரு பார்வையாளராக இருப்பது போல நம்மை உணர வைக்கும் விதத்தில் அட்டகாசமான திரைக்கதை
2 வில்லனைக்குழப்ப நாயகன் போடும் திட்டங்கள் குட்
3 ரவுடிகளைக்கொலை செய்தவர் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பதை க்ளைமாக்சில் சொன்ன விதம்
4 நாயகனுக்கு ஜோடியாக நாயகியே , டூயட்டோ இல்லாதது பெரிய பிளஸ் . மொக்கைக்காமெடி டிராக்கும் இல்லை
ரசித்த வசனங்கள்
1 யுத்தத்தை முதன் முதலில் யார் ஆரம்பிக்கிறார்களோ அவங்களை எனக்குப்பிடிக்காது . அதே சமயம் யுத்தத்தைக்கண்டு பயந்து ஓடறவங்களையும் எனக்குப்பிடிக்காது
2 எங்க அப்பாவை ஜெயில்ல போடுங்க , மொபைல் கேம் ஆடவவிடமாட் டிங்கறார்
3 சில யுத்தங்கள் எப்போ எப்படி ஆரம்பித்தது என்பதே தெரியாமல் தொடங்கும்
4 ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும் ஒரு இன்பார்மர் இருப்பான்
5 எதிரிங்க யுத்தத்தைத்தொடங்குவாங்கன்னு நாம காத்திருக்கூடாது .நாமே தொடங்கிடணும்
6 யுத்தத்தை நாம முதலில் தொடங்கினாதான் நம்மோட பலம் என்ன?என எதிரிக்குத்தெரியும் ,எதிரியோடு பலவீனம் என்ன? என்பது நமக்குத்தெரியும்
7 மேக்ஸ் என்றால் மேக்சிமம் மாஸ்
8 ஒவ்வொரு வீரனுக்குப்பின்னாலும் ஒரு கமாண்டர் இருந்து ஆணை இட்டுக்கொண்டு இருக்க முடியாது .அப்படி செஞ்சா அந்தப்போரில் சுவராஸ்யம் இருக்காது
9 அவன் கேம் என்ன?ன்னு தெரியாம அங்கே போனா நாம தான் அவன் கிட் டே மாட்டுவோம்
10 ஆயிரம் சேனைகள் , ஆயிரம் யானைகள் வன்ஹாலும் என் புள்ளை ஒத்தை ஆளா சமாளிப்பான்
11 மே க்ஸ் கிட் டே பேசும்போது மேக்சிமம் சைலன்ஸோட இருக்கணும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லி போலீஸ் ஸ் டேஷனுக்கு வந்து ஒரு ஆணியும் களை யவில்லை என்பது மைனஸ்
2 வில்லியைக்கவனம் திசை திருப்ப நாயகன் பாடும் பாட்டு செயற்கை
3 வில்லன் , வில்லி இருவரது கேரக் டர் டிசைன்களும் இன்னும் பலமாக எழுதி இருக்க வேண்டும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான ஆக்சன் த்ரில்லர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் ஒரு நல்லபடம் .பெண்களும் ரசிக்கலாம் . ரேட்டிங் 3.25 / 5
Max | |
---|---|
Directed by | Vijay Karthikeyaa |
Produced by | Kalaippuli S. Thanu Sudeepa |
Starring | Sudeepa Varalaxmi Sarathkumar Sunil Samyukta Hornad Sukrutha Wagle Anirudh Bhat |
Cinematography | Shekhar Chandra |
Edited by | S. R. Ganesh Baabu |
Music by | B. Ajaneesh Loknath[1] |
Production companies | |
Distributed by | KRG Studios |
Release date |
|
Running time | 134 minutes[2] |
Country | India |
Language | Kannada |
0 comments:
Post a Comment