3/1/2025 அன்று லோ பட்ஜெட் படங்கள் மூன்று ரிலீஸ் ஆகி உள்ளன .மூன்றுமே க்ரைம் த்ரில்லர் படங்கள் . எந்த வித பில்டப் + ஸ்டார் வேல்யூ இல்லாத நல்ல படங்கள் . பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் குப்பைப்படங்களையும் , 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி பெரிய ஹீரோக்கள் நடிக்கும் டப்பாப்படங்களையும் ஆதரிக்கும் தமிழர்கள் இது போன்ற திரைக்கதையை நம்பும் படங்களை ஆதரிக்க வேண்டும் .அப்போதுதான் ஆரோக்கியமான சினிமாக்கள் மேன் மேலும் உருவாகும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் காதல் திருமணம் புரிந்த தம்பதி . நாயகனின் அப்பா பெரிய கோடீஸ்வரர் கம் தொழில் அதிபர் .அம்மா இல்லை .இறந்து விடடார் . அப்பாவும் திடீர் என ஒரு நாள் இறக்கவே நாயகன் மன நிலை பாதிக்கப்படுகிறான் .ஒரு நாள் நாயகனின் பங்களா வாசலில் வீட்டு வேலைக்காரன் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான் .நாயகன், நாயகி இருவரையும் காணவில்லை . போலீஸ் ஆபீசர் இந்தக்கேஸை விசாரிக்கிறார் . முடிவில் பல திருப்பங்களுடன் உண்மை வெளி வருகிறது . அதை மிக சுவராஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் குணா சுப்ரமணியம்
இயக்குனரின் பெயரிலேயே குணா இருப்பதாலோ என்னவோ திரைக்கதையில் எகப்பட் ட "குணா"திசயங்கள் . இந்தக்கதையைப்பார்க்கும்போது குமுதம் வார இதழில் உ குணசீல பாண்டியன் எழுதி1991-ல் வெளியான ஒரு ஜோக் நினைவு வருகிறது . எஸ் வி சேகரின் ஒரு நாடகத்திலும் ( பெரிய தம்பி ) இதே டைப் ஜோக் இருக்கும் .
மன நிலை சரி இல்லாத உங்க பையணுக்குக்கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னாங்களே? குணம் ஆகிட்டானா?
இல்லை , குணா ஆகிட்டான்
படத்தில் நாயகன் மன நிலை சரி இல்லாதவராக ஆனபின் பெரும்பாலான பகுதிகள் அவர் செய்யும் விசித்திரமான செயல்களை சுற்றியே வருவது கொஞ்சம ஓவர் டோஸ் தான் . ஆனால் திரைக்கதையின் சஸ்பென்ஸ் பேக்டருக்கு இந்த மாதிரி டைவர்சன் தேவை என இயக்குனர் நினைத்திருக்கலாம்
நாயகன் ஆக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார் ,அநேகமாக இவர் தயாரிப்பாளர் மகனாகவோ , பைனான்சியர் மகனாகவோ இருக்கக்கூடும் . நடிப்பில் பல பரிமாணங்கள் காட்டிட வாய்ப்பு .நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் . நாயகி ஆக பாடினி குமார் குடும்பப்பாங்கான முகம் . ஜொலிக்கிறார் .பாடல் காட் சியில் கண்ணியமான கிளாமர் காட் டவும் தவறவில்லை . போலீஸ் ஆபீசர் ஆக சதுரங்க வேட் டை புகழ் நட்டி என்கிற நடராஜ் நடித்திருக்கிறார் . விசாரனையில் அவர் காட்டும் பொறுமை ரசிக்க வைக்கிறது
சரண் குமார் தான் இசை . 3 பாடல்கள் சுமார் ரகம் , பின்னணி இசை தேவலை பெருமாள் , மணிவண்ணன் இருவரும் ஒளிப்பதிவு .கனகச்சிதம் . கிரிஸ்ப் ஆன எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 எம்பாமிங்க் செய்வது [பற்றிய விபரங்களை டைட்டில் போடும்போதே காட்டிய சாமர்த்தியம் குட்
2 யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் , அதை நம்பும்படி சொன்ன விதம்
3 சரத்குமார் பிரமோ செய் த ஆன் லைன் ரம்மி உட்பட் ட பல ஆன் லைன் கேம்கள் எந்த அளவு ஆபத்தானவை என்பதை கமர்ஷியலாக சொன்ன விதம்
4 வன்முறை , ஆபாசம் இல்லாமல் கண்ணியமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தந்த விதம்
ரசித்த வசனங்கள்
1 ஜெயிக்கறமா? தோற்கிறோமா? அது முக்கியம் இல்லை ,தொடர்ந்து ஆடிக்கிட் டே இருக்கணும் . அப்படி என்னை அடிக்ட் ஆகிடுச்சு இந்த ஆன் லைன் கேம்
2 மது , புகை போல ஆன் லைன் கேமும் அபாயம் தான் .அரசு தடை செய்யணும்
3 உலகத்தில் பிறந்த எல்லாரும் ஒரு நாள் இறக்க நேரிடும்,அந்த துக்கத்தைக்கடந்து வரணும்
4 மன நிலை சரி இல்லாதவன் கொலை செய்யப்பயன்டுத்திய ஆயுதத்தை ஒளித்து வைக்க மாடடான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹையர் ஆபீசர் முன் நாயகன் தான் மப்டியில் இருக்கும்போது சல்யூட் அடிப்பது எதனால் ? (யுனிபார்மில் இருக்கும்போது சல்யூட் அடிப்பது சரி ,மப்டியில் இருக்கும்போது அட்டென்ஷனில் நின்று கால்களை உயர்த்தினால் போதும் )
2 எல்லா போலீசும் யூனிபார்மில் இருக்க நாயகன் மட்டும் கேசுவலாக டி சர்ட் அணிந்து பல காட் சிகளில் வருவது ஏனோ ?
3 குற்றவாளிகளை விசாரணை செய்யும்போது ஒரு போலீஸாபீஸர் கை கட்டி அடக்கமாக நிற்க மாட்டார்
4 நாயகன் - நாயகி டூயட் சீன் ,காதல் மலர்தல் இவை எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை , தேவை இல்லை
5 நாயகன் நல்ல எக்சசைஸ் பாடி ,தொப்பை இல்லை . சிரசாசனம் செய்யும் சீனில் லாங்க் ஷாட்டில் காட்டாமல் க்ளோசப்பில் காட்டி தப்பிப்பது எதனால் ? முயற்சி , பயிற்சி செய்து ரி யலாகவே செய்திருக்கலாம்
6 கடைசி 10 நிமிடங்களில் பரபரப்பான தருணத்தில் ஒரு பாடல் எதுக்கு ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U / A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நல்ல படம் , விறுவிறுப்பான திரைக்கதை . போர் அடிக்காத காட்சிகள் . பெண்களும் பார்க்கும் வகையில் கண்ணியமான நெறியாள்கை . விகடன் மார்க் - 42 ,குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே . ரேட்டிங் 2.75 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,