JURY#2(2024)- ஆங்கிலம் - சினிமா விமர்சனம்(கோர்ட் ரூம் ட்ராமா)@அமேசான் பிரைம்
27/10/24 அன்று ஹாலிவுட்டில் ரிலீஸ். ஆன இப்படம். இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங். இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.
ஜிகிர்தண்டா படத்தில் ஹாலிவுட் இயக்குனர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றிக்குறிப்பிட்டு. இருப்பார்கள்.94 வயதான் இவர் கடந்த 55 வருடங்களாக சளைக்காமல் படஙகளை இயக்கி வருகிறார்.இவரது மைல் கல் படம் Richard Jewell (2019).இவரது படங்கள் க்ரைம் திரில்லர் ஆக இருக்கும்.ஆனால் மெலோ டிராமாவாக ஸ்லோவாகத்தான் திரைக்கதை நகரும்
இந்தப்படம் பரபரப்பாக ஓடாது.மெலோ டிராமாதான்.படம் பூரா பேசிக்கிட்டே இருப்பாஙக.பொறுமைசாலிகளால் மட்டுமே பார்க்க முடியும்.12 AngryMen(1957) படத்தின் திரைக்கதை பாணியில். இதுவும் இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு சரக்கு சங்கரலிங்கம்.எப்போப்பாரு தண்ணிதான்.நாயகியுடனான காதலுக்கு ப்பின். திருந்தி வாழ்கிறான்.நாயகி இப்போது. நிறைமாத கர்ப்பிணி.
ஒரு கேசில் 20 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் ஜூரி நெம்பர் 2 ஆக ஆகும் வாய்ப்பு. நாயகனுக்குக்கிடைக்கிறது(,பாரினில். பொதுமக்களுக்கும் ஜூரி ஆகும் வாய்ப்பு வழங்க ப்படும்.)
கேஸ் விபரம்.ஒரு வருடத்துக்கு முன் நடந்த சம்பவம்.ஒரு பாரில் காதல் ஜோடி சரக்கு அடிக்கறாஙக.ஒரு விவாதத்தில் காதலன் காதலி தலையில் பீர் பாட்டிலால் அடித்து விடுகிறான்.காதலி கோபித்துக்கொண்டு கிளம்புகிறாள்.காதலன் அவளது பின்னால் துரத்திக்கொண்டே வருகிறான்.வெளியே மழை.காதலி காதலனிடம் இனி என் பின்னால் வராதே .பிரேக்கப் தான் என சொல்லி விட்டு செல்கிறாள்.இந்த சம்பவத்தை பலரும் செல் போனில் படம் பிடிக்கிறார்கள்.அந்த வீடியோ வைரல் ஆகிறது.
அந்தக்காதலி அடுத்த நாள் காலை அதே ஏரியாவில் தலையில் அடிபட்ட நிலையில் காயங்களுடன் பிணமாகக்கிடக்கிறாள்.போலீஸ் காதலனைக்கைது செய்கிறது.ஒரு வருடமாக நடந்த இந்தக்கேஸ் இப்போது தீர்ப்பு வரும் நிலை
இப்போது நாயகனுக்கு நினைவு வருகிறது.ஒரு வருடத்துக்கு முன் தண்ணி அடித்து விட்டு மப்பில் நாயகன் தான் அந்தப்பெண்ணைக்காரில் மோதியது
இப்போது உண்மையைக்கோர்ட்டில். சொன்னால் நாயகனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.சொல்லவில்லை எனில் அந்த அப்பாவிக்காதலனுக்கு தண்டனை கிடைக்கும்.நாயகன் என்ன முடிவு எடுத்தான்? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக. நிக்கோலஸ் ஹோல்ட்,அவரது மனைவி ஆக சோயி டோக் ,வக்கீல் ஆக டோனி காலட் நடித்திருக்கிறார்கள்.
40 நிமிடங்களில் சொல்ல வேண்டிய கதையை ஜவ்வாய் இழுத்து 2 மணி நேரம் பண்ணி விட்டார்கள்
சபாஷ் டைரக்டர்
1. நாயகன் , மனைவி , வக்கீல் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அருமை
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 பதிவாகும் க்ரைம் கேஸ்களில் 32℅ டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்கள்தான்
2. ஒரு தரப்பின் நட்டம் இன்னொரு தரப்பின் லாபம்
3. எப்போதும் உன் கட்சை. நம்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முக்கியமான ஏரியாவில் சிசிடிவி இல்லாதது எப்படி?
2 கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.கொலை செய்யப்பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்படவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொம்பப்பொறுமை வேண்டும்.பெண்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5
0 comments:
Post a Comment