Friday, January 31, 2025

COFFEE WITH A KILLER (2025) - தெலுங்கு - சினிமா விமர்சனம்(காமெடி க்ரைம் த்ரில்லர் ) ஆஹா தமிழ் ஓ டி டி

       

       ஸ்டார்  வேல்யூ இல்லாத  படங்கள்  பெரும்பாலும்  திரைக்கதையையும் ,இயக்கத்தையும் நம்பிக்களம் இறங்குவதால் நம்பிப்பார்க்கலாம் .லோ  பட்ஜெட்டில்  ஒரே  ஒரு லொக்கேஷனில்  ஒரே ஒரு பகல் பொழுதில்  நடப்பதாக திரைக்கதை  அமைந்துள்ளதால் செலவு மிகமிகக்குறைவு .காமெடி இருக்கு . க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட்  இருக்கு . டைம் டியூரேஷன்  100  நிமிடங்கள்  தான் என்பதால் இதை ஒரு குயிக் வாட்ச்  ஆகவே பார்த்து விடலாம் . தமிழ்  டப்பிங்க் இல்லை . ஆங்கில சப் டைட்டில்  இல்லை . தெலுங்கு  தெரிந்தவர்கள்  வசனத்தை  ரசித்து சிரித்துப்பார்க்கலாம்.தெரியாதவர்கள் ஒரு குத்து மதிப்பாக  பார்க்கலாம். கதை புரியும்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


 வில்லன்  ஒரு புரொபஷனல்  கில்லர் . வாடகைக்கொலையாளி . அவனுக்கு ஒரு அசைன்மென்ட் தரப்படுகிறது . அது ஆள்  யார் என   வில்லனுக்குத்தெரியாது . ஹைதராபாத்தில்  உள்ள  ஒரு உயர் தர  காபி ஷாப்பில்  வில்லன்  வெய்ட்  பண்ணனும் .மாலை  சரியாக 6 மணிக்கு  அவன் யாரைக்கொலை செய்ய வேண்டும் என்ற  செய்தி  வரும் . இது தான்   அவனுக்குக்கொடுக்கப்பட் ட  டாஸ்க் .



அந்த   காபி ஷாப்பில் 1  ஒரு காதல்  ஜோடி  , 2   ஒரு திருமணம்  ஆன தம்பதி ,  3   சினிமா  டிஸ்கஷனுக்காக வந்திருக்கும் ஒரு குழு  , 4   ஒரு  ஜோஸ்யக்காரனும், ஆன்மீக பக்தரும் , , 5  ஒரு ஹேக்கர் டீம் ,  6  போலீஸ் ஆபீசர்   என ஆறு  டேபிளில்   ஆறு விதமான  வெவ்வேறு  தரப்பு ஆட்கள்  இருக்கிறார்கள் . இவர்களை  வைத்து அமைக்கப்படட திரைக்கதை தான் மீதி  சம்பவங்கள் 

ஸ்ரீனிவாஸ் ரெட்டி , சத்யம் ராஜேஷ் ,  டெம்ப்பர் வம்சி ,  ரவி பாபு  என  நடித்தவர்கள்   அனைவரும்  சரியான பங்களிப்பை  அளித்திருக்கிறார்கள் . படத்தில்  நாயகி , டூயட்   என எதுவும் இல்லை . இரு பெண்  கதாபாத்திரங்கள்  உண்டு . இருவரும்  நல்ல அழகு . அதிக   வாய்ப்பில்லை 


அனுஷ்  கோரக்  தான் ஒளிப்பதிவு . ஒரே   காபி  ஷாப்பில்   நடக்கும்    கதை  என்பதால்  சவாலான பணி . சிறப்பாக செய்திருக்கிறார் . பரத்  மது சூதனன் தான் இசை . பின்னணி   இசை   பரவாயில்லை .  ஆர் பி பட் நாயக் என்பவர் தான் திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார் . நல்ல முயற்சி 


சபாஷ்  டைரக்டர்


1   க்ளைமாக்ஸ்    டிவிஸ்ட்   தான்  படத்தின் உயிர் நாடி . அருமையான   திருப்பம் . யூகிக்க முடியாதது 


2  சினிமா  டிஸ்கஷன்  க்ரூப்  காமெடி  ரசிக்கும்படி  இருந்தது . அந்த  க்ரூப்   வில்லனை காமெடியன்  ஆக புக்   பண்ணலாமா?   என விவாதிப்பது வெடிச்சிரிப்பு 


3  க்ளைமாக்சில்  கொலை  செய்யப்பட  இருக்கும்   ஆள் தான் தான்   வில்லனின்   இலக்கு என்பது தெரியாமல் இருப்பதும் அவருக்கே   தெரியாமல்  அவரே   அந்த சதியை  முறியடிக்கும்  விதமும்   அருமை




  ரசித்த  வசனங்கள் 


1   அவன்   என் ரசிகன் 


 ஓஹோ 


 அதெல்லாம்  இல்லைங்க .இந்த ஆள்  சைக்கிளை  வெளில  சொல்லாம கொள்ளாம பார்க் பண்ணிட்டு இங்கே வந்திருக்காரு 


 சைக்கிளா?  இவரு எவ்ளோ  பெரிய சினிமா வி ஐ பி ? 


2   டாம் அண்ட்    ஜெர்ரி   என ரெண்டு   காமெடி   கேரக்ட்டர்ஸ் , அந்த ரெண்டையும்  கம்பைன் பண்ணி  ஒரே  ஆளா   நீதான் பண்றே 


அடே ங்கப்பா 


3  இவர்  யார் ? 


 டைரக்ட்டர் 


 ஹய்யோ ,படத்தோட டைட்டிலே  இவர்  யார் ?   தான் 


4   ஸ்க்ரீன் ப்ளே  பத்தி சொல்லுங்க 


 ஸ்க்ரீன்  ல   யாரு ப்ளே  பண்ணினா   நமக்கு என்ன? 


5    நீங்க   லவ்வர்ஸா? 


 இல்லை , ஹேக்கர்ஸ் 


ஷங்கர்   மாதிரி ஹேக்கர்  என ஒரு பேரு போல 


 ஹலோ , அது பெரு இல்லை .என் ஜாப்பே  அதுதான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனுக்கான ஓப்பனிங்   சீனில்   வில்லனை மடக்கும் ஆள்  வில்லனை அசால்ட்  ஆக  சேரில்  உட்கார வைப்பதும்    வில்லனுக்கு  எதிரிலேயே  லோடட்  கன்  வைத்து  வில்லனுக்கு சான்ஸ்   கொடுப்பதும்   நம்ப முடியவில்லை / அட்லீஸ்ட்   வில்லனைக்கயிறால் கட்டிக்கூட போட முடியாதா? 


2   காதல்  ஜோடியின் காதலுக்கு  காதலியின் அப்பா   எதிர்ப்பு   தெரிவிப்பதும் .க்ளைமாக்சில்  வில்லன்   வேறு ஒரு ஆளைக்கொலை செய்ய முயற்சிக்கும்போது  காதலன் காதலியின் அப்பாவைக்காப்பாற்றுவதும் அதன் பின்  அவர் மனம் திருந்திப் பெண்  தர சம்மதிப்பதும்   டி வி சீரியல் பார்ப்பது போல இருந்தது 


3  ஜோஸ்யக்காரன்  காமெடி டிராக்   எடுபடவில்லை .போர் . இன்னும் அந்த சீனில் உழைத்திருக்கலாம் 


4  மாடர்ன்   பெண்  என்றால்  ஜீன்ஸ் பேண்ட் . டி சர்ட்  போட் ட மாதிரி  காட்டினாப்போதாதா?  தம் அடிப்பது , தண்ணி அடிப்பது போலக்காட்ட வேண்டுமா? மாதர்  சங்கங்கள்  இதுக்கெல்லாம் போராட மாட் டார்களா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான  த்ரில்லர்  பட  விரும்பிகள் , மொக்கைக்காமெடி ரசிகர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5 

0 comments: