Friday, January 10, 2025

GAME CHANGER (2025) -தெலுங்கு - கேம் சேஞ்சர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

                             



ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்   மாநில   முதல்வரின் மகன் .தன அப்பாவின் பதவிக்காலம்   முடிய இருப்பதால் அடுத்து   தான் முதல்வர் ஆக வேண்டும் என நினைக்கிறான் .நாயகன்  ஒரு ஐ ஏ எஸ்  ஆபீசர் . அவர்  பொறுப்பேற்ற  ஊரில்  இருக்கும் அநியாயங்களை எல்லாம் களை  எடுக்கிறார் . நாயகனுக்கும், வில்லனுக்கும் மோதல் உருவாகிறது .  திடீர் என   முதல்வர்  மாநிலத்தின் அடுத்த  முதல்வராக நாயகனை அறிவிக்கிறார் .வில்லனுக்கு   பெரிய  அதிர்ச்சி . அவர் எதனால் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது .நாயகன் - வில்லன் மோதல் தொடர்கிறது .இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் ? எப்படி ? என்பது மீதி திரைக்கதை 



 நாயகன் ,நாயகனின் அப்பா  என  இரு  வேடங்களில்  க்ளோபல்  ஸ்டார்  ராம்சரண் .இந்த  உலகநாயகன் (க்ளோபல்  ஸ்டார்)  பட் டம்  ராசி  இல்லை போல . . திக்கு வாய்  கேரக்ட்டரில்  வரும்  அப்பா ராம்சரண் ,காலேஜ்  மாணவனாக  அடிதடி  ராம்சரண் , முதலில்  ஐ பிஸ்  ஆபீசர்  , பிறகு ஐ ஏ எஸ்  ஆபீசர்  ராம்சரண்  என  மாறுபட்ட   மூன்று  கெட் டப்கள் , இரு வேடங்களில்  நடித்திருக்கிறார் . இதில்  அப்பா  கேரக்ட்டர்  தான் நடிக்க வாய்ப்பு .மகன் கேரக்ட்டர்  சும்மா டூயட் பாட  , பைட் போடமட்டுமே 


வில்லன் ஆக எஸ்  ஜே  சூர்யா   அதகளம்  செய்கிறார் .வழக்கம்  போல  ஓவர் ஆக்டிங் . ஆனால் ரசிக்க வைக்கும் நடிப்பு . அஞ்சலி  மாறுபட்ட  கெட் டப்பில்  அசத்துகிறார் .நாயகி ஆக  கியாரா அத்வானி  3  டூயட்டுக்கு மட்டும் வந்து போகிறார் .சமுத்திரக்கனி  அடக்கி  வாசித்திருக்கும் ஒரே படம் இதுதான் போல . ஸ்ரீகாந்த் நல்ல ரோல் , காமெடி  நடிகர்  சுனில்  கொஞ்சம்   சிரிக்க வைக்கிறார் . ஹோ ம்  மினிஸ்ட்டர் ஆக  வரும்  ஜெயராம்  காமெடி  செய்கிறார் . இவர்கள்  போக  மீதி 478 ஆர்ட்டிஸ்ட்கள் முக்கியக்கேரக் டர்களில் வருகிறார்கள் . பெரிய பட்ஜெட் படம் ஆச்சே 



எஸ்  தமன்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை ரகம் தான் .பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் .ஒளிப்பதிவு  திரு .கலக்கலான  பிரம்மாண்டம் .கலர் புல்லாக காட்சிகள் .சமீரின் எடிட்டிங்கில்  படம் 165 நிமிடங்கள்  ஓடுகிறது .இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் .

 பாடல் ஆசிரியர்   விவேகா  திரைக்கதை அமைத்திருக்கிறார் .இந்தப்படத்துக்குக்கதை  "ரெடி "செய்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் .வசனம்  சாய்  மாதவ் புர்ரா .


சபாஷ்  டைரக்டர்


1  ஜருகண்டி  பாடல்  காட் சியில்   திருவின்  ஒளிப்பதிவு  கலக்கல் ரகம் 


2  எஸ்  ஜெ  சூரியாவின்   அதகளமான நடிப்பு , அஞ்சலியின்  குணச்சித்திர நடிப்பு 


3  காமெடியன்   சுனில்  , ஜெயராம்   இருவரின்   காமெடிக்காட்சிகள் 


4   நாயகி  குடி இருக்கும் ஏரியா  நாயகன் கலெக்ட்டர் ஆக இருக்கும் ஏரியாபார்டர்   தாண்டுவதால்   அவர் வீடுக்குப் போகமாட்ட்டார்   என்ற  ரசிக்க வைக்கும் காமெடி 


  ரசித்த  வசனங்கள் 


1 நாம  செஞ்ச  தப்பெல்லாம் நம்மைத்துரத்திட் டே  வருது , அதை எல்லாம் சரி செய்யணும் 


2  நல்லவங்க அரசியலுக்கு வந்தா நமக்கே  தெரியாம  நம்ம  நேர்மையை  அழிச்சுடுவாங்க 


3   ஒரு நல்லது  நடக்கணும்னா  வருடக்கனக்கா  காத்திருக்க வேண்டி இருக்கு 


4   இப்போ  இல்லைன்னா எப்பவும் இல்லை 


5   சைட்  அடிக்கிறவனைப்பார்த்திருக்கேன் , இவன் ஏன்  சைடு சைடா நடக்கிறான் ? 


6  நீங்க  பார்க்க கமல் மாதிரியே இருக்கீங்க .


 நிஜமாவா? 


 குருதிப் புனல்  க்ளைமாக்ஸ்  கமல் மாதிரி  ( 12/10/1995  தேதி  இட் ட  குமுதம்  வார இதழில்  வெளியான ஜோக் இது )  



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பிரபல  வார இதழ்களில்  ரூ 100  சன்மானம்    கதைக்கே  1008  உறுதி மொழிகள்   வாங்குவார்கள் . இது எனது சொந்தக்கற்பனை . அட்லீ  போல  திருடிய கதை அல்ல  என  உறுதி அளித்தால் தான் கதை பிரசுரம் ஆகும் . அப்படி இருக்கும்போது  இந்த திருட்டுக்கதையை  இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜிடம்  வாங்கி அதற்கு  சம்பளமாய்  3 கோடி ரூபாய் தண்டமாய் தந்தது  எதனால் ?பிரேமலதா  விஜயகாந்த்துக்கு  ரூ  50 லட்ச ம்   தந்தாலே   தென்னவன்  பட ரீ மேக் உரிமை  கிடைத்திருக்குமே ? 


2   ஒரு காட் சியில்  வில்லன் எஸ்   ஜே   சூர்யா  500  ரூபாய்  நோட்டுக்கட்டுகள்   பலவற்றை   தண்ணீரில்  வீசி   வீணடிப்பார் . இன்னொரு காட் சியில்  தன அடியாளிடம்   ஏண்டா ,பணத்தோட அருமை தெரியுமா?   எனகேட்பார் .கேரக் டர்   டிசைனில்  குழப்பம் 


3    ஐ ஏ எஸ் ஆபீஸருக்கு  உதவியாளராக , டவலை கவரும் காமடியன்   பார்வைக்குறைபாடு உள்ளவர்   எனக்காட்டி இருக்கிறார்கள் .எந்த  மாநில   அரசாங்கம்  அப்படி   கவர்மென்ட்   ஜாப் தருது ?


4   குருதிப்புனல்    கமல்  ஜோக்  குமுதத்தில்  வந்து   அதை மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ்  உட்படபல பேர் திருடி  மேடைகளில் பலமுறை ஒப்பித்து விட் டார்கள் .அப்படி  இருந்தும்  அந்த ஜோக் படத்தில் வருது .என்ன  சூப்பர் வைசிங்க் பண்றீங்க?  வாசிப்பு அனுபவம்  மீடியா  டச்  எதுவுமே இல்லாமல் அப்டேட் ஆகாமல் இருந்தா எப்படி ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்கேம் சேஞ்சர் (2025) - தெலுங்கு/தமிழ் - முதல் பாதி நல்ல வேகம் ,பாடல் காட் சிகள் வழக்கமான பிரம்மாண்டம் .தமிழ் செல்வன் (1996) + தென்னவன் (2003) இந்த ரெண்டு படங்களும் நினைவு வருது .தமன் இசை பரவாயில்லை ரகம் தான் ,ஏ ஆர் ஆர் அளவில் பாதி கூட வரலை.எஸ் ஜே சூர்யா செம ஆக்டிங்க். ஷங்கர் "ஜெய்" ஷங்கர் ஆவது சிரமம் ..இந்தியன் பாகம் 2 அளவு டப்பா இல்லை ,அதே சமயம் டாப்பாகவும் இல்லை .முதல்வன் (1999) மாதிரி எடுக்க நினைத்திருக்கிறார் ..முடியவில்லை விகடன் மார்க் 40 ரேட்டிங் 2.25 / 5


Game Changer
Theatrical release poster
Directed byS. Shankar
Screenplay byVivek Velmurugan
Dialogues bySai Madhav Burra
Story byKarthik Subbaraj
Produced by
Starring
CinematographyTirru
Edited byShameer Muhammed
Ruben
Music byThaman S
Production
company
Distributed bysee below
Release date
  • 10 January 2025
Running time
165 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹350–400 crore[2][3][4]

0 comments: